Tuesday, September 21, 2010

பார்டர் தாண்டிய பல்லாடு

(சென்ற உம்ரா பதிவின் தொடர்ச்சி)

பெருமானார்(ஸல்) அவர்களின் ஹதீஸ் ஒன்றின் கருத்து 'இந்த உம்மத்தின்
செல்வந்தர்கள் புகழுக்காகவும் பெருமைக்காகவும், ஏழைகள் பிச்சை எடுப்பதற்கும்
மத்திய வர்க்கத்தினர் வியாபாரம் செய்யும் நோக்கத்திலும் ஹஜ்/உம்ரா செய்வார்கள்.
(இம்மூன்று நோக்கங்களை விட்டும் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக,ஆமீன்).
அம்மூன்று தரப்பாரையும் காண நேரிட்டது ; அவர்களின் பேச்சும் நடத்தையும்
மேற்கண்ட நோக்கங்களைப் பறைசாற்றியது.

பார்டர் தாண்டியதும் மற்றுமொரு சாராரைக் காண நேரிட்டது. ஓமானிலிருந்து வந்த
பேமானிகள். பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். டொயோட்டா Lexus ல் வந்து 'உம்ரா வந்த
வழியில் எல்லாம் தொலைந்து விட்டதாகக் கூறி' பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
காருக்குள் மனைவி, குழந்தைகளை வைத்துக் கொண்டு கேட்கும் போது யாருக்குத்தான்
கொடுக்க மனம் வராது. பார்டர் தாண்டியவுடன் வரும் பெட்ரோல் பம்புகள்தாம் இவர்களின்
வசூல் வேட்டைக் களம். இது போன்று இரண்டு மூன்று கார்களைக் கண்டவுடன் நாங்கள்
கார் நம்பர்களைக் குறிக்கலானோம், போலிஸில் புகார் செய்யும் நோக்கத்தில். அச்சம‌யம்
ஒரு கார் ரிவர்ஸில் வந்தது, நம்பரைக் குறிக்கும் நண்பரை லேசாக இடித்துச் செல்லும்
வண்ணம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். பாவம் பரிதாபத்திற்குரியவர்கள்,
பட்டதாரிகளாக்க வேண்டிய தம் மக்களுக்கு பிச்சைக்காரர்களாவதற்கான பயிற்சி
கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நபியவர்கள் சத்தியமிட்டு சொன்ன விஷயங்களில் இதுவும் ஒன்று,
'யாசிப்பவர்களின் வறுமை ஒரு போதும் நீங்காது'.

மக்கா மதீனாவில் பிச்சை எடுக்கும் கறுப்பின மக்கள் சோமாலியா போன்ற ஆப்ரிக்க
நாடுகளிலிருந்து வந்தவர்களாயிருக்கும்; ஆண்டாண்டு காலமாக சவூதியில் வாழும்
ஹபஷிகள் கிடையாதென்பது என் எண்ணம். காரணம் இரண்டு ஹரம்களிலும் நோன்பு
திறக்க வைக்கப் போட்டி போட்டுக் கொண்டு லட்சக்கணக்கான மக்களுக்கும் பேரித்தம்பழம்,
தண்ணீர்,டீ,காபி,பன்,தயிர்,மோர் வைத்து உபசரிப்பவர்களாக ஹபஷிகளைக் கண்டோம்.

ஒரு வேடிக்கை நிகழ்ந்தது. மதீனா பள்ளியில் நோன்பு திறக்கச் செல்லும் போது அங்குள்ள சிறுவர்களும் பெரியவர்களும் தம்முடைய இடத்தில் நோன்பு திறக்குமாறு நம் கையைப்
பிடித்து இழுப்பார்கள். ஒருநாள் எங்களுக்குத் தெரிந்த ஒருவர் இன்று தம்மிடத்திலே நோன்பு
திறக்க வேண்டும் என்றும் வேறு யார் இழுத்தாலும் சென்று விட வேண்டாமென்றும்
சொன்னார். நானும் சரியென்று செருப்புக்களை பிளாஸ்டிக் பைக்குள் வைத்தவாறு
(வெளியே வைக்கப்படும் செருப்புக்கள் கிளீனிங் போன்றவைகளால் குப்பைக் கூடையில்
சென்று விடும்) பள்ளிக்குள் செல்லும் போது ஒருவர் என்னை அழைத்தார். நானும்
புன்னகைத்தவாறே 'இல்லை இன்று இவரிடம்' என்று சைகை செய்த வண்ணம் முன்
சென்றேன். இப்போது என் கையைப் பிடித்து இழுக்க முயற்சித்தார், நானோ அதைத் தட்டி
விட்டு முன்னேறியவாறு திரும்பிப் பார்த்தேன். இப்போது அவர் கோபமாக வந்து என்
கையில் உள்ள பையைப் பிடுங்கி உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்து விட்டு,
'ஙொப்புரானே!, இதுக்குத்தான் இவ்வளவு பில்டப்பா?' என்கிற தொனியில் புன்னகைத்துத்
திரும்பத் தந்து விட்டார். நானும் 'அடடா, செக்யூரிட்டின்னு தெரியாமப் போச்சேன்னு அசடு
வழிந்து உள்ளே சென்றேன் (செக்யூரிட்டிகளும் நார்மல் டிரஸ்ஸில்தான் இருப்பார்கள்).

