தலைப்பு வச்சேன் மொதல்ல. ஆமா இவருக்கு வேற வேலையில்லை,
நலம் வாழ, பல்லாண்டு வாழன்னு அறுக்குறான் மனுஷன் என்று யாரும்
பதிவப் பாக்காமப் போயிடுவாங்களோன்னு பயந்து இன்றையப் பதிவுலக
சாய்ஸ்க்கு ஏற்ற மாதிரி 'பல்ல ஒடச்சுப்புடுவேன் ஆமா' அப்படீன்னு
வச்சுப் பார்த்தேன். இருந்தாலும் மனசு கேக்காம, எப்போதும் போல
கவிதைத் தனமாவே இருக்கட்டும்னு இந்தத் தலைப்பு.
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே வா.. வா.. வாவா.
பல்லொன்று போனால் சொல்லொன்று போகும்
அதற்கு முன்னாலே ஓ.. ஓ.. ஓது...
'ஹேப்பி நிவ் இயர்'.
பல்ல ஒடச்சுப் புடுவேன்னு ஈஸியாச் சொல்லிடுறோம், ஆனா அதைப்
பிடுங்குவதற்குள் நாம் படும் பாடு. மலைகள் எப்படி பூமியில் நாட்டப்
பட்டுள்ளதோ அதைப் போன்று பல்லின் பேஸ்மென்ட்டும் ரொம்ப
ஸ்ட்ராங்காகத்தான் இருக்கிறது. இருந்தாலும் பூச்சி அல்லது காரை அதனை
எப்படி பலஹீனமா ஆக்கி விடுகிறதென்பது ஆச்சர்யம்தான்.
இனிப்பு போன்ற பலகாரங்கள் சாப்பிட்ட உடனேயே சிறிது வெந்நீர் குடித்து
விட்டால் பூச்சி பிடிப்பதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
பல் விஷயத்தில் இன்னொரு தொந்தரவு, அதன் நாற்றம். மீன் மற்றும்
அசைவ உணவுகள் உண்ணும்போது அதன் மீதம் பற்களுக்கிடையில் தங்கி
விடுவது நாற்றத்திற்கான காரணம். உணவிற்குப்பின் பல் துலக்குவது,
பல் குத்தி சுத்தம் செய்வதன் மூலம் இதனைத் தவிர்க்கலாம். சிலர் பேஸ்ட்
பிரஷ் ஆபிஸிற்கும் கொண்டு வந்து பல் துலக்கப் பார்த்திருக்கிறேன்.
கடல் உணவுக்கும் நாற்றத்திற்கும் நிறைய தொடர்பு உண்டு. அது
காலைக் கடனிலும் சரி அதன் மீதத்தைக் கச்சடா(குப்பை)த் தொட்டியில்
எறியும் போதும் சரி நம் மூக்கைத் தாக்காமல் போகாது. மாதாந்திர
ருதுவின் போது பெண்கள் மீனைத் தவிர்த்தால்
'நாற்றம் (மணம்) பெற்ற மலர் போல்' திகழலாம். :-)
இதல்லாமல் சாராயம்,சிகரெட் குடிப்பவர்களுக்கும், குடலில் ப்ராப்ளம்
உள்ளவர்களுக்கும் வாய் நாற்றம் இருக்கும். வாய் நாற்றம் இல்லாமல்
பார்த்துக் கொள்ளுங்கள். அது நம்முடைய மதிப்பைக் கெடுத்து விடும்.
நல்ல 'மூடை' அவுட்டாக்கி விடும்.
கொடுமை என்னவென்றால் நமக்கு நாற்றம் இருக்கிறதா என்று ஊதிப்
பார்த்தாலும் கண்டு பிடிக்க முடியாது. நெருக்கத்தில் இருப்பவருக்குத்தான்
தெரிய வரும்.
'விக்ரோ வஜ்ரதந்தி' விளம்பரம் பார்த்திருப்பீர்கள், ஆசையாய் மணமகன்
தன் புது மனைவியின் பக்கம் திரும்பி ஏதோ பேச வர (அண்ணல் அவளை
நோக்க) அவளோ வேறு பக்கம் தலையைத் திருப்புவாள்.
சரி வாய் நாற்றத்தை எப்படித்தான் கண்டு பிடிப்பது, ஒண்ணு கல்யாணம்
பண்ணிப் பாருங்க :-) (துணையை விட நம்முடைய குறையை வேறு
யாரால் கண்டு பிடிக்க முடியும்)
அதெல்லாம் ரொம்ப காஸ்ட்லின்னா, ஒரு ஆப்பிள் பழத்தையோ அல்லது வாழைப்பழத்தையோ ஒரு கடி கடித்த பின் மீதத்தை மோந்து பாருங்கள்,
உங்களின் 'லொள்ளு' தெரியவரும். அது போல் உமிழ்நீரை கையில்
தடவி அல்லது டைரக்டாவே கையை நக்கி மோந்து பாருங்கள்,
(சரி சுத்தத் தமிழிலேயே எழுதிவிடுகிறேன்) 'முகர்ந்து பாருங்கள்'.
உங்களின் 'ஜொள்ளு' தெரியவரும்.
