போன பதிவில் சொல்லியிருந்தேன் இல்லையா.
ஆனால் 'வி'தி விளையாடி, கழன்று வந்து கதைக்குள்
புகுந்து கொண்டு க(வி)தை யாயிற்று, என் செய்வது !
* * * * *
காற்றடித்த பொழுதில்
பிரிகிறோமே மீண்டும்
சந்திக்க முடியுமாவெனத்
தேம்பிய என் மீது
தெம்பாக ஏறி அமர்ந்த
மண்ணாங்கட்டீ ...
மழை பொழிந்தால் என்ன ?
உன்னைக் கரைய விடாமல்
காக்கும் 'அரச'
இலையுடனல்லவா
உன் நட்பும்
இன்ன பிறவும்..
7 comments:
கவிதை வித்தியாசம். புரிந்துக்கொள்ள சிரமம் புதியவர்களுக்கு.......
புரியவில்லையா!
ஹைய்யா நானும் கவிஞனாயிட்டேன். :-)
தம்பி வருகைக்கு நன்றி.
அரசஇலைக்கும், மண் கட்டிக்கும் இருக்கும் நட்பு - புறா, எறும்பு கதை போல!! சரியா?
ஹை, எனக்குப் புரிஞ்சிடுச்சே!! அப்ப நான் இலக்கியவாதியாகிட்டேனே!! :-))
நீங்கதான் புலவர்
இல்லையில்லை நீர்தாம் புலவர்.
இன்றிலிருந்து உங்களுக்கு
' இலக்கிய தீதி ' என்ற பட்டம் கொடுக்கப் படுகிறது :-)
('தீதி' என்றால் சகோதரி
என்று அர்த்தம் இன்று நீங்கள் பதிந்த
'தீ' பதிவினால் அல்ல அல்ல அல்ல)
டேங்ஸ்!! இந்தப் பட்டத்த “வச்சா” ஒரு நூறு ரூபாயாவது தேறுமா? ;-)))
:-))
பணத்திற்குத் தேறாது
But
பதிவிலே பறக்கட்டும்
Post a Comment
நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை
எனினும்
" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)