பார்டர் தாண்டி இஸ்லாத்திற்குள் நுழைவிக்கப்படும் யஹூதிகளின் சூழ்ச்சிகளில்
ஒன்றையும் எடுத்துச் சொல்ல மனம் நாடுகிறது. அதுதான் இஸ்லாமிக் டிஸைன்களில்
அவர்கள் புகுத்திய உருவ வெளிப்பாடு. அன்றைய முஸ்லிம் பேரரசின் தலைநகரான
துருக்கியில் புகுந்து விட்ட இந்த தந்திர நரிகள் கார்பெட்,முஸல்லா மற்றும் கட்டிடக்
கலையில் உருவம் வரும் வண்ணமாக இஸ்லாமிய டிஸைனை அமைத்தார்கள்.
(இன்றும் ஆப்கானிஸ்தானில் மிஞ்சியிருக்கும் யஹூதிகளின் தொழில் கார்பெட்).
துருக்கியர்கள் புனரமைத்த ஹரம்களின் தூண்களையும் தொழுவதற்காக நாம் நிற்கும் கார்பெட்டுகளையும் கூர்ந்து கவனித்தால் உருவங்கள் தெரிய வரும். இவ்வளவு ஏன்,
கஃபாவைப் போர்த்தியிருக்கும் கருப்புத்துணியில் கதவின் அருகாமையில் உள்ள தங்க
டிஸைனைப் பாருங்கள். கண்களைப் போல் இரண்டு வட்டங்கள், மூக்கின் வடிவில்
திரை லேசாக விலகியிருக்க,அத‌ன் அடியில் இரண்டு வளையங்கள். மீசையின் இரு
மருங்கிலும் கருப்பு நிறப் பின்னணி, பின் செவ்வக வாய் அளவுக்குத் திறந்த பகுதியில்
மூடிய கதவும் தெரிகிறது. (ஓவரா திங்க் பண்றேனோ !?)

ஆனாலும் அல்ஹம்துலில்லாஹ், சமீபத்தில் கட்டப்பட்ட ஸபா மர்வாவை ஒட்டிய
சுவர்களிலும் அதில் பொறுத்தப்பட்டுள்ள சன்னல்களிலும் உருவமற்ற, அழகான
இஸ்லாமிய டிசைன்கள், மக்கள் உஷாராகி விட்டார்கள் என்பதைக் காட்டுகிறது.
மேலும் தவாபின் எல்லையைக் கூட்ட, கஃபாவை ஒட்டிய் துருக்கியர்கள் கட்டிய
பகுதியும் விரைவில் இடிக்கப்பட இருக்கிறது என்ற செய்தியும் அறியக் கிடைத்தது.

(இ.அ. தொடரும்)

5 comments:

ஹுஸைனம்மா said...

//ஓவரா திங்க் பண்றேனோ//

ரொம்ப!!

ஹுஸைனம்மா said...
This comment has been removed by the author.
அரபுத்தமிழன் said...

மாடர்ன் ஆர்ட் போல இருந்தால் கூட, எனது கற்பனை 'ரொம்ப' எனலாம்.
ஆனால் துருக்கியில் தயாரான எல்லா முஸல்லாக்களையும் பாருங்கள், இரு கண்கள்,மூக்கு,வாய் கண்டிப்பாக இருக்கும்.

Rajakamal said...

மதினாவாசிகள் மிகவும் விருந்தோம்பல் சுபாவமுடையவர்கள் என்று வராலாறுகளில் படித்திருக்கிறேன் அது உங்கள் கட்டுரையிலிருந்து இன்றும் தொடருகிறது என்று தெரிகிறது. அருமை கட்டுரை.

அரபுத்தமிழன் said...

//மதினாவாசிகள் மிகவும் விருந்தோம்பல் சுபாவமுடையவர்கள்//
உண்மை உண்மை, ஆனால் பெங்காலிகளால் அங்குள்ள வியாபார சூழல் நம்பகத்தன்மையை போக்கி விட்டது

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)