Wednesday, June 23, 2010

கண்டதும், கேட்டதும்

புரியாத பிரியம் ...
பிரியும் போது தான் புரியும்

* * * * * *

உதயக் குளியல் உத்தமம்
மதியக் குளியல் மத்யமம்
அந்திக் குளியல் அனத்தம்

* * * * * *

சுத்தம் சோறு போடும்
*அசுத்தம்* நாற்றம் தரும்

(* இந்த இடத்தில் எதுகை/மோனை விரும்பினால்
இலகுவாக‌ எதுவேணாலும் போட்டுக்கவும்)


* * * * * *

சயின்ஸ் கருத்தும்
சாக்கடை திறப்பும்
ச‌ட்டென‌
மூக்கில் விரல் வைக்க
வைத்தாலும்

சரித்திரத்தில்
சாகா வரம் பெற்றது
சமுத்திரத்தில் கலக்காத‌
சங்கதிகள்தாம்

* * * * * *

டிஸ்கி :
பிரபலம் ஆகா வரைக்கும் நல்ல வசதிதான் ;
இப்படி ஏதாவது கிறுக்கிக் கொண்டேயிருக்கலாம் :‍-)

6 comments:

Ahamed irshad said...

கவிதை நல்லாயிருக்கு... :)

அரபுத்தமிழன் said...

இப்படி உசுப்பேத்தியே ... :-)

அன்புடன் மலிக்கா said...

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.

அரபுத்தமிழன் said...

ஹூம்,கவிதாயினியும் சர்டிபிகேட் கொடுத்தாச்சா, ரொம்ப நன்றி.

Starjan (ஸ்டார்ஜன்) said...

\\புரியாத பிரியம் ...
பிரியும் போது தான் புரியும்\\

சரியாச்சொன்னீங்க.. அசத்தல் வரிகள். அருமையான வரிகளுடன் கவிதை அழகாக இருக்கிறது.

அரபுத்தமிழன் said...

நன்றி ஸ்டார்ஜன்,
பிறரைப் பாராட்டும் மனம் நல் மனமே.
'நல்ல மனம் வாழ்க .. நாடு போற்ற வாழ்க‌'

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)