ப்ளாக் எழுதுவதாயிருந்தாலும் சரி சினிமா எடுப்பதாயிருந்தாலும் சரி
அல்லது பேசுவதாயிருந்தாலும் சரி என்னுடைய இந்த எழுத்தால், பேச்சால்,
படைப்பால் ஏற்படும் விளைவுகள் என்ன, ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்று
அறிந்து செய்வது நமக்கும் நல்லது நாம் சார்ந்த சமூகத்திற்கும் நல்லது.
நடப்பதை அல்லது நடந்தைத்தான் கூறுகின்றோம் என்றுதான் பறையறிவிக்கும்
பத்திரிக்கைகளும், நடுநிசி நாய்களும் மக்கள் மத்தியில் உலா வருகின்றன.
இன்னா நாற்பது,இனியவை நாற்பது போன்ற 'Do's and 'Dont's சொல்லப்பட்டது
ஒரு ஒழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்கிக் கட்டிக் காப்பதற்குத்தான்.
அடுத்தவனைப் பார்த்து நாம் மாறுவதை விட நம்மைப் பார்த்து அடுத்தவன்
மாறும் அளவுக்கு நாம் ஒரு மாடலாக முன் மாதிரியாக இருக்க வேண்டும்.
நம்மிலிருந்து என்ன வெளிப்படுமோ அதை வைத்துத்தான் கணிக்கப் படுகிறோம்.
இனி அந்த டைரக்டரைப் பார்க்கும் போதெல்லாம் நாய்கள் நினைவுக்கு வரும்.
நண்டு கொழுத்தால் வலையில் தங்காது என்று சொல்லப் படுவதுண்டு. அப்படித்தான்
இருக்கிறது கலையும் வலையும். நாளாக ஆக ஆத்ம நண்டு கொழுத்து திமிறவாரம்பிக்கிறது.
சினிமாவில் கவர்ச்சி,ஆபாசம்,குத்துப் பாட்டு மற்றும் சண்டை இருந்தால்தான் ஓடுகின்றன.
அதுபோல் பதிவுலகிலும் இவை கொண்ட பதிவுகள்தாம் பிரபலமாகின்றன். நாம் அல்லது
நம் படைப்புகள் பிரபலம் ஆக வேண்டும் என்ற நோக்கமிருந்தால் இந்தச் சகதியில் நாமும்
அகப்பட்டு விடுவோம். நம்முடைய நோக்கம் சமூகத்திற்கான சேவை என்றிருந்தால்
பிரபலம், ஓட்டு, ஹிட்ஸ் பற்றிக் கவலைப் படாமல் 'என் கடன் பணி செய்து கிடப்பதே'
என்று தொய்வில்லாமல் தொடரும். இறுதியில் 'வாய்மையே வெல்லும்'.
அழகாகச் சொன்னார்கள் எம்பெருமானார்(ஸல்) அவர்கள்.
'நீ நல்லதிற்குச் சாவியாகவும் தீயதிற்குப் பூட்டாகவும் இரு' என்று.
நம்மிடத்தில் மின்னஞ்சலாய் வந்து சேரும் பெண் ஏஞ்சல்களின் படம் கண்டு ரசித்தோமோ
இல்லை ஏங்கிப் புசித்தோமோ இல்லை தலை கவிழ்த்துத் தவிர்த்தோமோ, உடனே தடைப்
பூட்டு போட வேண்டும் அரிதிற் கடத்தியாய், யாருக்கும் ஃபார்வர்டு செய்யாமலே.
அன்பு,ஆரோக்கியம்,சமூகம்,ஒற்றுமை,பாதுகாப்புச் செய்திகளை உடனுக்குடன்
பரவலாக்க வேண்டும் எளிதில் கடத்தியாய்.
ஈக்கள் எல்லாவற்றிலும் அமர்கின்றன. மணமோ பிணமோ சாக்கடையோ
எதுவும் பார்ப்பதில்லை. அவற்றிலிருந்து நோய்கள்தாம் பரவுகின்றன.மாறாக
தேனீக்கள், மலர்களோடு பாசம் உயர் மலைகளிலும் மரங்களிலும் வாசம்.
நமக்குத் தருகின்றன தேனென்னும் நோய் நிவாரண ரசம்.
நீங்கள் தேனீயாக வாழ விருப்பமா அல்லது ஈயாக நாற விருப்பமா.
தேனீயாக வாழ விரும்பினால் தீன்(நல்)வழி தேர்ந்தெடுங்கள்.
தீமைகளோடு புழங்காதீர். அவற்றின் ஆரம்பம் கவர்ச்சி முடிவு இழிவும் அழிவும்.
நன்மைகளை விரும்புங்கள், அவற்றின் ஆரம்பம் கொஞ்சம் சிரமம், ஆனால்
முடிவோ நிம்மதி,வெற்றி,சந்தோஷம்,ஆரோக்யம்,etc.,etc.
