Monday, October 17, 2011

அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்ம'ண/ன‌'ம்

சாந்தியும் சமாதானமுமற்ற
சாக்கடைச்  சிறு சந்தில்
சதாகாலமும் உழன்ற பெரிதுவப்பு கூடி

சட்டென்று சிலிர்த்த சிலிர்ப்பில்
பட்டென்று தெரித்த
வளர்ப்பும் வன்மமும்
வார்த்தைகளினூடே
வடிந்து காய்ந்தும் விட்டது.

விட்டேனா பார் என்று
வீம்பு காட்டி அருகில் செல்ல‌
தெம்பு இல்லாமல் இல்லை
எனினும்
வம்புதும்பில்
நாட்டமுமில்லை
நம்பிக்கையுமில்லை

மனிதன்
தேறும்போது
வானவர் போல் ஆகிறான்

நாறும் போது
மிருகத்தை விடக் கீழாகிறான்.

மிருகங்களில் மூன்று வகை

பசிக்காகவும் தேவைக்காகவும்
அடுத்தவர்களின் பொருளைத் தின்னும்
ஆடு மாடு போன்றவை

பசிக்காகவும் தேவைக்காகவும்
அடுத்தவர்களையே தின்னும்
சிங்கம் புலி போன்றவை

எந்த விதப் பிரயோஜனமுமின்றி
சும்மாவே அரிப்பெடுத்து
அடுத்தவரைத் தீண்டும்
பாம்பு தேள் போன்றவை

இதில் இஸ்லாத்தை
அவ்வப்போது தீண்டும்
முஸ்லிம்களை சீண்டும்

வால் ராஜாக்களும்
பெயரில்லாக்களும்
எந்த ரகம் தெரியுமோ

ப..ப..பப்..பரப்..பார்ப்..
பாம்பு ரகமே

பொறாமையில் உழல்பவன்
முஸ்லிமைச் சீண்டுவான்

அழிவைத் தேடுபவன்
இஸ்லாத்தைச் சாடுவான்

ரெண்டுமே அழிவுதான்
எனவே
வேண்டாமே தீண்டாமை

சாந்தியும் சமாதானமும்
சங்கையான சகோதரிகள்

அவர்களோடு ஒரு நல்ல‌
சகோதரனாக வாழ முயல்வோம்.

வஸ்ஸலாம்


டிஸ்கி : அமெரிக்கா,இந்தியா போன்ற 'பெரிய' இடங்களில் இருந்து கொண்டு
'கொட்டுவதால்' பரமசிவன் கழுத்துப் பாம்பு என்று எழுதியிருந்தேன். ஆனால்
அது ஒரு சமூகத்தின் குறியீடு என்பதைக் கலையகம் (http://kalaiy.blogspot.com)
சென்று அறிந்து கொண்டதால் மாற்றி விட்டேன்.

18 comments:

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

//சாந்தியும் சமாதானமுமற்ற
சாக்கடைப் பெருவெளியில்
சதாகாலமும் உழன்ற பெரிதுவப்பு கூடி//

மாஷா அல்லாஹ் ஆரம்பமே அருமை
அல்லாஹ் உங்களுக்கு நன்மைகளை செய்வானாக

அரபுத்தமிழன் said...

ஆமீன், ஜசாக்கல்லாஹு கைரன் யா அகீ ஃபில் இஸ்லாம்

அப்துல்மாலிக் said...

தமிழ்மணமே மன்னிப்புகேள்


தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்...

அரபுத்தமிழன் said...

//தமிழ்மணமே மன்னிப்புகேள்//

அவ்வண்ணமே கோரும்
அரபுத்தமிழன்

நன்றி சகோ அ.மா

UNMAIKAL said...

Click the link below and read.

1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...


2.. தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.


3.
தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!


4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

5.
தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!



6.
தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?



7.
தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..

8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க


9. மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!


10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?
11. தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா


12. அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >


13. தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???


14. தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்


15. தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!


16. விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?


