Monday, January 31, 2011

வாக்காளப் பெருமக்களே


நாடாளும் அரசினைத் தெரிவு செய்யவிருக்கும் நண்பர்களே !

அனைவரின் கோரிக்கைகளுக்கும் அரசியல் வியாதிகள் செவிமெடுக்கும்
பொன்னான சமயமிது.

இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் இனி ஐந்தாண்டுகளுக்கு யாருக்கும்
சூடோ சொரணையோ இருக்காது.

நல்ல நல்ல கோரிக்கைகளைத் தயார் செய்யுங்கள்.

தயவு செய்து எந்தக் கட்சியையும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்காதீர்.

நல்லவர்களையும் மனித நேயம் கொண்டவர்களையும் அடையாளம் காணுங்கள்.

அறிஞர்களையும் இளைஞர்களையும் தேர்தலில் நிறுத்துங்கள்.

கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்கள் நாட்டுக்கோ மக்களுக்கோ நல்லது செய்யும்
தகுதியில்லையெனில் நல்லவர்களை சுயேச்சையாக நிறுத்தி ஜெயிக்க வையுங்கள்.

சுயேச்சைகள் அதிகமாக ஜெயித்து அவர்களும் எந்தக் கட்சிக்கும் விலை போகாமல்
ஒரு புதிய கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைக்கலாம்.

மக்கள் எப்படியோ அப்படித்தான் அரசு அமையும்.

ஓட்டுப் போடுவதற்கு முன் இதெல்லாம் யோசிக்காமல் கண்ணை மூடிக்கொண்டு
கட்சியை ஆதரித்தால், பின்னால் புலம்ப வேண்டி வரும்.

ஆதலால் நம் ஆண்மை மதிக்கப் பட‌ நாட்டின் இறையாண்மை காக்கப்பட‌,

ஓட்டு வாங்க வரும் வேட்பாளர்களிடம் கோரிக்கைகளைத் திறமையாய்த் திணியுங்கள்.
'ஒண்ணு ஏதாவது செய்யட்டும் இல்லண்ணா ஙொய்யால செத்து மடியட்டும்' :)

வாழ்க ஜனகனமன நாயகம்.

24 comments:

சக்தி கல்வி மையம் said...

தங்களது மேலான கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே

சக்தி கல்வி மையம் said...

அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

அரபுத்தமிழன் said...

கருண் சார்,தங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி.
அடிக்கடி வருவேன் என்று முன்பு பின்னூட்டியிருந்தீர்கள்.
சொன்ன சொல்லை நிருபிக்கிறீர்கள், அதுவும் முதல் ஆளாக !!

ரஹீம் கஸ்ஸாலி said...

அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான வரிகள் சகோ.

அரபுத்தமிழன் said...

வ அலைக்குமுஸ்ஸலாம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

pichaikaaran said...

உங்கள் நல்லெண்ணம் எனக்கு புரிகிறது. அனைவரும் புரிந்தால் நல்லது

கோலா பூரி. said...

தங்களின் கருத்துகளுக்கு நன்றி.

அரபுத்தமிழன் said...

சகாக்கள் பார்வையாளன்,கோமு,
தங்களின் அன்புக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி.

அரபுத்தமிழன் said...

அன்பின் கருண் சார், தங்களின் இரண்டாவது கமெண்ட் கிடப்பில் கிடந்ததை
இப்போதுதான் பார்த்து ரிலீஸ் செய்தேன். தங்களின் அன்பிற்கு நன்றி.

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அருமையான பதிவு.

அரபுத்தமிழன் said...

வ அலைக்குமுஸ்ஸலாம் ஆயிஷா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

ஸாதிகா said...

பதிவு அருமை.

அரபுத்தமிழன் said...

நன்றி சகோ சாதிகா

ஹுஸைனம்மா said...

//மக்கள் எப்படியோ அப்படித்தான் அரசு அமையும்//

ஆமாம், முதலில் மக்களணைய அரசு!!
மன்னன் எவ்வழி குடி அவ்வழி என்பதெல்லாம் அடுத்துத்தான்!!

அரபுத்தமிழன் said...

//மன்னன் எவ்வழி குடி அவ்வழி//
அதெல்லாம் அந்தக் காலம் என்று எழுத நினைத்தாலும்,
ஒரு வகையில் 'எண்ணம் போல் வாழ்வுதான்'.
அரசனின் எண்ணம் மக்களிடமும் மக்களின் எண்ணங்கள்
மன்னனிடமும் பிரதிபலிக்கின்றது என்றே எண்ணுகிறேன்.

Ahamed irshad said...

Good Thought&Post...

அரபுத்தமிழன் said...

Thanks Irshad

போளூர் தயாநிதி said...

//இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் இனி ஐந்தாண்டுகளுக்கு யாருக்கும்
சூடோ சொரணையோ இருக்காது.

நல்ல நல்ல கோரிக்கைகளைத் தயார் செய்யுங்கள்.//
nalla sinthanai aanal ithu thamiz nadu aache?

அரபுத்தமிழன் said...

இருந்தாலும் நல்ல விதைக‌ளை இன்று தூவி வைப்போம்,
என்றாவது உயிர் பெற்றெழட்டும். வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி மருத்துவர் ஐயா.

enrenrum16 said...

/அறிஞர்களையும் இளைஞர்களையும் தேர்தலில் நிறுத்துங்கள்/

இதுதான் ஒரே சிறந்த வழின்னு தோணுது..ஆனா நடக்குமா?:(

அரபுத்தமிழன் said...

நடக்குமென்பார் நடக்காது......
நடக்காதென்பார் நடந்து விடும்...
கிடைக்கும் என்பார் கிடைக்காது....
கிடைக்காதென்பார் கிடைத்து விடும் .

Unknown said...

நல்ல விசயங்களை சொல்லியிருக்கீங்க..

இந்த கருத்துக்கள் எல்லாம் நடைமுறையில் சாத்தியமானால்.. ரொம்ப நல்லாயிருக்கும்..

அரபுத்தமிழன் said...

'தேடினேன் வந்தது' என்பது போல, என்னடா இது பாபுவைக் காணோமே என்று இன்று தேடினேன்.
ஆஜருக்கு நன்றி பாபு. பதிவு போடவில்லையே,
ரொம்ப பிசியோ.

Unknown said...

@அரபுத்தமிழன்..
உங்க அக்கறை உண்மையிலயே ரொம்ப சந்தோசமாக இருக்குங்க நண்பரே..

கொஞ்சம் பிசியாக இருப்பதால் பதிவு போட முடியவில்லை.. சீக்கிரம் வந்திடறேன்..

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)