Wednesday, January 26, 2011

ஐம்பதிலும் ஆசை வரும் ஆனால் அதில் அந்தரங்கம் கிடையாது

இரவு நேரத் தொழுகையிலும் அன்றைய நிச்சயத்தின் நீட்சியாய் அடைப்புக்
குறிகளுடன் கூடிய‌ ஜன்னல் காட்சி தெரிந்தாலும் பிறகு அது தொடர்வதில்லை.
எனினும் இந்நேரம் அங்கு யாரும் இருக்கக் கூடுமோ என்ற தவிப்பும் இல்லாமலில்லை.

நல்ல வேளை கனவில் வருவதில்லை. அடுத்த நாள் அதிகாலைத் தொழுகைக்குப்
பின் குழந்தைகளைப் பள்ளியில் விட்டுவிட்டு அலுவலகம் சென்று இருப்பிடத்தில்
அமரும்போதுதான் மீண்டும் அந்த ஜன்னலின் ஆர்வம் தொற்றிக் கொள்கிறது.

எனது இருப்பிடத்திலிருந்து பார்க்கும் போது வானத்தின் வர்ணம் சிதறடிக்கப்பட்ட வண்ணம்
ஜன்னலைச் சுற்றி வெளிர் நீல நிறம் படிந்திருக்கும். மற்றொரு அலுவலக சகாவின்
இருப்பிடத்திலிருந்து நோக்கினால் மரங்களடர்ந்த பச்சை வண்ணமாய்த் திகழும் அவ்வீடு.

கணிணித் திரையை நோக்கி அமர்ந்திருந்தாலும் இடது பக்கமாக இருக்கும் ஜன்னல்
திரையை நோக்கி அடிக்கடி திருப்புவதால் ஒரு பக்கமாக கழுத்தில் வலி தெரிகிறது.
என்றாலும் காட்சியின் சுவாரசியத்தில் இந்த வலி ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை.

முன்பெல்லாம் ஒரே ஒரு தலைதான் தெரியும், ஆர்வமாகப் பேச்சு கொடுக்க
ஆரம்பித்த பின் இன்று ஒன்றுக்கு மேல் தெரிய ஆரம்பித்து விட்டன. அதுவும்
காலையில் வந்ததும் வராததுமாக முக்காடிட்ட நான்கைந்து தலைகள் தெரியும் போது
அதுவும் எனக்காகவே காத்திருக்கும் போது எப்படி இருக்கும்.

முதலில் உதற ஆரம்பித்தது, இருந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை.
நாளடைவில் எல்லோரிடமும் பேசிப் பழகிவிட்டேன். மேலும் அவர்கள்
தனியாக என்னிடம் பேசினாலும் ஒரே நேரத்தில் பேசினாலும் தனித் தனியாகத்தான்
பதில் சொல்கிறேன். ஒட்டு மொத்தமாக எல்லோரிடமும் ஒரே நேரத்தில் சொல்லக் கூடிய,
அதுவும் எல்லோருக்கும் பொருத்தமான வாக்கியத்தைக் கண்டு பிடித்து விட்டால் போதும்
'மவனே எத்தனை பேர் வந்தாலும் சமாளித்து விடலாம்'.

'உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்' என்பது போன்ற பொதுவான
ஒரே பதில் சொல்லலாம்தான். ஆனால் அதில் நம்பகத்தன்மை குறைந்து நாளை
ஒருவருமே தென்படாமல் போகும் அபாயம் உண்டு.

எனவே என்ன செய்வதென்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறேன்.
இதில் அனுபவம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி ஆலோசனை
சொல்லுமாறு இந்த ஐம்பதாவது பதிவில் கேட்டுக் கொள்கிறேன்.

முதல்முறையாக ஒரே ஒரு தலை தென்பட்ட நேரத்தில் புகைப்படம் ஒன்று எடுத்து
வைத்திருந்தேன். அதை இப்போது உங்களின் பார்வைக்குத் தருகிறேன். அவ்வீட்டின்
பெயரும் அதில் பொறிக்கப் பட்டிருக்கும். பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.

'அது நம்ம ஆளு'.
.


எல்லோருக்கும் இது போன்று வீடுகள் இருக்கலாம். ஆனால் அவைகளைப்
பார்க்காமலேயே தவிர்த்து விடலாம். ஆனால் அவ்வீட்டினருகில் ஒரு ப்ளாட்
வாங்கி வைத்திருப்பதால்தான் அடிக்கடி பார்க்க வேண்டியிருக்கிறது.

