இறைவனை மறந்து விட்டோம்
நரை முடி கண்ட பின்னும் - அந்த
நாயனின் ஞாபகம் வருவதில்லையே
எரியும் இரண்டு நெருப்பையும் (Hydrogen)
எரிவதைத் தூண்டும் ஒரு காற்றையும் ( Oxygen)
இணைத்துப் படைத்தான் இறைவன்
எரிவதை அணைக்கும் தண்ணீராக (H2O)
தூண்கள் இல்லா வானம் அமைத்து
தூசிகளோ பாசிகளோ படராமல் காத்து
அடித்த பெயிண்டும் அப்படியே இருக்க
அண்ட சராசரங்கள் அனைத்தும் - அடடா
அவனது கைவண்ணமே
புள்ளிக்குள் செல்களை
செல்லுக்குள் உயிர்களை
புகுத்தியிருக்கும் விந்தையை
புத்தியுள்ள யாரும்
எண்ணிப் பாராமல் இருக்க முடியாது
தனிமங்களுக்கு தனித் தனியே
நம்பர் கொடுத்தது நாம்தான் - ஆனால்
புரோட்டான்களும் எலெக்ட்ரான்களும்
யார் சொல்லி அவற்றினுள்
சண்டையிடாமல் தங்கியுள்ளன
அரசன் முதல் ஆண்டி வரை
அனைவருமே அடிமைகள் தான்.
ஆண்டவனுக்கு அடிமைப்பட
ஆசைப்படு - இல்லையென்றால்
ஆளாளுக்கு அடிமைப் படுத்தி விடுவார்கள்.
ஒன்றே போதும் நன்றாய் வாழ.
3 comments:
Pinnootta Sothanai
(Feedback Test)
தண்ணீரின் தத்துவம் அருமை. ( H2O)
இறை ஒன்றே போதும் நாம் நன்றாய் வாழ!!!
ஆமாம் சீனா!
சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் இறைவன் தெரிவான்.
நன்றி
Post a Comment
நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை
எனினும்
" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)