Tuesday, November 23, 2010

விஞ்ஞானம்..பரிமாணம்..பரிணாமம்..பரிதாபம்

முஸ்கி : (டிஸ்கியை முன்னாடியே போட்டா அது முஸ்கி தானே)

பரிணாமம் பற்றிய இஸ்லாமியக் கருத்துக்களை சீரியஸாத் தெரியணும்னா
கார்பன் கூட்டாளியையும்எதிர்க்குரலையும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இது கொஞ்சம் 'சிரியஸ்' பதிவு, மேலும் பதிவின் கடைசியில் காரத்திற்கு
எதிர்ப்பதமான 'இனிப்பு(16+)' கொஞ்சம் 'தூக்கலா' இருக்கும் :)))
அதனால் தயவு செய்து பெண்கள் படிக்க வேண்டாம் கடைசி வரியை.

கடைசியில் வரும் குரங்கு சம்பவத்தை நகைச்சுவையாக எழுத நினைத்து குரங்கின்
நிமித்தமான பரிணாமத்தைத் தொட்டுப் பின் விஞ்ஞானத்தைத் துவைக்குமாறு ஆகி
விட்டது. அதிபர் அப்துல் கலாம் மன்னிக்கவும்.

-----------------------------------------------------------------------

என் நண்பனொருவன் சொல்லுவான், மில்லியன் பில்லியன் கணக்கில் செலவழித்து
வான வெளிகளில் பயணித்து கல்லையும் மண்ணையும் கொண்டு வந்து கடைசியில்
பயணக் கட்டுரை எழுதுவதால் என்ன பிரயோஜனம். நாளை பெட்ரோல் போன்றவை
தீர்ந்து பழைய கற்காலம் போன்று ஆகிவிடும். இந்தப் பணத்தைப் பூமியில் போடலாமே,
அதாவது பூமியின் வளங்களை அறிந்து மனித சமுதாய முன்னேற்றத்திற்காகப்
பயன்படுத்தலாமே அல்லது மனிதனை ஆராய்ந்து மண்ணை வளப்படுத்தலாமே என்று.
(நீங்க என்ன சொல்றீங்க)

பணமும் மனித முயற்சியும் இப்படி விழலுக்கு இறைத்த நீராகப் போவதற்குக் காரணம்,
'மத' நம்பிக்கைக்குள் 'னி'ராகரிப்பைப் புகுத்தி 'மனித'னின் அறிவை மட்டும் நம்பும்
விந்தை ஞானமான விஞ்ஞானமே. எதையும் உருப்படியாகச் சொல்லாமலும் ஒரு
முடிவுக்கு வராமலும் சுற்றி வளைத்துக் குழப்புவதும், இன்று சொன்னதை நாளை
மறுப்பதும்தான் விஞ்ஞானம் என்ற பெயரில் உலா வரும் அஞ்ஞானம். உண்மையில்
விஞ்ஞானம் என்பது விந்தைகளுக்குப் பின்னாலுள்ள மர்மங்களின் முடிச்சை
அவிழ்த்து மெய்ஞ்ஞானம் போதிக்க வேண்டுமே ஒழிய அது ஒருபோதும்
அஞ்ஞானத்திற்கும் அழிவிற்கும் துணை போகக் கூடாது.

குர்ஆன் மற்றும் இஸ்லாமியக் கருத்துக்களில் பெரும்பாலான விஷயங்கள்
தெளிவாகவும் சில மறைமுகவாகவும் சில உங்களுக்குத் தெரியவே சான்ஸ்
இல்லை என்றும் கூறப்பட்டுள்ளன‌.

தெரியவே சான்ஸ் இல்லாத அல்லது மிகக் குறைவாகவே அறிய முடிகிற‌
விஷயங்களில் 'உயிரும்' ஒன்று. ஆனால் உயிரைப் பற்றி மிகப் பெரிய ஆராய்ச்சி
நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒருநாள் உயிர் பற்றித் தெரிய வரும்,
அந்நாளில் உயிர் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் 'லெனின்' போன்றோரின்
உடல் பாதுகாக்கப் பட்டு வருகிறது. இது நடக்கவே நடக்காது, இறந்த ஒருவருக்கு
தஜ்ஜாலால் (anti christ) ஒரே ஒரு முறை உயிர் கொடுக்கப் படும் அவ்வளவே தவிர‌.

