Monday, March 28, 2011

தர்காவுக்குப் போகலாமா வேண்டாமா ‍- Part II

முதல் பகுதியின் தொடர்ச்சி ...

இஸ்லாத்தில் மூன்று பள்ளிகள் புனிதமானவை 1.கஃபத்துலாஹ் (மக்கா),
2.மஸ்ஜிதுன் நபவி (மதீனா), 3.பைத்துல் முகத்தஸ் (ஜெருசலம்). அதற்காக
மற்றப் பள்ளிகள் புனிதமற்றவை என்று அர்த்தமல்ல. அவை மூன்றும் முதல்
அந்தஸ்த்தில் உள்ளவை. கஃபத்துலாஹ் ஆதம் நபியால் கட்டப்பட்டு
இப்ராஹீம் (Abraham) நபியால் மீண்டும் புனரமைக்கப்பட்டது. மதீனாப் பள்ளி
முகம்மது (ஸல்) மற்றும் அவர்களது நபித்தோழர்களால் கட்டப்பட்டது.
ஜெருசலம் பள்ளி தாவுது (David), சுலைமான் (Solomon) நபிகளால் கட்டப்பட்டது.

மற்றப் பள்ளிகள் அவ்வப்போது தொழுபவர்களின் தேவைக்கேற்ப கட்டப்பட்டு வந்தன,
இனியும் கட்டப்படும். ஆனால் தர்காக்கள் ஏன்,யாரால் கட்டப்பட்டன என்ற விவரம்
தெரியவில்லை. இனியும் கட்டப்படாது என்றே நினைக்கிறேன். அது தொழப்படும்
பள்ளியுமல்ல, இறைவனின் ஆலயமுமல்ல மாறாக அது வெறும் அடக்கஸ்தலம்தான்.
பிறகு ஏன் மக்கள் அங்கே செல்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. இங்கேதான்
தவ்ஹீதுவாதிகளும் தரீக்காவாதிகளும் பிரிகிறார்கள். இருவரும் பேசிக்
கொள்வதைக் கேட்போமா.

தவ்ஹீது : நீங்கள் ஏன் தர்காவுக்குச் செல்கிறீர்கள், அது பாவமாச்சே.

தரீக்கா :
பாவமென்று யார் சொன்னது, மரணத்தை நினைவூட்டுவதால் அடக்கஸ்தலம்
செல்லுமாறு நபிகளே சொல்லியிருக்கிறார்களே.

தவ்ஹீது :
நீங்களெல்லாம் அதற்காகச் செல்வதில்லை, அங்கு அடங்கி இருப்பவரிடம்
உங்கள் தேவைகளைக் கேட்கச் செல்கிறீர்கள்.

தரீக்கா :
கேட்பதால் என்ன தவறு, டாக்டரிடம் சென்று காண்பிப்பது போலத்தான் இதுவும்.

தவ்ஹீது : டாக்டர் உயிரோடு உள்ளவர் அவரோ மரணித்தவர்.

தரீக்கா :
இறை நேசர்கள் உயிரோடு இருக்கிறார்கள் மரணிக்கவில்லை என்று இறைவன்
தன் திருமறையில் கூறியிருக்கின்றானே.

தவ்ஹீது :
அது நபிமார்களைப் பற்றிச் சொன்னது. மேலும் இறைவன் யாரை நேசிக்கிறான்
என்பது அவனுக்குத் தானே தெரியும்.

தரீக்கா :
அது இன்னொரு இறைநேசருக்கும் தெரியும், அவர் முலமாக எங்களுக்கும் தெரிய வரும்.

தவ்ஹீது :
அப்படிப்பட்ட இடைத்தரகர் எங்களுக்குத் தேவையில்லை. தன்னிடமே நேரடியாகக்
கேட்குமாறு இறைவன் சொல்கிறான்.

தரீக்கா :
தந்தையிடம் நேரடியாகக் கேட்க வெட்கப்பட்டோ அல்லது பயப்பட்டோ தாய்
மூலம் கேட்கும் பிள்ளையைப் போல் நாங்கள் அவ்லியா மூலம் கேட்கிறோம்.

தவ்ஹீது :
இந்த உதாரணமெல்லாம் இறைவனுக்கு ஒத்து வராது. அவ்லியாக்கள் எல்லாம்
இறைவனுக்கு மனைவியா. நீங்கள் பகிரங்கமாக இணை வைக்கிறீர்கள். பாவிகள்.
நீங்கள் எந்த மொழியில் பேசினாலும் அவர் விளங்கிக் கொள்கிறாரா அதுவும் ஒரே
சமயத்தில் எல்லோருடைய தேவைகளையும் கேட்க முடிகிறதா. நிச்சயமாக நீங்கள்
இறைவனின் தன்மைகள் அவரிடமும் இருப்பதாகக் கருதுகிறீர்கள். உங்களின் இந்த
நிலை மக்கத்துக் காபிர்களின் நிலையை ஒத்திருக்கிறது. படைத்தது யார் என்று
கேட்டால் ‘அல்லாஹ்’ என்று சொன்னார்கள், பிறகு ஏன் இந்தச் சிலைகளை
வணங்குகிறீர்கள் என்று கேட்கப்பட்ட போது அல்லாஹ் ஒருவனால்
எல்லாவற்றையும் செய்ய முடியாது. அதனால்தான் அவைகளிடம்
எங்கள் தேவைகளைக் கேட்கிறோம் என்று சொன்னார்கள்.

தரீக்கா :
அடப்போங்கப்பா, வயதுக்கு வராதவனுக்கு தாம்பத்ய இன்பம் எப்படித் தெரியும்.
தர்காக்கள் பற்றி அறிய வேண்டுமென்றால் ஒரு ஷைகிடம் (சூஃபி அறிஞர்)
முரீதாக (மாணவனாக) பைஅத் (ஒப்பந்தம்) செய்து கொண்டு பயிற்சி பெற்றால்தான்
தெரிய வரும். பைஅத் சம்பந்தமான ஹதீஸ்களைப் பாருங்கள். பைஅத் பெறாமல்
மோட்சம் கிடையாது என்பதை அறிவீர்கள்.

தவ்ஹீது : பைஅத்தாம், மோட்சமாம் போங்கய்யா நீங்களும் உங்க ....

இப்படிப் போகிறது இருவருக்குமிடையேயான சம்பாஷணைகள். இன்னும் லாஜிக்கலா
கிளைக் கேள்விகளும் கிளை பதில்களும் உண்டு. நாம் என்ன முடிவுக்கு வருவது :(.

-------------------------- * * * * * -------------------------

இணை வைத்தலில் பல வகைகள் உண்டு. சூரியன், சந்திரன், நட்சத்திரம் அடங்கிய
பிரபஞ்சங்களின் மீது நம்பிக்கை வைப்பது. உயிருள்ள மிருகங்கள், பறவைகள்,
மனிதர்கள், ஜின்கள் மீது நம்பிக்கை வைப்பது. உயிரற்றவர்களின் மீதும், கற்களின்
மீதும், நாடு, அரசாங்கம், இனம், குழு, எண்ணிக்கை, படை பலம், Technology,
கல்வி, அறிவு இன்னும் தன் மீதும் நம்பிக்கை வைப்பது அனைத்தும் இணை
வைத்தலில் கொண்டு போய்ச் சேர்க்கும். இவைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
பெரிய ஷிர்க் மற்றும் சின்ன ஷிர்க். நபியவர்களுடைய ஒரு ஹதீஸின் கருத்தாவது,

‘எனது உம்மத்து (சமுதாயம்) சிலை வணக்கம் போன்ற பெரிய ஷிர்க்கில் விழுவார்கள்
என்பதை விடச் சிறிய ஷிர்க்கில் வீழ்ந்து கிடப்பார்களே என்றுதான் அஞ்சுகிறேன்’.
குர்ஆனிலும் இது பற்றி வந்திருக்கிறது.

(நபியே!) நீர் கூறும், நீங்கள் கரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் (சிக்கித்
தவிக்கும் சமயத்தில்) எங்களை இதைவிட்டுக் காப்பாற்றிவிட்டால், நிச்சயமாக நாங்கள்
நன்றி செலுத்துவோரில் ஆகி விடுவோம் என்று பணிவாகவும், மறைவாகவும் நீங்கள்
அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே அப்போது உங்களை காப்பாற்றுகிறவன் யார்?.
இதிலிருந்தும், இன்னும் மற்றெல்லாத் துன்பங்களிலிருந்தும் உங்களைக்
காப்பாற்றுபவன் அல்லாஹ்வே பின்னர் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே.

நபியே!) நீர் கூறும், உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய
கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும் அல்லது
உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை
அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான். அவர்கள்
விளங்கிக் கொள்வதற்காக (நம்)வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி)
விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக. (6: 63 - 65)

மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில்
வழிப்படடவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன் அவர்களை
(பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விடுங்கால், அவர்கள் (அவனுக்கே)
இணை வைக்கின்றனர். (29:65)

யோசித்துப் பார்த்தால் நம்முடைய பேச்சிலும் செயலிலும் எத்தனை ஷிர்க்குகள் செய்து
வருகிறோம். மழை, காற்று, புயல், சுனாமிகளின் போதும், சம்பாத்தியம், வாழ்வாதாரம்,
பாதுகாப்பு, எதிர்காலம் பற்றிய பேச்சு,செயல்களின் போதும் நாம் எப்படி நடந்து
கொள்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள்.

இறைவனின் கூற்று,"அடியான் என்னைப் பற்றி எவ்வாறு எண்ணுகிறானோ அவ்வாறே
நானும் நடந்து கொள்கிறேன்
" (பதிவைப் புரிந்து கொள்ள இதுவொன்றே போதும்).

-------------------------- * * * * * -------------------------

ஊரில் இருக்கும்போது ஒருமுறை எனது செல்ஃபோன் தொலைந்து விட்டது. எனது
உறவினர் பெண்மணி ஒருவர், எங்களூரில் வசித்து இறந்து போன ஒரு முதியவரின்
பெயரைச் சொல்லிக் கேட்டால் தொலைந்த பொருள் கிடைத்து விடும் என்று வேண்டிக்
கொண்டார். நானோ அந்த வம்பே வேண்டாம் என்று நபியவர்கள் காட்டித் தந்த இரண்டு
ரக்அத் தொழுது துஆ செய்தேன். செல்ஃபோன் கிடைத்தது. எனக்குத் தொழுகையின்,
துஆவின் மீது நம்பிக்கை பிறந்தது. அந்த உறவினருக்கும் அவரைச் சார்ந்த
பெண்களுக்கும் மறைந்த ‘அப்பாவின்’ மேல் நம்பிக்கை உயர்ந்தது. :)

ஒருமுறை மழை பெய்த போது நபியவர்கள், 'அல்லாஹ்வின் நாட்டத்தின் படி மழை
பொழிந்தது என்று சொன்னவர்கள் இறை நம்பிக்கையை அடைந்து கொண்டார்கள்,
மாறாக குறிப்பிட்ட நட்சத்திரத்தின் நகர்வின் காரணமாக மழை பொழிந்தது என்று
சொன்னவர்கள் இறை நிராகரிப்பைப் பெற்றுக் கொண்டார்கள்' என்று சொன்னார்கள்.
ஆக உலகத்தில் நடைபெறும் அத்தனையும் இறைவனின் விதிப்படியே நடக்கின்றன.
இந்த நிகழ்வுகளிலிருந்து என்ன நம்பிக்கையைப் பெறுகிறோம் என்பதைத்தான் நாம்
கவனிக்க வேண்டும். இது பரீட்சைக் கூடம், பலவிதமான சோதனைகள் இருக்கும்.

ஒருமுறை ஹஜரத் அலீ அவர்கள் போரிடுவதற்காகப் புறப்பட்டார்கள். இந்த நேரத்தில்
புறப்பட்டால் அலீ தோற்றுப் போவார், ஏனென்றால் நேரம் சரியில்லை என்று ஒரு குறி
சொல்லும் ஜோதிடன் சொன்ன விஷயம் அலீ(ரலி) அவர்களிடம் சொல்லப் பட்டது.
அதற்கவர்கள் ‘மஷ்வரா (ஆலோசனை) செய்து முடிவெடுத்த நேரத்தை மாற்ற
முடியாது, தோற்றாலும் பரவாயில்லை என்று கிளம்பினார்கள். அதாவது உலக
வெற்றி தேவையில்லை, மறுமையின் வெற்றிக்கான ஈமானைப் பாதுகாப்பதுதான்
முக்கியம் என்பது இச்சம்பவத்திலிருந்து விளங்குகிறது.

கஸ்ஸாலி என்றொரு அறிஞர் சொல்கிறார், சிலர் பாம்பைப் பிடித்து அதிலிருந்து
விஷத்தை எடுத்து விற்றுப் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதைப் பார்த்த சிலர் பாம்பைப்
பிடிக்கும் வித்தையைக் கற்காமலே அதில் ஈடுபடுவது அவர்களின் உயிருக்கு ஆபத்தாய்
முடியும். அது போலவே உலக வாழ்வின் தத்துவம், தாத்பரியம், விஷம் அறியாது
அதனைச் சேகரிக்க நினைப்பவர்களின் ஈமான் ஆபத்தில் இருக்கிறது. உயிர் பெரிதா
ஈமான் பெரிதா, ஈமான் பெரிதென்று நினைப்பவர்கள் நிச்சயம் ஒவ்வொரு
ஸ்டெப்பையும் கவனமாகத்தான் வைப்பார்கள்
.

