Tuesday, October 23, 2007

பூதம் எனது நண்பன்

'பூதம் எனது நண்பன்' என்கிற ஒரு படம்,
சிறு வயதில் பார்த்த ஞாபகம்.நாயகன்/நாயகி
தெரியவில்லை. கதாநாயகன் விளையாட்டுப்
போட்டிகளில் முதலாவதாக வருவதற்கு பூதம்
உதவி செய்யும் ஒரு சில காட்சிகள் ஞாபகத்தில்
இருக்கின்றன.சினிமாவிலும் சரி கதைகளிலும் சரி
இப்படிப்பட்ட பூதங்கள் கண்ணாடி பாட்டில்களில்
அடைக்கப் பட்டிருக்கும். மனிதனோ விலங்கோ
தவறுதலாய் திறக்கப் போய் அவை வெளியே வந்து
நன்மை அல்லது தீமை செய்வதாகக் காட்டுவார்கள்.

தமிழில், நன்மை செய்பவைகளை 'பூதம்' என்றும்
அட்டூழியம் புரிபவைகளை 'பேய்,பிசாசு' என்றும்
அழைக்கிறோம். இவற்றை பற்றி இஸ்லாத்தில் 'ஜின்'
என்று குறிப்பிடப் பட்டுள்ளது. முஸ்லிம்கள் நன்மை
செய்பவைகளை 'நல்ல ஜின்' என்றும் தீமை
செய்பவைகளை 'கெட்ட ஜின்' என்றும் அழைக்கிறோம்.

எப்படி மனிதர்கள் மண் அல்லது SILICA வினால்
ஆனவர்களோ அது போல் இந்த ஜின் இனத்தவர்
நெருப்பு மற்றும் புகையினால் ஆனவர்கள்.
('என்ஜின்' என்ற வார்த்தை இதனால்தான்
உருவானதோ என்னவோ ?) :-)

இவைகளின் தோற்றம் பயங்கரமாக இருக்கும்.
நினைத்த தோற்றத்தில் மாறும் திறமை அல்லது
தன்மை இவைகளுக்கு உண்டு. இவற்றை அடக்கி
வேலை வாங்கும் திறமை மனிதர்களில் வெகு
சிலரிடம் உண்டு. சாத்தான் அல்லது ஷைத்தான்
இந்த இனத்தைச் சார்ந்தவன்தான்.

இந்தப் பதிவு எழுதும் எண்ணம் ஏன் ஏற்பட்டதென்றால்,
சில நாட்களுக்கு முன் சாத்தான் சம்பந்தமாக
ஓசை செல்லா கருத்து கேட்க சுப்பையா வாத்தியார்

'சாத்தான்' என்பதெல்லாம் கிடையாது என்று
சொல்லியிருந்தார். 'சாத்தானை' அடக்க இறைவனால்
முடியாதா ? என்ற கேள்விக்கான பதிலென்று நினைக்கிறேன்.

அப்படியல்ல, ஒவ்வொரு டைரக்டரும் தமது படத்தில்
'வில்லன்' கேரக்டரை வைத்திருப்பார்கள். அதுபோல்
சாத்தானுக்கு சந்தர்ப்பம் கொடுத்த இறைவன் கையில்
சாட்டையையும் வைத்திருக்கிறான்.
சமயம் வரும் போது சகலத்திற்கும் பதில் கிடைக்கும்.

இன்பம்/துன்பம், இறப்பு/பிறப்பு, இரவு/பகல்,
சுவர்க்கம்/நரகம் என எல்லாவற்றையும் இரட்டையாகப்
படைத்த இறைவன் நல்ல சக்தி / தீய சக்தியைப்
படைத்து தனது கற்பனைப் படி நடாத்துகிறான்.

கதா பாத்திரங்களை நம்பி ஏமாந்து போகாமல்
டைரக்டரான இறைவனின் திறமைகளை உணர்ந்து,
அவனைப் புகழ்ந்து, அவனது எண்ணத்தைப் புரிந்து
வாழ்பவர்களுக்கே 'சுவனம்' என்னும் 'விருது'.

அவனை நம்புபவர்களும் சரி நம்பாதவர்களும் சரி,
CLIMAX வரை பொறுத்துக் கொள்ளவும்.

3 comments:

cheena (சீனா) said...

ஜாவர் சீத்தாராமன் பூதமாக நடிக்க, ஜெயசங்கர், நாகேஷ், கேயார் விஜயா நடித்து பட்டணத்தில் பூதம் திரைப்படம் தானெ அது

அரபுத்தமிழன் said...

இல்லை நண்பரே ! அது 'டப்பிங்' படமென்று நினைக்கிறேன். பெயர் 'பூதம் எனது நண்பன்' தான்.

ஹுஸைனம்மா said...

அன்பு அரபுத் தமிழன்,

இப்போதான் தங்கள் பிளாக் பக்கம் வந்து பார்க்கிறேன். ஆச்சர்யம்!! இதே கருத்தை ஒட்டி, நானும் ஒரு இடுகை எழுதியுள்ளேன். நேரம் வாய்த்தால் பார்க்கவும்:

வில்லன் இல்லாத சினிமா

மற்ற உங்களின் தண்ணீருக்கான (H20) விளக்கமும், தேற்றுவாய் ஃபாத்திஹாவும் அருமை. மாஷா அல்லாஹ்.

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)