வானத்தில் இரவு நேரங்களில் எரிந்து விழும் நட்சத்திரங்களைப் பார்த்திருப்பீர்கள்.
அது என்னவென்று குர்ஆன் சொல்லுகிறது, '(குறி சொல்லுபவர்களுக்காகச் செய்தி
சேகரிக்க மேலேறிச் செல்லும் பத்திரிக்கையாள :) ஜின்) ஷைத்தான்களை விரட்ட
வானவர்கள் எறியும் எரிகற்கள்'-'ருஜூமன் லிஷ்ஷயாத்தீன்' என. விஞ்ஞானிகள்
என்ன சொல்கிறார்கள், அறிவு பூர்வமா ஏதாவது சொல்ல வேண்டுமே என்று
வளி மண்டலம்,உரசல் புரசல் என்று எதையாவது சொல்வார்கள்.

'சுனாமி' ஏற்படுவதற்குக் காரணம் 'பூமிக்கடியில் ரெண்டு பிளேட் உரசிக் கொண்டதாம்',
அது ஏம்பா உரசுது அல்லது யார்யா ஒரச வைக்கிறது, அது இப்ப ஏன்யா ஒரசலைன்னு
கேட்டு பாருங்க, அதுக்கும் அவர்களால் மழுப்பத்தான் முடியும்.

கனவைப் பற்றிய‌ ஆராய்ச்சி எப்படியிருக்குதுனா பசி எப்படி ஏற்படுதுங்குற மாதிரித்தான்
போகுது. நரம்புகள் தூண்டப்பட்டு, நினைவுகள் தோண்டப்பட்டு அப்படீன்னு சொல்லி வைப்பார்கள்.ஒண்ணு பசி தீர வழி சொல், இல்லன்னா பசி போக்கும் உணவிற்கான
ஏற்பாட்டைச் செய்து கொடு விஞ்ஞானமே.(கனவுன்னா என்ன, கனவுக்கான பலன்
என்ன என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த ப‌திவில் பார்ப்போம்).

இப்படி எல்லா விஷயத்திலும் முடிவுக்கு வராமல் ஆராய்ந்து கொண்டே...யிருக்கும்
விஞ்ஞானிப் பயலுவ, 'குரங்கிலிருந்துதான் மனித இனம் தோன்றியது ' என்ற
தான் தோன்றித் தனமானத் தத்துவத்தை மட்டும் எப்படி பிடித்துக் கொண்டார்களோ.

உருவெளிக் களங்களில் பயணித்துப் பாருங்கள். இது சம்பந்தமாக இன்னும் நிறைய
தீனி கிடைக்கும். இப்ப நம்ம கதைக்கு வருவோம்.

சென்ற வாரம் பெருநாள் விடுமுறையில் துபாய் Zoo சென்றிருந்த நண்பர் சொன்னார்.
அங்கே ஒரு கொரில்லா உண்டு, அது ஒவ்வொரு முறையும் தண்ணீர்த் தொட்டியை
நோக்கி ஓடிச் சென்று தண்ணீரை வாயில் சேகரித்துக் கொண்டு கூண்டின் கம்பிக்கருகில்
வந்து நின்று கொள்கிறது. யாராவது அதனை போட்டோ எடுக்க அருகில் சென்றால்
போதும், முகத்தில் நீரைப் பீய்ச்சியடித்து விட்டு ஓடிச் சென்று நீரைச் சேகரித்து....
இப்படியே நிகழும் சேட்டையைக் குழந்தைகளோடு சென்றால் ரசிக்கலாம் என்றார்.
(என்ன குசும்பரே, இங்கே இன்னும் போக வில்லையா, அதன் சேட்டையை ரசித்து
உங்கள் நடையில் பதிவிக்கவும்.)

கேட்டுச் சிரித்துவிட்டு இன்னொரு நண்பர் சொன்னார். 'பார்த்தீங்களா பாய்,
அல்லாஹுத்தஆலா கணவன் மனைவி ஜோடியை அந்தந்த இனத்திலேயே ஆக்கி
வைத்துக் கிருபை செய்திருக்கிறான். 'அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே
மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்' என்று குர்ஆனிலும் கூறப்பட்டுள்ளது (16:72).

சப்போஸ் மனித இனத்துக்குப் பதிலா மனைவி குரங்காய் இருந்திருந்தால் நம்ம கதி என்னவாகியிருக்கும். கோபித்துக் கொண்டு மரமேறிய குரங்கை ஸாரி மனைவியை
ஒவ்வொரு தடவையும் கெஞ்சிக் கூத்தாடியல்லவா கீழே இறக்க வேண்டி வந்திருக்கும் :)

அதைக்கேட்டு எங்க ஊர் நண்பன் சொன்னான்,
'அடப் போங்க பாய், புடவை,நகையென்று செலவழிக்க வேண்டிய அவசியமே
இருந்திருக்காது, ஒரு வாழைப்பழமே போதும், வாழ்க்கையே வசப்படும்.

இதைக்கேட்டு நான் சொன்னேன் .....