மரணச் சமயத்தில் ஈமானைப் பறிப்பதற்கு ஷைத்தானின் முயற்சி கடுமையாக
இருக்கும். தவ்ஹீதுவாதிகளை ட்விஸ்ட் செய்யும் கேள்விகளும் அவனிடம் உண்டு
தரீக்காவாதிகளை ட்விஸ்ட் செய்யும் கேள்விகளும் அவனிடம் உண்டு எனும்போது
பொதுமக்களின் நிலைமையை என்ன சொல்வது. காலமெல்லாம் ஈமானுக்காகப்
பாடுபட்டவர்களும் இறையச்சமுள்ள நல்லடியார்களும் அவனின் சூழ்ச்சியிலிருந்து
பாதுகாக்கப் படுவார்கள். ஆனால் பொதுமக்களோ ‘கண்டதே காட்சி கொண்டதே
கோலம்’, என்ற அறியாமையிலும் ‘நமக்கு வேண்டியது எங்கேர்ந்து கெடச்சா என்ன’
என்ற சுயநலத்திலும் உழன்று தம் உயிரினும் மேலான ஈமானை மரணத்திற்கு
முன்பே பறிகொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

-------------------------- * * * * * -------------------------

தரீக்காவாதிகள் ‘ஷைகு’ என்ற குருநாதரின் கண்காணிப்பில் இருப்பவர்கள். குர்ஆன்,
ஹதீஸை எப்படி அணுக வேண்டும் என்ற 'மெய்ஞ்ஞானம்' குருநாதரால் போதிக்கப்
படுபவர்கள். கஸ்ஸாலி என்ற அறிஞர் (சூஃபி) தரீக்காவாதியான பின்புதான் நல்ல
இஸ்லாமியத் தவ்ஹீது கருத்துக்களைத் தாங்கிய புத்தகங்களைப் படைத்தார் என்றும்
தரீக்காவில் இணைவதற்கு முன் தாம் எழுதிய புத்தகங்களெல்லாம் குப்பை என்று
உணர்ந்து கிணற்றில் வீசி விட்டதாகவும் அவருடைய வரலாறு கூறுகிறது. அவருடைய‌
தவ்ஹீதுக் கருத்துக்கள் இன்றைய தவ்ஹீதுவாதிகளால் கூட புரிந்து கொள்ள முடியாத
அளவுக்கு நுணுக்கமானதாக இருக்கும். ஆனால் அக்காலத்தில் இருந்த ஷைகுகள்
போன்று இப்போது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

ஷைகிடம் பைஅத் செய்வது பாதுகாப்பாய்த் தெரிந்தாலும் தவறான ஷைகைத்
தேர்ந்தெடுத்து விட்டால் அதோ கதிதான். அதுபோல நாம் தேர்ந்தெடுத்த நல்லவர்
ஷைத்தானுக்கும் நல்லவராகி விட்டால் அவ்வளவுதான், ஓட்டு மொத்தக் கூட்டமும்
ஸீதா ஜஹன்னம்தான் (நேரா நரகம்தான் :). ஆதலால் தர்காவின் தாத்பர்யம் தெரிய வேண்டுமென்றால் யாராவது நல்ல ஷைகைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவர்
கிடைக்காத பட்சத்தில் தவ்ஹீதுவாதிகளாக இருங்கள். குறைந்த பட்சப் பாதுகாப்பாவது
கிடைக்கும். ஈமானியப் பாதுகாப்பு வளையமின்றி அங்கு செல்வது ஆபத்தானது.

தர்கா இஸ்லாத்தின் அம்சம் என்றால் அது இஸ்லாம் செல்லுமிடமெல்லாம்
அதுவும் செல்லவேண்டும். அனால் அது இணைவைப்பாளர்கள் வாழ்ந்த,வாழும்
இந்தியத் துணைக் கண்டத்தில்தான் அதிகம் காணப படுகின்றன. ஒருவேளை
இணை வைப்பாளர்களான மனிதன் மற்றும் ஜின்களால் வைக்கப்படும் மாந்திரீகத்
தொல்லைகளை முறியடிப்பதற்காகவே இவை அமைக்கப் பட்டதாக இருக்கலாம்.
அல்லது அல்லது பிஸினெஸ்ஸுக்காக உருவானதோ இல்லை இணைவைத்தலில் ஈடுபடுத்துவற்காகவே ஷைத்தான்களால் உருவாக்கப் பட்டதோ தெரியவில்லை.

அல்லது ஒரு இஸ்லாமிய அறிஞரை எவ்வாறு நாம் சந்தேகங்களை நிவர்த்தி செய்து
கொள்ள‌, புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள அணுகுகின்றோமோ அது போலவே
ஜின்களும் அவர்களை அணுகிப் பாடங்கள் படிக்கின்றன, நாளடைவில் அவருக்குச்
சீடராகி மனமுவந்து சேவைகள் செய்கின்றன். அந்த அறிஞர் மரணித்த பின்னும்
அவரிடத்திலே தங்கி அங்கு வரும் மக்களுக்குச் சேவை செய்கின்றனவோ ..
இன்னும் எந்த‌ மூலிகையில் என்ன நிவாரணம் உண்டு என்பதை அறிந்து
வைத்துக் கொண்டு அங்கு வரும் புதிர் நோய்களைக் கொண்ட நோயாளிகளைக்
குணப்படுத்துகின்றனவோ .. அல்லது மறைந்த‌ இறைநேசர்கள் இறைவனின்
அனுமதியுடன் தமது சேவையை இன்னும் தொடர்கிறார்களோ என்றெல்லாம்
யோசிக்கத் தோன்றுகிறது. காரணம் ஆச்சர்யத்தக்க வகையில் மருத்துவ
ஆப்பரேஷன்கள் கனவிலும் மயக்க நிலையிலும் நடைபெறுவதாக அங்கு
சென்று சுகம் பெற்ற சிலர் கூறக் கேட்டிருக்கிறேன்.

இப்படி மர்மமாகவே இருக்கும் தர்காக்களைப் பற்றி என்னைப் போன்ற ரெண்டுங்
கெட்டான்களால் என்ன எழுதி இந்தச் சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்ல முடியும்.
'இங்கு போவதால் என்ன தப்பு, ஏன் போகக் கூடாது' என்று சொல்பவர்கள்தாம் தர்கா
என்றால் என்ன அங்கு ஏன் போக வேண்டும் என்பது பற்றிச் சரியாக விளக்க முடியும்.
லாஜிக்கலா எதிர்கேள்விகள்தாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்களே ஒழிய சரியான
முறையில் அங்கு என்னதான் நடக்கின்றது என்று சொல்வதில்லை. ஆதலால்
இப்போதைக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

தர்காவுக்குப் போகலாம் என்று சொல்லும் நீங்கள் 'எப்படிச் சென்றால் ஈமானுக்குக்
கேடு வராது என்று அங்கு வரும் ஒவ்வொருவருக்கும் சொல்லித் தர வேண்டிய பொறுப்பு'
உங்களுக்கு இருக்கிறது. பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் அல்லாஹ்வைப் பற்றி அறிந்திருக்கிறார்களோ இல்லையோ அவ்லியாக்களைப் பற்றி நன்றாகவே அறிந்து
நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

"பாவம் விட்டில் பூச்சிகளாய் அங்கு வந்து வீழ்ந்து கொண்டிருக்கிறது
இஸ்லாமியத் தேனீக்களின் இறைவன் பற்றிய நம்பிக்கை
"


வஸ்ஸலாம்

81 comments:

asiya omar said...

பகிர்வு நல்லாயிருக்கு.நீங்கள் சொன்னதில் பல உண்மைகள் இருக்கு.

அரபுத்தமிழன் said...

நன்றி சகோ

பார்வையாளன் said...

பதிவுலகின் வரலாற்றில் சிறந்த பதிவுகளை பட்டியலிட்டால் இந்த இடுகைக்கு அதில் ஓர் இடம் உண்டு . ஓவியனை போற்றுவோம் .ஆனால் அவன் படைத்த ஓவியத்தை ஏற்க மாட்டோம் என சொல்வது தவறு . அதே நேரத்தில் ஓவியனுடன் , ஓவியத்தை ஒப்பிடுவதும் தவறு

அரபுத்தமிழன் said...

அன்புச் சகோதரன் பார்வையாளனின் அன்பிற்கும் பண்பிற்கும்
மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முஹம்மத் ஆஷிக் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இப்பதிவில் படிப்போர் தெளிவடைய எண்ணற்ற பல நல்ல கருத்துக்கள் எழுதியுள்ளீர்கள் சகோ.அரபுத்தமிழன். மிக்க நன்றி.

ஆனால், அதேநேரம் மக்கள் குழம்ப சில கருத்துக்களும் உள்ளனவே..!

//தவ்ஹீதுவாதிகளை ட்விஸ்ட் செய்யும் கேள்விகளும் அவனிடம் உண்டு
தரீக்காவாதிகளை ட்விஸ்ட் செய்யும் கேள்விகளும் அவனிடம் உண்டு//--எதிரெதிர் துருவங்களான இருவரிடமும் ஷைத்தானுக்கு என்ன வேலை இருக்க முடியும்..?!?! யாராவது ஒருவரிடம்தானே இருக்க முடியும்..?!?! தரிக்காவாதிகளிடம் ஷைத்தானுக்கு என்ன வேலை..?!?!

//தர்காவின் தாத்பர்யம் தெரிய வேண்டுமென்றால் யாராவது நல்ல ஷைகைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.//---நல்ல ஷேய்க் இவர் என்று ஒருவரை (குர்ஆனில் அல்லது ஹதீஸில் அவர் பற்றி சொல்லப்படாத நிலையில்...) எப்படி அறிந்து அறிந்துகொள்வது..?!?!

வணங்குவதற்காக இல்லை... வேறு காரனங்களுக்காக சும்மா...//தர்காவுக்குப் போகலாம் என்று சொல்//பவர்கள்...முதலில் இவைகளுக்கு பதில் சொல்லிவிட்டு அப்புறம் செல்லட்டும்..!

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். எந்த உருவச்சிலைகளையும் மற்றும் (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்கி அழிக்காமல் நீர் விட்டுவிடாதீர்..!'' என்று கூறினார்கள்".

அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்), நூல்: முஸ்லிம் 1764

"நபி (ஸல்) அவர்கள் கப்ருகளைப் பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்".

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 1610.

---ஆக....இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒரு விஷயம் உள்ள இடத்திற்கு ஏன் செல்ல வேண்டும்..?

மறுமை நினைவுக்காக கப்ரு ஜியாரத் செய்ய வேண்டுமானால், அவரவர் ஊரில் உள்ள மண் குவித்த பள்ளிவாசல் பொது கப்ருஸ்தானில் செய்து கொள்ள வேண்டியதுதானே..?

'செங்கல் சிமென்ட் வைத்து கட்டப்பட்ட "அவுலியா(?)" கப்ருக்கு போய்தான் கப்ரு ஸியாரத் செய்வேன்' என்றால்... அது பொய்..!

அவர்களிடம் துவா கேட்கத்தான் இவர்கள் செல்கிறார்கள்..!

அதாவது அல்லாஹ்விற்கு இணை வைக்க செல்கிறார்கள்.

இணைவைத்து நேரடியாக நிரந்தர நரகம் செல்ல நினைப்பவர்கள் தர்காவிற்கு செல்கிறார்கள்..!

தட்ஸ் ஆல் யுவர் ஆனர்..!

முஹம்மத் ஆஷிக் said...

@ சகோ.பார்வையாளன்...

//ஓவியனை போற்றுவோம்.ஆனால் அவன் படைத்த ஓவியத்தை ஏற்க மாட்டோம் என சொல்வது தவறு.//---அல்லாஹ் படைத்த அழகிய ஓவியங்களான குர்ஆனும் நபிவிழியும் தர்காவிற்கு எதிராக நிற்கின்றனவே..?!?!?

//அதே நேரத்தில் ஓவியனுடன் , ஓவியத்தை ஒப்பிடுவதும் தவறு//---இதுவே தவறு என்றால்...

...ஓவியத்தை ரசிக்க வந்த ஓவியக்கலை தெரியாத அற்ப மனிதர்களும் மகா ஓவியரும் எப்படி ஒப்பாவார்...?

சபாஷ்..!

இப்போதுதான் தெளிவான பாதையை நோக்கி நகர்கிறீர்கள் சகோ.பார்வையாளன்..!

மிக்க நன்றி.

அரபுத்தமிழன் said...

//படிப்போர் தெளிவடைய எண்ணற்ற பல நல்ல கருத்துக்கள் எழுதியுள்ளீர்கள்//
நன்றி சகோ.
//எதிரெதிர் துருவங்களான இருவரிடமும் ஷைத்தானுக்கு என்ன வேலை//
ஈமான் கொண்ட அனைவரும் இறுதி மூச்சு வரை ஈமான் பறிபோகக் கூடாதே
என்ற கவலையில் இருப்பார்கள்.
// தரிக்காவாதிகளிடம் ஷைத்தானுக்கு என்ன வேலை..?!?!//
இப்படி நீங்களே முடிவெடுப்பதுதான் தப்பு.

அரபுத்தமிழன் said...

சகோ இஸ்மாயீலுடையக் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.

ஜெய்லானி said...

////தவ்ஹீதுவாதிகளை ட்விஸ்ட் செய்யும் கேள்விகளும் அவனிடம் உண்டு
தரீக்காவாதிகளை ட்விஸ்ட் செய்யும் கேள்விகளும் அவனிடம் உண்டு//--எதிரெதிர் துருவங்களான இருவரிடமும் ஷைத்தானுக்கு என்ன வேலை இருக்க முடியும்..?!?! யாராவது ஒருவரிடம்தானே இருக்க முடியும்..?!?! தரிக்காவாதிகளிடம் ஷைத்தானுக்கு என்ன வேலை..?!?!//

இதையே ””தஜ்ஜால்”” யுக முடிவு நாள் அருகில் செய்வான் என்று ஹதீஸ் இருக்கே..!!


அவன் எதை ஜன்னத் என்று சொல்வானோ அது சுட்டெரிக்குக்கும் ஜஹன்னம் ..எதை ஜஹன்னம் என்று சொல்வானோ அது ஜன்னத்

இதுக்குதான் ஒவ்வொரு தொழுகையிலும் தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் , கபரின் நெருக்குதலை விட்டும் பாதுகாப்பு கேட்டு துவா செய்ய சொல்லி இருக்காங்க ரஸுலுல்லாஹ் (ஸல்)..

அரபுத்தமிழன் said...

விளக்கத்திற்கு நன்றி சகோ ஜெய்லானி

முஹம்மத் ஆஷிக் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.ஜெய்லானி & சகோ.அரபுத்தமிழன்.

//தரிக்காவாதிகளிடம் ஷைத்தானுக்கு என்ன வேலை..?!?!//===>//இப்படி நீங்களே முடிவெடுப்பதுதான் தப்பு.//

ஏன், இந்த(சரியான)முடிவு எடுத்தேன் என்று இஸ்லாமிய(அதாவது குர்ஆன்,நபிவழி)ஆதாரங்களை வைத்திருக்கிறேன்.

