Sunday, January 09, 2011

பொங்கல் தாத்தா

ஏதாவதொரு கவிதை எழுத வேண்டுமென‌ யோசித்து,
தலையைச் சொறிந்துப் பின் யோசித்து நாம் எழுதிய‌
கவிதைகள் ஓரிரண்டு வாசிப்பில் சலிப்புத் தட்டி விடும்.

ஆனாலும் சில நேரம் தாமாகவே சிலிர்த்துக் கிளம்பிய
வரிகள் எத்தனை முறை வாசித்தாலும் இன்பம் தரும்.

அதில் ஒன்று, சென்ற முறை பதித்த பயணங்களினூடே

மற்றொன்று இதோ இன்று

சூடு தர‌/பெற வந்து சூடு பட்ட க(வி)தை
------------

குளிர் ஜுரம் போல
நடுங்கத் தொடங்கியது தேகம்

மருந்திட்ட துணையின்
கைச்சூடு இதமாய்த் தெரியவே

முழு தேகம் முச் சூடும் பெற‌
தாகிக்கத் தொடங்கியது

இன்னும் சில நேரம்
இல்லாளை அருகில்

இருக்க‌ வைத்ததில் ..

இருந்த சூட்டையும்
இழந்ததுதான் மிச்சம்

சூடோ அல்லது மூடோ
ஏன் எல்லா ஆண்களும்
டோனாராகவே இருக்கிறோம் :)


********************************

சில நேரங்களில் சில பதிவர்களின் பதிவில் பின்னூட்டம்
இடும்போது அது கவிதையாக மலர்ந்து விடும்.

சகோ சாதிகாவின் பொங்கல் பதிவில்

ஜ‌னங்க‌ளின்
மனங்களைப் புரிந்து
ஜனவரியில்
ஜனங்களின் வரியில்
எல்லோர் வீட்டிலும்
பொங்கலைப்
பொங்க வைத்த
'பொங்கல் தாத்தா'வின்
புகழ் ஓங்குமா இல்லை வீங்குமா

*************************************

ரமீஸ் பிலாலியின் பதிவுகளில்

ராஜாவை உயர்த்தி ரஹ்மானைத் தாழ்த்திய‌ பதிவில்

சினி சித்தரைத் தூக்கும் வேளையில்
மினி சித்தரைத் தாக்கலாமோ
கனி முதிர்க்கும் தருணமிது
இனி தருவார் முக்கனி விருந்து :)

---------------------------------

பாங்கு கவிதைக்கு மறுமொழி


1400 ஆண்டுகள் பின்னோக்கிய
இரவொன்றில்
காலச் சக்கரத்தை நிறுத்தி
தொழுகையில் லயித்திருந்த வேளை
செல்பேசியின் சத்தத்தில்
சக்கரம் சுழல ஆரம்பித்து
இன்றைய தேதிக்கு
அழைத்து வந்து விட்டது :)

*********************************

வாழ்க கவிதை ; வளர்க கவிஞர்கள் :)

***********************************

10 comments:

pichaikaaran said...

அட . அருமையா இருக்கே . கவிதைக்கும் அவ்வப்போது இடம் கொடுங்கள்

அரபுத்தமிழன் said...

நன்றி நண்பரே,
நன்றாயிருப்பது எதுவென்று
குறித்துச் சொன்னால் இன்னும் நலம் :)

Unknown said...

அனைத்து கவிதைகளும் நல்லா இருக்குங்க நண்பரே.. ஆக்சுவலா எனக்கு குறிப்பிட்டு எல்லாம் சொல்லத் தெரியல.. :-)

அரபுத்தமிழன் said...

அதனாலென்ன, பின்னூட்டியதே பெரிது. நன்றி பாபு.

Asiya Omar said...

ஸாதிகா பின்னூட்ட கவிதை அருமை.

அரபுத்தமிழன் said...

நன்றி சகோ ஆசியா

Ahamed irshad said...

ப‌திவு ந‌ல்லாருக்கு :)

அரபுத்தமிழன் said...

கவிதை நல்லாருக்குன்னு சொல்லாம,
பதிவு நல்லாருக்குன்னு சொன்னது மட்டுமல்ல‌
அதோடு ஒரு சிரிப்பு வேறயா .. அவ்வ்வ்வ்வ் :)

Ahamed irshad said...

ப‌திவு ந‌ல்லாருக்கு என்றால் எல்லாப் பொருளும் அட‌ங்கும் என்ப‌து அர‌புத்த‌மிழ‌ருக்கு தெரியாத‌தா?

அரபுத்தமிழன் said...

தம்பி, சீரியஸ் ?
அவ்வியிருக்கேனே, பி சிரியஸ்.
எனிவே சாரியஸ் :)

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)