.
.
.
.
.
வீட்டுப் பெயருக்கு ஒரு க்ளூ கொடுக்கிறேன். 'மயிலோடு ஜீவிதம்'.
.
.
.
.
.
.
.
இந்த வாரத்திலிருந்து இன்னொரு ஜன்னலும் திறக்க ஆரம்பித்து விட்டது.
அதன் விவரத்தை டிஸ்கியில் சொல்கிறேன். நமக்கே இந்த கதின்னா,
ஒன்றுக்கு மேல் 'வைத்திருப்பவர்கள்' கதி என்னவாயிருக்கும்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

சரி போனாப் போவுது இதுக்கு மேல உங்களைச் சோதிக்க மனமில்லை.
இதோ பார்த்துக் கொள்ளுங்கள். நான் ரசிக்கும் அவ்வீட்டையும்,முக்காடு
போர்த்திய பின்னூட்ட அழகியையும். ஆள் எப்பூடி :-)









டிஸ்கி 1 :
இரண்டாவது ஜன்னல் வேறு யாருமல்ல, கூகிள் ரீடர்தான். நாம் பின்பற்றும் பதிவர்கள்
பதிவிட்ட உடனேயே மெயிலைப் போல் அடைப்புக் குறிகளுக்குள் காட்டுகின்றது.

டிஸ்கி 2 :
இடது பக்க ஜன்னல்னு ஏன் சொன்னீர்கள் என்று கேட்க நினைப்பவர்களுக்கு,

ஆம், எங்கள் எல்லோருக்கும் ஒரு கணினியும் இரண்டு திரைகளும் தரப்பட்டுள்ளன‌.
ஒன்று அஃபீஷியல் ஒர்க்குக்காக இன்னொன்று பெர்சனுலுக்காக.

டிஸ்கி 3.
பதிவு எழுதுவதால் விளையும் நன்மை, தீமைகள் பற்றியும் ஒரு பதிவு எழுத வேண்டும்.

...... சந்திப்போம் அடுத்தடுத்த பதிவுகளில். வஸ்ஸலாம்.

32 comments:

சக்தி கல்வி மையம் said...

Nice..

அரபுத்தமிழன் said...

Thanks Karun..

அரபுத்தமிழன் said...

பதிவுகளை எத்தனை பேர் படிக்கிறார்கள், படித்தாலும் முழுதும்
படிக்கிறார்களா இல்லை சர்ரென்று கீழே வந்து விடுகிறார்களா என்று
எப்படித் தெரிந்து கொள்வது.

அரபுத்தமிழன் said...

அத்துடன் ஜீமெயில்,ப்ளாக் என்பதை முன்பே யாரால் யூகிக்க முடிந்தது
என்பதைச் சொன்னால் இனி வரும் காலங்களில் இன்னும் புதிதாய்,புதிராய்
எழுதுவேன்.

அரபுத்தமிழன் said...

ஓட்டுப் பெட்டியின் புண்ணியத்தால் இத்தனை பேருக்குப் பிடித்தது என்று
தெரிய வருகிறது. ஆனால் ஓட்டுப் போட்டவர்களை எப்படி கண்டு பிடித்து
நன்றி சொல்வதுன்னு தெரியலயே :(

Riyas said...

நானும் ஓட்டுப்போட்டேனுங்கோ...

அரபுத்தமிழன் said...

இந்தப் பதிவை இன்ட்லியில் பாப்புலராக்குனதுக்கு நிரம்ப நன்றிகள் தோழர்களே.

அரபுத்தமிழன் said...

ரொம்ப நன்றி ரியாஸ்.
இன்னும் யார் யார் என்று எப்படி கண்டு பிடிப்பது.
ஒவ்வொருத்தரும் வந்து சொல்வது நன்றல்ல.

அரபுத்தமிழன் said...

என்னப்பா இது இன்ட்லி ஓட்டுப் பெட்டியக் காணோம். பொட்டியத்
தூக்கிட்டு ஓடுறது இங்கேயுமா நடக்கு. உண்மைத்தமிழன் மாதிரி
பொலம்ப வச்சிட்டாய்ங்களே பய புள்ளைக :(

ஸாதிகா said...

//ஓட்டுப் பெட்டியின் புண்ணியத்தால் இத்தனை பேருக்குப் பிடித்தது என்று
தெரிய வருகிறது. ஆனால் ஓட்டுப் போட்டவர்களை எப்படி கண்டு பிடித்து
நன்றி சொல்வதுன்னு தெரியலயே :(//
ஏங்க அரபுத்தமிழன்,நிஜமாலுமே தெரியாதா?இல்லாங்காட்டி பகடிக்கு கேட்கறீங்களா?
ந்நனும் ஓட்டுப்போட்டுட்டேன்.நான் போட்டேனா இல்லியான்னு கண்டு பிடியுங்க பார்போம்

அரபுத்தமிழன் said...

