Monday, June 19, 2017

வெப்பம் சூடு தணிக்கும் வீடு


" அக்னி வெயில் ஆர்ப்பரித்த நாளொன்றில்
  நீர் அருந்த மண் குவளையைக் கையிலேந்தி
  வாயருகில் கொண்டு சென்று கவிழ்த்தியதுதான் தாமதம்
  பாகுபலியின் போர்க் காட்சி கண் முன்னே நிகழ்ந்தது.

  ஆம்.. ஆயிரக்கணக்கான‌ எறும்பு வீரர்கள்
  ஆர்த்தெழுந்து ஏறினார்கள் கை விரல்களினூடே 

  சுறுக் சுறுக்கென்று கடி அம்புகளால் தைத்தனர் "   J


வேறொன்றுமில்லை, தண்ணீர் குடிப்பதற்காக மண் பானை வைத்திருப்போம் 
அல்லவாநானும் ஒரு சிறிய, நாலைந்து குவளை நீர் நிரம்பும் அளவுக்கு 
மண்ணால் செய்யப்பட்ட ஜக் (JUG) வைத்திருந்தேன். பாதி அளவு தண்ணீர் 
இருந்த நிலையில் வெளியூர் சென்றிருந்தேன். இரண்டொரு நாளில் வெயில் 
மாலைப் பொழுதில் திரும்பி வந்து தாகம் தீர்க்கும் ஆவலில் ஜக்கைக் கவிழ்த்த 
போது தண்ணீர் இல்லாமலிருப்பதைக் கண்டு (யாருமற்ற இச் சிறு வீட்டில் யாரடா 
தண்ணீர் குடித்தது) ஆச்சர்யப் பட்டாலும், கவுண்டமணி ஸ்டைலில் 'அமானுஷ்ய 
ஒலகத்துல இதெல்லாம் சகஜமப்பா'ன்னு தெனாவெட்டா சொல்லிக்கிட்டே 
மீண்டும் அதில் தண்ணீர் நிரப்ப ஆரம்பித்தேன்அப்போது நிகழ்ந்ததுதான் 
மேற்சொன்ன காட்சி.

ஆச்சர்யம் என்னவென்றால் எறும்புப் படைதான் தண்ணீரைக் காலி செய்திருக்கிறது மட்டுமல்லாமல் காலி செய்து விட்டு வெயிலுக்கு இதமாக 'கேம்ப்' அடித்து தங்கியிருக்கிறார்கள். குட்டி கரப்பான் பூச்சிகள் சிலவும் இதில் அடக்கம்
Camp Boss வேலைக்கான விசாவில் வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். :)
இது ஒரு எச்சரிக்கைப் பதிவு,  நல்லவேளை பானை பெரிதாக இருந்து
மேற்படியான்  ஜாக்  வந்து விட்டால் ?

(JACK என்பது Rango படத்தில் வரும் பாம்பின் பெயர் ,
அதில் வரும் ஒரு வசனம் HAWK க கொன்னுட்டே, இனி JACK வந்துருவான்)

அதனால‌ மண் பானை வைத்திருப்பவர்கள் கொஞ்சம் உஷாராய் இருக்கவும்

அமானுஷ்யம் என்று சொல்லிவிட்டு அதைப் பற்றி எழுதலன்னா நல்லா இருக்காது. முன்பொரு நாள் பள்ளிக்கூடமொன்றில் படிக்கும் இரண்டு சிறுவர்களுக்கு 
தெருவில் செல்லும் பாம்பாட்டியைக் கண்டவுடன் ஒரு விபரீத ஆசை ஒன்று 
தோன்றியதுஒருவன் மற்றவனிடம் சொன்னான் 'நான் பாம்பாக மாறி 
மேற்கூரையில் ஒளிந்து கொள்கிறேன், நீ பாம்பாட்டியை அழைத்து வந்து மேலே பாம்பிருப்பதாகச் சொல்நானும் அவன் பார்த்தால் தெரியும் வண்ணம் மேலே 
அமர்ந்து கொள்கிறேன்என்னைப் பார்த்ததும் என்னைப் பிடிப்பதற்காக பிடிலை 
எடுத்து ஊத ஆரம்பித்து விடுவான். நானும் கீழிறங்காமல் விடாப்பிடியாக 
விளையாட்டு காட்டுவேன்அவன் ஊதிக் களைக்கும் வரை இப்படியாக‌  
விளையாட்டு காட்டி வேடிக்கை பார்ப்போம்’.