அதனால்தான், இது சரியானது என்று மனப்பூர்வமாக நம்புகிறேன்.

அதேபோல...அவர்களும் இஸ்லாமிய(அதாவது குர்ஆன்,நபிவழி)ஆதாரங்களை வைக்கட்டுமே பார்ப்போம்..!

ஜெய்லானி said...

வ அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ் )

//ஏன், இந்த(சரியான)முடிவு எடுத்தேன் என்று இஸ்லாமிய(அதாவது குர்ஆன்,நபிவழி)ஆதாரங்களை வைத்திருக்கிறேன்.//

எதையுமே நான் மறுக்க வில்லையே..!! தெளிவான பாலைப்போல குரான் ஹதிஸ் நம்மிடம் இருக்கு அதை கொடுத்து விட்டுப் போயிருக்காங்க நமது ரஸுல் (ஸல் )

அதை கடைந்து வெண்னெயாகவும் , நெய்யாகவும் , இல்லை அப்படியே பாலாகவும் உபயோகிக்கலாம்.
இல்லை குருட்டாம் போக்கில் அப்படியே மூடிப்போட்டு வச்சிருந்து வீனாக்கவும் செய்யலாம்..!!

தெளிவாக ””லாயிலாஹா இல்லால்லாஹ் ”என்று இருக்கும் போது .எல்லாமே அதுக்குள் அடங்கி விடுகிறது.. இந்த பதிவின் தலைப்பு உட்பட :-)

நபியே ..!! நீர் குருடரை பார்க்க செய்வபராகவும் இல்லை ..செவிடரை கேட்க செய்பவராகவும் இல்லை “ குர் ஆனை மக்களிடையே எத்தி வைப்பதை தவிர ”

நபிக்கே அப்படி இருக்கும் போது அதுக்கு பிறகு வந்த மற்றவரை நாம் என்ன செல்ல முடியும்

முஹம்மத் ஆஷிக் said...

//தெளிவாக ””லாயிலாஹா இல்லால்லாஹ் ”என்று இருக்கும் போது .எல்லாமே அதுக்குள் அடங்கி விடுகிறது.. இந்த பதிவின் தலைப்பு உட்பட :-)//

---தெளிவாகவும் சரியாகவும் சொன்னீர்கள் சகோ.ஜெய்லானி.(ரெண்டுபேருக்கும் சேர்த்து ஸலாம் சொன்னேன்ங்க சகோ.... அவ்வளவுதான்.)

வீணாக்காத உங்கள் நிலைப்பாடே எனது நிலைப்பாடு. மிக்க நன்றி.

டிஸ்கி :
இது குர்ஆன் & நபிவழி மட்டும் சார்ந்த ஒரு சாமானியனின் புரிதல்கள்.

nagoreismail said...

என் கருத்தை எதிர்பார்த்தற்கு நன்றி..

பதிவு நடுநிலையாக எழுதப்பட்டுள்ளது.. நன்றிகள்.. தவ்ஹீதுவாதிக்கும் தரீக்காவாதிக்கும் நடக்கும் விவாதத்தில் தரீக்காவாதி இன்னும் கொஞ்சம் மாற்றி பேசியிருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

அனைவருக்கும் நேர்வழி அதாவது பாத்திஹா சூராவில் வருவது எவர்களுக்கு அருள்புரிந்திருக்கிறானோ அந்த வழியை காட்டி தர பிரார்த்தனைகள்..

முதலாம் பதிவில் கூட பின்னூட்டத்தில் தம்பி/நானா ஆஷிக் அவர்கள் கூட அடக்கஸ்தலத்தை வணக்கஸ்தலமாக்கியவர்களான பாவிகள் என்ற பெருமானார் (ஸல்) அவர்களின் ஹதீஸை குறிப்பிட்டு பதில் கேட்டிருந்தார்கள்..

நாகூர் ஜபருல்லாஹ் நானா ஒரு கவிதை எழுதினார்கள்..
’வலியுல்லாஹ்
உங்களுக்கு வாரிக்
கொடுப்பார்கள்’
என ஆசி வழங்கிவிட்டு
வந்தவர்களிடம்
தர்மம் பெறுவது
எங்கள் ஊரில்தான்

இது தான் அந்த கவிதை..

உண்மையில் இவர்கள் வணக்கஸ்தலமாக்கவில்லை வியாபாரஸ்தலமாக்கி விட்டார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையிலேயே நடந்த சம்பவங்களில் மிக முக்கியமானது என்பது என்னை பொறுத்த வரையில் அவர்களுக்கு குரான் ஷரீஃப் இறக்கி வைக்கப்பட்டது கூட அல்ல.. அவர்கள் மிஹ்ராஜுக்கு சென்றது தான்.

குரான் ஷரீஃப் இறங்கும் போது ஜிப்ரயீல் (அலை) அவர்களை கண்டு பயந்தார்கள். இது ஆரம்ப நிலை..
அவர்களின் இடைவிடாத பயிற்சி, பிரார்த்தனை மூலம் மிஹ்ராஜ் வரை உயர்ந்தார்கள்.

அது இறைவன் தன் அடியாரை அழைத்துக் கொண்ட ஒரு அருமையான உண்மை நிகழ்வு. மிக ஆழமான அர்த்தங்களை கொண்டதாக சூஃபியிசத்தில் இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.

என்னோட கேள்வி.. இறைவன் தன் அடியாரை ஏன் பைத்துல் முகத்தஸுக்கு அழைக்க வேண்டும்.
ஏன் பைத்துல் முகத்தஸுக்கு போகாமல் நேரடியாக மிஹ்ராஜுக்கு செல்லவில்லை.
அங்கே என்ன இருக்கிறது?
ஏன் அதன் சுற்றுபுறங்களை அபிவிருத்தி செய்திருப்பதாக இறைவன் சொல்கிறான்?
பைத்துல் முகத்தஸுக்கு எதனால் சிறப்பென்று நீங்கள் கருதுகிறீர்கள்? அதை ஜின் கட்டியதாலா?

இதற்கு மேடை போட்டு மைக் பிடித்து டிவி முன்னாடியோ வீசிடி போட்டு விற்க வேண்டிய சமாச்சாரமில்லை..

இது அமைதியான முறையில் பணிவோடு பயபக்தியோடு பரிமாறிக் கொள்ள வேண்டிய செய்திகள்.

நிறைய எழுதலாம்..
எனக்கு பார்வையாளன் என்ற பெயரில் பின்னூட்டமிடும் சகோதரர் மீது மரியாதை வந்திருக்கிறது.

அரபுத்தமிழன் said...

வ அலைக்குமுஸ்ஸலாம் சகோதரர்களே.
//இது குர்ஆன் & நபிவழி மட்டும் சார்ந்த ஒரு சாமானியனின் புரிதல்கள்.// இது பன்ச் :))

அரபுத்தமிழன் said...

எனது ஆர்வத்தை ஏற்று பதிலளித்த இஸ்மாயீல் நானாவுக்கு நெற்றியில் ஒரு 'இச்' :)

//பதிவு நடுநிலையாக எழுதப்பட்டுள்ளது..// அல்ஹம்து லில்லாஹ்.
// வழியை காட்டி தர பிரார்த்தனைகள்..// ஆமீன்.

ஜபருல்லா நானாவின் கவிதை 'நச்' ரகம், மிக அருமை.

//வணக்கஸ்தலமாக்கவில்லை வியாபாரஸ்தலமாக்கி விட்டார்கள்.// உண்மை

//என்னோட கேள்வி.. // பாத்தீங்களா பாத்தீங்களா லாஜிக்கா
கேட்க ஆரம்பிச்சிட்டீங்க :))

//இது அமைதியான முறையில் பணிவோடு பயபக்தியோடு பரிமாறிக் கொள்ள வேண்டிய செய்திகள்.// ஒத்துக் கொள்கிறேன்.

//நிறைய எழுதலாம்..// எழுதுங்களேன் ப்ளீஸ்.

//எனக்கு பார்வையாளன் என்ற பெயரில் பின்னூட்டமிடும் சகோதரர்
மீது மரியாதை வந்திருக்கிறது// எனக்கோ அவர் மீது அன்பும் பாசமும்
அதிகரிக்கிறது :)

nagoreismail said...

’இச்’சை இசைவோடு பெற்றுக் கொண்டேன்.

ஜபருல்லாஹ் நானாவின் ‘நச்’சை பாராட்டியதற்கு நன்றிகள்.

எழுதுங்களேன் ப்ளீஸ் - குழப்பம் ஏற்படுத்தாமல் எழுத விழைகிறேன். புரியவில்லை அல்லது குழப்பமாக இருக்கிறது என்றால் விட்டு விடவும். இதை பற்றி யோசிக்க வேண்டாம்..

மூன்று கோழி சமைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
முதலாவது தானாக செத்த கோழி
இரண்டாவது ஒன்றும் சொல்லாமல் அறுத்த கோழி
மூன்றாவது ‘அல்லாஹ்’வின் பெயரை சொல்லி அறுத்த கோழி

எது நமக்கு ஆகுமானது?

நிச்சயமாக மூன்றாவதான கோழி தான். இல்லையா?

எப்படிங்க?

எல்லாமே இறந்து போனது தான்.

எல்லாமே அறுக்கப்பட்டது தான்.

எல்லாமே ஒரே மாதிரி சமைக்கப்பட்டது தான்.

இப்படியிருக்க என்ன வித்தியாசம் மூன்றுக்குமிடையில் வந்து விட்டது.

ஒரே ஒரு வித்தியாசம் தான்.

மூன்றாவது ‘அல்லாஹ்வின்’ பெயரை சொல்லி அறுக்கப்பட்டது என்பது மட்டும் தான்.

மூன்றுமே இறந்து கிடந்தாலும் ‘அல்லாஹ்’ என்ற பெயரை அறுப்பவர் உச்சரித்தவுடன் இறந்ததற்கிடையிலேயே வித்தியாசம் வந்துவிடுகிறது பாருங்களேன்.

கோழிக்கே இந்த வித்தியாசம் என்றால் மனிதன் இறைவனின் இரகசியம் அல்லவா..?

ஒரு மனிதன் அல்லாஹ்வின் பெயரை தன் உடலில் நெஞ்சில் மூளையில் இரத்தத்தில் ரூஹில் (அஸ்ட்ரல் ஃபோர்ஸ்) நிறுத்தி வைத்தவர்கள் இறந்து போனதற்கும் சாதாரண ஒருவர் இறந்து போனதற்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடுமா?

சூரத்துல் பகறாவில் 154 வது வசனத்தில் போரிட்டு இறந்தவர்களை இறந்தவர்கள் என்று சொல்லாதீர்கள் என்கிறான் இறைவன். இதன் அர்த்தம் உங்களுக்கு இப்போது விளங்கி இருக்கலாம்.

ஆனால் இறைவன் இங்கே சுட்டிக் காட்டியது வாளெடுத்து அசத்தியத்தோடு போட்டியிடும் சிறிய போரைத் தான் குறிக்கிறது.

பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ‘பெரிய போருக்கு தயாராகுங்கள்..’ என்று. இத்தகைய பெரிய போரில் வெற்றி பெற்றவர்களை பற்றி என்ன சொல்வது? ஏனெனில் சிறிய போரில் இறந்தவர்கள் உயிரோடு இருப்பதை நீங்கள் பெர்சீவ் பண்ண முடியாது என்கிறான் இறைவன்.

அப்போது பெரிய போரில் வெற்றி பெற்றவர்களை அந்த உத்தம இறைநேசர்களை பெர்சீவ் பண்ண முடியாமல் போனது மட்டுமல்ல ஒரு கூட்டம் இக்னோர் பண்ணிக் கொண்டிருக்கிறது.

இத்தகையவர்களின் அடக்கஸ்தலத்திற்கு செல்லும் போது ஒரு எதிக்ஸ் உள்ளது. மரியாதையாக பயபக்தியோடு சென்று காண வேண்டும்.

அல்லாஹ் பொறுமையாளர்களோடு இருப்பதாக சொல்கிறான். ஆனால் அதே அல்லாஹ் முஹ்ஸின்களை நேசிப்பதாக சொல்கிறானே. இவர்கள் முஹ்ஸின்கள் அல்லவா?

அதெப்படி முஹ்ஸின்கள் என்று உங்களுக்கு தெரியும் என்பது பிறிதொரு கேள்வி?
முஹ்ஸினாக இருப்பவர்களை மரியாதையோடு தஸ்லீமாத்து செய்ய வேண்டும் என்பது தவிர்க்காமல் செய்ய வேண்டிய நடைமுறை.

போதும் என்று கருதுகிறேன்.

அரபுத் தமிழனுக்காக

அரபுத்தமிழன் said...

நானா கை கொடுங்க, இந்த அரபுத் தமிழனுக்காக‌ச் சிறிது நேரம் ஒதுக்கி
எளிமையான உதாரணத்துடன் அருமையாகத் தெளிவாகத் தங்களின்
கருத்தைச் சொல்லி இருக்கிறீர்கள். எனது புரிதல்கள் ஓரளவு சரியென்றே
தோன்றுகிறது. இதற்கு முந்தையப் பின்னூட்டத்தில் தாங்கள் சொன்ன‌
மாதிரி பக்கத்தில் இருந்து, கேட்டுத் தெளிய வேண்டிய விஷயம்தான்
அவ்லியாக்கள் பற்றிய சப்ஜெக்ட். இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் நாம்
சந்தித்து இது பற்றிக் கலந்துரையாட வேண்டும்.

nagoreismail said...

அரபுத் தமிழன்.. ரொம்ப துவா செய்றேன்.. உங்களது ஹக்கில்.. குரான் ஷரீஃபில் மூஸா நபியவர்களின் கஸஸ் படித்து இருக்கிறீர்களா? - ரொம்பவும் உள்ளர்த்தங்கள் நிரம்பிய அருமையான சம்பவத் தொடர் அது.
பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றி கரையேற்றி ஹாரூன் நபியவர்களிடம் இஸ்ராயீலின் சந்ததிகளை ஒப்படைத்து விட்டு 40 நாட்கள் நோன்பிருந்து இறைவனை காண செல்வார்கள்.

