Monday, October 11, 2010

திருவள்ளுவர் நபியா இல்லை கவிஞரா

‍‍‍
இது ஒரு ஆராய்ச்சிப் பதிவல்ல மாறாக ஒரு எண்ணவோட்டப் பதிவு.
மனிதர்கள் வாழ்ந்த எல்லாப் பகுதிக்கும் ஒரு லட்சத்திற்கும் மேலாக தீர்க்கதரிசிகள்
அனுப்பப் பட்டுள்ளனர் என்பது இஸ்லாம் கூறும் உண்மை. இந்தியப் பகுதியின் மிகப்
பெரிய நபியாக 'மஹா நுவு' என்றழைக்கப்பட்ட நூஹ்(அலை) என்பது தெரிய வருகிறது.
இது பழைய வேதப் புத்தகங்கள் என அழைக்கப் படும் ரிக்,சாம‌,யஜூர் மற்றும் அதர்வண வேதங்களில் காணப்படும் 'வெள்ளப் பிரளயம்', பைபிள் மற்றும் குர்ஆனிலும் விவரிக்கப் பட்டுள்ளதன் மூலம் கிடைத்த ஒரு அனுமானம்.

பழைய வேதப் புத்தகங்களை 'சுஹுபுகள் (ஏடுகள்)' எனவும், மூசா (Moses),தாவூது (David),
ஈசா (Jesus),முகம்மது (அலை) நபிகளுக்குக்குக் கொடுக்கப் பட்டவை நான்கு வேதப் புத்தகங்களாகவும் இஸ்லாம் குறிப்பிடுகிறது. இவை பற்றிய ஆராய்ச்சிப் புத்தகங்கள்
'அபூ ஆசியா' போன்றோரால் நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. எனினும் இந்தப் பதிவு எழுதத் தூண்டியது, இயல்பான நகைச்சுவை எழுத்துக்குச் சொந்தக்காரரான 'இதயம் பேத்துகின்ற'
பதிவர் ஜவஹரின் முயற்சியில் உருவான 'உருப்படு' புத்தக அறிமுகப் பதிவுக்குக் கொடுக்கப் பட்ட தலைப்பு ஏற்படுத்திய சிந்தனை.

ஒழுக்க நெறி கருத்துக்களுக்காகவும் சீரிய சிந்தனைகளுக்காகவும் திருவள்ளுவரையும்,
புத்தரையும் நபியாகக் கருதுவோரும் மறுப்பவரும் நம்மிடமுண்டு. பள்ளிக்கூடங்களில்
மனப்பாடம் செய்த குறள்கள் ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ சினிமாப் பாடல்களில்
வந்தவை மட்டும் சரியாக நினைவில் இருக்கின்றன. அதில் ஒன்றுதான்,
'பல்லாண்டு வாழ்க' வில் வரும் 'ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவனென்று போற்றுவோம்' பாடலின் ஆரம்ப வரிகள்,

'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்'
'என்பும் உரியர் பிறர்க்கு'

'தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்'
'மெய்வருத்தக் கூலி தரும்'

திருவள்ளுவரை நபியாகக் கருதிய நான், 'தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்'
என்ற வரியைச் சிந்தித்த போது 'தெய்வத்தால் கூட செய்ய முடியாத காரியத்தை ஒரு
மனிதனின் முயற்சி செய்து விடும் என்ற அர்த்தம் தொனித்ததால் 'நிச்சய‌மாக இவர்
நபியாக இருக்க முடியாது' என்ற முடிவுக்கு வந்தேன். பின்னொருநாளில் இந்தக்
குறளுக்கு யாரோ ஒருவர் இப்படி கருத்துரை எழுதியிருந்த‌தைப் படித்த போது
'அட இது நல்லாருக்கே' எனத் தோணியது.

