Monday, January 17, 2011

ஃபோன் ரிங்ங்... டேக் குக்கி சிங் 'ஙே'....

பண்பலை Cool 94.7 ல் தினமும் காலை 8.30 மணிக்கு இந்த லொள்ளு நடக்கும்.

அலுவலகம் போகும் வழியில் வாகனத்தின் வானொலியில் கேட்கும் தொலை பேசி
கலாய்த்தல் நிகழ்ச்சி. எட்டரைக்கு முன்பே அலுவலகத்தை எட்டியிருந்தாலும்
இந் நிகழ்ச்சியைக் கேட்டு விட்டுச் சிரித்த முகமும் சீதேவித்தனமுமாகத்தான்
தினமும் அலுவலகம் செல்வது வழக்கம்.

'ஹலோ, ஈஸ் திஸ் ஃபலான் கம்பெனி, டூ யு ஹேவ் வெப்ஸைட்,
ஐ வான்ட் டு விஸிட் யுவர் வெப்ஸைட், வேர் ஈஸ் இட், இன் துபாய் ஆர் அபுதாபி?'

'ஹலோ, ஈஸ் திஸ் ஜிம் கிளாஸ், ஐ வான்ட் டு டூ ஜிம், யுவர் கம்பெனி
இன் துபாய் பட் ஐ ஆம் இன் அபுதாபி, வில் யு ஸென்ட் மீ யுவர் கார்'

'ஹலோ, ஈஸ் திஸ் டான்ஸ் கிளாஸ், ஐ வான்ட் டு லேர்ன் டான்ஸ்,
வில் யூ டீச் மி 'டூயட்'.


போன்று எதிர்முனையை 'திகிலடித்து', ஃபோன் கட் செய்யப்படும் வரை
கலாய்த்தல் தொடரும்.

இதைச் செய்பவரின் பெயர் 'பிரின்ஸ்' என்றே நினைக்கிறேன்.
ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் பேசித் திணறடித்து விடுவார்.

சட்டவிதிகள் பின்பற்றப் படும் இந்த நாட்டிலேயே இப்படிக் கலாய்க்கிறார்
என்றால் மற்ற நாடுகளிலெல்லாம் இது போன்ற நிகழ்ச்சிகளில் என்ன
பாடுபடுத்துவார்களோ தெரியாது.

ஒருநாள் இப்படித்தான், டான்ஸ் கிளாஸென்று நினைக்கிறேன், போன் பேசிய
அந்தப் பெண் கோபமாகக் கட் செய்து விட்டார். அன்று மாலை ரேடியோவை
ஆன் செய்தால் 'டொய்ங்க்' தான்.

'ஆஹா, அந்தப் பெண் தான் புகார் கொடுத்திருக்க வேண்டும். அதனால்தான்
கூல் பண்பலையைக் குலைத்து விட்டது அரசாங்கம் என்று நினைத்தேன்.

ஆனால் நான்காம் நாள் நன்றாகவே வேலை செய்தது மட்டுமல்ல அந்தப்
ப்ரோகிராமும் வழக்கம் போலவே நடந்தது. பிறகு ஏன் மூன்று நாட்களாக
எடுக்கவில்லையே. ஒருவேளை மூன்று நாட்கள் சஸ்பெண்ட் செய்து விட்டு
மீண்டும் அனுமதி கொடுத்திருப்பார்களோ. (பிறகு ஏன் தமிழ் பண்பலையான‌
'சக்தி', இழந்த சக்தியை மீண்டும் பெறவில்லை என்ற யோசனையும் எழாமல்
இல்லை). பின் விசாரித்துப் பார்த்ததில் ராஸ் அல் கைமாவின் மன்னர்
இறந்தற்கான மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு என்று தெரிந்தது.

ஒரு வழியாக எல்லாக் கம்பெனிகளையும் கலாய்த்து முடித்தாயிற்று,
இப்போ தனி நபரின் பக்கம் தாவி விட்டார்கள். யாரைக் கலாய்க்கணுமோ
அவரின் போன் நம்பரைக் கொடுத்தால் போதும். இங்கே உள்ளவர்களை
மட்டுமல்ல இப்போ கடல் கடந்தும் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

குறிப்பாக பிறந்த நாளன்று, திருமண வருட முதல் நாளன்று, நண்பர்களால், காதலர்களால்,துணைவர்களால் தொலைபேசி எண் கொடுக்கப் பட்டு 'ஷாக்'
ட்ரீட்மென்ட் செய்யப்பட்டுப் பின் 'ஹேப்பி பர்த் டேஏஏஏஏஏஎ' என்று அலறப்படும்.