இதற்கிடையில் ’சாமிரி’ என்பவன் காளைக்கன்றை வடிவமைத்து இறைவனுக்கு இணை வைத்து மக்களை வழிபட வைத்து வழி கெடுத்து விடுவான்.

இறைவன் மூலமாக ‘சாமிரி வழிகெடுத்து விட்டான்’ என்பது தெரிந்து மூஸா நபியவர்கள் மீண்டும் வருவார்கள்.

கோபமாக வந்து ஹாரூன் நபியவர்களிடம் தாடியை பிடித்து கேட்கும் போது ஹாரூன் நபியவர்கள் பதிலளிப்பார்கள்.

(ஸூரத்துத் தாஹா:94) - “பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!” என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்”

“... பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்..” - இதை நன்கு கவனிக்கவும்

- ஹாரூன் நபியவர்கள் மூஸா நபியவர்களிடம் பிரிவினையை உண்டாக்குவது குற்றம் என்று சொல்லி தன் நிலையை விலக்கி விட்டார்கள்.

பிரிவினையை உண்டாக்கிய ஒரு கூட்டத்தார் இப்போது இருக்கிறார்கள், ‘நாளை பெருமானார் (ஸல்) அவர்கள் இவர்களிடம்
”ஏன் பிரிவினையை உண்டாக்கினீர்கள்..?” என்று கேட்டால் என்ன பதிலளிப்பார்களோ..?
எந்த ஆதாரத்தை கொண்டு வந்து “இந்த புத்தகத்தை பாருங்கள் என்னை போன்ற மனிதரான முஹம்மது நபிகளே..” (ஸல்) - என்று கூறுவார்களோ என்று நினைக்கையில் மனதில் திகிலாகவே இருக்கிறது..

இன்னும் பிரித்து கூறுபோட எனக்கு விருப்பமில்லை. இறைவன் நாடினால் சந்திக்கலாம்.. ஸீனா ப ஸீனா.. மனதிலிருந்து மனதிற்கு எத்தி வைக்கலாம்..

அரபுத்தமிழன் said...

//ரொம்ப துவா செய்றேன்.. உங்களது ஹக்கில்.//
ஆஹா, இதற்குத்தானே ஆசைப் பட்டாய் அரபுத் தமிழா :),
நன்றி சகோதரா 'அல்லாஹும்ம அல்லிஃப் பய்ன குலூபினா
வ அஸ்லிஹ் ஃதாத்த பய்னினா' ‍ஆமீன்.

மூஸா(அலை) அவர்களின் சம்பவங்களில் நிறைய ஈமானியப்
பாடங்கள் பொதிந்துள்ளன. மேலும் அவர்களே இல்மைத் தேடி
ஒரு ஷைகை நாடிச் சென்ற சம்பவத்தை விட்டு விட்டீர்களே :)

VELAN said...

பிற மதத்தினரும் புரிந்து கொள்ளுமாறு நல்ல விளக்கம். வளர்க உங்கள் பணி

அரபுத்தமிழன் said...

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ

Aashiq Ahamed said...

சகோதர/சகோதரிகள் அனைவருக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

இறைவன் காட்டிய வழிப்படி மிக அழகிய முறையில் சகோதரர்கள் விவாதிப்பது கண்டு மனம் பூரிப்படைகின்றது..அல்ஹம்துலில்லாஹ்.

அலுவலக வேலைகள் அதிகமிருப்பதால் இணையம் பக்கம் அதிகமாக வரமுடியவில்லை. இன்ஷா அல்லாஹ், இன்னும் சில நாட்களில், சகோதரர்கள் அரபுத்தமிழன், இஸ்மாயில், பார்வையாளன் ஆகியோருக்கான என்னுடைய கேள்விகளுடன் வருகின்றேன். எனக்காக துவா செய்யுங்கள்.

நன்றி,

என்றும் உங்கள் அனைவரையும் தன்னுடைய துவாக்களில் சேர்த்து கொள்ளும் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

nagoreismail said...

ஆஷிக்..

உங்கள் கடைசி பின்னூட்டம் பிடித்திருக்கிறது. நன்றி.

கேள்வியோடு வாங்க.. பதில் தெரிந்தால் சொல்கிறோம். ஒரு வேளை தெரியவில்லை என்று வையுங்கள், தெரியாததை ஒப்புக் கொண்டு விலகிக் கொள்கிறேன். ஆனால் என்னோட ஸ்டேண்டிலிருந்து மாறும் எண்ணம் இல்லை.

அரபுத்தமிழன்..

ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தால் சேர்த்துக் கொள்ளவும்.

dulfiqar@gmail.com

அரபுத்தமிழன் said...

வ அலைக்குமுஸ்ஸலாம் சகோதரர்களே.
நேற்று முழுதும் பிசியாக இருந்ததால் இப்பக்கம்
வர முடியவில்லை. இவ்விஷயத்தில் மக்கள் இன்னும்
தெளிவு பெறக் கேள்வி பதில்களை எதிர்பார்க்கிறேன்.

அரபுத்தமிழன் said...

ஆன்மீக விஞ்ஞானத்தைப் பற்றிய ஒரு அறிஞரின்
கீழ்கண்டப் பதிவைப் படித்துப் பாருங்கள்
http://pirapanjakkudil.blogspot.com/2011/03/blog-post_30.html

பாவா ஷரீப் said...

//ஒரு மனிதன் அல்லாஹ்வின் பெயரை தன் உடலில் நெஞ்சில் மூளையில் இரத்தத்தில் ரூஹில் (அஸ்ட்ரல் ஃபோர்ஸ்) நிறுத்தி வைத்தவர்கள் இறந்து போனதற்கும் சாதாரண ஒருவர் இறந்து போனதற்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடுமா?//

நச்
இந்த பதிலுக்கு என்னுடைய
இச்

nagoreismail said...

இன்னொரு ‘இச்’சா...?

Aashiq Ahamed said...

சகோதரர் நாகூர் இஸ்மாயில் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

இன்ஷா அல்லாஹ் வாதத்தை அழகிய முறையில் தொடருவோம்

---
ஆனால் என்னோட ஸ்டேண்டிலிருந்து மாறும் எண்ணம் இல்லை.
---

என்ன மாதிரியான பதில் இது? ஒரு விஷயம் கூறப்பட்டால் சிந்தித்து பார்த்து அதில் உண்மையிருந்தால் ஆவன செய்ய முன்வருகின்ரேன் என்பது தானே ஒரு முஸ்லிமின் அழகான செயலாக இருக்க முடியும்? நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தாலும் நான் இப்படித்தான் இருப்பேன் என்பது சரியான வாதமா?

அடுத்து, நான் முந்தைய பதிவில் கேட்ட கேள்விக்கு தாங்கள் பின்வருமாறு பதில் சொல்லிருக்கிண்றீர்கள்.

---
உண்மையில் இவர்கள் வணக்கஸ்தலமாக்கவில்லை வியாபாரஸ்தலமாக்கி விட்டார்கள்.
---

ஆக, அல்லாஹ்வின் அடியார்களின் கல்லறைகளை வணக்கஸ்தளங்களை ஆக்கி கொண்டவர்கள் மிக கெட்டவர்கள் என்ற கூற்றில் மாற்று கருத்து இல்லையல்லவா? அதுபோல, தர்கா போன்ற இடங்களுக்கு சென்று அங்குள்ள கல்லறையை வணக்கும் மக்களும் இறைவனால் வெறுக்கப் பட்டவர்கள் என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து இல்லையல்லவா?

தாங்கள் இந்த கேள்விகளுக்கான பதிலை உறுதிப்படுத்தினால் என்னுடைய அடுத்த கேள்விக்கு செல்கின்றேன். இன்ஷா அல்லாஹ்

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Aashiq Ahamed said...

சகோதரர் பாவா ஷரீப்,

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

----
/ஒரு மனிதன் அல்லாஹ்வின் பெயரை தன் உடலில் நெஞ்சில் மூளையில் இரத்தத்தில் ரூஹில் (அஸ்ட்ரல் ஃபோர்ஸ்) நிறுத்தி வைத்தவர்கள் இறந்து போனதற்கும் சாதாரண ஒருவர் இறந்து போனதற்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடுமா?//
நச்
இந்த பதிலுக்கு என்னுடைய
இச்
----

வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். இறைவனே எல்லாம் அறிந்தவன்.

அதுபோல, இஸ்லாத்திற்கு மற்றவர்களை அழைப்பவர்களுக்கும் அழைக்காதவர்களுக்கும், சலாம் கூற வாய்ப்பிருந்தும் கூறாதவர்களுக்கும் கூறுபவர்களுக்கும், பொய் பேசுபவர்களுக்கும் பேசாதவர்களுக்கும் etc etc என்று இவர்கள் அனைவருக்கும் வித்தியாசங்களுண்டு. அதற்காக என்ன செய்யலாம் சகோதரர்?

நாயகம் (ஸல்) அவர்களது கூற்றுக்கு எதிராக (தரைக்கு மேல எழும்பிய கல்லறைகளை தரை மட்டமாக்க கட்டளை இட்டார்கள் பெருமானார் (ஸல்)) அந்த நல்லவர்களுக்கு சமாதி எழுப்பி அங்கு சென்று வரலாமா?

சமாதிகளுக்கு செல்ல வேண்டுமென்று நாயகம் (ஸல்) சொன்னார்கள் என்றால் அது நல்லவர்கள், கெட்டவர்கள் என்று அனைவரின் சாமாதிகளுக்கும் தான். நல்லவர்களுக்கு, அதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லவர்களின் சமாதிகளுக்கு, அதிலும் தரைக்கு மேலே எழுப்பப்பட்ட சமாதிகளுக்கு செல்ல வேண்டுமென்று சொல்லவில்லையே அருமை இறுதி நபி (ஸல்) அவர்கள்?

தாங்கள் இதற்கு பதிலளிக்குமாறு கேட்டு கொள்கின்றேன்.

இறைவன் உங்கள் அறிவையும், என்னுடைய அறிவையும் விசாலமாக்க போதுமானவன்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

nagoreismail said...

அலைக்கும் ஸலாம் ஆஷிக் அஹமத்
"என்ன மாதிரியான பதில் இது? ஒரு விஷயம் கூறப்பட்டால் சிந்தித்து பார்த்து அதில் உண்மையிருந்தால் ஆவன செய்ய முன்வருகின்ரேன் என்பது தானே ஒரு முஸ்லிமின் அழகான செயலாக இருக்க முடியும்? நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தாலும் நான் இப்படித்தான் இருப்பேன் என்பது சரியான வாதமா?"

- இது நல்ல மாதிரியான செயல் தான். ஏனெனில் பொதுவாக தர்ஹாக்கு போக கூடாது என்பவர்கள் என்னென்ன பேசுவார்கள் எந்த ஆதாரத்தை கொண்டு வருவார்கள் என்று எனக்கு தெரியாமல் இருக்குமா என்ன? எத்தனை விசிடி எத்தனை ஆடியோ உரைகள், எத்தனை புத்தகங்கள் என்று பார்த்து கேட்டு படித்து இருக்கிறேன் முறையாக, இதையெல்லாம் பார்த்து அந்த கூற்றில் உண்மை இல்லை என்று உணர்ந்த பிறகு தானே ஆவன செய்து முஸ்லிமின் அழகிய செயலாக இப்போது இருக்கும் நிலையில் இருக்கின்றேன்.

அதற்காக தான் அப்படி சொன்னேன்.

nagoreismail said...

its very hard for me to write here, i dont know, it could be because of my pc or due to the comment settings. Few times, I Spend nearly one hour my time to write few paragraphs, suddenly every thing went lost.

My dear Arabu Thamizan, Please advice.

அரபுத்தமிழன் said...

அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர்களே.
தொடரட்டும் தங்களின் அழகிய விவாதம்

அரபுத்தமிழன் said...

சகோ 'இச்'மாயீல், சாரி இஸ்மாயீல் :)
(தமிழ் எழுதி சம்பந்தமாக மெயில் அனுப்பியிருக்கிறேன்)

//உண்மை இல்லை என்று உணர்ந்த பிறகு தானே //

நீங்கள் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டுமே

Aashiq Ahamed said...

சகோதரர் இஸ்மாயில் ,

வ அலைக்கும் சலாம்,

---
இது நல்ல மாதிரியான செயல் தான். ஏனெனில் பொதுவாக தர்ஹாக்கு போக கூடாது என்பவர்கள் என்னென்ன பேசுவார்கள் எந்த ஆதாரத்தை கொண்டு வருவார்கள் என்று எனக்கு தெரியாமல் இருக்குமா என்ன? எத்தனை விசிடி எத்தனை ஆடியோ உரைகள், எத்தனை புத்தகங்கள் என்று பார்த்து கேட்டு படித்து இருக்கிறேன் முறையாக, இதையெல்லாம் பார்த்து அந்த கூற்றில் உண்மை இல்லை என்று உணர்ந்த பிறகு தானே ஆவன செய்து முஸ்லிமின் அழகிய செயலாக இப்போது இருக்கும் நிலையில் இருக்கின்றேன்.
---

உங்களுடைய முந்தைய கருத்துக்கு நீங்களே தெளிவாக முரண் படுகிண்றீர்கள். தாங்கள் தான் //தெரியாததை ஒப்புக் கொண்டு விலகிக் கொள்கிறேன்.// இப்படி கூறினீர்கள். ஆக, தர்காக்களுக்கு எதிரான பல தகவல்கள் குறித்து படித்திருக்கும் தங்களுக்கும் 'தெரியாதது' என்று ஒன்று உண்டல்லவா? அந்த 'தெரியாதது' குறித்து தாங்கள் ஆராய முற்படும் போது அது உங்களுக்குள் மாற்றத்தை உண்டாக்கலாம் அல்லவா?