"தெய்வத்தின் விதியில் இவனால் முடியாது என்று எழுதப்பட்டு இருந்தாலும்,
இறையிடம் அழுது பிரலாபித்து விதியை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முடியும்",

இக் கருத்து நம் ஹதீஸ்களில் காணப்படும்,

'தர்மம் தலை காக்கும்' (சதகா ரத்துல் பலா)
'பிரார்த்தனை விதியை மாற்றும்' (துஆ ரத்துல் களா)

கருத்துக்களுக்கு ஒட்டி வருவதால் மேற்கண்ட குறளின் மீது மீண்டும் ஒரு பிடிப்பு வந்தது.
மேலும் 'அகர முதல‌ எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு' எனும் குறளில் வரும்
ஆதி பகவன் என்பது ஆதம் நபியைக் குறிப்பதாகக் கருத இடமுண்டு. எனவே திருவள்ளுவர்,
நபியாக இருக்கலாம் அல்லது 'வேதங்களை'த் தொகுத்த வியாச முனிவரைப் போல் ஒரு
அறிஞராக இருக்கலாம் அல்லது நல்ல கருத்துகளைத் தொகுத்து வெண்பா வடிவில் வழங்கிய கவிஞராக இருக்கலாம் அல்லது ... அல்லது ..... அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

'அபூ ஆசியா'வின் புத்தகத்தில் படித்த ஞாபகம், குர் ஆனில் 'துல் கிஃப்ல்' என்ற நபியின்
பெயர் வருகிறது. லட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்களில் வெறும் 25 நபிமார்கள் பெயர்
குர்ஆனில் வருகிறது, அவற்றுள் ஒன்று 'துல் கிஃப்ல்'. கபிலைச் சார்ந்தவர் என்று பொருள்.
இது 'கபில'வஸ்துவைச் சார்ந்த புத்தரைக் குறிப்பதாகச் சொல்கிறார் ஆசிரியர்.

ஆக இவர்கள் நபிமார்களா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை
(தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம்). என்றாலும் தசாவதாரி சொன்னது மாதிரி,

'நபியாக இருந்தால் நன்றாயிருக்கும்' :)

23 comments:

ஹுஸைனம்மா said...

//அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்'
'என்றும் உரியர் பிறர்க்கு//

”என்பும்” உரியர் பிறர்க்கு!!

அதாவது அன்புடையவர்களின் எலும்புகூட மற்றவர்களுக்கு உரித்தானது எனற அளவில் பிறரால் விரும்பப்படுவர்..

நாங்களும் திருக்குறள் படிச்சிருக்கோம்ல..

ஹுஸைனம்மா said...

பெரியவங்க இப்படிச் சொல்லிருக்காங்க..

மு.வ : அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்

சாலமன் பாப்பையா : அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்

அரபுத்தமிழன் said...

நன்றி ஹுசைனம்மா, மாற்றி விட்டேன்.

//படிச்சிருக்கோம்ல //

குறள் படிக்காமல் (பாடல்) குரல் கேட்டதால் வந்த வினை :)

அரபுத்தமிழன் said...

//பெரியவங்க இப்படிச் சொல்லிருக்காங்க..//

விரல் நுனியில் குறள் விளக்கமா
வாவ்! ஹுசைனம்மா!
இனி நீங்க குறளம்மா .... கூவம்மா ! தான். :)

கோடி நன்றிகள், தொடரும் ஆதரவுக்கு.

Rajakamal said...

உங்களைப் போலவே எனக்கும் அப்படி ஓரு எண்ணம் உண்டு, திருவள்ளுவரும், புத்தரும், மற்றும் யாரெல்லாம் ஏகத்துவத்தை கூறினார்களோ அவர்கள் நபியாக இருக்க வாய்புண்டு, காரணம் இறைமறையில் நபியை இறக்காத சமுதாயம் இல்லை என்று இறைவன் கூறுகிறான் திருவள்ளுவருடைய சொற்கள் தெய்வாக்கத்தான் இருக்க முடியும் என்பது என் எண்ணம் இவ்வளவு சுருங்கவும் இவ்வளவு அற்புதமாகவும் மனிதனால் சொல்ல முடியுமா என்று பல முறை சிந்தித்தது உண்டு பல குறள் அற்புதமான குறள் இருக்கின்றன. திருமறையை தவிர அனைத்திலும் மனித கைகள் நுழைந்து விட்டன அல்லாஹ்வே மிக்க அறிந்தவன் . பகிர்வுக்கு நன்றி.