17. தமிழ்மணமே மன்னிப்புகேள் 2

18.தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...


19. தமிழ்மணத்துக்கு கடுமையான கண்டனங்கள்


20. தமிழ்மணத்திற்கு ஒரு இறுதிக் கடிதம்!


21. யாருக்கு வேனும் உங்கள் ஓட்டு பட்டை

22. பதிவுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.


23. தமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் ?


24. சீ தமிழ் மனமே .......

25. தமிழ்மணம் – வாசமில்லாது போனது ஏனோ?


26. மண்னிப்பு கேட்கும் வரை தமிழ்மணத்தை தூக்கியெறிவோம்

27. தமிழ்மணம்-உண்மைய சொன்னா கசக்கிறதா?

28.
அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்ம'ண/ன‌'ம்


.

ஜெய்லானி said...

ஜஸாக்கல்லாஹ் க்கைர்

Jaleela Kamal said...

நல்லது

ஹுஸைனம்மா said...

//அழிவைத் தேடுபவன்
இஸ்லாத்தைச் சாடுவான்//
சரியானது. நிறைய உதாரணங்களும் உண்டு.

HajasreeN said...

mashaallah

சாந்தியும் சமாதானமும்
சங்கையான சகோதரிகள்

iwangala kewala padutthinawan alinju porathu sure

Yoga.S. said...

"துஷ்டனை கண்டால் தூர விலகு".நலம் உண்டாகட்டும் சகோ.கவிதையால் சாடியிருக்கிறீர்கள்.

suvanappiriyan said...

தமிழ்மண நிர்வாகி நடந்த தவறை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்பதே சரி என்று படுகிறது. இனி இது போன்ற தவறுகள் நடக்காமல் மற்ற நிர்வாகிகளும் கண்காணிக்க வேண்டும்.

Anisha Yunus said...

//சாந்தியும் சமாதானமும்
சங்கையான சகோதரிகள்

அவர்களோடு ஒரு நல்ல‌
சகோதரனாக வாழ முயல்வோம்.
//

nerunji mullaaga kuthum varigal. purinthu kondu nadanthaal sari.

jazakallaahu khayr,

UNMAIKAL said...

2008ம் வருடமே இணையதளத்தில் கீழ்க்கண்டவாறு பிரசுரமாகியிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியாக இருக்கிறது.

1.பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

வார்த்தை ஜாலக்காரரான இவருக்குப் பதில் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சும்மா பொழுதுபோக்குக்காக பின் டெஸ்க்கில் உட்கார்ந்து கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் புரியாத வார்த்தை வரிசைகளை அடுக்கும் இவருக்கெல்லாம் பதில்சொல்வது நமது முட்டாள் தனம். இவன் ஆயிரம் சல்ஜாப்பு சொன்னாலும் அதிகாரத்திமிர் தலைக்கேறி அலையும் ஒரு ஜந்து தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது! …………

SOURCE: பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

2. காலைல வந்து பதிவு எழுதலாமுன்னு கீபோர்டுல கைய வச்சா ஒரு பாலாப்போன எடுபட்ட சனியன் தான் கண்முன்னாடி நிக்கறான். நான் எதை ஒரு ஆல்டர்நேட்டிவ் மீடியா என்று நினைத்தேனோ அதை தன் பொச்சறிப்பிற்கு பயன்படுத்தி அராஜகம் செய்யும் இந்த சனி பகவானின் திருவருவம்!! கண்முன் வந்து தொலைக்கிறது... இந்த சனியனுக்கு பிடித்த எள் உருண்டை மட்டுமே படைப்பதா... இல்லை என் உருண்டை படைப்பதா என்று ஒரே குழப்பம். டமிழ்ஸ்மெல் நிலைமை இவ்வளவு கேவலமாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை... இருந்த ஒரே பெண்கலகக்குரலும் கழுத்து நெறிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.. அதுவும் இந்த சனியனின் வரிகளை மேற்கோள் காட்டியதற்க்காக... என்னடா பரிகாரம்னு ஒரு ஜோசியன்கிட்ட கேட்டா...

