ஊழலில் ஊறித் திளைத்த
உணவு அமைச்சகம்
பேன்ட்டும் லுங்கியும் சறுக்கி
விளையாடும் பலூன் மேடை
சைடு வாக்கில் சரிந்து கிடந்தால்
சாய்மான பஞ்சு மெத்தை
நோன்பு திறந்தாலே அரங்கு
நிறையும் பிர்லா கோளரங்கம்
" என்று கரையும் இந்த தொந்திரவு பாகம் "
|
முதலாளி (தொந்தி) வளர வளர
தொழிலாளி நசுக்கப்படுகிறான் :)
குழந்தைகள் கிராஸ் பண்ணும் இடம்
அருகில் இருப்பதால் இயற்கையாகவே
அமைந்து விட்ட வேகத்தடை :)
தொந்தி உடையார் பிச்சை எடுக்கார்
அப்படியே எடுத்தாலும்
எது ஒன்றும் கிடைக்கா.
பேன்ட்டுக்குள் மாட்டித் தவிக்கும் வயிற்றுக் கழலை
ஸ்கூட்டி ஓட்டுகையில் முன் பார ஜோல்னா பை
ஜிம் போனாலும் ஜம்முன்னு நிக்குது - பயிற்சிகள்
பண்ணாலும் தொப்புள் விரிய சிரிக்குது
இன்னாதாம்பா செய்றது :(
|
⬇
⬇
⬇
⬇
அடேங்கப்பா அவ்ளோ ஆர்வமா !!
|
|
நானே இப்பத்தான் ரூம் போட்டு தொந்தியைத் தடவியவாறு
என்ன எழுதலாம்னு
யோசிச்சிக்கிட்டு இருக்கிறேன். சரி வந்ததுதான் வந்துட்டீங்க, உங்களுக்காக, உங்கள் மனம்
"ஆற" ஆறு வரிகள் இப்போதைக்கு.
“ பார்த்து களையெடுக்க
சாய்த்து
உரம் கொடுக்க
தேய்த்து
கழுவியெடுக்க
மாய்த்து
உயிர் கொடுக்க
விடாது
இங்குமங்கும்
தளும்பும்
சோத்துப் பானை “
|
|
1 comments:
இப் பதிவைப் படித்தவர்கள் யாரும் தொந்தியால்
கஷ்டப்படவில்லையென நினைக்கிறேன்.
யாரும் கமெண்டவே இல்லை ! :)
Post a Comment
நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை
எனினும்
" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)