ஹுஸைனம்மா said...

//திருவள்ளுவரையும்,
புத்தரையும் நபியாகக் கருதுவோரும்//

இது கேள்விப்பட்டதுண்டு..

//இந்தியப் பகுதியின் மிகப்
பெரிய நபியாக 'மஹா நுவு' என்றழைக்கப்பட்ட நூஹ்(அலை) //

இது புதுசு எனக்கு..

இதுபத்தி எழுதுங்களேன்.. அல்லது புத்தகம் தாங்க (இங்கே கிடைக்குமா?)

/இறையிடம் அழுது பிரலாபித்து விதியை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முடியும்"//

விதியை மதியால் வெல்லலாம்னும் சொல்வது கேட்டு எப்படின்னு ரொம்ப நாள் குழப்பமா இருந்துது..
ஒருத்தர் சாவித்திரி - மார்க்கண்டேயன் கதைய வச்சு விளக்கம் கொடுத்திருந்தார்.. அப்ப இப்படித்தான் தோணுச்சு..
பிரார்த்தனை-துஆவால் சாதிக்க முடியும் என்று.. நிறையக் கிடைக்கப் பெற்றிருக்கிறோமே வாழ்வில் பிரார்த்தனைகளால்.. இறைவனுக்கு நன்றி.

அரபுத்தமிழன் said...

நன்றி ராஜா கமால்,

இன்னும் வேதங்களைத் தொகுத்த வியாச முனிவரும் 'நபி'யாக இருக்கலாமோ என ஐயம் உண்டு (புத்தக‌ங்களில் தமது கருத்தைப் புகுத்தாமலிருக்கும் வரை)

ஹுஸைனம்மா said...

//விரல் நுனியில் குறள் விளக்கமா//

ஆமா, விரல் நுனியால் கீபோர்ட் தட்டினால், கூகிள் சேவகன் விபரங்கள் பல தந்திடுவான்.. :-)))

அரபுத்தமிழன் said...

//இதுபத்தி எழுதுங்களேன்.. அல்லது புத்தகம் தாங்க (இங்கே கிடைக்குமா?)//

முயற்சி செய்கிறேன்.

//விதியை மதியால் வெல்லலாம்னு//

துஆ ரத்துல் களா,
மரணத்தைக் கூட முன்னே பின்னே ஆக்கிக் கொள்ளலாம் தெரியுமா.
ஆனால் மார்க்கண்டேயனாக முடியாது :)

அரபுத்தமிழன் said...

//கூகிள் சேவகன் விபரங்கள் பல தந்திடுவான்.. //


'கூகிளாண்டவர்' என்று அறியாப் பிறவிகள் கூவிக்கொண்டிருக்க‌
'கூகிள் சேவகன்' என்று சரியாச் சொன்ன பிறவியம்மா எங்கள் ஹுசைனம்மா.
'அத் துன்யா குலிகத் லகும் ‍(உலகம் பிறந்தது உமக்காக), சக்கர லகும் (உங்களுக்காக வசப்படுத்தித் தந்திருக்கிறோம்) என்ற இறைவனின் கூற்றுக்கு இலக்கணமாய் நீவிர் முஃமினாக வாழ்த்துக்கள்.

Rajakamal said...

பல வருடங்களுக்கு முன்பு ஒரு புத்தகத்தில் படித்தது, நூஹ் நபியுடைய கூட்டம் தான் இன்றய இந்துக்கள், நூஹ் நபியின் கப்பல் தரை தட்டியது நாகப்பட்டினம் அதன் மூலப் பெயர் நூஹ் பட்டினம், நோவாய் பட்டினமாகி இன்று நாகப் பட்டினம் என்று ஆகிவிட்டது என்று ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார்.