'அடேய், வசப்படுமா, வசமா நசுக்கப்படும்.
'ஒருநாள் வாழைப்பழம் கெடைக்காமப் போனாத் தெரியும் ...'
.
.
.
.
.
'ஒன்னோட வாழப்பழத்தோட கதி' :-)))

19 comments:

குடுகுடுப்பை said...

நீங்க பதிவு போடத்தேவையான இண்டர்ன்நெட் முதல் பிளாக்கர் வரை முட்டாள் விஞ்ஞானிகள் அரைகுறையா கண்டுபிடிச்சதுதான் என்ன பண்றது, சிரிப்பு நல்லா வருது

அரபுத்தமிழன் said...

அதெல்லாம் கண்டுபிடிக்குறதுக்கு மூளையக் கொடுத்தானே அவனக் கண்டு பிடிக்கத் தெரியல, சிரிங்க சிரிங்க நல்லா சிரிங்க :)

அரபுத்தமிழன் said...

விஞ்ஞானத்தினால் நாம் நன்மைகளும் அடைந்திருக்கிறோம் தீமைகளும் அடைந்திருக்கிறோம். ஆகப் பெரிய தீமையான‌ படைத்தவனை அறிய விடாமல் இறுமாப்பு கொள்ள வைக்கும் மனித புத்தியைத்தான் சாடியிருக்கிறேன்.

மற்றபடி நானும் ஒரு விஞ்ஞானிதான் :)
கோபப்படாதீங்க குடுகுடுப்பை, முதல் வருகைக்கு நன்றி.

Raja said...

சரி உங்க கடவுள் கொடுத்த மூளைய வச்சிக்கிட்டு என்ன பண்ணனும்னு அவரு சொல்றாரு...அதையாவது சொல்லுங்க...உங்க பதிவ பார்த்த அழுகறத இல்ல சிரிக்கரதன்னே தெரியல...இதுக்கு பேர் தான் தீட்டுன மரத்துல கூர் பாக்குறது...விஞ்ஞானம் இறுமாப்ப தருதுன்ன நோய் வந்த கடவுளே கடவுளே ன்னு வீட்டுலேயே படுத்துக்க வேண்டியது தானே...இறுமாப்பு தந்த விஞ்ஞானம் கண்டுபிடிச்ச கருவிகள் உள்ள ஹோச்பிடல் நோக்கி என் ஓடுறிங்க...

அரபுத்தமிழன் said...

விஞ்ஞானிகள் கண்டு பிடித்த பொருட்கள் இல்லாமல் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் எங்களால் வாழ முடியும். ஆனால் இறைவன் கொடுத்தவை இல்லாமல் உங்களால் வாழ முடியுமா :)

அரபுத்தமிழன் said...

அல்லாஹ் மூளையை வச்சி என்னென்ன செய்யச் சொல்லுறார் என்று இப்பவே எல்லாத்தையும் சொல்ல இயலாது. இன்ஷா அல்லாஹ் அவ்வப்போது பதிவுகளாக சொல்ல முயற்சிக்கிறேன். இப்ப போய் நாளை வருகிறேன் ராசா
இன்ஷா அல்லாஹ்.

Raja said...

இறைவன் கொடுத்ததா எல்லாமே...இது தெரியாம போச்சே...எல்லாத்தையும் இவ்வளவு நாளா காசு கொடுத்துள்ள வாங்கிகிட்டு இருந்திருக்கேன்....இது முன்னமே தெரிஞ்சிருந்த இது கடவுள் கொடுத்தது காசெல்லாம் கொடுக்க முடியாதுன்னு சொல்லிருப்பேனே...தேங்க்ஸ் தல கண்ண தொறந்ததுக்கு :)

குடுகுடுப்பை said...

அதெல்லாம் கண்டுபிடிக்குறதுக்கு மூளையக் கொடுத்தானே அவனக் கண்டு பிடிக்கத் தெரியல, சிரிங்க சிரிங்க நல்லா சிரிங்க :)
//

:))))))))))))))))))))))))))))))))))))):))))))))))))))))))))))));)

குடுகுடுப்பை said...

அரபுத்தமிழன் said...
விஞ்ஞானத்தினால் நாம் நன்மைகளும் அடைந்திருக்கிறோம் தீமைகளும் அடைந்திருக்கிறோம். ஆகப் பெரிய தீமையான‌ படைத்தவனை அறிய விடாமல் இறுமாப்பு கொள்ள வைக்கும் மனித புத்தியைத்தான் சாடியிருக்கிறேன்.
//

கடவுளால்? மதம், மதச்சண்டைகள், சாவு எழவு இதைத்தவிர ஏதாவது அடைந்தோமா? கடவுளோ மதமோ இல்லாமல் மனித இனம் இனி எப்போதும் வாழப்போவதில்லை, அதுவரைக்கும் கடவுளுக்குகான விளம்பரங்களும்(மனிதர்களால் அளிக்கப்படும்) விஞ்ஞானிகளின் அரைகுறை கண்டுபிடிப்புகளில் நிற்கப்போவதுமில்லை

பார்வையாளன் said...

