Sunday, December 12, 2010

பய‌ணத்தினூடே ...

பயணக் களைப்பு மறந்து
விமானத்தின் ஏற்றத்தையும்
இறக்கத்தையும் வியந்து
பார்க்கும் பயணிகள்.

விமானம் நிலைக்கு வந்தவுடன்
பசி ஆற்றக் காத்திருக்கும்
தாக 'சாந்தி'கள்.

கூடவே

விமான சத்தத்திலும் தம்
குஞ்சுகளின் பசிச்சத்தம்
மறவாமல் பசி தீர்க்க
போட்டி போட்டு
ஏறி இறங்கும்
பாவப்பட்ட பறவைகள்

17 comments:

pichaikaaran said...

பத்து பக்க கட்டுரை சொல்வதை விட ஒரு நாலு வரி கவிதை சொல்லி விடும்..

அடிக்கடி எழுதுங்கள்

அரபுத்தமிழன் said...

//பத்து பக்க கட்டுரை சொல்வதை விட ஒரு நாலு வரி கவிதை சொல்லி விடும்//
இதனால்தான் கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது.
நன்றி நண்பரே.

எம் அப்துல் காதர் said...

ஆஹா அருமையா இருக்கு. வாழ்த்துகள்!! பயணமா??

அரபுத்தமிழன் said...

நன்றி அ.கா.
பயணமா ! சிறு பயணம் சென்னை வரை போய் வந்தாச்சு .
தட்டியது தேவதையா அல்லது பேயா,
பதில் சீக்கிரம்

ஆமினா said...

சூப்பரா இருக்கு!!!

வாழ்த்துக்கள்

அரபுத்தமிழன் said...

வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரி

Ahamed irshad said...

ப்ச் அருமையான‌ வ‌ரிக‌ள்..

அரபுத்தமிழன் said...

நன்றி அருமை இர்ஷாத்

ஸாதிகா said...

"நச்"என்று ஒரு கவிதை.

அரபுத்தமிழன் said...

'நச்'சென்று 'மெச்'சியதற்கு நன்றி சகோதரி

அரபுத்தமிழன் said...

எழுத விஷயங்கள் இருந்தும் முன்பு போல் சமயம் கிட்டுவதில்லை,
அடுத்த மாதமும் பிஸிதானென்று நினைக்கிறேன். இருந்தாலும் 'கனவுகள்'
பற்றி 2 அல்லது 3 பதிவுகள் அடுத்த மாதமாவது எழுதிவிட கனவு காண்கிறேன். :-)

எஸ்.கே said...

பயணம்- வாழ்க்கை பயணம்!
அருமை!

அரபுத்தமிழன் said...

அன்பின் எஸ்.கே,
தங்களின் வாழ்க்கைப் பயணம்
நோய் நொடியின்றி நலமாக அமைய‌
பிரார்த்திக்கிறேன். வருகைக்கு நன்றி.

Unknown said...

உங்க தளத்திற்கு முதன்முறையா வந்து படிக்கிறேன்.. நன்றாக எழுதியிருக்கீங்க கவிதை.. வாழ்த்துக்கள்..

அரபுத்தமிழன் said...

பயணத்தினூடே எம் இல்லம் வந்து
வாழ்த்தியமைக்கு நன்றி பாபு.

Learn said...

அருமையான வரிகள் அனைத்தும்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

அரபுத்தமிழன் said...

நன்றி தமிழ்த்தோட்டம்,
ம்... தமிழ்த்தோட்டம், பெயரில்தான் எத்தனை அழகு.

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)