கம்யுநிசத்தில் ஊறி திளைத்தவன் நான். அது தான் சரி தீர்க்கமாக நம்பியவன். தாங்கள் சொன்னீர்களே // என்னோட ஸ்டேண்டிலிருந்து மாறும் எண்ணம் இல்லை// என்று, அது தான் என்னுடைய நிலையாகவும் இருந்தது. இன்றோ அவற்றை பின்னோக்கி பார்க்கும் போது நான் எந்த அளவு அறியாமையில் இருந்திருக்கின்றேன் என்று புரிகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

ஆக, திறந்த மனதோடு எவற்றையும் அணுகுவதே சரி என்பது என்னுடைய கருத்து, நாம் அது குறித்து எவ்வளவு தெளிவாக இருந்த போதிலும்.

நீங்கள் சொல்வதில் அர்த்தம் இருப்பதாக நான் கருதினால் நிச்சயம் அதனை பரிசீலிப்பேன். தர்க்கக்கள் குறித்து எந்த விதமாக தவறான எண்ணங்களை நான் கொண்டிருந்தாலும் சரியே.

சரி, இதனை படிப்பவர்களின் பார்வைக்கு விட்டுவிடுவோம். பதிவின் மையப்பொருளான தர்க்காகள் குறித்து வாதிப்போம். நான் கேட்ட கேள்விகளுக்கு உங்கள் பதில்களை உறுதிப்படுத்துங்கள்.

தமிழில் இணையம் துணை இல்லாமல் தட்டச்சு செய்ய

http://www.google.com/ime/transliteration/index.html

வஸ்ஸலாம்,

உங்க; சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Aashiq Ahamed said...

சகோதரர் அரபுத்தமிழன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களிடம் சில கேள்விகள்,

1. உயர்ந்திருக்கும் எந்த ஒரு கப்ரையும் தரைமட்டமாக்காமல் விட்டு விடாதிர் என்று அருமை நபி(ஸல்) கட்டளை இட்டிருக்கின்றார்கள். நாயகம் அவர்களது வாழ்வை அப்படியே பிரதிபலிக்க அரும்பாடுபடும் நாம், இறுதி நபியை நம் உயிரினும் மேலாக நேசிக்கும் நாம், அவர்கள் கட்டளை இட்டதற்கு இணங்கி, தர்க்காகளுக்கு சென்று அங்குள்ள சமாதிகளை தரைமட்டமாக்கி விட்டு, அதாவது, தரைக்கு சமமாக ஆக்கி விட்டு வரலாமா? அப்படி செய்வதால் முஸ்லிம் என்ற முறையில் மிகச் சரியானதையே நான் செய்திருக்கின்றேன் அல்லவா?

2. நாயகம் (ஸல்) அவர்களது கூற்றுக்கு நேர் எதிராக, சமாதியை மேலெழுப்பி வைத்திருக்கும் ஒரு இடத்திற்கு (அதனை இடிப்பதற்காக அன்றி) முஸ்லிமாகிய நாம் செல்லலாமா? அப்படி செல்வதால் ஆருயிர் நபியின் வார்த்தைகளை புறக்கணித்தது போலாகாதா?

நன்றி,

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

அரபுத்தமிழன் said...

வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்)
சகோ ஆஷிக், இடிப்பதும், ஆராய்ந்து இடிக்காமல் விடுவதும்
இஸ்லாமிய அரசாங்கத்தின் கடமைகளுள் ஒன்று. ஒரு தனி
முஸ்லிமுக்கான கடமையாக இதை நான் கருதவில்லை.

அரபுத்தமிழன் said...

//முஸ்லிமாகிய நாம் செல்லலாமா// செல்லலாமே.

1. முறையான ஜியாரத்துக்காகச் செல்லலாம்

2. அங்கு வருபவர்களுக்கு எப்படி ஜியாரத் செய்ய வேண்டும்
என்று சொல்லிக் கொடுக்கச் செல்லலாம்.

3. அங்கு செல்பவர்களை ஷிர்க்கின் பிடியிலிருந்து மீட்பதற்காகச்
செல்லலாம் :)

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

நானே இந்த விஷயத்தில் தெளிவில்லாமல் இருக்கிறேன். என்னைக்
கேட்டால் தெளிவாகப் பதில் சொல்ல இயலாது. சகோ இஸ்மாயீல்
போன்றோர்தான் தெளிவு படுத்த வேண்டும்.

nagoreismail said...

ஆஷிக்..

கப்ருகளை ஒழுங்குபடுத்த வேண்டும்..

இதனை பார்க்கவும்:

http://ismailnagoori.blogspot.com/2009/02/blog-post.html

nagoreismail said...

என் கருத்து என்ன என்றால், ‘என் அறிவுக்குட்பட்ட வகையில் நான் புரிந்து வைத்திருக்கின்ற கருத்திலிருந்து மாறுபடும் எண்ணம் இல்லை. இதில் உறுதியாக இருக்கிறேன்.

இரண்டாவதாக, ஒரு வேளை நீங்கள் ஒரு கேள்வி கேட்டு என்னால் பதில் சொல்ல தெரியவில்லை என்கிற காரணத்திற்காக நான் என் நம்பிக்கையை மாற்றிக் கொள்ள போவதில்லை. இதை இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், எனக்கு பதில் தெரியாததை எல்லாம் சரியாக தான் இருக்கும் என்று நம்புவதில்லை என்ற காரணமேயாகும்.

எண்ணத்தை கொண்டெ தான் செயல்கள் தீர்மாணிக்கப்படுகின்றன..

(Certaintly actions are judged by theri intentions)

இது பெருமானாரின் ஹதீஸ் தான் இல்லையா?

நாகூர் வாசியான நான் தர்ஹாக்கு போவேன். எஜமானின் ரவ்லா ஷரீஃபின் முன்னால் உட்கார்ந்து இருப்பேன் மிகவும் மரியாதையோடு..

மக்ரிபுக்கு பாங்கு சொல்வார்கள்.

எழுந்து நவாப் பள்ளிக்கு சென்று விடுவேன்..

இறைவனை தொழுவதற்கு..

எனக்கு மட்டுமல்ல பார்வையாளன் அவர்கள் புரிந்து கொண்டது போல் அங்கு வரும் என்னை போன்றோர்களுக்கு நாம் இதுவரை மரியாதையாக உட்கார்ந்து இருந்தது அல்லாஹ்வுக்கு முன்னால் அல்ல என்ற அடிப்படை விளங்கியே இருக்கிறது.

nagoreismail said...

(தொடர்ச்சி)

செயல்கள் எல்லாம் எண்ணங்களை கொண்டே தீர்மாணிக்கப்படுகிறது என்று கொண்டால், இறைவனும் சொற்களையோ செயல்களையோ அல்லாமல் எண்ணங்களை மட்டுமே பார்ப்பவன் என்ற குரான் ஷரீஃபின் வசனம் விளங்கி விட்டால் தர்ஹாக்கு செல்வது ஷிர்க் அல்ல என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

nagoreismail said...

”அதுபோல, இஸ்லாத்திற்கு மற்றவர்களை அழைப்பவர்களுக்கும் அழைக்காதவர்களுக்கும், சலாம் கூற வாய்ப்பிருந்தும் கூறாதவர்களுக்கும் கூறுபவர்களுக்கும், பொய் பேசுபவர்களுக்கும் பேசாதவர்களுக்கும் etc etc என்று இவர்கள் அனைவருக்கும் வித்தியாசங்களுண்டு. அதற்காக என்ன செய்யலாம் சகோதரர்? ”

நீங்கள் சொல்வது போல் பார்த்தால் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்கும் அபுஜஹ்லுக்குமே வித்தியாசம் இருக்கத் தான் செய்யும் அதுக்காக நாம மதினாவுக்கு ஏன் போவணும் என்று கேட்பது போல் இருக்கிறது.. கரெக்ட் மீ இஃப் அயம் ராங்..

nagoreismail said...

http://alsunna.org/Visiting-the-Grave-of-the-Prophet-and-Waliys-Refuting-Ibn-Taymiah-Wahahbis.html

ஹுஸைனம்மா said...

விவாதங்களினால் விளக்கங்கள் அறிகிறேன்.

எனினும், தரீக்கா/தவ்ஹீது பிளவுகளினால் அப்பெரியவர்களின் அறிவுரைகளையும், சேவைகளையும் மறந்துவிட்டோமோ என்று ஒரு வருத்தமான சந்தேகம். பெரியவர்கள் என்று நான் குறிப்பிடுவது தர்ஹாக்களில் அடக்கப்பட்டவர்களைத்தான்!!

கல்வியறிவு இல்லாத முற்காலங்களில், சாமான்ய மக்களுக்கு இஸ்லாமை எடுத்துச் சொல்லி, விளக்கியதிலும், இஸ்லாமைப் பரப்பியதிலும் இப்பெரியவர்களுக்குப் பெரும்பங்கு இருந்திருக்கலாம் என்று நம்புகிறேன்.

இந்திய வரலாற்றையும், இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களையும் ஏன் உலகத் தலைவர்களையும் விளக்கமாகத் தெரிந்து வைத்திருக்குமளவு, இஸ்லாமிய வரலாற்றை என் போன்றவர்களும், இளைய தலைமுறையினரும் அறிந்திருக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது. ஆனால், அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், வழிமுறைகள் ஏது? புத்தகங்கள், வலைப்பூ/தளங்கள் ஏதேனும் இருந்தால் (தமிழில்) தெரியப்படுத்துங்கள். (குழப்பங்கள் தோற்றுவிக்காமல் இருப்பவையாக இருக்கவேண்டும் என்பதும் முக்கியம்!!) :-)))))

அரபுத்தமிழன் said...

ம் .. இதச் சொல்றதுக்கு இவ்வளவு நாளா :)
முதல் பார்ட்டில் சவுண்டு விட்ட வீராங்கனையைக் காணோமே
என்று நினைத்துக் காத்திருந்தேன். ஆனாலும் ரொம்ப உஷார்தான் :)
கருத்துச் சொன்னா எந்தப் பார்ட்டின்னு கண்டு பிடிச்சுடுவாங்களேன்னு
ரொம்ப நாளா யோசிச்ச மாதிரி தெரியுது :))

இதனால்தான் நிறைய பேர் கருத்துச் சொல்லவில்லையென்று
நினைக்கிறேன் இந்த தர்கா ‍ சம்பந்தப் பட்ட பதிவுக்கு.

அரபுத்தமிழன் said...

//எனினும், தரீக்கா/தவ்ஹீது பிளவுகளினால் அப்பெரியவர்களின் அறிவுரைகளையும், சேவைகளையும் மறந்துவிட்டோமோ என்று ஒரு வருத்தமான சந்தேகம். பெரியவர்கள் என்று நான் குறிப்பிடுவது தர்ஹாக்களில் அடக்கப்பட்டவர்களைத்தான்!! //

Well said

அரபுத்தமிழன் said...

//கல்வியறிவு இல்லாத முற்காலங்களில், சாமான்ய மக்களுக்கு இஸ்லாமை எடுத்துச் சொல்லி, விளக்கியதிலும், இஸ்லாமைப் பரப்பியதிலும் இப்பெரியவர்களுக்குப் பெரும்பங்கு இருந்திருக்கலாம் என்று நம்புகிறேன்//

It's 100 % True

ஹுஸைனம்மா said...

பதிவு போட்ட அன்றே “ஃபாலோ-அப்”க்கு சப்ஸ்கிரைப் செய்துட்டேன். என்றாலும், பதிவையும், பின்னூட்டங்களையும் முழுமையாக இன்றுதான் வாசிக்க முடிந்தது. கொஞ்சமல்ல, ரொம்பவே பிஸி!!

இஸ்லாமைப் பொறுத்தவரை, நான் ஒருபக்கமாக (தரீக்கா/தவ்ஹீது) சாய விரும்பவில்லை. முஸ்லிம்களிடையே பிளவுகளை ஆதரிக்க விரும்பாமையும் ஒரு காரணம். மேலும், சிலசமயம், ”right man in the wrong side"ஆக (வாஜ்பாய் போல ;-))) ) நல்ல கருத்துக்கள் எத்தரப்பிலும் கிட்டக்கூடுமே? ஒருபக்கம் அறிவு என்றால், இன்னொருபக்கம் முதிர்ந்தவர்களின் அனுபவம் இருக்கிறது. இரண்டுமே வாழ்க்கைக்குத் தேவைதானே? அதனால் நான் எப்பவுமே நடுநிலைவாதிதான்!!
(மதில்மேல் பூனை???)

nagoreismail said...

பகிர்ந்து கொள்ள மட்டுமே.. இப்போ ஒரு சூப்பர் டாபிக் ஃபேஸ்புக், இணையம் என் ஹாட் நியுஸ் என்ன தெரியுமா? ஒரு சூப்பர் டூப்பர் தலைவர், ஷிரிக் எதுவென்று அல்லாஹ் ரசிலுக்கு அடுத்தப் படியா தீர்ப்பளிக்க கூடிய நீதியரசர், ஆறு மாத ஆய்வாளர், தொப்பி போட்டுக் கொண்டே தொப்பி அவசியமில்லை என்று சொன்ன சிந்தனா சிற்பி,பிரிவினையை விரும்பாத ஒற்றுமைகளின் மொத்த குத்தகையாளர், ஆருயிர் அண்ணன் ‘வணக்கம் சார்’ என்று கலைஞர் டிவியில் இணை வைத்து விட்டாராம்.

அட்ரா சக்கை...

இப்போ இது ஷிர்க் என்றால்.. உடனடியாக அண்ணன் தவ்பா செய்ய வேண்டும்.. தவ்பாவை ஏற்றுக் கொண்டானா இல்லையா என்பது இறைவனுக்கு தான் தெரியும்..

இது ஷிர்க் இல்லையென்றால்.. வெயிட் பண்ணுவோம்.. ஆறே மாசம்.. ஆதாரம் வந்துவிடும்...

அரபுத்தமிழன் said...

:)) Are we in same boat ? :))

எல்லாம் பெயர் படுத்தும் பாடு :))

நேமாலஜி Proved :)))

அரபுத்தமிழன் said...

சகோ ஆஷிக் இணையத்தொடர்பில் இல்லையென்று நினைக்கிறேன்.
இன்ஷா அல்லாஹ் பிறகு வந்து அவரது தரப்பு நியாயத்தை
எடுத்துச் சொல்லும் வரை பதிவைத் திசை திருப்பாதீங்க இஸ்மாயீல் பாய் :))

அரபுத்தமிழன் said...

