Thursday, May 06, 2010

நான் கவிஞனுமில்லை .. நல்ல ரசிகனுமில்லை..

எந்தவொரு விஷயத்தையும் வளவள வென்று எழுதுவதை விட நறுக்கென்று
அல்லது நச்சென்று சொல்வதற்கு 'கவிதை' வலிமை மிக்கது என்பது என் கருத்து.
(நீங்க என்ன சொல்றீங்க).

ஒரு காலத்தில் மரபுக்கவிதையா புதுக்கவிதையா என்ற விவாதங்கள் மட்டும்
இருந்தது போய் இப்போது எதுதான் கவிதை என்பது குழப்பமாயிருக்கிறது.

நண்பர்களிடத்தில் அரட்டையின் போது சினிமாப் பாடல்கள் தாம் சிறந்த கவிதை போல்
சிலாகிக்கப் பட்டன. கண்ணதாசன்,பட்டுக்கோட்டையாருக்குப் பிறகு வாலி,வைரமுத்துவின்
வரிகளும் அதன் பின்,

'எதுகை,மோனை,தொடை' தட்டி எழுதிய ராஜேந்தரின் பாடல்களும் விவரிக்கப்பட்டன.
இப்போது 'டீஆர் ' என்றாலே டெரராகிப் போன‌து மட்டுமல்ல‌ அவர் போல் எழுதினாலே பரிகசிக்க‌ப்படுகிறது :-)

கவிதை பற்றி எழுதும் போது கவிதை விற்பன்னர்கள், 'எழுத்தில் காட்சியைப் பதிவு செய்ய' வேண்டுமென்றும் ஹைக்கூ போன்ற கவிதைகளின் கடைசி வரியில் ஒரு 'அதிர்வு' இருக்க வேண்டும் என்கிறார்கள். பின் நவீனத்துவ பதி/கவிஞர்களின் கவிதைகள் 'கனத்தை'க் கொண்டிருந்தாலும் நினைவில் வைப்பது கடினமாயிருக்கிறது.


சில நகைச்சுவைக் கவிதைகள் நினைவை விட்டு நீங்காதவை (கீழே வருகின்ற இந்த இரண்டு கவிதைகளை எழுதிய விகடகவிகள் யார் என்பதை அறிய விரும்புகிறேன் :‍-) கலக்கல்ஸ் )


* * * * *

1.
மணப்பதால்,
மாலையிடுவதால்
மஞ்சத்தில் அல்லது கட்டிலில் பயன்படுவதால்
கட்டையெனப் படுவதால் - சமயத்தில்
கடத்தப் படுவதால்
தரம் பல உள்ளதால்
அனுமதியில்லாமல் 'வைத்திருப்பது'
சட்டப்படி குற்றம் என்பதால்
உரசினால் மட்டுமே பலன் பெற முடியும் என்பதால்
உயர் சந்தனமும் பெண்ணும் ஒப்பென்றுணர்!

* * * * *

2.
கூட்ட நெரிசல்; குழைவாய் நெருங்கியே
பாட்டத்தைத் தேய்த்திடும் பாவியே! -நாட்டமுடன்
அஞ்சா துரசும் அசுரனே! உன்னுடைய
சுஞ்சாவை வெட்ட அவா!

* * * * *



பொதுக் கழிவறைகளில் எழுதப்படும் அசிங்கமான வார்த்தைகளுக்கு மாற்றாக (!?!)
அங்கே வரும் வாடிக்கையாளர்களின் எழுத்துத்திறனை 'வெளி'க் கொணர :-) இது
போன்ற நகைச்சுவையுடன் கூடிய, பின்வரும் 'கக்கூஸ் கவிதைகள்' எழுத நினைத்து
முடியாமல் போனதுண்டு. இன்று இதனைப் பொது'வெளி'யில் எழுத‌ தைரியம் தந்தது
திரு மாதவராஜ் அவர்களின் இந்தப் பதிவு , நன்றி மாதவ் ஜீ.


