அவனிட்ட கட்டளையால்
அவணி பக்கம் தலைகாட்ட
அதோ உடம்பென்னும் குதிரை ரெடி
ஆறு மாதம் காத்திருந்து
அடுத்தடுத்து முழுமை பெற
அன்னதானக் கொடியும் ரெடி
தாயிடமிருந்து குதித்ததுமே
தொப்புள் கொடி துண்டிப்பால்
வீறிட்ட சோகம் காய்வதற்குள்
தாய்ப்பால் ரெடி
தாய்ப்பாலும் மறுக்கப் பட்டு
தரையிலே கிடத்தப் பட்டால்
தட்டேந்தி சோறூட்ட
தாயாதிகள் ரெடி
எழுந்து நடக்கையிலே
தாமாகவே உண்டு உடுத்திப்
பழகியதன் பின்
தமக்குக் கீழ் உள்ளோருக்கும்
திரவியம் தேட திசைகள் ரெடி
அடித்துப் பிடித்து
ஆலாய்ப் பறந்து
அனுபவித்து முடித்து
அடுத்த கட்டம்
தாவுவதற்குள்
தாவு தீருவதற்குள்
சாவும் சங்கும் ரெடி
இதெல்லாம்
பரிணாம வளர்ச்சியா
இல்லை படைத்தவனின்
பரிவுக்கு சாட்சியா
சொல்லுங்களேன்
2 comments:
// ஆறு மாதம் காத்திருந்து //
அண்ணே !
பத்து மாதம் தானே வரணும் ?
மாங்க்ஸ்,
நான்காவது மாதத்தில்தான் உயிர் கொடுக்கப்படுகிறது.
அதற்குப் பிறகு ஆறு மாதம் தானே.
வருகைக்கு நன்றி
Post a Comment
நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை
எனினும்
" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)