ஜாக்கிரதை, அடுத்து நீங்களாகவும் இருக்கக் கூடும். அப்படி வந்தால்
டென்ஷனாகாமல் கூலாகவே பேசவும்.

If நெக்ஸ்ட் டைம் ,
'ஃபோன் ரிங்ஸ், இட் மே பி குக்கி சிங்ஙே...ஏ பல்லே பல்லே.....' :)


Flash டிஸ்கி :
யாருங்க அது கண்ணு வச்சது, தினமும் இந்த நிகழ்ச்சியை ரசிக்கிறானே என்று.
8.30 என்பதை 9 மணிக்குப் பிறகு என்று ஆக்கி விட்டார்கள் :(

டிஸ்கி 1 :
Cool 94.7க்கு ஆசியாவிலேயே சிறந்த பண்பலை என்று மசாலா.காம்
அவார்டு கொடுத்திருக்கிறார்கள் சமீபத்தில்.
டிஸ்கி 2:
நம்ம ஆசிப் அண்ணாச்சியும் ஏதோவொரு வானொலியில்
அலை பேசினாராமே, இப்பவும் தொடர்கிறதா என்று தெரிய வில்லை.

18 comments:

இனியவன் said...

அட இப்படி வேற இருக்கா ?

அரபுத்தமிழன் said...

பின்ன, அதைச் சொல்லத்தானே இந்தப் பதிவு :)
நன்றி இனியவன், ஆஹா பேரே இனிக்குது.

பார்வையாளன் said...

வித்தியாசமான தகவல்..

அடிக்கடி இது போல எழுதுங்கள்

அரபுத்தமிழன் said...

தொடர்ந்து ஊக்கப் படுத்திவரும் பார்வையாளனுக்கு நன்றிகள்.

ராம்ஜி_யாஹூ said...

nice

அரபுத்தமிழன் said...

நன்றி ராம்ஜி, என்ன ரொம்ப‌ நாளா ஆளக் காணோம்.
ஆன்மீகமும் கவிதையும் பிடிக்காதா :)

ஆமினா said...

//ஜாக்கிரதை, அடுத்து நீங்களாகவும் இருக்கக் கூடும். அப்படி வந்தால்
டென்ஷனாகாமல் கூலாகவே பேசவும்//
ஹா...ஹா..ஹா...

எச்சரிக்கைக்கு நன்றிங்க

அரபுத்தமிழன் said...

நண்பர்களுக்கு நம்பர் கொடுக்கும் போது
நன்றாக‌ யோசித்த பின் கொடுங்க சகோ.

ஸாதிகா said...

அட இப்படியெல்லாம் கூட நடகின்றதா?அது சரி உங்கள் அனுபவத்தில் இருந்தும் ஒரு பிட்டை எடுத்து விட்டு இருக்கலாமே?

அரபுத்தமிழன் said...

சேச்சே, நமக்கு அப்படி ஒண்ணு நடந்திருந்தா
சொல்லாமலா இருப்போம் சகோ.

ஹுஸைனம்மா said...

ஒருக்கா எனக்கு ஃபோன் பண்ணச் சொல்லுங்க; அப்புறமும் இந்த ப்ரொக்ராம் தொடர்ந்து நடக்குதான்னு பாக்கலாம்! :-)))))

போளூர் தயாநிதி said...

வித்தியாசமான தகவல்..

அரபுத்தமிழன் said...

அதானே நீங்க யாரு, திருநெல்வேலிக்கே 'ஹல்லோ'வா :)
சரி எதுக்கும் ட்ரை பண்ணிப் பாக்கலாமே, உங்க நம்பரக் கொடுங்க :)

அரபுத்தமிழன் said...

நன்றி தயாநிதி.
இதாவது பரவால்லண்ணே முகம் தெரியாத நோஸ் கட்,
கேன்டிட் கேமரான்னு அமெரிக்காவுல டீவிக்காகப் பண்ணுற ரவுசு இருக்கே, பாவம் மாட்டினவங்க, இருந்தாலும் கடைசியில் சிரித்து சமாளித்து விடுவார்கள்.

ஆயிஷா said...

வித்தியாசமான தகவல்.

sakthistudycentre-கருன் said...

First visit,
super,
நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள்,

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே...
இனி தினமும் வருவேன்.

அரபுத்தமிழன் said...

நன்றி ஆயிஷா,
பின் தொடர்தலுக்கும் பின்னூட்டத்திற்கும்.
(ஆயிஷா அபுல் என்பதும்தான் நீங்கள்தானோ ?)

அரபுத்தமிழன் said...

Thanks and Warm Welcome to you dear Karun.
சைக்கிளில் வந்தாலும் சக்திக்கான பூஸ்ட் கொடுத்தீர் நண்பரே :)

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)