தவிர இறைவன் திருமறையில் நான்கு பேரை குறிபிடுகிறான், யகூதி, நஸாரா, மஜீஸி, நாலாவது ஸாபீயின்கள். மூவரையும் நமக்கு தெரியும், இந்த ஸாபியீன்கள் எனப்படுவது இந்துக்கள் தான் என்று குறிப்பிடுகிறார், தங்கள் நபியை அவதாரங்களில் தொலைத்து விட்டவர்கள் என்றும் கூறுகிறார்.

அடுத்து மரணத்தைக் கூட முன்னே பின்னே துஆ மூலம் ஆக்கிக் கொள்ளலாம் என்று அரபு தமிழன் குறிப்பிட்டிருந்தார், அதை பார்த்தவுடன் ஒரு வரலாற்று நிகழ்வு ஞாபகம் வருகிறது நோய்வாய்ப்பட்டிருந்த மகன் (ஹீமாயுன்) மரண படுக்கையில் இருந்ததாகவும் பாபர் தன் வாழ்வில் 10வருடம் தன் மகனுக்குக் கொடுக்கும் படி இறைவனிடம் துஆ செய்ததாகவும் அப்படியே அவருக்கு கொடுக்கப் பட்டதாகவும் பாபரின் வரலாற்றில் ஒரு பதிவு உண்டு. அல்லாஹ் மிக்க அறிந்தவன்

அரபுத்தமிழன் said...

அருமை, ராஜா கமால்,
நூஹ் வாழ்ந்த பட்டினமாயிருக்கலாம் நாகப்பட்டினம்,
ஆனால் கப்பல் தரை தட்டிய இடம் ஆர்மீனியப்பட்டினம் :)
(ஆர்மீனியாவில் உள்ள ஜோதி மலைத் தொடர்)

அரபுத்தமிழன் said...

//ஸாபியீன்கள் எனப்படுவது இந்துக்கள் தான் //

உண்மை. ஆதம் நபி இறக்கப்பட்ட இடமான இலங்கையும்,ஆதமுக்கு அடுத்து வந்த நுவு வாழ்ந்த இடம் நோவாய்ப் பட்டினம் எனப்பட்ட நாகப்பட்டினம், அதன் அருகில் வெள்ளப் பிரளயத்தில் அழிந்த காவிரி பூம் பட்டினம் இக்கருத்துக்கு மேலும் மேலும் வலு சேர்க்கின்றன‌.

PortoNovo KajaNazimudeen said...

என்னுடைய கல்லூரி நாட்களில் (1978) கூட 'திருவள்ளுவர் - ஒரு நபியாக ஏன் இருந்து இருக்க கூடாது' என்று நண்பர்களுடன் ஆய்வு செய்ததுண்டு! நீங்கள் பதிவு செய்துள்ளவற்றை நாங்களும் ஆய்வு செய்ததே. அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.
இருப்பினும் உங்களின் இப்பதிவை பார்க்கும் போது - அக்கால கட்டத்தில் நாங்கள், இத்தலைப்பு குறித்து, செய்த விவாதங்கள்.... அப்பப்பா - இப்பொழுதும் மகிழ்ச்சி தருகிறது.

அரபுத்தமிழன் said...

வாங்க காஜா பாய், 'தொட்டு விடும் தூரத்தில்தான்' இருக்கிறீர்கள். முன்பே அறிமுகமிருந்திருந்தால் ரியாத் வந்த போது சந்தித்திருப்பேன். உங்களின் பழைய நினைவுகளை மீட்டெடுக்க என்னைக் காரணமாக்கித் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

Riyas said...

எல்லாம் அவனே(அல்லாஹ்) அறிவான் எங்களால் எதையும் நிச்சயமாக கூறமுடியாது... புத்தர் நபியாக இருக்கலாம் என்பதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு.. காரனம் துறவு வாழ்க்கையை இஸ்லாம் விரும்புவதில்லையே..

