Monday, February 21, 2011

சாம்பல் பூத்த சன்மார்க்கச் சாதிகள்

இஸ்லாத்தில் சாதிகள் கிடையாது ஆனால் முஸ்லிம்களிடத்தில் வந்து
தொலைந்து விட்டன‌. நல்ல வேளை எல்லாமே கொள்கை சம்பந்தமான
பிரிவுகளே தவிர பிறப்பின் அடிப்படையில் அவை அமையவில்லை.

முஸ்லிம்களில் உள்ள பெரிய பிரிவுகளை மட்டும் கீழே உள்ள‌ படத்தில்
குறிப்பிட்டுள்ளேன். அதற்குள் இருக்கும் உட்பிரிவுகளைச் சொல்ல வில்லை.
அதிலும் குறிப்பாகத் தமிழ் நாட்டில் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட மற்றும்
தொழில் மூலம் உருவான‌ லெப்பை,மரைக்காயர்,மாலுமியர்,ராவுத்தர்,மோதினார்
போன்றவைகளும் மொழி அடிப்படையில் உருவான‌ உர்து முஸ்லிம் தமிழ் முஸ்லிம்
போன்ற பிரிவுகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக‌ மறைந்து கொண்டிருக்கின்றன.


இஸ்லாமிய உலகில் இப்பொழுது எஞ்சியிருப்பது,ஒன்றுக்கொன்று சேராது முரண் பிடித்து
முட்டிக் கொண்டிருப்பவை இந் நான்கு பெரும் பிரிவுகள்தாம். சாதிகள் என்ற பிரிவில்
இவைகளைச் சேர்க்க முடியாது. ஏனென்றால் எந்த நேரத்திலும் யாரும் எப்பிரிவிலும்
மாற முடியும். ஆனால் சாதி என்பது அப்படியல்ல, அது கடைசி வரை சாகடிக்கும் தீ.மஹ்தி மற்றும் தஜ்ஜால்(Anti Christ) வருகைக்குப் பின் ...

மேற்கண்ட எல்லோரும் ஓரணியில், இன்ஷா அல்லாஹ்

*

*

*

ஈஸா (Jesus அலை) வருகைக்குப் பின் .........

மனித குலம் அனைத்தும் ஓரணியில் :-)

Wassalam

16 comments:

வேடந்தாங்கல் - கருன் said...

அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்....

அரபுத்தமிழன் said...

கருன் சாரின் கருணைக்கு நிறைவான நன்றிகள்

அரபுத்தமிழன் said...

சாதிகள் மங்கலாகி வருகின்றன என்பதைத் தெரிவிக்கும்
படம் மங்கலா இருப்பதற்கு மன்னிக்கவும் மக்களே

அரபுத்தமிழன் said...

அடடே, டபுள் கிளிக் பண்ணிப் பாத்தா நல்லா கிளீனா தெரியுதே.

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...! அழகிய படத்துடன் நல்ல பதிவு சகோ. படமே விளக்கம் சொன்னாலும் எழுத்துக்களிலும் கூடுதல் விளக்கம் சேர்த்திருக்கலாமோ? Zoom ல் பார்த்தால் படம் ரொம்ப க்ளியரா இருக்கிறது சகோ.

அரபுத்தமிழன் said...

வ அலைக்குமுஸ்ஸலாம் மற்றும் நன்றிகள் சகோ.
விளக்கமாக எழுதுவதற்கு நேரம் இல்லை மட்டுமல்ல‌
மக்கள்ஸ் முழுசும் படிப்பார்களா என்ற டவுட்டும் கூட.

ஹுஸைனம்மா said...

நல்ல விளக்கம்.
//பிரிவுகளே தவிர பிறப்பின் அடிப்படையில் அவை அமையவில்லை//
இல்லைதான், ஆனாலும், மரைக்காயர் தந்தைக்குப் பிறந்தவர் மரைக்காயர்தானே.

//எந்த நேரத்திலும் யாரும் எப்பிரிவிலும்
மாற முடியும்// எப்படி?

அரபுத்தமிழன் said...

//மரைக்காயர் தந்தைக்குப் பிறந்தவர் மரைக்காயர்தானே//
அப்படிச் சொல்ல முடியாது. எங்களூரில் இருந்த மரைக்கல ராயர்கள் இப்போது அரசாங்கப் புத்தகத்தில் 'லெப்பைகள்'. எங்கள் பக்கத்து ஊரிலிருந்து எங்களூர் குடியேறிய லெப்பைகள் இப்போது மரைக்காயர்கள் :).

இதெல்லாம் சும்மா கூப்பிடத்தான் மற்றபடி திருமணங்கள் ஷாஃபி,ஹனஃபி,மரைக்காயர்,ராவுத்தர்,
லெப்பைகளுக்குள் நடக்கத்தான்
செய்கின்றன.

