Tuesday, February 08, 2011

புதிய மனிதா ... ப்ளோகுக்கு வா

டீன் ஏஜ் ஜாக்கிரதைங்கற தலைப்பில் சக பதிவர் இந்திரா சில தினங்களுக்கு முன்
இன்றைய இளம் வயதினரைப் பற்றியக் கவலையான விஷயங்களை எழுதியிருந்தார்.

அதைப் படித்தவுடன் தோன்றிய தீர்வை அங்கேயே பின்னூட்டியிருந்தேன். அதனுடைய
தொடர்ச்சியான‌ சிந்தனையாக இங்கே கொஞ்சம் வார்த்தைகளினால் ஆன‌ நீள் பதிவு இது.

இன்றைய இளைய சமுதாயம் கெட்டுப் போவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகம்.
நெட்,ஃபேஸ்புக்,சாட்டிங்,பலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்று
இளமையைத் தின்னக்கூடிய காரணிகள் ஏராளமாகவும் சுலபமாகவும் கிடைக்கும்
இந்த நேரத்தில் இந்த வயதின் ஆர்வக்கோளாறுகளை அறிவுரை சொல்லித் திருத்துவது
கொஞ்சம் சிரமம்தான்.

நாம் சொல்லும் அறிவுரை செயல்பட வேண்டுமென்றால் அவர்களின் ஆசை,
திறமை,இளமை சரியான இலக்கில் திருப்பி விடப்பட வேண்டும். அதுவும்
அவர்களின் விருப்பத்தோடு. இதற்கு நான் சொன்ன தீர்வு,

(அவர்களை எப்படியும் கணிணியை விட்டோ அல்லது இணையத்தை விட்டோ
திருப்ப இயலாது. ஆகையால்) அவர்களை ப்ளாக்கர்களாக மாற்றுங்கள் :).

அடுத்த பதிவுக்கு என்னடா செய்யலாம், எங்கேர்ந்து தேத்தலாம் என்ற சிந்தனையில்
நாலு பதிவுகளை படிக்க நேரிடும். புதிய பதிவர்களுக்கான‌ போட்டிகள் அவ்வப்போது
திரட்டிகளால் நடத்தப் பட வேண்டும்.

Idle mind is devil's workshop.

எனவே சும்மாயிருக்காமல் நல்ல விஷயங்களில் பிசியா இருக்கணும்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_________________________**********______________________


'ஆற்றலை அழிக்க முடியாது ஆனால் வேறெரு ஆற்றலாக மாற்றலாம்'.

'செய்ய வேண்டியதைச் செய்யலன்னா செய்யக் கூடாததையெல்லாம் செய்ய
வேண்டி வரும்' ; எங்கே செலவழிக்கணுமோ அங்கே செலவழிக்கன்னா
செலவழிக்கக் கூடாத இடங்களிலெல்லாம் செலவழிக்க வேண்டி வரும்'.

_________________________**********______________________


ஆதலினால் ஒரு பழக்கத்தைத் தவிர்க்க வேறு ஒரு நல்ல மாற்றுப் பழக்கத்தைத்
தேர்ந்தெடுங்கள். மிகச்சிறந்த மாற்றைக் கண்டு பிடியுங்கள் அது கிடைக்காத
பட்சத்தில் அதை விடக் குறைவான ஆபத்தைத் தேர்ந்தெடுங்கள்.

சிகரெட்டுக்கு மாற்று சுவிங்கமா,வெற்றிலையா இல்லை வேறேதுமா ?

குடிப்பழக்கத்திற்கு மாற்று கோக்கா,தேநீர் காப்பியா இல்லை வேறேதுமா ?

விபசாரம்,சுய இன்பத்திற்கு மாற்று நிச்சயம் திருமணம்தான்.

