களத்தில் ஆடிக்கொண்டிருந்தவர்களில் நான் ரசித்த பதிவர்கள்
பால பாரதி,லக்கி லுக்,ஆசிப் மீரான், ஓசை செல்லா,
செந்தழல் ரவி, 'முயல்' ரத்னேஷ் மற்றும் குசும்பன்.
இவர்களில் மதிப்பிற்குரிய ரத்னேஷ் அவர்கள் இப்போதெல்லாம்
எழுதுவதில்லை போல் தெரிகிறது (சார் எங்கே/எப்படி இருக்கீங்க?).
செல்லா தான் ஒரு இணைய நாடோடி என்று 'ஓசை'
விட்டுச் சென்று விட்டார். எனக்குப் பிடித்த முக்கனிகளில்
(ஆசிப் மா, பாலா பலா, லக்கி வாழை) லக்கி மட்டும்
அடித்து ஆடிக்கொண்டிருக்கிறார். மற்றிருவரும் எப்போதாவதுதான்
'தல' காட்டுகிறார்கள். மற்றபடி ரவியும் குசும்பனும் வழக்கம் போல
சூடான இடுகைகளில் (அ) சூடான ஓட்டுக்களில்.
இதுவரை பாடியது 'பழைய புராணம்'. இன்றோ அடேங்கப்பா,
எத்தனையெத்தனை திறன் மிகு பதிவுகள்/பதிவர்கள்.
அனைவரையும் ரசிக்கத்தான் நேரமில்லை.
'கடை மாறி கடல் ஆனது போல்
மடை திறந்த மலையுச்சி வெள்ளம் போல்
வலையெல்லாம் பதிவுகள் மயம்'.
1 comments:
ஒ அபுதாபியா ,
நீங்க நம்ம பக்கந்தேன் :)
Post a Comment
நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை
எனினும்
" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)