Thursday, June 22, 2017

இரத்தம் கீறி எடுத்தல்

ஆரோக்கிய வாழ்வினைக் காப்பதற்கு லைஃப்பாயை விட இந்த பாய் சொல்லும்ஹிஜாமா’ மிகச் சிறந்தது. ஹிஜாமா என்ற அரபிச் சொல்லுக்கு, தமிழில்  ‘இரத்தம் கீறி எடுத்தல்’ என்றும் ஆங்கிலத்தில் CUPPING  என்றும்  சொல்லப் படுகிறதுCUPPING  என்பது கீறல் இல்லாமல் செய்யப்படுகிறது.  இது தசைப்பிடிப்பு அல்லது வாயுபிடிப்பு சரியாக்கச் செய்யப்படும் சீன மருத்துவ முறை. ஆனால் ஹிஜாமா என்பது அதுக்கும் மேலே.

CUPPING முறை மாதிரியே CUP கள் வைக்கப்பட்டு PULL செய்யப்படுகிறதுபிறகு உப்பிய பகுதியில் பிளேடால் கீறப்பட்டு மீண்டும் CUP வைத்து உறிஞ்சப்படுகிறது.






உடலுக்குள் ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும், தேவையில்லாத, கழிவு இரத்தத்தை வெளியேற்றுவது. வலிகளுக்குக் காரணமான‌ கழிவு இரத்தமும் TOXINS ம் வெளியேற்றப்படுவதால் புது இரத்தம் உருவாகி உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒரு FRESHNESS ஏற்படுகிறது.

இது செய்வினையால் பாதிக்கப்பட்டிருக்கும் உடல் பாகத்தைக் கூட குணப்படுத்துகிறது. ஹிஜாமா வைத்திய முறையை எங்கள் கண்மணி நாயகம் (ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வாழ்விலிருந்துதான் தெரிந்து கொண்டோம். இன்றைய அரபிகளும் ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது செய்து கொள்கிறார்கள். அபுதாபியில் இருந்தபோது இதற்காக மெனக்கெட்டு 150 கி.மீ பயணம் செய்து மதீனா ஜாயத் (BIDA ZAYED) சென்று இவ்வைத்தியம் செய்து இருக்கிறோம்.

காரணம் அங்குதான் இந்த வைத்தியத்தில் மிகத் திறமையான எகிப்து  ஜோடிகள் இருக்கிறார்கள். கணவன் எஞ்சினீயர், மனைவி மருத்துவர். பணம் எதுவும் கேட்பதில்லை ; கொடுப்பதை எண்ணிப் பார்க்காமல் வாங்கிக் கொள்கிறார்கள். ஹிஜாமா செய்து விட்டு கூலி பெறுவது சரியில்லை என்று அவர்கள் சொல்லவில்லை மாறாக அபுதாபி முஸஃப்ஃபாவில் ஹிஜாமா செய்யும் ஒரு பாகிஸ்தானிய‌ பட்டான் சொல்லித்தான் தெரியவந்தது. பிறகு ஏன் இந்தப் பட்டானிடம் செல்லவில்லை என்று கேட்கிறீர்களா ?. காரணம் அவரிடம் சென்று வந்த என் நண்பனின் முதுகைப் பார்த்ததால் ; ‘போர்க்களம்’ போன்று இருந்தது. அந்த பயம்தான் :)

சென்னை வந்த பிறகு புரசைவாக்கத்தில் ஒரு அக்குபன்ச்சர் டாக்டரிடம் செய்திருக்கிறேன். எனக்கு முன் ஒரு பெரியவருக்கு ஹிஜாமா செய்து கொண்டிருந்தார். அப்போது கால் பகுதிக்கு வந்த போது, ‘உடலில் புகுந்து வேலை செய்யாமல் கிடக்கும் விஷமெல்லாம் காலின் இந்த பகுதியில் வந்து கிடக்கும்’ என்று சொல்லிவிட்டு மேலும் சொன்னார்,

‘நாயகம் (ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு ஒரு யூதப் பெண்மணி உணவில் விஷம் வைத்துக் கொடுத்தாள், அந்த விஷம் நபிகளாரின் காலிலிருந்து ஹிஜாமா மூலம் வெளியேற்றப்பட்டது’ என்று.
என்ன ஆச்சர்யம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அப் பெரியவரின் கால் பகுதியிலிருந்து கண் சைஸுக்கு ஒரு நுங்குத் துண்டு நைந்த நிலையில் வெளியேறியது. அப்பெரியவரிடம் விசாரித்ததில் சிறு வயதில் ஒருமுறை பாம்பொன்று காலில் ஏறியதாகவும், ஆனால் கடித்த ஞாபகமில்லை என்றும், மற்றொரு சமயம் இவரைப் பிடிக்காத ஒரு சொந்தக் காரர் தந்த உணவு சாப்பிட்டு  FOOD POISON ஆனதாகவும் சொன்னார்.

இந்த மருத்துவரிடம் மீண்டும் செல்லவில்லை காரணம் இவர் பிளேடுக்கு பதிலாக குச்சிப் பேனா போன்று பேனாக்கத்தி வைத்து 'பச்சக்...பச்சக்' என்று குத்துவதால் பிளேடால் கீறுவதை விட இரு மடங்கு வேதனையாய் இருந்தது. மேலும் ஐந்து இடத்திற்கு 200 வீதம் 1000 வாங்குகிறார். மதீனா ஜாயத் மிஸ்ரி ஜோடிகள் போல இங்கேயும் கிடைத்து விட்டதும் இன்னொரு காரணம். ஃபீஸ் 1000 என்றாலும் 10 இடங்களுக்கு மேல் இரத்தம் எடுக்கிறார்கள். கணவன் மனைவி இருவரும் அக்குபன்ச் மருத்துவர்கள். மனைவி ஹிஜாமாவில் PHD ம் செய்திருக்கிறார்.

ப்ளேட் என்பதால் வலி தெரியவில்லை. சென்னை மண்ணடியிலும் தி.நகரிலும் இவர்களது க்ளினிக் இருக்கிறது. ஆண்களுக்கு Dr. இம்ரானும் பெண்களுக்கு Dr. ஹலினாவும் ஹிஜாமா செய்கிறார்கள். கீழ்க்காணும் லிங்க்கின் மூலமாக அலைபேசி எண்கள் பெற்று அப்பாயின்மென்ட் வாங்கி அங்கு சென்று செய்து கொள்ளலாம். செய்து கொள்பவர்கள் ஐந்துக்கு மேல் இருந்தால் அவர்களே தங்கள் இடம் தேடி வரலாம். இது விளம்பரப் பதிவு அல்ல (அவர்களுக்கே இப் பதிவு பற்றி தெரியாது). 

"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" ரகமே.


டிஸ்கி : ஹிஜாமா செய்து கொள்வதற்கு சிறந்த நாட்கள் தேய்பிறையின் ஒற்றை நாட்கள். அதிலும் சிறப்பானது 17,19,21.



0 comments:

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)