சகோ, இது என்ன விளையாட்டு :). உண்மையிலதான் கேட்டேன்.
ஆனாலும் நீங்களும்,ரியாஸும் ஓட்டுப் போட்டதைக் கண்டு பிடித்து விட்டேன் :)

ஆமினா said...

சத்தியமா சொல்றேன்...

இந்த பதிவை போட்ட அன்னைக்கே பாதியோட படிச்சுட்டு புரியாம இருக்கவும் பாதிலேயே ஓடிட்டேன் (பொய்யா பின்னூட்டமிட விருப்பமின்மையால்). தமிழ்மணத்தில் மறுமொழிகள் பகுதியில் பார்த்ததும் நமக்கு புரியாதது எத்த பேருக்கு புரிஞ்சுருக்குன்னு ஆவலா பாக்க வந்தேன்... அப்பவும் புரியல.... சரி மறுபடியும் முழுசா படிக்கலாம்னு தான் வந்தேன்... டிஸ்கி பார்த்ததும் தான் பீடிகை புரிந்தது...
(தமிழ் அகராதி தான் ரொம்ப விரும்பி படிப்பீங்களோ?????? ;)

அரபுத்தமிழன் said...

//மறுபடியும் முழுசா படிக்கலாம்னு தான் வந்தேன்... டிஸ்கி பார்த்ததும் தான் //
அப்பாடா ஒரு ஆள் முழுசாப் படிச்சது கன்ஃபார்ம் ஆயிடுச்சு. :)

//அகராதி தான் ரொம்ப விரும்பி படிப்பீங்களோ????//

அகராதி புடிச்சவன்கிறீங்களோ ? :)))

அரபுத்தமிழன் said...

//பொய்யா பின்னூட்டமிட விருப்பமின்மையால்//
ஆமிக்கு நல்ல மனசு. மனம் திறந்து பேசும்
ஆமினா ஒரு முஃமினா .
(இது கேள்வியல்ல அரபியில் பெண்ணுக்குச் சொல்லப்படும் சொல்)

ஹுஸைனம்மா said...

நானும் நெசமான அப்பாவியா, ஜன்னல்ல வந்து உக்கார்ற குருவி, புறா,மைனாவைச் சொல்றீங்களோன்னு நம்ம்ம்ம்பிப் படிச்சேன்; அந்த ‘மயிலோடு ஜீவிதம்’கிறதைக் கூட நம்பி, ‘அட, மயிலா, அப்ப புறா இல்லையான்னு’ நெனச்சு... :-(((((( எப்பத்தான் சுதாரிப்பா இருக்கப் போறேனோ....

உங்களுக்கென்ன, ஒண்ணுக்கு கூடுதலா வச்சுக்க ரைட்ஸ் இருக்கும்போது, யார் கேள்வி கேட்கப் போறாங்க.. நடத்துங்க... நடத்துங்க..

ஆமா, இந்த ரெஸஷன் காலத்துலயும் அஃபிஷியல்/பெர்சனல்னு ரெண்டு மானிட்டர் தர்றாய்ங்களா உங்க ஆஃபிஸுல? வேகன்ஸி இருக்கான்னு விசாரிக்கணுமே.... (வெப்)அட்ரஸ் ப்ளீஸ்..

அரபுத்தமிழன் said...

சபையே கலகலன்னு இருக்கு, எப்போதும் பந்தியில மொதல்ல வர்ர ஆளக் காணோமேன்னு பக் பக்னு இருந்திச்சு. அப்பாடா. ஆமா ஏன் லேட்டு :)

அரபுத்தமிழன் said...

//குருவி, புறா,மைனா //
கொஞ்சம் உஷாரான ஆட்கள் இப்படித்தான் நினைப்பார்கள் என்று தெரியும். :)

அரபுத்தமிழன் said...

பதிவ முழுசாப் படிச்ச மூணாவது ஆள் நீங்கதான் கன்ஃபார்மாயிடுச்சு.
பின்னூட்டமென்றால் இப்படித்தான் இருக்கணும். நன்றி ஹுசைனம்மா.:)

enrenrum16 said...

