Wednesday, October 03, 2007

சலிப்பு

கழிவறைக்குள் செல்லும் வரை
கவலையில்லை - அதென்னவோ
சென்றவுடன் கால் சட்டை
கழற்றக் கூட அவகாசமில்லை.

கைகளில் மிளகாய்த் தூள்
கழுவுவதற்குக் கொஞ்ச தூரம்
செல்லணும் - அதென்னவோ
கண் நமைச்சல் வந்து சேருது

கை எட்டும் தூரத்தில் இல்லை
முதுகின் நடுப்பகுதி -
அதென்னவோ அங்குதான்
அரிப்பாய் அரிக்கிறது

கால் கடுக்க நின்று கடுப்பாகி
அடுத்த வரிசைக்குச் சென்றால்
அதென்னவோ அப்போது பார்த்து நாம்
முன் நின்ற கியூ வேகமாக் முன்னேறுது

அவசரமாய் போன் செய்ய
அடுத்தடுத்து எங்கேஜ் டோன்
அதென்னவோ ஆத்திரத்தில்
டயல் செய்த ராங் நம்பர் மட்டும்
அடிச்ச வுடனேயே கெடச்சுடுது

3 comments:

cheena (சீனா) said...

வாழ்க்கை என்பது இதுதான் நண்பா !!

அப்துல் கையூம் said...

சலிப்பு
-------

சலிப்பு மிகுதியாகி
உற்சாகம் பெற
ஏதாவது கிடைக்காதாவென்று
ச்ல்லடை போட்டால்
அந்நேரம் பார்த்து
வலையில்
இந்தக் கவிதைதான் மாட்டுது.

- அப்துல் கையூம்

அப்துல் கையூம் said...

சலிப்பு மிகுதியாகி
உற்சாகம் பெற
ஏதாவது கிடைக்காதவென்று
சல்லடை போட்டால்
வலையில் ஏனோ
இந்தக் கவிதைதான் மாட்டுது.

- அப்துல் கையூம்

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)