Wednesday, October 03, 2007

தாய் எனும் தனிப்பிறவி

தாய் எனும் கதா பாத்திரத்தால்தான்
பெண்மைக்கு விருது கிடைக்கிறது.

அண்ணன் தம்பி அக்கா தங்கை ஆகிய
அனைத்து உறவுகளுக்கும் தாய்தான் மையக்கரு

தாயே !
பல் வலியிலிருந்து பல வலிகளையும்
'படிக்குற புள்ள' எனக்குத் தெரிந்தால்
படிப்பு போகுமுன்னு பொத்தி வைத்'தாய்'

உந்தன் அருமை எனக்குத் தாரம்
வந்த பின் தான் தெரிந்தது
ஒவ்வொரு சிறு வலிக்கும் அவள் என்னைப்
'படுத்திய பாட்டை'ப் பார்த்து

பெற்ற பிள்ளைகளுக்காக நீ பட்ட
பேறு கால அவஸ்தைகள் ஒன்று கூட
எனக்கு ஞாபகமில்லை - தாயே
உந்தன் அருமை எனக்கும் பிள்ளைகள்
பிறந்த பின் தான் தெரிந்தது - ஒவ்வொரு
மாதமும் என் மனைவி 'பட்ட பாட்டை'ப் பார்த்து.

தாயே நீ ஒரு தனிப்பிறவி

1 comments:

cheena (சீனா) said...

தாய்க்குப் பின் தாரம் - பல முறைகளில். தாய்க்கு மகன் படிக்குற புள்ளே - ஆனால் மனைவிக்கு கணவன் கடமையைச் செய்ய வேண்டாமா ?? அதனால் தான் தாரம் சிறு வலிக்கெல்லாம் பாடாய்ப் படுத்துகிறாள்

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)