உறுதுணையாக இருக்கும் ஹஜ் கமிட்டிக்கும், அவர்கள் தங்குவதற்கு
இலவசமாக இட வசதி வக்ஃப் செய்தவர்களுக்கும் இறைவன் அருள்பாலிப்பானாக.
ஹாஜிகளை வழியனுப்பும் நிகழ்வில் கலந்து கொள்ள சமீபத்தில் ஹஜ் கமிட்டி
சென்றிருந்தேன். தொடர்ந்து சொற்பொழிவு ஆற்றியவர்களுக்கும் இஹ்ராம் கட்டுவதற்கு
உதவுவதில் ஆர்வமுடன் சொல்லிக் கொடுத்தவர்களுக்கும்
ரூம் மற்றும் பஸ் ஏற்பாடுகள் குழப்பமில்லாத வகையில் அமைத்துக் கொடுத்த
கமிட்டிக்கும் மனமார்ந்த நன்றிகளும் துஆக்களும் உரித்தாகட்டும்.
ஒரே ஒரு விஷயம் மனதை நெருடியது..
மஹரம் என்ற பெயரில் மஹரமில்லாதவர்கள் ஒரே ரூமில் தங்க வைப்பதால்
வரும் விளைவுகளை இன்னும் அறியவில்லையா. ஏன் இப்படி அங்கங்கே
ஆட்களைப் பிடித்து மஹரம் என்ற போர்வையில் குலுக்கல் செய்கிறீர்கள்.
அநேகர் வயதானவர்களாய் இருப்பதால் பெரிதாக ஒன்றும் ஏற்படவில்லை.
அறுபதுக்குள் இருந்து விட்டால் அபாயம் ஏற்பட நேரிடலாம்.
எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இந்த விஷயத்தில் கொஞ்சம்
கறாராக இருக்க முயற்சி செய்யுங்களேன்.
ஒரு அன்னிய ஆணும் அன்னியப் பெண்ணும் தனியாக இருக்கும் பட்சத்தில்
மூன்றாவதாக ஷைத்தான் ஆஜராகி மனதில் ஊசலாட்டத்தைப் போடுவானே.
ஹலாலை ஹராமுடன் கலக்க விடலாமா ?
அடுத்த முறையிலிருந்தாவது தயவு செய்து கண்கொத்திப்பாம்பாக இருந்து
தடை செய்ய முயலுங்கள். அல்லாஹ் உங்களுக்கு நல்லுதவி புரிவானாக.
ஆமீன்! வஸ்ஸலாம்!
5 comments:
தேவையான கோரிக்கை..நல்ல விஷயம் எப்படியும் போய்ச் சேர்ந்து விடும்..
ஆமீன் என்னுடைய துவாவாக...
அப்புறம் எப்படி இருக்கீங்க..நலம் விசாரிப்பு படலம் இப்பதான் தொடங்குகிறது.. :)
அஸ்ஸலாமு அலைக்கும் தம்பி,
எங்கே ஆளையே காணோம், இப்ப கத்தாரில் இல்லையா.
பதிவுகளும் ரொம்பக் கம்மியாவே இடுறீங்களே (நீங்க
என்னைக் கேட்பதற்கு முன் முந்திக்கொண்டேனோ:)
வணக்கம்..
பல புதிய ஃபேஷன் நகைகள் அறிமுகம் செய்து இருக்கிறோம்.. பார்க்க வாருங்கள்.. மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்
அன்புடன்
http://newjanatha-fancyjewellery.blogspot.com/
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்தி உள்ளேன்.பாரவை இட்டு தங்கள் மேலான கருத்தினை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post a Comment
நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை
எனினும்
" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)