திருமணத்தைக் கஷ்டமாக்கி வைத்திருப்பதால்தான் விபசாரம் மலிவாகிப் போனது.
அதிலும் விபசாரத் தொழில் செய்பவர்கள் 'ரெண்டு ஜான் வயித்துக்காக‌,
பெத்த பிள்ளைக்காக, ஆதரவற்ற நிலைமைக்காக' என்று சொல்லி அனுதாபம்
தேடிப் பெற்று இழிநிலை என்று தெரிந்தும் அதனைத் தொடர்கிறார்கள். இதையே
திருடனும் கொள்ளையடிப்பவனும் இன்னும் எல்லாத் தவறுகள் செய்பவர்களும்
தன்னை நியாயப்படுத்திக் கொண்டால் என்ன செய்வது.

_________________________**********______________________


எது எப்படியோ, மனிதனைப் பற்றிய முழுமையான அறிவு அவனைப்
படைத்தவனுக்குத்தான் தெரியும். இறைவன் திருமறையில் கூறுவது,

'சத்தியம் வந்தது இன்னும் அசத்தியம் அழிந்தது'
(ஜாஅல் ஹக் வ zahaqqal பாத்தில்)

'நிச்சயமாக நன்மை(யான காரியங்)கள் தீமைகளைப் போக்கிவிடும்'
(இன்னல் ஹஸனாத் யுத்ஹிப்னஸ் ஸய்யிஆத்).
.
.
.
ஆதலினால் (நன்மைகளைக்) காதல் செய்வீர் :)


வஸ்ஸலாம்.

28 comments:

ஹுஸைனம்மா said...

//இன்னும் எல்லாத் தவறுகள் செய்பவர்களும்
தன்னை நியாயப்படுத்திக் கொண்டால் என்ன செய்வது//

அதானே!! விபச்சாரத்தை நியாயப்படுத்தி, அதற்கென தனி வாரியம் அமைக்கவேண்டும் என்ற அளவுக்கூட சிலர் அதற்கு வக்காலத்து வாங்குவார்கள்!!

டீனேஜர்களுக்குப் பதிவராகி வளவளவென்று எழுதுவதில் கொஞ்சம்கூட ஆர்வமேயில்லை. எனக்கென்று பிளாக் ஆரம்பித்து, சில டெக்னிக்கல் விஷயங்களையும் ஆரம்பத்தில் செய்துதந்த என் பெரியவன், நான் மிகக் கேட்டும், அவன் எழுத மறுத்துவிட்டான். சுஜாதாவிடம், உங்கள் மனைவி ஏன் எழுதுவதில்லை என்றதற்குச் சொன்னாராம், “வீட்டிற்கு ஒரு பைத்தியக்காரன் போதும் என்றவர் நினைத்திருக்கலாம்”!!

MANO நாஞ்சில் மனோ said...

அடடா அருமை அருமை...

அரபுத்தமிழன் said...

//வீட்டிற்கு ஒரு பைத்தியக்காரன் போதும்// :)) LoL.

//டீனேஜர்களுக்குப் பதிவராகி வளவளவென்று எழுதுவதில் கொஞ்சம்கூட ஆர்வமேயில்லை. //
வளவளவென்று எழுத வேண்டுமென்பதில்லை.
ஸ்கூல்ல சில நேரங்கள் புதிதாக ரைம்ஸ் எழுதச் சொல்வார்கள், அது போன்ற
சில விஷயங்களைப் பகிரலாம். தான் ரசித்த புகைப்படங்களை இடலாம்..இன்னும் பிற..

அரபுத்தமிழன் said...

மனோ,நெஞ்சம் நிறைந்த நன்றி,நன்றி

pichaikaaran said...

அருமையான , பாசிடிவ் கருத்துக்கள்..

அனைத்தும் ஏற்கத்தக்கவை..

ஆனால் ஒரு குறை..

”விபசாரம்,சுய இன்பத்திற்கு மாற்று நிச்சயம் திருமணம்தான்.”

இது சரியான கருத்தாக தெரியவில்லை...

திருமணம் என்பது உடல் சுகத்திற்காக செய்வது என்ற கருத்து இதில் தொனிக்கிறது...

Philosophy Prabhakaran said...

