Thursday, June 10, 2010

ஆடியில் தெரிவது அகமா புறமா ?

காலை,

அலுவலக சகா : என்ன சார், வீட்ல பிரச்னையா ?
நான் : இல்லையே !!
சகா : பின்ன ஏன் சோகமா இருக்கீங்க‌ ?
நான் : ! ? !

------------------------------------------------------------------
மாலை,

நண்பன் : ஏம்பா கோபமா ! யார் மேலே ?
நான் : சே சே அப்படியெல்லாம் இல்லை !
நண்பன் : இல்லையே, உன் முகம் சொல்லுதே .
நான் : ! ? !


------------------------------------------------------------------
வீடு திரும்பிய பின்,

மனைவி : ஏன் இப்படி கடுகடுவென்று இருக்கீங்க
(மனதுக்குள் : எப்பப் பாரு மூஞ்சி, சிடுமூஞ்சியாவே இருக்கு)
நான் : ம். ஒண்ணுமில்லை. (மனதுக்குள் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்)
மனைவி : வெளியிலே இப்படி இருந்துக்குங்க, வீட்டுல கொஞ்சம்
'சிரித்த முகமும் சீதேவித் தனமுமா' இருங்களேன்.
நான் : அடிங்.. , ஆமா வெளிலே ஏன் அப்படி இருக்கணும் ?
மனைவி : அதுவா, அப்பத்தான் மற்றப் பொண்ணுங்க யாரும் உங்க‌
கிட்ட வரமாட்டாங்க :-)
நான் : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........

------------------------------------------------------------------

உடனே கண்ணாடிக்கு முன் நின்று முகம் பார்த்தேன்.

டேய்! என்னாங்கடா எல்லோரும் என்னைப் போய் இப்படிச் சொல்றீங்க ..
அழகான முகத்தைப் போய் 'சிடுசிடுவென்று இருப்பதாகச் சொல்றாங்களே, (பொய்யோ,பொறைமையோ யார் கண்டா)
ஹூம், நாமும் சினிமாவில் நடித்திருந்தால் ஒரு Successful Hero வாக
வலம் வந்திருக்கலாம் ...

இப்படியாக எண்ணம் பயணிக்கையில் ஒரு சிறு பொறி தட்டியது ..

ஆம், கண்ணாடியில் நான் என் முகம் பார்க்க வில்லை, மாறாக
என்னையே பார்க்கிறேன். அதாவது தன்னை விரும்பாதவர் யாரும்
இருக்க முடியாது. தான் விரும்பும் 'தன்னை'ப் பார்க்கும் போது
மலர்ந்திருக்கும் முகம் (காதலன்/காதலி தவிர்த்து) வேறு யாரைப்
பார்த்தாலும் கவிழ்ந்து கொள்கிறதே ஏன் ?

அதனாலே மக்கா!

உங்க முகம் அழகா இருக்கணுமா ?

உள்ளத்தை அன்பால் நிரப்புங்கள்.

பிறரையும் நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.


"மனம் என்னும் மேடை மேலே முகம் கொண்டு ஆடுது ... "

5 comments:

ஹுஸைனம்மா said...

நானும் ஆடிமாசத்துல காத்தடிச்சு புழுதிதான் தெரியும், இதென்னா அகம், புறம்னு நினச்சுகிட்டிருந்தேன்!!
ஆடி - கண்ணாடி!!

இப்படி சில சம்யம், நாம நல்லாருந்தாலும், நம்மள இப்படிக் கேட்டே கடுப்பாக்கிருவாங்க சிலர்!!

ஜெய்லானி said...

//"மனம் என்னும் மேடை மேலே முகம் கொண்டு ஆடுது ... "//

பாட்டு வரி சும்மா நச்

அரபுத்தமிழன் said...

ஹுசைனம்மா,
//இப்படி சில சம்யம், நாம நல்லாருந்தாலும், நம்மள இப்படிக் கேட்டே கடுப்பாக்கிருவாங்க சிலர்//

அதே அதே

----------

ஜெய்லானி,
பழைய பாடல் போலே புதிய பாடல் இல்லை
வயசு போன முல்லை .. வாடிப் போகவில்லை.

சிநேகிதன் அக்பர் said...

அசத்தல் போங்க. நல்லாயிருக்கு பாஸ்.

அரபுத்தமிழன் said...

அப்படியா ! நன்றி, அக்பர்.

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)