" இங்கே கழுவப் படும் சப்தம் வெளியில் காத்திருப்போருக்கு இன்பம் "

* * * * *

"அசுத்தமாய் மிதப்பது கண்டு அங்கலாய்க்க வேண்டாம்
என்னை விட்டுச் சென்ற எதுவொன்றைப் பற்றியும்
என்னிடத்தில் அக்கறை இல்லை "

* * * * *

(எயிட்ஸ் விழிப்புணர்வுக்காக)
----------------------------

வரையின்றி உறையின்றி செய்யப்படும்
எச்சில்/எச்சிலை உறவால்தான் வருது
எய்ட்ஸ் என்னும் எமலோகப் பி(ரா)ணி


* * * * *



இப்போது என்னுடைய கேள்வி 'எந்த மாதிரி கவிதைக்கு ஆயுள் அதிகம்'.

நகுலன்/மனுஷ்ய புத்திரன் போல் அதிர்வு ஏற்படுத்தும் சமூக நல கவிதைகளா அல்லது கட்டுடைக்கப்பட்ட, பின்னவீன‌த்துவக் கவிதைகளா அல்லது மேலே குறிப்பிடப்பட்ட‌து
போன்ற‌ நகைச்சுவைக் கவிதைகளா அல்லது பெரும்பாலான‌ பெண் கவிஞர்களின் 'குறி'
சொல்லும் கவிதைகளா அல்லது வேறேதுமா.

கவிதை பயிலும் மாணவனாய்க் கேட்கிறேன் வேறொன்றும் உள்குத்தில்லை பராபரமே :-)

நீங்க என்னதான் சொன்னாலும் கீழே உள்ளதை மட்டும் தவிர்க்கவே முடியாது.

(இன்று ஒரு PENN தட்டச்சிய கவிதையைப் படிக்க நேரிட்டதாலும் அதற்கு
மக்கள்ஸ் ஆஹோ ஓஹோ என்றதாலும் தோன்றிய தத்துவம்)

'பெண் பேசும் எம் மொழியும் அழகு பெண் எழுதும் எதுவும் கவிதை
பெண்ணென்றால் பேயும் இரங்கும் பெண்ணுக்கும் அழகென்றே பேர்
என்பார் அப்பெண் தன் மனைவியாய் இல்லாத‌ பட்சத்தில்'.

9 comments:

Unknown said...

நல்ல கேள்வி. எங்கிருந்தாவது பதில் வந்தால் சரி.

அரபுத்தமிழன் said...

அதானே கேட்பது நம் கடமை பதில் கொடுப்பது அவரவர் உரிமை :-)
நன்றி செல்வராஜ்.

சென்ஷி said...

/ஆசிப் மீரான் கூட கவிதை பற்றி எழுதும் போது
'எழுத்தில் காட்சியைப் பதிவு செய்ய'
வேண்டுமென‌க் கூறியதாக‌ ஞாபகம்.

பால பாரதி ஹைக்கூ பற்றி எழுதும் போது
ஹைக்கூவின் கடைசி வரியில் ஒரு 'அதிர்வு'
இருக்க வேண்டும் என்றார்.//


ஓஹ்...!

அரபுத்தமிழன் said...

வாங்க சென்ஷி, உங்களோட‌
இந்தக் கவிதை ரொம்ப புடிச்ச‌து.

//என் இருக்கைக்கு எதிரே
கடவுளின் அமர்வு//

ஆமாம் இந்த 'ஓஹ்' பாகச வகையா :-)

சென்ஷி said...

//
ஆமாம் இந்த 'ஓஹ்' பாகச வகையா :-)//

ஆமுங்க :)

Unknown said...

//இங்கே கழுவப் படும் சப்தம் வெளியில்
காத்திருப்போருக்கு இன்பம் //

இத அவசியம் எழுதிருக்கணும்ணே அவனவன்
எவ்ளோ நேரம் எடுக்குறாங்ரீங்க :)

அரபுத்தமிழன் said...

Monks :-) Thanks

மாதவராஜ் said...

இன்றுதான் உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். மிக இயல்பான, மெல்லைய நகச்சுவை ததும்பும் எழுத்து நடை.

ரசித்தேன்.

இனி தொடர்ந்து வருவேன்.

அரபுத்தமிழன் said...

ரொம்ப நன்றி மாதவ் சார்.
உங்கள் விமர்சனம் கண்டு மிக்க மகிழ்ச்சி.
தங்களின் வருகை என் எழுத்தை இன்னும் வளப்படுத்தும்

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)