Monday, June 28, 2010

மாத்தி யோசி, நல்லவிதமாய்

திரவியம் தேடி வெளியூர் செல்லுமுன் குருவிடம் ஆசி பெறச் சென்ற
சிஷ்யனிடம், சிறிது நேரம் தோட்டத்தில் சென்று அமர்ந்து விட்டு வருமாரு
பணித்தார். சில மணி நேரம் கழித்து சிஷ்யனை அழைத்து விசாரித்தார்.

'குருவே,குறிப்பை அறிந்து கொண்டேன்; நான் பயணம் செல்ல வில்லை'.

'பொறு சிஷ்யா, அப்படி அங்கு என்னதான் கண்டாய் ? '

'கண் தெரியாத ஒரு குருட்டுப் பாம்பிற்கு உணவு கொண்டு வந்த
வண்ணமாய் இருந்த ஒரு பறவையைப் பார்த்தேன். இறைவனின்
கருணையை எண்ணி என் கண்கள் கலங்கின. பாம்பிற்கே பழம்
வார்க்கும் இறைவன் எனக்கும் வழங்காமலா போய்விடுவான்
என்ற ஞானம் கிடைத்தது,அதனால் செல்வம் சேகரிக்கச் செல்லும்
எண்ணத்தைக் கைவிட்டேன்'.

இதற்கு குரு சொன்ன பதில் ரொம்ப முக்கியமானது.

குருட்டுப் பாம்பாய் இருக்க ஏன் ஆசைப்படுகிறாய். மாத்தி யோசி நண்பா,
குருவியாக இருப்பதில் பெருமிதம் கொள். உனக்காக மட்டும் சம்பாதிக்க
எண்ணாமல் உன்னைச் சார்ந்தவர்களுக்கும், உடல் நலிவுற்றவர்களுக்கும்
சேர்த்துச் சம்பாதிக்கும் எண்ணத்துடன் செல்வாயாக ; சென்று வென்று
வருவாயாக. இறைவனருள் எப்போதும் உனக்கு உண்டு.

வியந்தவாறு நன்றி கூறி விடைபெற்றான் சிஷ்யன்.

===============================================

நம்ம மக்கள்ஸே இப்படித்தான், தனக்குத் தோதாக எதையும் எடுத்துக்
கொள்வது அல்லது தோதாக வளைத்துக் கொள்வது.

ஒரு முறை 'குடியின் கெடுதி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகக்
கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. SPIRIT அல்லது சாராயம் இருந்த
பாட்டிலுக்குள் ஒரு சில புழுக்கள் போடப்பட்டு, சில வினாடிகளில்
அப்புழுக்கள் துடிதுடித்து இறப்பதையும் காட்டப்பட்டு 'குடிப்பதால் சாவைச்
சந்திக்க நேரிடும்' என்றும் விளக்கப்பட்டது.

அப்போது கூட்டத்திலிருந்த 'குடிமகன்' ஒருவர் எழுந்து, 'ஏன் இப்படி
இருக்கக்கூடாது ? குடிப்பதால் வயிற்றினுள் தொல்லை கொடுக்கும்
புழு பூச்சிகளை அழிக்கலாமே ?

யே யப்பா என்னமா யோசிக்கிறாய்ங்க. :-)

===============================================

தத்து பித்துவம் அல்லது நகைத்துவம் ஒன்று
-----------------------------------------

"கடவுளை மற : மனிதனை நினை" என்று அன்று சொன்னவர்களுக்கு

இன்று

"தமிழை மற : தமிழனை நினை" என்று நினைவூட்டப்படுது பேஷ் பேஷ்

4 comments:

ஹுஸைனம்மா said...

ஹி.. ஹி.. லேசா அரசியல் வாடை அடிக்குதுங்களே... எந்தப் பக்கம்னு தெளிவாச் சொன்னாதானே புரியும்!!

அரபுத்தமிழன் said...

ஹா..ஹா.., சாயம் பூசுதல் சாந்தமானவர்க்கழகோ ?
'மாத்தி யோசிங்க',
அரசியல்,சினிமா,கிரிக்கெட்டுல்லாம் விட்டு ரொம்ப நாளாச்சு

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <
################

thamilan said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே
ஒரு முக்கியவேண்டுகோள்.

நாங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்
என்று கூறிக்கொண்டு இஸ்லாத்திர்க்கு எதிராக
ராஜன்+வால்பையன்
இருவரும் நம் உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸால்)
அவர்களை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள்ளால்
விமர்ச்சனம் செய்துள்ளார்கள்.

இவர்கள் நாகரிகமான முறையில் பதிவிட்டிருந்தால்
நிச்சயமாக நாம் பதில் சொல்லகடமைப்பட்டிருக்கிரோம்.

ஆர் எஸ் எஸ், பாஜக, விஸ்வஹிந்த் இவர்களைப்போன்று மகா மட்டமான
வார்த்தைகளை உபயோகித்து இருக்கிரார்கள்.

நீங்கள் உண்மையாணவர்களாக இருந்தால் இன்றுடன்
ராஜன்+வால்பையன்மற்றும் அங்கு கூடி இருந்து கும்மி அடிக்கும் அனைவர்களது வலைப்பூவையும் நிராகரியுங்கள்.

நான் கூறுவது சரியா தவரா?
பதில் கூறவும்.
வஸ்ஸலாம்.
http://allinall2010.blogspot.com/2010/07/blog-post.html

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)