அரபுத்தமிழன் said...

ஆம் ரியாஸ், முழு வரலாறு தெரியாமல் எதையும் தீர்மானமாகச் சொல்ல முடியாது. ஆனாலும் ஒரு விஷயம், துறவறம் பூண்டது போரைத் தவிர்க்க அல்லது கட்ட பஞ்சாயத்தின் படி நாடு கடத்தப் படுவதைத் தவிர்த்து தாமே முன் வந்து வெளியேறியதாகவும் படித்திருக்கிறேன். நம்முடைய நபிக்கும் இது போன்ற சோதனை ஏற்பட்டதுதானே. எனிவே, கருத்துக்கு நன்றி ரியாஸ்.

பாரத்... பாரதி... said...

//"தெய்வத்தின் விதியில் இவனால் முடியாது என்று எழுதப்பட்டு இருந்தாலும்,
இறையிடம் அழுது பிரலாபித்து விதியை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முடியும்",///
நிச்சயக்கப்பட்ட வாழ்க்கை தான் நமக்கு அளிக்கப்படுகிறது எனில் இறைவனிடம் அழுதல் கூட ஒரு முயற்சி தானே.... முயற்சி மெய் வருத்த என்பது உண்மை தானே....

அரபுத்தமிழன் said...

//முயற்சி மெய் வருத்த என்பது உண்மை தானே..//
ஆம்,உண்மைதான். இன்னொன்று தெரியுமா, இப்படி நாம் கேட்போம் என்பதையும் அவன் அறிந்தே வைத்திருக்கிறான். விதிகளில் இரண்டு வகைப்படும் , ஒன்று 'என்றும் மாறாதது (மரணம் போன்றவை)', மற்றது, 'மாற்ற முடிவது (மரணம் எப்ப/எப்படி நடக்க வேண்டுமென்பது).
கருத்திற்கு நன்றி பாரத்/பாரதி.

பார்வையாளன் said...

இந்த இந்து , முஸ்லின் விளையாட்டை நிறுத்தி விட்டு, பார்த்தால், உண்மை ஒன்றே , ஆளுக்கு ஒரு பெயர் வைத்து கொண்டு குழப்புகிறார்கள் என்பது புரியும்..

இறைவன் ஒருவனே.. அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.. அதை ஒருவர் அல்லாஹ் என சொல்லாலம்..ஒருவர் காட் எனலாம் ..இதுவெல்லாம் மொழி விளையாட்டுதான்..

இறைவன் ஒருவனே..அவன் இறைதூதர்களை அந்தந்த காலத்திற்கேற்ப , மனிதர்களுப்பேற்க அனுப்பி இருக்கிறான்.. இதில் நமக்குள் பிரிந்து கொண்டு முட்டி கொள்வது வீண் வேலை...
மாறாக, தமக்கு தெரிந்த நல்ல விஷயங்களை பகிர்த்து கொள்வதே அனைவருக்கும் நல்லது..

அந்த நல்ல பணியை நீங்கள் செய்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்...

பார்வையாளன் said...

" நிச்சயமாக நாம் உமக்கு ( நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வசல்லம் அவர்களுக்கு ) முன்னர் பல தூதர்களை அனுப்பி உள்ளோம்..சிலரை பற்றி கூறி உள்ளோம்.. உமக்கு கூறாதவர்கள் சிலரும் உள்ளனர் ( 40 : 79 )
என குர்ஆனில் சொல்லப்பட்டு இருக்கிறது...

Pebble said...

//ஸாபியீன்கள் எனப்படுவது இந்துக்கள் தான் என்று குறிப்பிடுகிறார், தங்கள் நபியை அவதாரங்களில் தொலைத்து விட்டவர்கள் என்றும் கூறுகிறார்.

//
Please very this statement, some of the recent yahoo article I have studied that they are the followers(Ummah) of Prophet Yahya ibn Zakariya.

cineikons said...

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)