அரபுத்தமிழன் said...

//(எந்த நேரத்திலும் யாரும் எப்பிரிவிலும்
மாற முடியும்) எப்படி? //

ஆமாம், இன்றே தரீக்கா வாதி தவ்ஹீது வாதியாக மாறலாம். :) ஷியா சன்னியாக மாறலாம். சாதி போலக் கிடையாதே.
அதற்காகத்தான் அவைகளைப் 'பிரிவு' என்றே சொல்கிறேன்.

ஸாதிகா said...

//லெப்பை,மரைக்காயர்,மாலுமியர்,ராவுத்தர்,மோதினார் போன்றவைகளும் // நல்ல பதிவு.மேற்கூறிய பெயர்கள் அவரவர்கள் செய்து வந்த தொழிலை குறித்து வந்த பெயர்களைத்தவிர மற்ற எந்த வித காரணமும் இல்லை.லெப்பை,மோதினார் என்பது அவர்கள் வகித்து வந்த பதவி.மரைகாயர் என்றால் மரக்கலம்(கப்பல்) தொழிலில் ஈடு பட்ட பரம்பரை.அன்று சரி,இன்றும் சரி,மரைக்காயரும்,மோதினாரும்,ராவுத்தரும்,மாலூமிகளும் ஓவோருக்கொருவர் சம்பந்தம் புரிவதிலும்,உறபுகள் வளர்த்துக்கொள்வதிலும்,உறவுகளாக இருப்பதிலும் பின் வாங்கியதில்லை.

அரபுத்தமிழன் said...

கரெக்ட், தொழில்முறையைச் சேர்த்திருக்க வேண்டும், செய்து விட்டேன். நன்றி சகோ நட்சத்திரம்.

ஹுஸைனம்மா said...

//கரெக்ட், தொழில்முறையைச் சேர்த்திருக்க வேண்டும்//

இந்துத்துவத்திலும் சாதிகள், செய்யும் தொழிலை அடைப்படையாகக் கொண்டு தொடங்கியவைதானே?

இஸ்லாமியர்கள் //சம்பந்தம் புரிவதிலும்,உறபுகள் வளர்த்துக்கொள்வதிலும்,உறவுகளாக இருப்பதிலும் பின் வாங்கியதில்லை// உண்மைதான். அது ஒன்றுதான் ஆறுதல். ஆனால், தொழிசார் சாதிகளில் வித்தியாசம் காணா முஸ்லிம்கள், கொள்கைசார் பிரிவுகளினால் பிளவுபட்டு நிற்கின்றனர். வருத்தமானது!!

இன்ஷா அல்லாஹ், அனைவரும் ஓரணியில் வரவேண்டும்.

அரபுத்தமிழன் said...

//இந்துக்களில்,செய்யும் தொழிலை அடைப்படையாகக் கொண்டு தொடங்கியவை//

அந்தச் சூழலில் வாழ்ந்ததால்தான் முஸ்லிம்களிடேயும் தொழில் சார்ந்த சாதி போல மாறியது.

அரபுத்தமிழன் said...

//இன்ஷா அல்லாஹ், அனைவரும் ஓரணியில் வரவேண்டும்.//
சாத்தியமானதுதான், ஆனால் அது நான் குறிப்பிட்டதுள்ளது போல
தஜ்ஜாலின் வருகையின் போதுதான் :(

enrenrum16 said...

ஒரே இறைவன், ஒரே வேதம்,ஒரே வழிபாடு என எத்தனை பெருமைப்பட்டுக்கொண்டாலும் நாம் இத்தனை பிரிவுகளாக பிரிந்து கிடப்பது வருத்தத்திற்குரியதுதான்.. ஒரே இறைவன், ஒரே வேதம்,ஒரே வழிபாடு என எத்தனை பெருமைப்பட்டுக்கொண்டாலும் நாம் இத்தனை பிரிவுகளாக பிரிந்து கிடப்பது வருத்தத்திற்குரியதுதான்.. இதன் எண்ணிக்கை குறையவில்லை என்றாலும் அதிகரிக்காமலாவது இருக்க வேண்டும் :(

அரபுத்தமிழன் said...

என்ன சகோ டபுளா கவலப்பட்ட மாதிரி தெரியுது :)
(எக்கோ டைப்(பிங்) பின்னூட்டத்தைச் சொன்னேன்)

ஒரே தந்தை ஒரே தாய் கொண்ட குடும்பத்தில் பிளவுகள்
இல்லையா என்ன, அது போலத்தான். டோன்ட் வொர்ரி,
எல்லாம் சரியாகி விடும். ஆனாலும் அதற்குள் எத்தனைக்
குழப்பங்களைத்தாங்க வேண்டி வருமோ தெரியவில்லை.

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)