// முக்காடிட்ட நான்கைந்து தலைகள் தெரியும் போது // என்னடா இது அண்டர்க்ரவுண்டு பற்றி இருக்குமோன்னு ரொம்ப கற்பனையெல்லாம் பண்ணிட்டேன்.... அதுலயும் இவ்ளோ வெளிப்படையா ஆலோசனை வேற கேட்டதை பார்த்து ஒரு த்ரில்லர் கதை வாசிக்கிற மாதிரி இருந்துச்சு...:( கடைசியில googleனு தெரிஞ்சதுக்கப்புறம் ச்ச..ச்ச...இப்படி ஒரு அப்பாவியைப் போய் தப்பா நினச்சிட்டமேன்னு தோணுச்சு.... ;)

மேலும் பல ஐம்பதுகளை தொட வாழ்த்துக்கள்...

pichaikaaran said...

பதிவு எழுதுவதால் விளையும் நன்மை, தீமைகள் பற்றியும் ஒரு பதிவு எழுத வேண்டும்.

எழுதுங்க... காத்து இருக்கிறோம்...

ரொம்ப நாள் கழிச்சு இந்த பதிவு நல்லா இருந்தது...
அடிக்கடி எழுதுங்க

pichaikaaran said...

குர் ஆனில் நான் படித்த ஒரு வாசகம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது.. நீங்கள் அதை படித்து இருக்கிறீர்களா... அதை படித்ததும் உங்களுக்கு தோன்றியது என்ன?

இந்த பதிவை பார்த்து விட்டு சொல்லுங்கள்

: உலகின் கடைசி மனிதன் - End of World

ஆயிஷா said...

பதிவிலும் லொள்ளு,கமாண்ட்சும் லொள்ளு

கலக்குறீங்க சகோ.நானும் ஒட்டு போட்டு விட்டேன்.

போளூர் தயாநிதி said...

நானும் ஓட்டுப்போட்டேனுங்கோ...
parattugal

அரபுத்தமிழன் said...

ஓட்டுப் போட்ட அனைத்து சகாக்களுக்கும் நன்றியும் துஆவும்.
நான் 'உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்' :)

அரபுத்தமிழன் said...

சகோ 'என்றென்றும் பதினாறு', சகோ ஆயிஷா இருவரின் பின்னூட்டத்தை மிகவும் ரசித்தேன்.

அரபுத்தமிழன் said...

நண்பர் பார்வையாளன், மிக்க நன்றி, படித்து விட்டு கமெண்டுகிறேன்.

அரபுத்தமிழன் said...

@ போளூர் தயாநிதி

நன்றி மருத்துவர் அவர்களே

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தங்கள் மீது அமைதி உணடாவதாக...!

அடடே..! இவருக்கு ஐம்பது வயது ஆயிடுச்சா...? என்றுதான் முதலில் நினைத்தேன். நான்கு தலைகள்... முக்காடு... இதெல்லாம் படித்து சரி, 'பெண் குழந்தைகளை தத்தெடுத்து பராமரித்தல் பற்றி' எழுதுகிறார் என்று நினைத்தால்... ப்பூ.. இவ்ளோதானா..!

அரபுத்தமிழன் said...

//தங்கள் மீது அமைதி உணடாவதாக...!//
வ அலைக்குமுஸ்ஸலாம்.
//இவருக்கு ஐம்பது வயது ஆயிடுச்சா ..
ப்பூ.. இவ்ளோதானா.//
ஹாஹ்ஹா, ஏமாந்தீங்களா :)
பயப்படாதீங்க, எப்பவாவதுதான் இது மாதிரி எழுதுவேன்.

pichaikaaran said...

அவன் நாடினால் உங்களை அகற்றி விட்டு உங்களுக்கு பதிலாக ஏதேனும் புதிய படைப்பை கொண்டு வந்து விடுவான். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு சிரமமல்ல- திருக்குர் ஆன் – 35:16 "

நண்பரே..

இதை கவனித்தால், ஒரு கட்டத்தில் மனிதன் என்ற இனம் அழிந்து இன்னொரு இனம் உருவாகுமோ என தோன்றியது..
ஆனால் நீங்கள் மனிதனுக்கு பிறகு வேறு எதுவும் தோன்றாது என்கிறீர்கள்..

குர் ஆனில் இது குறித்து சொல்லப்பட்டு இருக்கிறதா?

விளக்கவும்.. அல்லது தனியாக எனக்கு மெயில் அனுப்பவும்..

Thoduvanam said...

Curious and good suspense..keep it up..

அரபுத்தமிழன் said...

Thank you so much Sir.

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)