Wednesday, September 15, 2010

ஹரமைனும் இரண்டாயிரம் கி.மீ தரைவழி காருந்து மார்க்கப் பயணமும்

வாழ்வில் முதன்முறையாக ரமலானில் உம்ரா செய்யும் பாக்கியம்
கிடைத்தது. ரமலானில் உம்ரா செய்வது பெருமானாருடன் ஹஜ்
செய்வதற்க்குச் சமம் என்று சொன்னதுதான் போதும் மக்கள்
லட்சக்கணக்கில் குவிந்து விடுகிறார்கள் ஒவ்வொரு ரமலானிலும்.

நாங்கள் நால்வர் டொயோட்டா கேம்ரியில் முதலில் மதீனா முனவ்வரா
பின் மக்கா முகர்ரமா சென்று உம்ரா நிறைவேற்றி திரும்பும் வழியில்
ஜித்தா,ரியாத்,தமாம் சென்று உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்து
விட்டுத் திரும்பியது வாழ்வின் உன்னதத் தருணங்களில் ஒன்றாகும்.

* * * * * * * * * * * * * * * *

ரமலான் உம்ரா அதீத திருப்தி தரக் காரணம் தராவீஹும் கடைசிப்பத்தின்
கியாமுல் லைல் மற்றும் அழுகையுடன் அமைந்த கூட்டு துஆக்களும்.
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக நம் செவிகளுக்கு அமுதூட்டி வரும்
ஷேக் ஷ்ரைமும் ஷேக் சுதேஸும் கியாமுல்லைலில் விருந்து
படைத்தார்கள். தராவீஹில் ஷேக் மாஹிரும் இன்னொருவரும் மனதுக்கு
இதமாக கிராஅத் மழை பொழிந்தார்கள். இவர்களை மட்டும் அறிந்த எனக்கு
இம்முறை புதியதாக ஒருவரைக் கேட்க சந்தர்ப்பம் வாய்த்தது. அவர்,
மதீனாவின் ஷேக் ஸலாஹ் அல்புதைர். வாவ், எல்லோரையும் தூக்கிச்
சாப்பிட்டு விட்டார் மனுஷன். ஷ்ரைமுடைய Grand குரலும் சுதேஸுடைய
நளினமும் மாஹிருடைய மென்மையும் கலந்த குரல், மாத்திரமல்ல கல்
நெஞ்சக்காரர்களையும் அழ வைக்கும் துஆ செய்யக்கூடியவர். மதீனாவில்
இவருடைய துஆவின் போது அழுத அளவுக்கு மக்காவில் சுதேஸின்
துஆவின் போது அழவில்லை. (ஒரு வேளை முதலில் மக்கா சென்று பின்
மதீனா சென்றிருந்தால் vice versa வாக இருந்திருக்குமோ ?)

* * * * * * * * * * * * * * * *

பெண்களின் வருகை 50 சதவீதமா அல்லது ஆண்களை விட அதிகமோ
என்று எண்ணும் அளவுக்கு அதிகமாக வந்திருந்தனர். அது மட்டுமல்ல‌
ஹஜருல் அஸ்வதின் அருகில் செல்ல முண்டியடித்தவர்களில் 15 சதவீதம்
பெண்கள். அஸருக்குப் பின், நோன்பு திறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு
முன் எனது நண்பர் சொன்னார் 'கஃபாவைப் பார்த்துக் கொண்டிருப்பதும்
நன்மை தரக் கூடிய வணக்கமாகும், வாருங்கள் அதனருகில் சென்று
அமர்ந்து கொள்ளலாம்.' என்று.

ஆனால் கடுமையான கூட்டமும் அதனைக் கட்டுப்படுத்தும் காவலர்களின்
கெடுபிடிகளாலும் எங்களால் கஃபாவைக் காணும் வகையில் நிற்கவோ
உட்காரவோ முடியாமல் பின்னேறி நாங்கள் அமர்ந்த இடம் பெண்கள்
அதிகமாக இருந்த இடம். நண்பர் சொன்னார் 'என்னங்க இது, நன்மையை
நாடிச் சென்றோம், விதி பாவத்தின் பக்கம் இழுத்து வந்து விட்டதே.
அதுவும் நோன்பு திறக்கும் நேரம் பார்த்து.
திடீரென எனக்குள் ஒரு ஞானப் பொறி தட்ட :) , நான் சொன்னேன்.

'பாய், அதுவோ ஹரம்; அதனைப் பார்த்தால் நன்மை ,
இதுவோ ஹரீம் (பெண்) ; இவர்களைப் பார்க்காமல் இருந்தால் நன்மை.
எனவே இரண்டிலும் நன்மைகள்தாம், கவலைப்படாதீர்கள் :)

(பெண்களின் எதிரில் இருந்து கொண்டு அவர்களைப் பார்க்காமல் இருப்பதும்
நமக்குள் கட்டுப்பாடு வருவதற்கான பயிற்சிதான்).

