பதிவெழுதவில்லை
பதிவெழுதாததால்
நிம்மதியாயிருந்தேன் !
என்ன உலகமடா இது
குளித்ததால் தலை ஈரமாய் இருந்தது
ஈரத்தின் காரணத்தால்
தலைக்கு எண்ணெய் இடாமல்
ஆஃபீஸ் சென்றேன்.
ஏன் இன்னைக்குக் குளிக்கலயா என்கிறார்கள்.
குளிக்காத அன்று எண்ணெய்
இட்டுச் செல்கிறேன். கேட்கிறார்கள்
என்ன இன்று ஃபிரஷ்ஷா இருக்கீங்க !
பதிவெழுதல்,பதிவுலக பவனி
என்றிருக்கும் போது
எப்பப்பாரு பிஸி என்பவர்கள்
பதிவுப்பக்கம் போகாமல்
அவர்களின் பேச்சுக்களில்
கலந்து கொண்டால்
என்ன வேலை வெட்டி
ஏதுமில்லையா என்கிறார்கள் !
வேலை பென்டிங் வைத்தாலும் திட்டு
வேலையத்தனையும் முடித்து வைத்தாலும் குட்டு
அடுத்தவேலை என்ன கொடுக்கலாம் என்று
ஆராய்ந்து திரியும் மேலாளன், அவன்
ராஜினாமா செய்தாலும் கொண்டாட முடியவில்லை
அடுத்து வருபவன் அதை விட மோசம் !
இந்தப் புரம் வந்தால் இவளது தொல்லை
நானே முடிவெடுத்தால்
அதிகாரம், அடிமை வாழ்க்கை என
போர்ப்பறையறிவிப்பு
சரி உன்னிஷ்டம் என்று விட்டு விட்டால்
உங்களுக்கு எதிலும்
முடிவெடுக்கத் திராணியில்லையென்ற
கேலி,கொக்கரிப்பு !
சே ஒரே வெறுப்பாய் இருக்கிறது
பதிவுலகுக்கு மீண்டும்
லீவு கொடுத்து விட வேண்டியதுதான் :)))
டிஸ்கி : எழுதாமல் இருப்பதற்காக என்னென்னவெல்லாம் எழுத வேண்டியிருக்கிறது :)
15 comments:
என்ன சொல்ல வர்றீங்க.... பதிவு எழுதுங்க அது நம்மையும் சமூகத்தையும் வளர்க்கும்... வாழ்த்துக்கள்
முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி திரு.சரவணன்.
//என்ன சொல்ல வர்றீங்க...//
எதைச் சொல்வது எப்படிச் சொல்வது
ப்ளோக் பக்கம் வரவே போரடிக்கிறதென்பதா இல்லை
நேரம் கிடைக்க வில்லையென்பதா ?
நம்மைப் புரிந்து கொள்ளாதவர் மத்தியில்தாம்
நாம் வாழ்கிறோம் என்பதா
விதியென்பதா சதியென்பதா
மொத்தத்தில்
நம் சதுரம் வாழ்வது ஒரு வட்டத்தில்தான் :)
உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.
வாவ் வெல்கம் பேக்
உங்களை போன்ற நல்லிதயம் படைத்தவர்கள் எழுதியே ஆக வேண்டும் என்பது என் கருத்து
என்ன ஆச்சு அரபு தமிழன்! ரொம்பவும் விரக்தியாக பதிவு இருக்கிறது!
//பதிவுலகுக்கு மீண்டும்
லீவு கொடுத்து விட வேண்டியதுதான் //
நல்லவேளை!! நல்ல முடிவு, வாழ்த்துகிறேன்!! :-)))))
//பதிவெழுதாததால்
நிம்மதியாயிருக்கிறேன்//
இப்படிச் சொல்லிட்டு, புலம்பித் தள்ளிருக்கீங்க?? உங்க வீட்டம்மா சொல்றதுல தப்பேயில்லை!! ;-))))))))
தொடர்பதிவா..ஆ..வ்.. சகோ சாதிகா,
எம்பதிவே எழுத மனசில்ல, இதுல ஊர்ப் பதிவு வேறயா :(
பார்க்கலாம், இறைவன் நாட்டம் எப்படியோ
பாராட்டுக்கு நன்றி தோழா நன்றி.
இறைவா, நல்லிதயம் கொண்டவனாக என்னை
ஆக்கியருள் புரிவாய் ரஹ்மானே, ஆமீன்.
சகோ சுவனப்ரியன்,
முன்பு போல் பதிவெழுதும் சூழல் அலுவலகத்தில் இல்லை இப்போது.
வீட்டிலோ எப்போதும் இருந்தது கிடையாது :)
வாங்க புரட்சித்தலைவி,
பெண்ணீயப் பதிவராயிற்றே, அந்தப் பக்கம்தான் சேருவீங்க :)
//இப்படிச் சொல்லிட்டு, புலம்பித் தள்ளிருக்கீங்க//
புலம்பியது 'வெறுப்பை'க் காட்டவல்ல, மாறாக
என் பதிவுலக 'இருப்பை'க் காட்டுவதற்கு :)
சரி போனாப் போவுதுன்னு முதல் பாராவைக் கொஞ்சம் மாற்றி விட்டேன்.
ஒண்ணுமே புரியலே இந்த உலகத்திலே....
சோர்வு வேண்டாம்.தொடர்ந்து எழுதுங்கள் தோழா!
சகோ சந்ரு,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
நீண்ட நாளைக்குப் பின் வருகை தந்து பதில் தந்தமைக்கு
SORRY சமர்ப்பிக்கிறேன் :)
நன்றி நூருல் அமீன் நானா,
அலுவலக சூழல் சரியில்லாததால் எழுத முடியவில்லை.
அப்படியே எழுத நினைத்தாலும் ரமலானுக்கு மீண்டும்
லீவு விட வேண்டியிருப்பதால் அப்படியே இருந்து விட்டு
ரமலானுக்குப் பின் வந்து ரவுண்டு கட்டி அடிக்கலாம் :)
என்றிருக்கிறேன் இன்ஷா அல்லாஹ்.
Post a Comment
நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை
எனினும்
" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)