நீங்கள் சொன்னது நல்ல கருத்து... ஆனால் நடைமுறையில் கஷ்டம்... அனுபவத்தில் சொல்கிறேன்... ஒரு நண்பனை ஆர்குட்டிர்கோ, பேஸ்புக்கிற்கோ எளிதாக வரவழைக்கலாம்... ஆனால் பிளாக்குக்கு வரவழைப்பது கடினம்... எவ்வளவு சொன்னாலும் பொறுமையாக கேட்கும் தன்மை என் வயதை ஒத்த நண்பர்களுக்கு இருப்பதில்லை... சிலர் ஆர்வமிருந்தும் எனக்கெல்லாம் எழுதத் தெரியாதுன்னு சலிச்சிக்குறாங்க...

அரபுத்தமிழன் said...

//அனைத்தும் ஏற்கத்தக்கவை.// மிக்க நன்றி தோழரே.

//திருமணம் என்பது உடல் சுகத்திற்காக செய்வது// ஓ, அப்படி வேற அர்த்தமாகுதா ?, சாரி, அந்த நோக்கத்தில் சொல்லவில்லை.
திருமணத்தைத் தள்ளிப் போடுவதனால் இந்த மேற்கண்ட இரண்டிலும்
சிக்கிச் சீரழியும் அபாயம் உண்டு.

அரபுத்தமிழன் said...

நன்றி தோழர் பிரபாகரன்,
//நடைமுறையில் கஷ்டம்..//
நல்ல விஷயங்கள் ஆரம்பத்தில் சிரமமாகத்தான் தோன்றும். மக்களை
நல்வழிப்படுத்த முதலில் நமக்குத் தேவை பொறுமை மற்றும் எப்படிச்
சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள் என்ற டெக்னிக்கை அறியும் அறிவு.

அரபுத்தமிழன் said...

தோழர் பார்வையாளனுக்கு, நான் முதலில் எழுதியதன் நோக்கம், 'அந்த' இரண்டிலும் சிக்கி, அதை விட்டு வெளியேற நினைப்பவர்களுக்குச் சிறந்த
வழி உடனே திருமணம் செய்வதுதான்.
திருமணம் என்ற சப்ஜெக்டை எடுத்தால் நிறைய எழுதலாம். (உடனே எழுதச் சொல்லி விடாதீர்கள் :), எதற்குத்தான் நேரம் இருக்கிறது :(

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அழைக்கும்

//எது எப்படியோ, மனிதனைப் பற்றிய முழுமையான அறிவு அவனைப் படைத்தவனுக்குத்தான் தெரியும். இறைவன் திருமறையில் கூறுவது,//


அனைத்து கருத்துக்களும் அருமை.

அரபுத்தமிழன் said...

நன்றி சகோ, உங்க தளம் திறப்பதிலும் கமெண்ட்ஸ் காட்டுவதிலும்
முரண்டு பிடித்ததே, சரி செஞ்சாச்சா ? :)

pichaikaaran said...

திருமணம் என்ற சப்ஜெக்டை எடுத்தால் நிறைய எழுதலாம் ”

எழுதுவீர்கள் என எதிர்பார்த்துதான் எதிர் கமெண்ட் போட்டேன்.

விரிவாக , தனி பதிவாக எழுதுங்கள்

அரபுத்தமிழன் said...

//எழுதுவீர்கள் என எதிர்பார்த்துதான் எதிர் கமெண்ட் போட்டேன்.// :))

//விரிவாக , தனி பதிவாக எழுதுங்கள்//
Insha Allah

அரபுத்தமிழன் said...

சகோ ஆயிஷா,வ அலைக்குமுஸ்ஸலாம்.
(ஸாரி, சலாமுக்கு பதில் சொல்ல மறந்தேன்)

சக்தி கல்வி மையம் said...

அடடா அருமை ..

என்னை ஞாபகம் இருக்கா?

என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை.. நன்றி..

See,

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

அரபுத்தமிழன் said...

வாங்க சார், நேற்றுதான் நெனச்சேன், எங்க ஆளக் காணோமே என்று.
ரொம்ப நன்றி சார் மீண்டு(ம்) வந்ததற்கு

enrenrum16 said...

