Tuesday, June 13, 2017

தொந்தி







ஊழலில் ஊறித் திளைத்த
உணவு அமைச்சகம்

பேன்ட்டும் லுங்கியும் சறுக்கி
விளையாடும் பலூன் மேடை

சைடு வாக்கில் சரிந்து கிடந்தால்
சாய்மான பஞ்சு மெத்தை

நோன்பு திறந்தாலே அரங்கு
நிறையும் பிர்லா கோளரங்கம் 


" என்று கரையும் இந்த தொந்திரவு பாகம் "


     UA
 
 






முதலாளி (தொந்தி) வளர வளர
தொழிலாளி நசுக்கப்படுகிறான்   :)

குழந்தைகள் கிராஸ் பண்ணும் இடம்
அருகில் இருப்பதால் இயற்கையாகவே
அமைந்து விட்ட வேகத்தடை      :)


தொந்தி உடையார் பிச்சை எடுக்கார்
அப்படியே எடுத்தாலும்
எது ஒன்றும் கிடைக்கா.
  

பேன்ட்டுக்குள் மாட்டித் தவிக்கும் வயிற்றுக் கழலை
ஸ்கூட்டி ஓட்டுகையில் முன் பார ஜோல்னா பை
ஜிம் போனாலும் ஜம்முன்னு நிக்குது - பயிற்சிகள்
பண்ணாலும் தொப்புள் விரிய சிரிக்குது


இன்னாதாம்பா செய்றது  :( 





     A
 
 










   
                                                                                  ⬇
              
   


                                                                                 ⬇
  
   


                                                                                 ⬇
                           

 

                                                                                 ⬇
அடேங்கப்பா அவ்ளோ ஆர்வமா !!

நானே இப்பத்தான் ரூம் போட்டு தொந்தியைத் தடவியவாறு 
என்ன எழுதலாம்னு யோசிச்சிக்கிட்டு இருக்கிறேன். சரி வந்ததுதான் வந்துட்டீங்க, உங்களுக்காக, உங்கள் மனம் 
"ஆற" ஆறு வரிகள்   இப்போதைக்கு.




“ பார்த்து  களையெடுக்க
 சாய்த்து  உரம் கொடுக்க
 தேய்த்து  கழுவியெடுக்க
 மாய்த்து   உயிர் கொடுக்க
 விடாது இங்குமங்கும்
 தளும்பும் சோத்துப் பானை












1 comments:

அரபுத்தமிழன் said...

இப் பதிவைப் படித்தவர்கள் யாரும் தொந்தியால்
கஷ்டப்படவில்லையென நினைக்கிறேன்.
யாரும் கமெண்டவே இல்லை ! :)

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)