பக்ரீத் பற்றி சிறப்பு பதிவு போடுவீங்கணு எதிர்பார்த்தேன்...
ஏமாத்திட்டீங்க...

ஆனாலும் அதை ஈடுசெய்வது போல இந்த கட்டுரை இருக்கிறது..

இதன் தொடர்ச்சியாக இன்னும் எழுதுங்கள்..

அரபுத்தமிழன் said...

அன்புக்கு நன்றி என் அருமை அறிவுத்தேடலின் பார்வையாள நண்பரே.
வீட்டுல நெட்டு கெடையாது, ஆறு நாட்கள் லீவு வேற. சிந்திக்கிறவங்களுக்கு
நிறைய அத்தாட்சிகள் இருப்பதாக இறைவன் கூறுகிறான். நீங்க சிந்திக்கிறவங்க, நான் எழுதாவிட்டாலும் சீரிய அறிவு தங்களுக்கு எங்கிருந்தாலும் கிடைத்து விடும். ஆனால் நிந்திப்போர்தான் பாவம், என்ன சொன்னாலும் கோபம் தான் வரும்.

அரபுத்தமிழன் said...

கோப ராஜா,
நீங்க காசு கொடுக்கிறதெல்லாம் Socalled விஞ்ஞானிகள் கண்டு பிடிச்சதுக்குத்தான்.
அல்லாஹ் கொடுத்துள்ள கிருபைகள்ள ஒண்ணே ஒண்ணுக்குக் கூட‌ காசு கேட்டாலும் நாம கொடுக்க முடியாது.
இந்த உலகம் பரீட்சைக்கூடம் படிச்சவனுக்கும் பரீட்சை எழுதுவதற்கான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது, படிக்காதவனுக்கும். பரீட்சை ஹாலில் பேப்பர், தண்ணீர் போன்றதெற்கெல்லாம் காசு வாங்கப் படுவதில்லை. :)

அரபுத்தமிழன் said...

குடுகுடுப்பை உங்கள் கோபம் புரிகிறது, நியாமானதும் கூட‌. ஆனால் தீர்வுதான் சரியில்லை. உடம்பு இருப்பதால்தானே நோய் வருது அதனால் உடம்பே தேவையில்லை, சுவர் இருப்பதால்தானே கிறுக்கி வைக்கிறார்கள், அதனால் சுவரே தேவையில்லை. சகோதரர்கள் அடித்துக் கொள்(ல்)கிறார்கள், அதனால்
தாய்,தந்தை,சகோதர சகோதரி என்ற குடும்ப தத்துவமே வேண்டாம் என்ற ரீதியில் இருக்கிறது.

மதம் போதிக்கும் அன்பை எடுத்துக் கொள்ளுங்கள், மதவாதிகளையும், மனித சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிப்பரையும் 'அவனிடமே' விட்டு விடுங்கள்.

இயற்கையை ஒத்துக்கொள்கிறோம், அந்த இயற்கையைப் படைத்தவனை நம்ப மறுக்கிறோம்.
ALL are just like that என்கிறோம்,
ALL(AH) என்று மறைந்திருக்கும் மறை பொருளை உணரவில்லை நாம்.
ALL ARE GOD's
ALL in ALL அல்லாஹ்தான். :)

அரபுத்தமிழன் said...

'சிரி'யஸ் பதிவு இப்படி 'சீரியஸ்' ஆயிடுச்சே :(

அரபுத்தமிழன் said...

Testing moderation and embedded comment window.
நல்ல பல பெரியவங்கள்லாம் மாடரேஷன் தான் வச்சிருக்காங்க. மற்றபடி பிரபலம்லாம் இன்னும் ஆகல :)

அரபுத்தமிழன் said...

Test 2

அரபுத்தமிழன் said...

Test 3

mohamed said...

ஏதாவது இன்னும் நல்ல கருத்துகளை எழுதவும். அப்பொழுது தான் எல்லோரும் படிக்கலாம் இறை
சிந்தனையை தூண்டுவதாக இருக்கட்டும்.

ஜஜாகல்லாஹ்

அப்துல் நசீர்

அரபுத்தமிழன் said...

அன்பு அ.ந.,
நேயர் விருப்பம் அறிய ஏதாவது க்ளூவும் கொடுங்களேன்.

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)