/அவர்களை ப்ளாக்கர்களாக மாற்றுங்கள் :).அடுத்த பதிவுக்கு என்னடா செய்யலாம், எங்கேர்ந்து தேத்தலாம் என்ற சிந்தனையில்
நாலு பதிவுகளை படிக்க நேரிடும். புதிய பதிவர்களுக்கான‌ போட்டிகள் அவ்வப்போது
திரட்டிகளால் நடத்தப் பட வேண்டும். /

அட இந்த ஐடியா நல்லாயிருக்கே... எழுதுவதில் ஒரு ஆதாயம் கிடைக்கும்போது வலைப்பூ பக்கம், அவர்கள் அதிகம் ஈர்க்கப்பட வாய்ப்பிருக்கு...நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள்.

அரபுத்தமிழன் said...

//நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள்//
நன்றி சகோ, சொன்னபடி செய்ய வேண்டுமல்லவா, நேற்று கூட,
திருமணம் ஆகாத ஒரு இளைஞனை ப்ளாக்கரா மாற்றினேன் :)

ஸாதிகா said...

அரபுத்தமிழன் ,எனது இரண்டு டீனேஜ் மகன்களும் பிளாக் வைத்து இருக்கின்றார்கள்.அதிலும் பெரியவன் பதிவுகளும் போட்டு இருக்கின்றான்.ஆனால் நான் தான் தொட்ர தடா போட்டு விட்டேன்.இப்படிப்பட்ட நேரத்தில் உங்கள் பதிவு...!!!!!!!!!!!!!

அரபுத்தமிழன் said...

தடை போட வேண்டாம் சகோ, கண்காணித்து அவ்வப்போது பின்னூட்டி சிறந்த‌
இடுகைகளுக்கு சபாஷ் போட்டு வர வேண்டும். பிள்ளைகளுக்குள் இருக்கும்
திறமை ப்ளாக் மூலம் வெளிப்படும். இதிலேயே மூழ்கிக் கிடந்தால் இதை விடச்
சிறந்த ஒன்றை நாம் தாம் அவர்களுக்குக் காண்பிக்க வேண்டும்.

அரபுத்தமிழன் said...

படிப்புக்குக் கெடுதல் என்று நினைக்க வேண்டாம். படித்து விட்டு எழுதிப்
பார்க்கும் போது படித்தது நன்றாகப் பதியும். ஆதலால் இன்டர்நெட்டிற்காக‌
ஒரு நேரத்தை ஒதுக்கிக் கொடுங்கள். அதில் தத்தமது பிளாக்கில்
பரீட்சைக்காகப் படித்ததையும் இன்னும் வேறு புத்தகங்களில் படித்ததில்
பிடித்ததையும் எழுதப் பழக்குங்கள்.

அரபுத்தமிழன் said...

நான் Blog கைப் பரிந்துரைப்பது புதியவர்களுக்குத்தான், நம் போன்ற ஆன்மீக வாதிகளுக்கல்ல, அது பற்றி அடுத்து எழுத இருக்கிறேன். இ.அ.

Thoduvanam said...

ஆக்கபூர்வமான சிந்தனைகள்.வாழ்த்துக்கள்

அரபுத்தமிழன் said...

ரொம்ப நன்றி சார், பெரியவங்க வாழ்த்தும் வழிகாட்டலும் கிடைப்பது வாழ்விலும் வலையிலும் அவசியம்.

Jaleela Kamal said...

//ஒரு பழக்கத்தைத் தவிர்க்க வேறு ஒரு நல்ல மாற்றுப் பழக்கத்தைத்
தேர்ந்தெடுங்கள்.//அருமை சிந்தனைகள் அனைத்தும் அருமை

அரபுத்தமிழன் said...

வாங்க சகோ, உங்களின் வருகை நல்வரவாகட்டும்.

அன்புடன் மலிக்கா said...

நல்லயோசனையாவுல்ல இருக்கு.

//எது எப்படியோ, மனிதனைப் பற்றிய முழுமையான அறிவு அவனைப் படைத்தவனுக்குத்தான் தெரியும்.//

இறைவன் ஒருவனே அனைத்தும் அறிந்தவன்.

அரபுத்தமிழன் said...

நன்றி அன்புடன் சகோ

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)