தோழர் பார்வையாளனைக் காணவில்லையே :(
ரொம்ப பிசியா வெனத் தெரியவில்லை

nagoreismail said...

http://abedheen.wordpress.com/category/%e0%ae%95%e0%af%81%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/


மேலே உள்ள லிங்க் ஹுஸைனம்மா அவர்களுக்கு.. பயன் தரும் என்று நம்புகிறேன்..

அரபுதமிழன்.. நான் தான் பகிர்ந்து கொள்ள மட்டுமே என்று தானே ஆரம்பித்தேன்.

அரபுத்தமிழன் said...

புரியுது, இருந்தாலும் 'அங்கங்குள்ள புயல்கள்' திரும்பி
இங்கே அடித்து விடுமோ என்கிற பயம்தான் :))

Aashiq Ahamed said...

சகோதரர் இஸ்மாயில்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

தங்களிடம் நான் கேட்டது

---
ஆக, அல்லாஹ்வின் அடியார்களின் கல்லறைகளை வணக்கஸ்தளங்களை ஆக்கி கொண்டவர்கள் மிக கெட்டவர்கள் என்ற கூற்றில் மாற்று கருத்து இல்லையல்லவா? அதுபோல, தர்கா போன்ற இடங்களுக்கு சென்று அங்குள்ள கல்லறையை வணக்கும் மக்களும் இறைவனால் வெறுக்கப் பட்டவர்கள் என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து இல்லையல்லவா?
---

தாங்கள் தயவுக்கூர்ந்து இதனை தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். பலரிடம் விவாதித்துள்ளதால் இப்படி ஒரு ஒரு விளக்கமாகவே செல்வது சிறந்தது என்று நினைக்கின்றேன்.

அப்புறம் நான் தவ்ஹீத்வாதி (ஓரிறை கொள்கைவாதி), தவ்ஹீத் ஜமாஅத் வாதியல்ல. இஸ்லாமை அதன் தூய வடிவில் பின்பற்ற நினைக்கும் ஒரு சாதாரண இறைவனின் அடிமை.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Aashiq Ahamed said...
This comment has been removed by the author.
Aashiq Ahamed said...

சகோதரர் அரபுத்தமிழன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

----
சகோ ஆஷிக், இடிப்பதும், ஆராய்ந்து இடிக்காமல் விடுவதும்
இஸ்லாமிய அரசாங்கத்தின் கடமைகளுள் ஒன்று.
----

சரிதான், அதனால்தான் சவூதி அரசாங்கம் அவற்றை இடித்து தரைமட்டமாக்கியது. விக்கிபீடியாவில் இருந்து,

Numerous Shia and Sufi shrines were once located in Saudi Arabia in its initial days. However, they were destroyed in the 1930s by Saudi Arabian government as Muhammad had forbidden building over graves since it leads to Polytheism and idol worship.
http://en.wikipedia.org/wiki/Shrine#Islam

எதற்காக சவூதி அரசாங்கம் அவற்றை தரை மட்டமாக்கியது என்பது குறித்து விக்கிபீடியா கூறிய காரணத்தை கவனித்தீர்களா? (building over graves)

---
1. முறையான ஜியாரத்துக்காகச் செல்லலாம்

2. அங்கு வருபவர்களுக்கு எப்படி ஜியாரத் செய்ய வேண்டும்
என்று சொல்லிக் கொடுக்கச் செல்லலாம்.

3. அங்கு செல்பவர்களை ஷிர்க்கின் பிடியிலிருந்து மீட்பதற்காகச்
செல்லலாம் :)
----

தவறான புரிதல்கள்.

என்னுடைய ஊர் பாண்டிச்சேரி. நான் மாயவரம் போக வேண்டுமென்றால் கடலூரை கடந்து தான் போக வேண்டும். கடலூருக்கு செல்லும் பாதை பிரச்சனை என்றால் நான் மாயவரம் போக முடியாது.

அதுபோல, முதலில் தர்காக்குள் செல்லலாமா? வேண்டாமா என்பது தான் என்னுடைய கேள்வி. பின்னர் தான் ஜியாரத் வருகின்றது. இங்கு உள்ளே நுழைவதிலேயே பிரச்சனை இருக்கின்றது, அப்புறம் எங்கே அங்கு சென்று ஜியாரத் செய்வது?.

நாயகம் கூற்றுக்கு எதிராக சமாதியை வணக்கஸ்தலங்கலாக, சமாதியை பூசி, தரை மட்டத்திற்கு மேலாக எழுப்பி, அதன் மேல் கட்டிடத்தை எழுப்பி என்று இஸ்லாத்திற்கு எதிராக அனைத்து செயல்களும் நடக்கும் ஒரு இடத்திற்கு செல்லலாமா கூடாதா என்பது தான் என்னுடைய கேள்வி. (இஸ்மாயில் அவர்களது லின்குகளுக்கு அவருக்கு பதிலளிக்கும் போது என்னுடைய கருத்தை பதிக்கின்றேன்).

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Aashiq Ahamed said...

சகோதரி ஹுசைனம்மா,

அஸ்ஸலாமு அலைக்கும்,

தாங்கள், விவாதங்களுக்குள் உங்களை ஈடுபடுத்தி கொள்ள விரும்புவீர்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் என்னுடைய கேள்விகளை கேட்டு விடுகின்றேன். இதற்கு தாங்கள் பதிலளிக்குமாறு கேட்டு கொள்கின்றேன்.

---
கல்வியறிவு இல்லாத முற்காலங்களில், சாமான்ய மக்களுக்கு இஸ்லாமை எடுத்துச் சொல்லி, விளக்கியதிலும், இஸ்லாமைப் பரப்பியதிலும் இப்பெரியவர்களுக்குப் பெரும்பங்கு இருந்திருக்கலாம் என்று நம்புகிறேன்.
---

நிச்சயம் இருந்திருக்க வேண்டும். அதுபோலவே இன்றும் பலர் அந்த பணியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இவர்கள் அனைவருக்கும் தக்க நற்கூலியை இறைவன் வழங்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கின்றேன்.

---
எனினும், தரீக்கா/தவ்ஹீது பிளவுகளினால்
---

ஒவ்வொரு முஸ்லிமும் தவ்ஹீத்வாதியாக (தவ்ஹீத் ஜமாஅத்தை போட்டு குழப்பி கொள்ளக்கூடாது) இருந்தால் தான் சுவர்க்கம் செல்ல முடியும். தர்க்காக்களை ஆதரிப்பவர்களும் இதனை ஏற்றுக்கொள்வதில் மாற்று கருத்து இருக்கமுடியாது.

தர்காவாதி முழுமையான முஸ்லிமாக இருக்க முடியுமா? என்பது என்னுடைய உங்களுக்கான முதல் கேள்வி.

தர்கா என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று, அதன் கட்டமைப்புகளும் இஸ்லாம் தடுத்த ஒன்று. ஆக, இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை நுழைத்து சீர்கேட்டை தரும் ஒரு செயல் இயல்பாகவே பிளவுகளுக்கு வழிவகுக்கும். ஆக, இங்கே பிரச்சனை என்பது இஸ்லாம் என்னும் அற்புத வழிமுறைக்கு கேடு விளைவிக்க வந்து ஒரு கான்செப்டை எதிர்த்து தான். தூய இஸ்லாத்தை நிலைநாட்ட ஏற்படும் ஒரு பிளவு புரிந்து கொள்ளப்படவேண்டிய ஒன்று. இன்று இதனை நான் விட்டு விட்டோமேன்றால் நாளை உங்களது சந்ததியினரும், என்னுடைய சந்ததியினரும் பாதிக்கப்பட வேண்டி வரும். இஸ்லாம் என்றால் என்னவென்று குழப்பம் கொள்ள வேண்டிவரும். இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை ஏன் நமது முன்னோர்கள் எதிர்க்காமல் விட்டு விட்டனர் என்ற கேள்வியை அவர்கள் நம்மை நோக்கி வைக்கவேண்டிவரும்.

Aashiq Ahamed said...

சகோதரி ஹுசைனம்மா,

அஸ்ஸலாமு அலைக்கும்,

---
அப்பெரியவர்களின் அறிவுரைகளையும், சேவைகளையும் மறந்துவிட்டோமோ என்று ஒரு வருத்தமான சந்தேகம். பெரியவர்கள் என்று நான் குறிப்பிடுவது தர்ஹாக்களில் அடக்கப்பட்டவர்களைத்தான்!!
இந்திய வரலாற்றையும், இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களையும் ஏன் உலகத் தலைவர்களையும் விளக்கமாகத் தெரிந்து வைத்திருக்குமளவு, இஸ்லாமிய வரலாற்றை என் போன்றவர்களும், இளைய தலைமுறையினரும் அறிந்திருக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
---

நமக்கு முன்னே சென்ற, தற்போது இருக்ககூடிய நல்லடியார்கள் அனைவரும் நினைவு கூறத்தக்க வேண்டியவர்கள் தான். அவர்கள் இந்த மார்க்கத்தை நிலைநாட்ட பட்ட கஷ்டங்களை நாம் அடுத்த தலைமுறையினருக்கு சொல்ல கடமை பட்டிருக்கின்றோம். ஆனால் அதற்கும் தர்காகளுக்கும் என்ன சம்பந்தம்? நல்லடியார்களுக்கு தர்காக்கள் கட்டி தான் நினைவு கூறவேண்டுமென்றால் கோடிகணக்கான இஸ்லாத்திற்கு எதிரான கட்டிடங்கள் தேவைப்படுமே?

நமக்கு முன்னே சென்ற நல்லடியார்களின் வாழ்கையை வரலாறு சரியாக பதிவு செய்யபடவில்லை என்றால் அது யார் மேல் குற்றம்? தர்காக்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? இனியாவது இந்த தலைமுறையில் வாழும் நல்லடியார்கள் குறித்த செய்திகளை பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு அனுப்புவோம்.

தாங்கள் தர்க்காகளையும், நல்லடியார்களையும் போட்டு குழப்பி கொள்ள வேண்டாம். நல்லடியார்கள் இறந்து விட்டார்கள், நாம் இருந்த இடத்திலேயே கூட அவர்களை நினைவு கூறலாம்.

இங்கு விவாத பொருள், தர்க்காகள் என்னும் இஸ்லாத்திற்கு எதிரான ஒரு இடம் தேவையா? என்பது தான். அதற்கு குரான், நபி மொழிகள் வாயிலாக பதில் சொல்லுகள். இது உங்களுக்குகான இரண்டாவது கேள்வி.

---
இஸ்லாமைப் பொறுத்தவரை, நான் ஒருபக்கமாக (தரீக்கா/தவ்ஹீது) சாய விரும்பவில்லை.
---

என்ன சொல்வது என்றே புரியவில்லை....இறைவன் வற்புறுத்தும் தவ்ஹீதுக்கும், புதிதாக முளைத்த, இஸ்லாத்திற்கு எதிரான தர்காக்கும் இடையே, எதனை ஆதரிப்பது என்று குழப்பமா?

---
முஸ்லிம்களிடையே பிளவுகளை ஆதரிக்க விரும்பாமையும் ஒரு காரணம்.
----

இஸ்லாத்தை சீரழிக்கும் ஒன்றை எதிர்ப்பதால் பிளவுகள் வரும் என்றால் அதனை பற்றி தவ்ஹீத்வாதிகளான நாங்கள் கவலைப்பட போவதில்லை.

----
நல்ல கருத்துக்கள் எத்தரப்பிலும் கிட்டக்கூடுமே? ஒருபக்கம் அறிவு என்றால், இன்னொருபக்கம் முதிர்ந்தவர்களின் அனுபவம் இருக்கிறது. இரண்டுமே வாழ்க்கைக்குத் தேவைதானே? அதனால் நான் எப்பவுமே நடுநிலைவாதிதான்!!
(மதில்மேல் பூனை???)
----

ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை. இறைவன் சொல்லுவது போன்று சிந்தித்து ஆராய்ந்து செயல்படுங்கள் என்பதை தவிர. உங்களுடைய இந்த குழப்பம் உங்கள் சந்ததியினரை குழப்பத்தில் ஆழ்த்தாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

முஹம்மத் ஆஷிக் said...

நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

உத்ஊ இலா ஸபீலி ரப்பிக பில் ஹிக்மத்தி வல் மவ்இழத்துல் ஹஸனா வ ஜாதில்ஹும் பில்லத்தீ ஹிய அஹ்ஸன் (16:125)

------- (கனியிருப்பக் காய் கவர்ந்தற்று :) -------

ஆஹா..! பின்னூட்டம் இடுபவர்களுக்கு பின்னூட்டப்பெட்டியின் மீதே நல்ல அறிவுரை சகோ.அரபுத்தமிழன்..!

அதற்கு நான் உங்கள் சார்பாக விளக்கம் தருகிறேன்..!


கனி---
அல் குர்ஆன் & நபிவழியின் படி பேணப்படும் அல்லாஹ்வுக்கு இணைவைக்காத தூய ஓரிறை இஸ்லாம்..!

காய்---
கட்டப்பட்ட கப்ர்,
அதன் மேல் கட்டப்பட்ட தர்கா,
உள்ளே 'அவுலியா'(?),
உரூஸ்,
சந்தனக்கூடு,
கொடியேற்றம்,
சாம்பிராணி,
சர்க்கரை,
ஹத்தம்,
ஃபாத்திஹா துவா,
நாற்சா,
அவுலியாவிடம் நேர்ச்சை,
மயிலிறகு ஆசீர்வாதம்,
உண்டியல்,
கனவில் அறுவை சிகிச்சை,
பேய் விரட்டு,
பிசாசு ஓட்டு,
செய்வினை-செயப்பாட்டு வினை எடுத்தல்,
மாந்திரீக முறிவு,
தட்டு,
தாயத்து,
மந்திரித்து முடிதலை முறித்தல்,
தர்ஹாவை தவாப் செய்தல்,
இறந்த மனிதர் நமக்கு உதவ முடியும் என்ற இஸ்லாத்திற்கு எதிரான பாமரர்களின் மூடநம்பிக்கை...etc.,etc.,
------------------------------------------------

ஒரே ஒரு விளக்கம்:

'ஷஹீதுகள் அல்லாஹ்விடம் உயிருடன் இருக்கிறார்கள்' என்று நம்புபவர்கள் அவர்களை-அதாவது-இறந்த பின்னும் உயிருள்ள(?)ஷஹீதுகளுக்கு(!) தண்ணீர் கொடுத்து சாப்பாடு போடாமல், கஃபன் பண்ணி கப்ரில் வைத்து புதைத்து கொன்ற கொடூரம்(!)சரியா...?!?!?!?!?

