எனத் தெரிந்ததால்..
வியாபாரம் செய்யலாம் என இருக்கிறேன்
ஒரு நல்ல பிசினெஸ் ஐடியா கொடு என
நண்பனிடம் விசாரித்தேன்
வியாபாரம் எதுவாய் இருந்தாலும்
விற்பனைப் பொருள் கடையை விட்டு
உடனுக்குடன் காலியாகும்
பொருளைத் தேர்ந்தெடு என்றான்
மனைவியிடம் கேட்டதில்
ஜவுளிக்கடை என்றாள்
நல்லவேளை நகைக்கடை
ஞாபகம் வரவில்லை
குழந்தைகளிடம் விசாரித்தேன்
புத்தகக் கடை,ஸ்டேஷனரி,டாய்ஸ் கடை
என்று ஆவலாய் அடுக்கினார்கள்
எனக்குப் பிடித்ததோ
வாசனைத்திரவியம்
எல்லோருமே அவரவர்க்குப்
பிடித்ததைத்தான் பகிர்ந்தோமே
ஒழிய ஒருவரும்
கஸ்டமருக்குப் பிடிப்பதைப் பற்றி
யோசிக்கவில்லை
ஏது, எங்களின் ஆர்வத்தைப் பார்த்தால்
விற்பனைப் பொருள் ..
கடைக்கு வரும் முன்பே
காலியாகி விடும் போல் தெரிகிறதே :)
:)
6 comments:
வெல்கம் பேக்வெல்கம் பேக்
தேங்க்யூ .. தேங்க்யூ
பேசாம, ‘என்ன பிஸினஸ் தொடங்கலாம்’னு ஆலோசனை சொல்ற கன்ஸல்டன்ஸி தொடங்குங்களேன்!! ஃபீஸும் வாங்கிக்கலாம்; விற்பனைப் பொருளையும்.... :-))))))))
ஹுசைனம்மாவிடம் கேட்டபின்
அசைன்மென்ட் தெளிவாகிப் போனது
விற்பனைப் பொருளுக்குப் பதிலாக
கற்பனைப் பொருளே கடைக்கு உதவும் என்று ....
அப்டீன்னு கவிதையில் சேர்த்துவிடவா
உங்களையும் கோர்த்து விடவா யா ஹூசைனம்மா :)))
நன்றி கருத்திற்கும் கன்ஸல்டிங்கிற்கும் :)
ஆஹா, என் ஐடியா பிக்கப் ஆகிடுச்சா? அட, அப்ப நானே கன்ஸல்டிங் தொடங்கிடலாம்போலயே?
ஆங், பேச்சு சுவாரஸ்யத்துல, உங்களுக்குக் கொடுத்த ஐடியாவுக்கான ஃபீஸை மறந்துடாதீங்க பாய்!! ஒன்லி கேஷ்; ஸ்ட்ரிக்ட்லி நோ செக், டிடி, க்ரெடிட் கார்ட்!!
பாப்போம், முத போணியோட ராசி எப்படின்னு!! :-))))))))))))
நானு முதல் போணியா ? !!
அப்ப ஒரு அக்ரிமென்ட் போட்டுருவோம்
நீங்க கன்ஸல்டன்ட், நானு கான்ட்ராக்டரு எப்பூடி :)
பிசினெஸ் உருப்படுதோ இல்லியோ
கஸ்டமருக்குத்தான் கஸ்டம்.
சரி இப்போதைக்கு செக் ஒன்னு ஃபேக்ஸ் பண்ணியிருக்கேன்.
எடுத்துக்கோங்க. :)
Post a Comment
நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை
எனினும்
" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)