அல்லது தும்மிப் பாருங்கள், சுற்றுப் புறச் சூழலையே கதறடித்து விடும்.
(இந்தப் பதிவே, நான் தொழுகையில் நிற்கும் போது ஒருவர் தும்மியதால்
வந்த வினைதான்). எனக்கும் தும்மியவருக்கும் இடையில் ஒரு அரபி.
நம் எல்லோருக்குமே ஒரு பழக்கம், யாரும் தும்மினால் 'நைசா'
தலையை வேறு பக்கம் திருப்பி விடுவோம். ஆனால் தொழுகையில்
நிற்கும் போது அப்படிச் செய்ய முடியாதே. அச்சமயம் நான் என்ன
செய்வேனென்றால் முடிந்த வரை 'தம்' கட்டிவிடுவேன். மீண்டும்
தும்மினால் என் கதி அதோ கதிதான் :-)
அப்படித்தான் அன்றும், தொழுது முடித்தவுடனேயே ஒருவர் ஒரு
தும்மு தும்மினார் பாருங்கள், நானும் முன்னெச்சரிக்கையாக
'தம்' கட்டித் திரும்பி விட்டேன். ஆனால் பக்கத்திலிருந்த அரபி
'லா ஹவ்ல வலா குவ்வத்த ..' என்று சொன்னார்.
ஆஹா! இது கோபத்தில் அரபிகள் சொல்லும் வார்த்தையல்லவா என்று
இந்தப் பக்கம் திரும்பி 'தம்'மைத் தளர்த்தினால் 'அம்..மாடி',
மயங்காத குறைதான். அவ்வளவு நாற்றம்.
சரி நாற்றத்தை எப்படி போக்குவது ? வழக்கமா தேய்ப்பதைக் கொஞ்சம்
நிறுத்தி விட்டு முரசிலிருந்து இரத்தம் வராமல் தடுக்கும் பேஸ்டை சில
காலத்திற்கு உபயோகிக்கவும். இதை விட பெட்டர், டாக்டரிடம் சென்று
பல்லைக் கிளீன் செய்வதுதான். என்ன, கொஞ்சம் .. கொஞ்சமல்ல,
நிறையவே கூசும், தலை கொஞ்சம் கிறுகிறுக்கும்.
(எத்தனை பேர் தலையைச் சுத்த வச்சிருப்பீங்க) :-)
அவ்வப்போது பயோரியா,கோபால் பல்பொடி போன்றவைகளாலும்,
'மிஸ்வாக்' குச்சிகளாலும்,விரல்களாலும் பல் துலக்கிக் கொள்ளுங்கள்.
மிஸ்வாக் குச்சி ஃபிரெஷ்ஷாகக் கிடைத்தால் அதற்கு இணை வேறேதும்
கிடையாது. அதில் இருக்கும் காரத்திற்கு பூச்சியென்ன, நாற்றமென்ன
எந்தப் பேஸ்ட் கம்பெனியும் இருக்காது.
ஆனால் அதுவோ அரபிகளின் சொத்தாகி விட்டது. நம்ம நாட்டுல
இருக்கவே இருக்குது 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி'.
இவ்வளவு சொன்ன பிறகும் வாய் நாற்றத்தோட வந்து தும்முனீங்க ..
'பல்ல ஒடச்சுப்புடுவேன் ஆமா' (அப்பாடா தலைப்புக்கு வந்தாச்சு) :-)
9 comments:
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com
//அதன் நாற்றம். மீன் மற்றும்
அசைவ உணவுகள் உண்ணும்போது அதன் மீதம் பற்களுக்கிடையில் தங்கி
விடுவது நாற்றத்திற்கான காரணம்//
அப்ப சைவம் மட்டும் சாப்பிட்டா ஒன்னுமாகாதா சகோ!!! :)
மிகவும் ரசித்தேன்..
அடிக்கடி எழுதுங்கள்
சகோதரி, சைவ உணவை விட அசைவ உணவில்தான் எல்லாமே அதிகம்.
கீரையோ காய்கறியோ பல்லில் மாட்டி மிக நீண்ட நேரம் கழித்து எடுத்து முகர்ந்து பாருங்கள், அந்தளவு நாற்றம் தெரியாது. அதே சமயம் அசைவ உணவான கறி,மீன் மாட்டிய சிறிது நேரமாக இருந்தாலும் அது நாற்றம் பெறும்.
பார்வையாள நண்பரே, தங்களின்
அன்புக்குக்கொரு ராயல் சல்யூட்.
அதென்ன லக்கி லுக், பார்வையா(Lookகா)ளர்
என்றால் எனக்குப் பிடித்திருக்கிறது.
பார்வைக்கும் அன்புக்கும் தொடர்பிருக்கோ :-)
பாஸ் உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கேன். பெற்றுக் கொள்ளுங்கள்.நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
Wonderful Post..
What i Say?
Really Appreciate 'Gulftamilan'!!
Thanks Irshad.
'Arabutamilan' is broader than 'Gulf Tamilan' :)
ARUMAI TAMIZHA,ELLAAME ARUMAI .
AMINAVUKKU SARIYAANA PADHILADI KODUTHTHIRUKKIYE VAAZHTHTHUKKAL.
Post a Comment
நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை
எனினும்
" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)