"ஆக இவர்கள் இவ்வுலகில் இறந்து விட்டார்கள், ஆனால், மற்றவர்கள் போல அல்லாமல் அல்லாஹ்விடம் மட்டும் உயிருடன் இருக்கிறார்கள், மனிதர்கள் மத்தியில் அல்ல..!"--என்பதே தெளிவான இஸ்லாமிய புரிதல்.

ஷஹீதுகளிலேயே போற்றப்படும் சீனியர்கள், பத்ர் சஹாபிகள். அவர்களின் கப்ருக்களுக்கு சென்று, நம் இறைத்தூதர் முஹம்மத் நபி(ஸல்)அவர்கள் ஒரே ஒருமுறையாவது அவர்களை பெயர்கூறி அழைத்து தன் குறை தீர்க்க அல்லது வழிகாட்ட துவா கேட்டிருந்தமாரோ, அல்லது மற்ற சஹாபிகளை அப்படி செய்ய அனுமதித்தமாரோ உங்களால் ஒரு குர்ஆன் வசனத்தையோ அல்லது ஒரு சஹீ ஹதீஸையோ காட்ட முடியுமா...?
காட்ட முடியுமா...?
காட்ட முடியுமா...?
காட்ட முடியுமா...?
காட்ட முடியுமா...?
-----------------------------------------------

@ ஹுசைனம்மா...& அரபுத்தமிழன்..!

/////எனினும், தரீக்கா/தவ்ஹீது பிளவுகளினால் அப்பெரியவர்களின் அறிவுரைகளையும், சேவைகளையும் மறந்துவிட்டோமோ என்று ஒரு வருத்தமான சந்தேகம். பெரியவர்கள் என்று நான் குறிப்பிடுவது தர்ஹாக்களில் அடக்கப்பட்டவர்களைத்தான்!! //

--அரபுத்தமிழன் said... Well said////

இது....

பலவருடம் குளிக்காமல், தொழாமல், பீடி குடித்துக்கொண்டே, அழுக்காக, இருந்த இடத்திலேயே எல்லா இயற்கை மனித கழிவுகளையும் போய்க்கொண்டு கழுவி சுத்தம் கூட செய்யாமல் நாற்றம் எடுத்த பீடி குடிக்கும் மிருகம் போலவே வாழ்ந்து மறைந்த..."தக்கலை பீடி மஸ்தான் அவுலியா தர்ஹாவில்" அடங்கியிருக்கும் அன்னார் வேட்டிப்பீ பீடி மஸ்தான் அவுலியா ஒலியுல்லா அவர்களுக்கும் பொருந்துமா..?

(இதுமாதிரி மகான்களின் லிஸ்ட் இருந்தாலும்... தக்கலை தர்ஹா தமிழ்நாடு முழுக்க பிரபலம் என்பதால் கேட்டேன்)

Aashiq Ahamed said...

சகோதரர் முஹம்மது ஆஷிக்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

----
'ஷஹீதுகள் அல்லாஹ்விடம் உயிருடன் இருக்கிறார்கள்' என்று நம்புபவர்கள் அவர்களை-அதாவது-இறந்த பின்னும் உயிருள்ள(?)ஷஹீதுகளுக்கு(!) தண்ணீர் கொடுத்து சாப்பாடு போடாமல், கஃபன் பண்ணி கப்ரில் வைத்து புதைத்து கொன்ற கொடூரம்(!)சரியா...?!?!?!?!?
----

உங்களை இந்த உம்மத்திற்கு கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி சொல்லுகின்றேன். இரு வருடங்களுக்கு முன்பு வினவில் நாம் ஒன்றாக வாதம் புரிந்தோமே, அந்த பசுமையான நினைவுகள் மறுபடியும் இன்று கண்முன்னே வருகின்றது...அல்ஹம்துலில்லாஹ்

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

ஹுஸைனம்மா said...

வ அலைக்கும் ஸலாம்.

//நான் ஒருபக்கமாக (தரீக்கா/தவ்ஹீது) சாய விரும்பவில்லை.//

@ஆஷிக் அஹமத், நான் ஒர் முஸ்லிம். அவ்வளவே. நான் தர்காக்களுக்குச் செல்வதில்லை. கடைசியாக நான் சென்றது எனக்கு 8/9 வயதிருக்கும்போது. அதனால், என்னை தரீக்காவாதியாகப் பிரகடனப்படுத்தமுடியாது. தவஹீது (ஜமா அத்)வாதியாகச் சொல்லிக்கொள்ள என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை. ஆனால், நான் ஏக இறைவனைத் தொழும் ஒரு முஸ்லிம். எந்தப் பிரிவிலும் சார்ந்து, இன்னொரு பிரிவினரைத் தாக்க (சொல்லால் கூட) என்னால் முடியாது.

//இறைவன் சொல்லுவது போன்று சிந்தித்து ஆராய்ந்து செயல்படுங்கள் என்பதை தவிர.//
இதைத்தான் நான் செய்கிறேன் ஆஷிக். குர் ஆன், ஹதீஸ் ஆகியவற்றீலிருந்தும், மேலும் இவைகளை ஆய்ந்து புரிந்துகொள்ளும் தெளிவு இல்லாது போகும் சில சமயங்களில் மார்க்க அறிஞர்களின் உதவியோடும் இஸ்லாமிய வழிகளிலிருந்து விலகிவிடாதிருக்க முனைகிறேன். இன்ஷா அல்லாஹ், இனியும் அதுபோல் இருக்க இறைவன் அருள் புரிவானாக.

//உங்களுடைய இந்த குழப்பம் உங்கள் சந்ததியினரை குழப்பத்தில் ஆழ்த்தாமல் இருக்க//
எனக்குச் சொந்த பந்தமல்லாத மற்ற முஸ்லிம்களே ஒற்றுமையாக, ஈமானோடு இருக்கவேண்டும் என்று விரும்பும் நான், என் மக்களை ஷிர்க்கில் ஈடுபடுத்துவேனா ஆஷிக்? அஸ்தஃபிருல்லாஹ். இறைவன் பாதுகாப்பான். இப்படித்தான், தவ்ஹீதுவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் மற்றவர்களின் மனம் வருந்துமே என்று எண்ணாமல் பேசிவிடுகிறார்கள். என்னையும் அறியாமல் பொது இடத்தில் அப்படிப் பேசிவிடுவேனோ என்றுதான் நான் விவாதங்களில் ஈடுபடுவதில்லை. விவாதம் செய்யுமளவு விவரமானவளுமில்லை. இன்னும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

@முஹம்மது ஆஷிக்: எனக்கு “அவுலியாக்கள்”, ”ஆண்டகைகள்”, “மகான்கள்” என்று யாரையும் தெரியாது. நீங்கள் சொல்லிய தக்கலை தர்ஹா என்று ஒன்று இருப்பதே இப்போத்தான் தெரியும், 15 வருடங்களாக அதனை அடுத்திருக்கும் நாகர்கோவிலுக்கும்தான் போய்வருகிறேன் என்றபோதிலும். இஸ்லாத்தை வளர்க்க உதவிய பெரியோர்களை நாம் அறிந்துகொள்ள வேண்டும், இந்தியாவில் இஸ்லாம் வளர பட்ட பாடுகளை இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் என் கருத்து. அதை இப்படியெல்லாம் சொல்லி திசைதிருப்பாதீர்கள்.

தரீக்காவாதிகளைப் பீடித்திருப்பது அறியாமை என்றால், தவஹீதுவாதிகளைப் பிடித்திருப்பது எங்களுக்கே எல்லாம் தெரியும் என்ற மனோபாவம். இரண்டிலிருந்தும் இறைவன் என்னைப் பாதுகாக்கட்டும்.

@அரபுத்தமிழன், இப்பதிவில் பின்னூட்டமிட நேற்று எனக்கு நேரம் கிடைக்காமலே போயிருந்திருக்கலாம். எல்லாம் இறைவன் செயல்.

முஹம்மத் ஆஷிக் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

@ ஹுசைனம்மா...

//தரீக்காவாதிகளைப் பீடித்திருப்பது அறியாமை என்றால்,//--மிக்க நன்றி சகோ.ஹுசைனம்மா...!

//தவ்ஹீதுவாதிகளைப் பிடித்திருப்பது எங்களுக்கே எல்லாம் தெரியும் என்ற மனோபாவம். இரண்டிலிருந்தும் இறைவன் என்னைப் பாதுகாக்கட்டும்.//--ஐயம் திரிபற எனக்குத்தெரிந்த ஒரு விஷயத்தை, பிறர்க்கு சொல்லாமல் இருக்ககூடாது என்பதை, எப்படி பிறருக்கு 'எனக்குத்தெரியாது' என்று எடுத்துச்சொல்வது, என்பது தான் எனக்கு இன்னும் சரிவர தெரியவில்லை என்று இப்போது தெரிந்து கொண்டேன்.

தங்கள் மனம் புண்படும்படி ஏதேனும் தவறாக கேட்டிருந்தால் இறைவனுக்காக என்னை மன்னியுங்கள் சகோதரி.

என்னால் தவ்ஹீது வாதிகளுக்கு களங்கம் ஏற்பட்டிருக்குமேயானால் அவர்களும் என்னை இறைவனுக்காக மன்னித்து விடுங்கள்.

@அரபுத்தமிழன்,
இப்பதிவில் பின்னூட்டமிட எனக்கு நேரம் கிடைக்க வைத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.

Aashiq Ahamed said...

சகோதரி ஹுசைன்னம்மா,

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு

---
நான் ஒர் முஸ்லிம். அவ்வளவே.
---

இதையே தான் நானும் கூறுகின்றேன் சகோதரி.

---
தவஹீது (ஜமா அத்)வாதியாகச் சொல்லிக்கொள்ள என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை
---

எதற்காக குழப்பம் சகோதரி? இறைவன் குரானில் வற்புறுத்துவது நீங்கள் தவ்ஹீத்வாதியாக இருங்கள் என்பத்தைதான். ஒருவர் தவ்ஹீத்வாதியாக இருந்தால் தான் முஸ்லிமாக இருக்க முடியும். பின்னர், "நான் தவ்ஹீத்வாதி" என்று கூறிக்கொள்வதில் என்ன பிரச்சனை இருக்கின்றது?

நான் குரானையும், நபிமொழியையும் பின்பற்றுகின்ரேன் என்று கூறினாலே நீங்கள் தவ்ஹீத்வாதி தான்.

---
ஆனால், நான் ஏக இறைவனைத் தொழும் ஒரு முஸ்லிம். எந்தப் பிரிவிலும் சார்ந்து, இன்னொரு பிரிவினரைத் தாக்க (சொல்லால் கூட) என்னால் முடியாது.
---
ஏன் முடியாது? அசத்தியத்தை எதிர்க்க உங்களை தடுப்பது எது?

ஒரு பிரிவு இஸ்லாத்திற்கு எதிரான செயல்களை செய்கின்றது. அதனை எதிர்த்து நீங்கள் செய்வது தவறு என்று ஒரு வார்த்தை கூட சொல்லமாட்டீர்களா? இல்லை, அவர்கள் செய்வது தவறில்லை என்றால் அதற்கு ஆதாரமாக குரான், ஹதீஸ்களை கொண்டு வாருங்கள். தர்காக்களுக்கு எதிரான தெளிவான ஆதாரங்களை முன்வைத்து தானே இங்கே நாங்கள் வாதிக்கின்றோம்?

ஒரு முஸ்லிம் மது அருந்தினால் அது இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறமாட்டீர்களா? இல்லை அவரை என்னால் தாக்க முடியாது என்று அசத்தியத்தை எதிர்க்காமல் சும்மா இருந்து விடுவீர்களா? இல்லை நான் நடுநிலைவாதி என்று கூறுவீர்களா?

உங்களுடைய நடுநிலைத்தனம் அஹ்மதியாக்களுக்கும் பொருந்துமா? ஏனென்றால் அவர்களும் தங்களை முஸ்லிம்கள் என்று தான் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.

இதில் என்ன கொடுமை என்றால், இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என்று அஹ்மதியாக்களை எதிர்க்கும் தர்காவாதிகள் தாங்களும் இஸ்லாத்திற்கு எதிரான ஒன்றையே செய்கின்றோம் என்பதை எப்படி மறந்தார்கள்?

நான் தெளிவாகவே கூறினேன். தர்காக்கள் என்பவை இஸ்லாத்திற்கு எதிரானவை. அவற்றை எதிர்ப்பதால் பிரிவுகள் உண்டாகும் என்றால் அதனை பற்றி கவலைப்பட போவதில்லை.

---
இதைத்தான் நான் செய்கிறேன் ஆஷிக். குர் ஆன், ஹதீஸ் ஆகியவற்றீலிருந்தும், மேலும் இவைகளை ஆய்ந்து புரிந்துகொள்ளும் தெளிவு இல்லாது போகும் சில சமயங்களில் மார்க்க அறிஞர்களின் உதவியோடும் இஸ்லாமிய வழிகளிலிருந்து விலகிவிடாதிருக்க முனைகிறேன். இன்ஷா அல்லாஹ், இனியும் அதுபோல் இருக்க இறைவன் அருள் புரிவானாக.
---

அல்ஹம்துலில்லாஹ்...இன்ஷா அல்லாஹ்...

---
தவ்ஹீதுவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் மற்றவர்களின் மனம் வருந்துமே என்று எண்ணாமல் பேசிவிடுகிறார்கள்.
---

உங்கள் நிலையை பார்த்து (மதி மேல் பூனை), நம் உம்மத்து குறித்த ஆதங்கத்திலேயே அப்படியொரு கருத்தை கூறினேன். மன்னியுங்கள்.

---
விவாதம் செய்யுமளவு விவரமானவளுமில்லை. இன்னும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
---

காத்து கொண்டிருந்தால் அதற்கான நேரம் நமக்கு கிடைக்காமலேயே போகலாம். களத்தில் இறங்குங்கள். வாதிக்க வாதிக்க, அதனைப் பற்றி நிறைய தகவல்களை சேகரிப்போம். அப்போது நிறைய கற்று கொள்ளலாம்.