(இது முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்த அரபு தேசத்தில் நடந்த சம்பவம்.
தமிழில் பேய்,பிசாசு,பூதம் என்று சொல்வதை முஸ்லிம்கள் ஜின் என்று 
சொல்வார்கள்.  நல்ல ஜின், கெட்ட ஜின் என்று இரண்டே வகை. இவைகள் 
நெருப்புப் புகையினால் படைக்கப் பட்டவர்கள். நினைத்த உருவம் எடுக்கும் 
வல்லமை இறைவனால் இவைகளுக்குத் தரப்பட்டிருக்கிறது
"பாம்பாக மாறி வந்து ... என்ற பாட்டைக் கேட்டிருப்பீர்கள் அல்லவா,  
அவை இந்த ரகம்தான். ஸ்கூலில் சேர‌ ஆதார் கார்டொ, பர்த் சர்ட்டிஃபிகேட்டோ 
தேவைப்படாத அந் நாட்களில் அவைகளின் குழந்தைகளும் மனிதக் குழந்தையின் தோற்றத்தில் ஸ்கூலில் சேர்ந்து படித்ததுண்டு).

இப்ப கதைக்கு வருவோம். பாம்பாட்டியும் ஊத ஆரம்பித்தான். என்ன ஆச்சர்யம் 
சில நிமிடங்கள்தான் கழிந்திருக்கும், மேலிருந்த பாம்பு மெதுவாகக் கீழிறங்கி 
திறந்து கிடந்த அவனது பெட்டிக்குள் சென்று பவ்யமாகப் படுத்துக் கொண்டது
 பாம்பாட்டியும் பெட்டியை மூடி எடுத்துக் கொண்டு நடையைக் கட்டினான்
பதறிப் போன மற்றொரு சிறுவன் நடந்த உண்மையைக் கூறி நண்பனை 
மீட்டு வந்தான்பிறகு அவனிடம் 'டேய், வரமாட்டேன், விளையாட்டு 
காட்டுவேன்னு  நீதானடா பெருசா சொன்னே, ஏண்டா இறங்கி வந்தாய்'ன்னு 
கேட்டதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா.

'அதையேன் கேக்குற, அவன் ஊத ஊத என்னைச் சுற்றி நெருப்புச் சூடு பரவ ஆரம்பித்து விட்டது. அவனது கூடை மட்டும்தான் பாதுகாப்பாய் குளுகுளு இடமாய்த் தெரிந்தது. அதனைத் தவிர வேறு வழியில்லை என்பதால்தான் அங்கு செல்ல நேர்ந்தது'.


                            *                                                             *                            2 comments:

'பசி'பரமசிவம் said...

//ஆச்சர்யம் என்னவென்றால் எறும்புப் படைதான் தண்ணீரைக் காலி செய்திருக்கிறது மட்டுமல்லாமல் காலி செய்து விட்டு வெயிலுக்கு இதமாக 'கேம்ப்' அடித்து தங்கியிருக்கிறார்கள்//

வியப்பூட்டும் சுவையான சம்பவம். வாசிப்பு மகிழ்ச்சி தந்தது.
நன்றி.

அரபுத்தமிழன் said...

புன்னகை முகத்தாரின்
பொன்னகைக் கருத்திற்கு
புளகாங்கித நன்றிகள்

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)