டிஸ்கி :
புத்திமதி உங்களுக்கென்று நினைக்க வேண்டாம். நான் எழுதுவதை
அதிகம் பார்வையிடும் என்னை முன்னிருத்திச் சொல்லப் பட்டது.
வஸ்ஸலாம்.
23 comments:
பயனுள்ள பத்திமதிகள்...
நன்றி கருன் சார்.
நன்றி நண்பரே தேவையான பதிவு
நல்ல கருத்து.
இங்கு முதல் முறையாக கருத்துத் தர விழைந்திருக்கும் சகாக்கள்
நந்தா ஆண்டாள் மகன்,கலா நேசன் இருவரையும் நன்றியுடன்
வரவேற்கிறேன்.
//நம்மிலிருந்து என்ன வெளிப்படுமோ அதை வைத்துத்தான் கணிக்கப் படுகிறோம்.//
சரியாக சொன்னீர்கள் மக்கா...
மக்கா, உங்க பேரைப் பார்த்ததும் 'நெஞ்சில் நஞ்சிலா நாஞ்சிலார்'னு
கலைஞர் மறைந்த திரு நாஞ்சில் மனோகரனைப் பார்த்துச் சொன்னது
ஞாபகத்திற்கு வருகிறது. பதிவர்களின் பதிவை வைத்துத்தானே
தமாஷு பார்ட் 5 வரை வந்திருக்கிறது.
தங்களின் கணிப்பு சூப்பர், நன்றாகச் சிரிக்க வைத்தது. ஆனால் பின்னூட்டம்
இட பயம், காரணம் நம்மளையும் சிக்க வைத்து விடுவீர்களோவென :))
'நீ நல்லதிற்குச் சாவியாகவும் தீயதிற்குப் பூட்டாகவும் இரு' "
when I read this, I could not move further... the beauty and meaning made me silent for some time...
then I read fully..
useful article...
Thank you Brother thank you.
Rasoolullah(sal) left us with a sea of knowledge.
(but we are in the shore still)
அடுத்தவனைப் பார்த்து நாம் மாறுவதை விட நம்மைப் பார்த்து அடுத்தவன்
மாறும் அளவுக்கு நாம் ஒரு மாடலாக முன் மாதிரியாக இருக்க வேண்டும்.
பொன் எழுத்துக்களால் எழுத வேண்டிய வார்த்தை.
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்!
சகோ, தங்களின் பொன்னான பாராட்டுதலை நன்றியுடன் பெற்றுக் கொள்கிறேன்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
நல்ல கருத்துகள்.
//புத்திமதி உங்களுக்கென்று நினைக்க வேண்டாம். நான் எழுதுவதை அதிகம் பார்வையிடும் என்னை முன்னிருத்திச் சொல்லப் பட்டது//
"Be Careful!!"
”ஏஏஏஏய்ய்ய்ய்”
“நான் என்னைச் சொன்னேன்”
இதான் ஞாபகம் வருது. அடி பலமோ? தனக்குத் தானே அட்வைஸ் பதிவெழுதும் நிலை வருமளவு!!
;-)))))))))))))
//அடி பலமோ // சேச்சே, அப்படில்லாம் இல்லை, புத்திமதின்னா யாருக்குத்தான் பிடிக்குது. என்ன இருந்தாலும் நாம் என்ன எழுதுகிறோமோ
அதை அதிகமாகப் படிப்பதும் நாம்தாம். சரியாகப் புரிந்து உள்வாங்கிக்
கொள்வதும் நாம்தாம் சரியா.
நல்ல கருத்துகள்.
இர்ஷாத், எங்கே ரொம்ப நாளா ஆளைக் காணோம்.
இப்ப எங்க இருக்கீங்க ?
/புத்திமதி உங்களுக்கென்று நினைக்க வேண்டாம். நான் எழுதுவதை
அதிகம் பார்வையிடும் என்னை முன்னிருத்திச் சொல்லப் பட்டது./
அறிவுரை நல்லாருக்கே... என்னது எங்களுக்கில்லையா...அப்ப சரி...;)
(just kidding...)
:)) பேருக்கேத்த குறும்பு, நன்றி சகோ
அருமையான கருத்துகள்.
நன்றி சகோ
சிறந்த பதிவு நண்பரே! இது போன்ற படங்களை முதலிலேயே அரசே தடை செய்து விட்டால் புண்ணியமாக இருக்கும்.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ சுவனப்ரியன்
ம்ம்ம்... நல்ல விசயங்கள்..
நல்ல விஷயங்களை இனங்காணும் நல்லுள்ளங்களுக்கு நன்றி
Post a Comment
நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை
எனினும்
" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)