ஹரம்(புனித பகுதி),ஹராம்/மஹ்ரம்(தடுக்கப்பட்ட),ஹரீம்/ஹுருமா(பெண்)
இவையெல்லாம் ஒரே எழுத்திலிருந்து வந்தவையென நினைக்கிறேன்.
(அரபி பண்டிதரின் ஒப்புதலையோ/மறுதலித்தலையோ எதிர் பார்க்கிறேன்)

பெண்களை இஸ்லாம் எந்தளவு கண்ணியப்படுத்த அல்லது பாதுகாக்க
நினைக்கிறது என்பதை மேற்கண்ட‌ சொற்களைச் சிந்திப்போருக்குத் தெரியவரும்.

* * * * * * * * * * * * * * * *

இங்கு இரக்கப்பட வேண்டியவர்கள் ஹரமிலும்,அதனைச் சுற்றியுள்ள்
ஹோட்டல்களிலும் கிளீனிங் வேலை பார்ப்பவர்கள். பாவம் மக்காவில்
வேலை மதீனாவில் வேலை என்று ஆர்வமாக வந்தவர்களுக்கு இங்குள்ள
வேலைப் பளுவில் பெண்டு நிமிர்ந்து விடுகிறது, அதுவும் வேலைப் பணிகள்
குறைக்கப் பட வேண்டிய ரமலான் மாதத்தில். மேலும் பெண்களை
அதிகமாகப் பார்த்து மனம் கெடுவதும் பயணிகளில் சிலர் இரக்கப் பட்டுக்
கொடுக்கும் டிப்ஸ்/ஸதகா வாங்கிப் பழகி, அதை எல்லோரிடமும்
எதிர்பார்த்து, பின் வாய் விட்டே கேட்கும் அளவுக்கு மாறிப் போகிறார்கள்.
புனிதப் பகுதியைக் கழுவிப் புண்ணியம் தேட வந்து மனம் குப்பையாய்
போனதை அறியாமல் வேண்டா வெறுப்பாக வேலை செய்து வரும்
இவர்களை நினைத்து இரக்கப் படாமல் என்ன செய்வது.

உச்சமாக‌, பெருநாள் இரவில் சுத்தம் செய்கிறோம் பேர்வழி என்று
ஆங்காங்கு மாட்டி வைக்க‌ப்பட்ட பைகளையும் பொதிகளையும் பிளாஸ்டிக்
கீஸ்களையும் பிய்த்தெடுத்து குப்பைத்தொட்டியிலோ அல்லது வெளியே
சில மீட்டர் தூரம் கொண்டு சென்று ஒரு மூலையிலோ போட்டு விட்டதால்,
பயணிகள் தமது கடவுச்சீட்டு,பர்ஸ்,செல்போன்,புதிய/பழைய துணிமணிகள்,
உறவினர்களுக்காக வாங்கி வைத்திருந்த்த பொருட்கள் அனைத்தும் நிறைந்த
அல்லது இவற்றில் ஏதோ வைத்திருந்த பை காணாது தவித்து பின்
எடுத்தவர்களைச் சபித்து ..., வேண்டாம்பா,
இந்த சாபத்தை வாங்குவதை விட சம்பாதிக்காமலே இருந்து விடலாம்.

(தொடரும்)

5 comments:

ஹுஸைனம்மா said...

வாழ்த்த்துகள். உண்மையிலேயே இது பெரும் பாக்கியம்தான்.

//விதி பாவத்தின் பக்கம் இழுத்து வந்து//

என்ன இது? பெண்களைப் பார்த்தாலே, நீங்கள் தவறிழைப்பவர்கள் ஆகிவிடுவீர்களா? அதுவும் கண்ணியமாக உடையணிந்திருப்பவர்களைப் பார்த்துமா? அதுவுமல்லாமல், இறைப் பொருத்தத்தை நாடி, இறைவன் வீட்டின்முன் அமர்ந்திருக்கும்போது எதுதான் நம்மைச் சலனப்படுத்த முடியும்?

ஏன், அந்தப் பெண்களும் அங்கே எவ்வளவு ஆண்களைப் பார்க்கிறார்கள், அவர்கள சலனப்படவா செய்கிறார்கள்?

அரபுத்தமிழன் said...

ஹுசைனம்மா,
'உங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள் என்ற வசனமும்,

'நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். (32)

உம்மஹாத்துல் முஃமுனீன்கள் குரலுக்கே பர்தாவும் ‍ஏனென்று தெரிகிறதா அல்லது
உள்ளத்து நோய் இல்லாதார் இங்கு யாருமில்லை என்பதாவது புரிகிறதா

azeem basha said...

i am residing in jeddah past 18 years, i used to 2 umrahs during ramadan and 5 umras during period of other than ramadan, but the feel you gave is amazing, since we are doing often we are thinking that going to juma masjid for prayer every week.

thank you.

azeem basha said...

i am residing in jeddah past 18 years, i used to 2 umrahs during ramadan and 5 umras during period of other than ramadan, but the feel you gave is amazing, since we are doing often we are thinking that going to juma masjid for prayer every week.

அரபுத்தமிழன் said...

ThanX brother Azeem BaShah.
You people have lots of chances to earn more for Akhirah.

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)