---
தவஹீதுவாதிகளைப் பிடித்திருப்பது எங்களுக்கே எல்லாம் தெரியும் என்ற மனோபாவம்.
---
முஹம்மது ஆஷிக் கூறிய கருத்துக்களையே நானும் கூறுகின்றேன். எங்களுக்கு தெளிவான ஒரு கருத்தை பற்றியே விவாதிக்கின்றோம். இப்போது கூட தர்காவாதிகள் தங்கள் கருத்துக்கு ஆதரவாக ஆதாரங்களை கொண்டு வந்தால் பரிசீலிக்க தயாராக இருக்கின்றேன். அல்லாஹ்வே எல்லாம் தெரிந்தவன்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

அரபுத்தமிழன் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே!
மன்னிக்கணும், காலையிலிருந்து ஒரே பிஸி.
இப்பத்தான் சீட்டுக்கே வந்தமர்ந்தேன்.

அரபுத்தமிழன் said...

ஹூசைனம்மா,
இதற்கெல்லாம் வருத்தப் படக் கூடாது. ஆரோக்கியமான
விவாதங்களால் மக்கள் பிரயோஜனம் அடைவார்கள்.
நடுவில் இருப்பவர்களுக்கு இரண்டு பக்கமும் அடி விழும்.
பெருமானார்(ஸல்) அவர்களின் சுன்னத்தை ஹயாத்தாக்குவதாக
நினைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குக்கு விழாத அடியா,
கேலிப் பேச்சு மற்றும் ஏச்சுக்களா.

அரபுத்தமிழன் said...

@ஹுசனம்மா, //பின்னூட்டமிட நேற்று எனக்கு நேரம்
கிடைக்காமலே போயிருந்திருக்கலாம்// :( Why why
@ ஆஷிக்2
//இப்பதிவில் பின்னூட்டமிட எனக்கு நேரம் கிடைக்க வைத்த எல்லாம்
வல்ல இறைவனுக்கு நன்றி.// அப்படிப் போடு ராசா :)

அரபுத்தமிழன் said...

தவ்ஹீதுத் தரப்பிலே ரெண்டு பேர், மதில் மேல் பூனைகள் இருவர்,
தர்காத் தரப்பில் இன்னொருவரும் வந்தால் நலம் பயக்குமே :)

அரபுத்தமிழன் said...

சகோ ஆஷிக் அஹ்மது, உங்களின் அமைதியான விவாத முறை
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நாம் எல்லோருமே தவ்ஹீதைப்
பயின்று கொண்டிருப்பவர்கள்தாம். படைத்தவனின் மீதுதான்
உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறோம், ஆனால் படைப்பினங்களை
அணுகும் முறையில் வேறுபட்டிருக்கிறோம் அவ்வளவே.

Aashiq Ahamed said...

சகோதரர் அரபுத்தமிழன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

---
ஆனால் படைப்பினங்களை
அணுகும் முறையில் வேறுபட்டிருக்கிறோம்
----

நீங்கள் படைப்பினங்களை எப்படி அணுகுகின்றீர்கள்? குரான், சுன்னாஹ் அடிப்படையில் விளக்கம் தாருங்கள்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Aashiq Ahamed said...

சகோதரரி ஹுசைனம்மா,

அஸ்ஸலாமு அலைக்கும்,

நான் உங்களிடம் கேட்ட இரண்டு கேள்விகள் விளக்கம் தரப்படாமல் இருக்கின்றன. நன்றாக ஆராய்ந்து, தேவையான நேரத்தை எடுத்து கொண்டு பதிலளிக்குமாறு கேட்டுகொள்கின்றேன்.

அப்படியே, ஒருவர் கண் முன்னே இஸ்லாத்திற்கு எதிரான செயல்கள் நடைபெற, "நான் நடுநிலைவாதி" என்று கூறிக்கொண்டு அவற்றை பய்பாஸ் செய்வது இஸ்லாம் சொல்லித்தந்த வழியா என்பதற்கும் ஆதாரங்களை தாருங்கள்.

உங்களுடைய கல்வி ஞானத்தையும், என்னுடைய கல்வி ஞானத்தையும் விசாலமாக்க இறைவன் போதுமானவன்...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

nagoreismail said...

http://this-is-truth.blogspot.com/2011/02/blog-post.html

Aashiq Ahamed said...

சகோதரர் இஸ்மாயில்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

இஸ்லாத்திற்கு எதிரான ஒன்றை ஆதரிப்பதற்கே நீங்கள் லிங்க்கள் கொடுக்கின்றீர்கள் என்றால், சத்தியத்தில் இருக்கும் நாங்கள் பல லிங்க்குகளை கொடுக்கலாம். இருந்தாலும் இவற்றை கணக்கில் கொள்கின்றேன்.

அதற்கு முன்னர், நான் உங்களிடத்தில் உறுதிபடுத்துமாறு கேட்ட கேள்விகள் அப்படியே இருக்கின்றன. அதற்கு முதலில் பதில் சொல்லுமாறு கேட்டு கொள்கின்றேன். அவர் இவர் என்றில்லாமல் உங்கள் வாயிலிருந்து வார்த்தைகள் வரவேண்டுமென்பதற்க்காகத்தான் தொடர்ந்து உங்களையே கேட்டு கொண்டிருக்கின்றேன்.

நீங்கள் வேண்டுமானால் நீங்கள் கொடுத்த லின்க்கை இன்னொரு முறை தெளிவாக படித்து விட்டு, பதில் சொல்லுங்கள். ஆனால், பதில் நீங்கள் சொன்னதாக இருக்க வேண்டும். ஏனென்றால் இங்கு உங்களுக்கும் எனக்கும் தான் வாதம்.

தாங்கள் நேரத்தை எடுத்து எனக்கு பதில் சொல்ல போவதற்கு நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

நட்புடன் ஜமால் said...

1) அடக்கஸ்தலங்களை ஆண்கள் சென்று பார்க்கலாம்
2) அவர்களுக்காக துவா செய்யலாம்
3) அங்கு கையேந்தி (அவர்களுக்காக அல்லாஹ்விடம்) துவா செய்வதை விளங்காதவர்கள் பார்த்தால் - அவர்களிடம் துவா செய்வதாக தவறான புரிதல் ஏற்படும் என்பதால் கையேந்தி துவா செய்யாமல் இருத்தல் நலம்
4) அடக்கப்பட்டவர்கள் (உயிரோடு இருக்கின்றார்கள் என்று அல்லாஹ்வால் சொல்லப்பட்ட) ஷகீதாக இருந்தாலும், நபிகளாகவே இருந்தாலும் மனிதர்களால் அவர்களை செவியேற்க செய்ய இயலாது.
5) அல்லாஹ் தன் அடியானின் தேவைகளை நேரடியாக செவியேற்கிறான் - இடையில் யாரும் தேவையில்லை.


---------
மேலே சொல்லப்பட்டவையே எனது புரிதல்கள், வாதம் செய்யுமளவுக்கு நான் இன்னும் தெரிந்திருக்கவில்லை

எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ் எனக்கும் தங்களுக்கும் சரியான விளக்கத்தை விளங்கவைக்கட்டும்.

Aashiq Ahamed said...

சகோதரர் ஜமால்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

சும்மா நச்சுன்னு சொன்னீங்க. "பெண்கள் கப்ருக்கு போகலாமா" என்கின்ற விஷயத்தை பிறகு கேட்கலாம் என்று விட்டிருந்தேன். நீங்க கேட்டுட்டீங்க...

கப்ருக்கு போகட்டும், அங்க அடங்கி இருக்குரவங்களுக்காக ஜியாரத் செய்யட்டும். இதுவெல்லாம் நபிவழி தான் (அப்புறம், முக்கியமானது, நாயகம் (ஸல்), கப்ருக்கு போகன்னு தான் சொன்னாங்க. நல்லவங்க கப்ருக்கு மட்டும், அதுவும் தேர்ந்தெடுக்க பட்ட நல்லவங்க கப்ருக்கு மட்டும் போங்கன்னு சொல்லல). ஆனா, தர்கா என்னும் அந்த கட்டிடம், கப்ரை பூசியது, எழுப்பியது மற்றும் etc (சகோதரர் இஸ்மாயில் பதில் சொல்லுவதற்காக காத்திருக்கின்றேன்) போன்றவை பிதாஅத். மார்க்கத்துக்கு முற்றிலும் எதிரானது. மார்க்கத்துக்கு எதிரான அந்த இடத்துக்கு போவது கூடாதுன்னு தான் சொல்றேன்.

அங்கே உள்ளே நுழைந்தாலே மார்க்கத்துக்கு எதிரா போயாச்சு. அப்புறம் அங்க போய் ஜியாரத் பண்ணி என்ன பண்றது?

அப்புறம்,

----
அல்லாஹ் தன் அடியானின் தேவைகளை நேரடியாக செவியேற்கிறான் - இடையில் யாரும் தேவையில்லை.
----

இது செம டாப்பு...அல்ஹம்துலில்லாஹ்...

உங்களுடைய கல்வி ஞானத்தை இறைவன் மேன்மேலும் அதிகரிக்க செய்வானாக...ஆமீன்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

அரபுத்தமிழன் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே!
லீவு நாட்களில் இங்கு வர முடியாமைக்கு வருந்துகிறேன்.

தோழர் பார்வையாளன் இது சம்பந்தமாக ஒரு ஆராய்ச்சி
பதிவு எழுதியிருக்கிறார், சென்று படிக்கவும்.

http://pichaikaaran.blogspot.com/2011/04/blog-post_08.html

அரபுத்தமிழன் said...

சகோ நட்புடன் ஜமால்,

தங்களின் புரிதல்கள் 100% சரியானதே.

சகோ ஆஷிக்,

பொதுமக்கள் அவ்லியாக்களை கொஞ்சம் ஓவராகவே நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால் தரீக்காவாதிகள் நாம் எப்படி ஒரு
ஆசிரியரை அல்லது ஒரு டாக்டரை அணுகுகிறோமோ அதுபோல‌
அவ்லியாக்களை அணுகுகிறார்கள் மரியாதை வைத்திருக்கிறார்கள்.

ஹுஸைனம்மா said...

வ அலைக்கும் ஸலாம்.

சமூகங்களில் நடப்பவற்றிற்குப் பெரும்பாலும் என்னுடைய ரியாக்‌ஷன் “நடுநிலைத்தனம்”தான். குடிகாரர்களோ, அஹ்மதியாக்களோ, இந்துக்களோ, கிறிஸ்தவர்களோ யாரானாலும், என்னிடம் கேட்காமல் நான் இஸ்லாமை விளக்குவதில்லை. அதுவரை என் செயல்கள் இஸ்லாம் கூறும் (இன்ஷா அல்லாஹ்). என் மார்க்கம் எனக்கு, அவர்களுடையது அவர்களுக்கு.

ஆனால் என் குடும்பத்தினரிடம் அவ்வாறல்ல. என் பிள்ளைகளிடம் கட்டாயப்படுத்துவேன். அவர்கள் தவிர, மற்றவர்களிடமும் எடுத்துச் சொல்வதுமட்டுமே என் கடமை. உண்மையிலேயே அறியாமையில் வீழ்ந்துகிடக்கும் முஸ்லிம் மக்களிடம் பேசிப் பார்க்கலாம். விதண்டாவாதம் செய்பவர்களிடம் என் நேரத்தை வீணாக்குவதில்லை.

ரஸூல்(ஸல்) அவர்களுக்கே எத்தி வைப்பது மட்டுமே கட்டளையிடப்பட்டது. எனில் நான்? என் குடும்பம் எனக்கு முக்கியம். வீடு நலமானால் நாடு நலமாகும்.

இவ்விளம் பிராயத்திலேயே, இஸ்லாம் குறித்து தெளிவான விளக்கங்களும், வாதங்களும் செய்யுமளவு மார்க்க அறிவு பெற்றிருக்கும் உங்களைப் போன்றவர்கள் கண்டு மகிழ்ச்சி. இறைவன் உங்கள் செயல்களுக்கு நற்கூலி தருவானாக.

If at all I would wish to argue, that would be against those muslim men (தரீக்கா, தவ்ஹீத், இன்னபிற வாதிகள் பேதமின்றி) who mis-believe that they have all rights in Islam to dominate and mis-treat women.

Aashiq Ahamed said...

சகோதர/சகோதரிகள் அனைவருக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

--------
தோழர் பார்வையாளன் இது சம்பந்தமாக ஒரு ஆராய்ச்சி
பதிவு எழுதியிருக்கிறார், சென்று படிக்கவும்.
http://pichaikaaran.blogspot.com/2011/04/blog-post_08.html
--------

பின்வருவது நான் எழுதிய பதிவு (சகோதரர் பார்வையாளனுக்கு முன்பே எழுதியது),

முபாரக்குடன் சேர்ந்து தர்காக்களும் ஒழிகின்றன...

இதனையும், சகோதரர் பார்வையாளனின் பதிவையும் கவனத்துடன் படியுங்கள். 'பல' உண்மைகளை விளங்கி கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ். (ஜியாரத் செய்வது குறித்து மாற்று கருத்து இல்லையே. தர்காக்கள் சரியா என்பது தானே வாதம்?)

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Aashiq Ahamed said...

சகோதரி ஹுசைனம்மா,

வ அலைக்கும் சலாம்,

தங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி...வாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்து கொள்கின்றேன்.

-----
இவ்விளம் பிராயத்திலேயே, இஸ்லாம் குறித்து தெளிவான விளக்கங்களும், வாதங்களும் செய்யுமளவு மார்க்க அறிவு பெற்றிருக்கும் உங்களைப் போன்றவர்கள் கண்டு மகிழ்ச்சி. இறைவன் உங்கள் செயல்களுக்கு நற்கூலி தருவானாக.
------

எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...தங்களுடைய துவாவிற்கு மிக்க நன்றி.

என்றும் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், இன்னும் நம் சகோதர/சகோதரிகளையும் தன் துவாவில் சேர்த்து கொள்ளும்

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

ஷர்புதீன் said...

:-)

( its means i read this blog's article)

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)