ரமணீதராய நமஹன்னு காலைல 1008 தடவை அடிச்சு அதை டமிழ்ஸ்மெல் லிஸ்ட் அட்மினுக்கு அனுப்பிவிட்டு பிறகு பதிவு எழுதனும்னு சொல்றாருங்க..

ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....

Source: ரமணீதராய நமஹ+ப்ளடி டமிழ்ஸ்மெல்+பரிகாரம்

3. பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!
மகராசா, வணக்கமுங்க... இடுப்புல துண்டைக்கட்டிக்கிட்டு காலில போட்றுக்கர செருப்ப கக்கத்துலு வச்சுக்குட்டு கும்புடறமுங்க... நீங்க யாரு.. என்னன்னு தெரியாம மோதிட்டமுங்க... உங்களுக்கு கோபம் வந்தா என்னாகுமுன்னு தெரியாம இத்தனை நாள் பொழப்பை கெடுத்துக்கிட்டு எழுதிட்டனுங்க...

உங்க தயவு இல்லைன்னா நாங்க தூக்கியெறியப்படுவோமின்னு இம்புட்டுநாள் தமிழ் மணம் படீங்க தமிழ்படீங்கன்ன பொட்டைவெயிலில வழியில பாத்தவங்ககிட்டல்லாம் சொன்னபோதெல்லாம் தெரியலீங்க...

இப்பத்தான் தெரிஞ்சதுங்க உங்க மேன்மை... ………….. ……. …

SOURCE: பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!

அரபுத்தமிழன் said...

அன்புச் சகோதர சகோதரிகள் உண்மைகள்,ஜெய்லானி,ஜலீலா கமால்,
ஹுசைனம்மா,ஹாஜாஸ் ரீன்,யோகா,சுவனப்ரியன்,அன்னு
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆஃபீஸ் வந்தபிறகுதான் நெட் வாசம் என்பதால்
தாமதமான நன்றிகள்.

அரபுத்தமிழன் said...

சகோ அன்னு, பச்சையாகச் சொல்லாமல் சங்கையாகச்
சொல்லியிருக்கிறேனே, புரிந்து தொலையுமா என்று
யோசித்துக் கொண்டிருந்தேன். ஜசாக்கல்லாஹு கைர்,
அதைத் தாங்கள் கோடிட்டுக் காட்டி விட்டீர்கள்.

Haja said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நம் அனைவர்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.......!

என்னால் இணையத்தில் சரிவர உலா வர முடியாமையால் என்னுடைய கண்டனத்தையும் தமிழ் மணத்திற்கு வெளிப்படுத்த முடியவில்லை, இருந்தும் நம் சகோத மக்களின் ஒற்றுமையால் ஏக இறைவனின் உதவியால் வெற்றி கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்.........!

தமிழ் மணம் ஒரு உயர்ந்த திரட்டி, அதன் சார்பாக எதை வெளியிட்டாலும் மறுப்பு தெரிவிக்க யாரும் இல்லை என்ற எண்ணத்தில் இரமனீதரன் (பெயர்லி) தமிழ் மணம் மூலமாக உலா வந்துக்கொண்டிருந்தார், அதை நம் சகோத தகர்த்தெரிந்தார்கள் என்பதை அந்த வெந்த மணம் உணர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை, அல்ஹம்துலில்லாஹ்...........!

மேலும் நம் சகோ இதுப் போன்ற விஷயங்களை கண்டறிந்து சுட்டிக்காட்டுவதில் தயக்கம் கொள்ளக்கூடாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். வஸ்ஸலாம்...........

Unknown said...

ஸலாம்
உங்கள பார்த்து எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு பா . மார்க்க விசயத்துல கலக்குறீங்க பா .
பொறமை படலாம்ல..........


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக்கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்: இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும், கற்றுக்கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்)
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அஸ்வுத் (ரழி) ஆதாரம்: புஹாரி 73

Suresh Subramanian said...

... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)