Tuesday, June 27, 2017

ஆயுதம் ஏந்தும் கால்நடைகள்



பசியில்லாவிடினும் ...

வெறுமனே வேட்டையாடச் சொல்லி
வெறியூட்டப்பட்ட விலங்குகள்
வெளியில் விடப்பட்டுள்ளன
விலங்கினக் காப்பகத்திலிருந்து

கொடூர முகமும் கொடிய பற்களும்
கூரிய நகங்களும் கொண்டவை அவை
கூடவே ஆயுதங்களும் கொடுக்கப்பட்டு
கால்நடைகளுடன் கலந்துள்ளன
பசுத்தோல் போர்த்திய புலிகளாக

ஆடு மாடுகளும் மான்களும்
ஆயுதம் ஏந்தத் தடையிருப்பதால்
தம்மைத் தற்காத்துக் கொள்ள முடியாமல்
தவித்துச் சாகின்றன இரயில்களிலும் பயணங்களிலும்

இளம் கன்றொன்றின் மறைவைக்
கண்ட தினத்தில் கவலை கொண்ட
முகத்துடன் பள்ளி நோக்கி விரைகையில்
மூன்று வரிகள் மனதில் மின்னி மறைந்தன


" மாடுகள் வெட்டிய கத்திகளுக்கு
ஓய்வு வேண்டாம் இனி அவை
அந்த மாக்களை வெட்டட்டும் "


பதிவுலகில் பதிந்து பரப்பஎண்ணிய தருணம்
பள்ளியின் மூலையிலிருந்து நபிமொழியொன்று
படிக்கப்படும் சப்தம் வந்தது


" துஆ என்னும் பிரார்த்தனைதான்
இறைநம்பிக்கையாளனின் ஆயுதம் "


வாருங்கள் சகோதரர்களே துஆ என்னும்
ஆயுதத்தைக் கையிலெடுப்போம்

*                                   *                               *




7 comments:

KILLERGEE Devakottai said...

அமைதிக்கு வழி (சலாமதிக்கா ரஸ்தா) அருமை நண்பா - கில்லர்ஜி

அரபுத்தமிழன் said...

பெயர்தான் டெரராக இருக்கிறது, ஆனால் உள்ளமோ
அமைதி விரும்பும் பஹோத் அச்சா இன்ஸான் ஹே.

முல்லாஜீயின் இப்பதிவினால் ஏற்பட்ட துக்கம்
கில்லர்ஜீயின் http://killergee.blogspot.com/2017/06/blog-post_19.html பதிவினால் விலகியது என்னவோ உண்மை.

சிவப்புக் கம்பளம் விரித்து என்னை வரவேற்ற உங்களை
தங்கப் பட்டாடை அணிவித்து வரவேற்கிறேன் :)

அரபுத்தமிழன் said...

நன்றி அருமை நண்பர் தனபாலன்

Unknown said...

முட்டாள்கள் கையில் கத்தி எடுப்பார்கள் நாமும் எடுக்க வேண்டியதில்லை !கத்தியைத் தீட்டாதே ,புத்தியைத் தீட்டு ..பாடல் வரிகள் நினைவுக்கு வருது பாய் :)
த ம 2

Unknown said...

மிக அருமை சகோ

அரபுத்தமிழன் said...

நகைச்சுவையின் ஊற்றுக்கண் பகவானே
நன்றிகள் பல கோடி சொல்வேனே
பதிவுகள் பற்பல, கமெண்டுகள் பற்பல‌
போட்டுத் தாக்கும் பிசியான ஷெட்யூலிலும்
இங்கு வந்து ஊக்குவித்தமைக்கு ரெட் கார்பெட் சல்யூட் :)

அரபுத்தமிழன் said...

அருமையானவர்களுக்குத்தான்
அருமை புரியும்
நன்றி சகோதரா

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)