Wednesday, May 04, 2011

அதிபர் ஒபாமாவுக்கு நன்றி

கொடூர டைரக்டர்களால்
ஆரம்பித்து வைக்கப் பட்ட‌
ஒரு மோசமான திகில் திரைப்படத்தை
முடிவுக்குக் கொண்டு வந்ததற்கு
நன்றியோ நன்றி

ஹீரோ, ஆன்டி ஹீரோ, வில்லன் என‌
ஒரு ஆளுக்கு இத்தனை கேரக்டரா
படம் முடிந்த பிறகுதான் தெரிந்தது
படத்தை முடித்து வைத்த
டைரக்டர்தான் ஹீரோ என்று

வில்லனைப் பெரிதாகக் காட்டினாலே போதும்
ஹீரோ பெரிதாகத் தெரிவார் என எங்கள்
வலையுலக சூப்பர் ஸ்டார்
லக்கிலுக் யுவகிருஷ்ணா
அன்றே சொல்லியிருக்கிறார்

நீங்கள்தான் ஹீரோ என்று
ஒத்துக் கொள்கிறோம்
தயவு செய்து மீண்டும் மீண்டும்
இது போன்று படமெடுத்து
ஹீரோயிசத்தைத் திணிக்காதீர்

உங்களுக்குப் பின் ..
கொடூர டைரக்டர் யாரும் வராத அளவுக்கு
ஏதாவது செய்ய முடியுமா (யா) ஒபாமா

நியாயத் தீர்ப்பு நாளென்று
ஒன்று இல்லையென்றால்
உலகில் நடக்கும்
குழப்பங்களையும் கொடூரங்களையும்
கண்டு இந்நேரம்
பைத்தியமாகி இருப்போம்

அல்ஹம்து லில்லாஹி அலா குல்லி ஹால்

கடைசியில் ஒரு வேண்டுகோள்
தங்களின் பெயரில் ஒரு திருத்தம் வேண்டும்
நடு எழுத்து 'சா'க வேண்டாம்.
'மா'வின் பின் மறைந்திருக்கும் பெயர்
மீண்டும் உயிர் பெற வேண்டும்.

அந்த ஆசை கொஞ்சம் வந்தாலும் போதும்
வல்ல ரஹ்மான் நிறைவேற்றித் தருவான்.


வஸ்ஸலாம்.

7 comments:

ஹுஸைனம்மா said...

கவிதை புரியுது, புரியல ரேஞ்சுல இருக்கு (எனக்கு). :-))))))

அது இருக்கட்டும், படத்தைப் பத்தி என்னோட விமர்சனம் என்னனா, டைரடக்கரே எதிர்பார்க்காத அளவு ஹீரோ வளர்ந்து, வளர்த்த கடாவா மாறிட்டார்!!

ஆமா, போற போக்குல, டைரக்டரையே ஹீரோவாக அழைப்பு விடுக்குறீங்களே, தெகிரியம்தான் உங்களுக்கு!!

அரபுத்தமிழன் said...

ஏனென்றால் இவர் நல்லவர் வல்லவர்,
மோடி போல அல்லது இவருக்கு முன்னிருந்தோர் போலக்
கேடியல்ல, கோடிக்கணக்கில் ஜீரோ உள்ளவர்.
ஜீரோக்களுக்கு முன்னால் (இறைவனுக்கு முன்னால் மண்டியிட்டு)
'ஒரு'வனைப் பெற்றுவிட்டால் இவர் ரியல் ஹீரோதானே.

(ம்ஹூக்கும், இதுக்குப் பதிவே தேவலைன்னு நெனக்கிற‌ மாதிரியிருக்கே :)

அபிராமத்தான் said...

அருமை நண்பரே

அபிராமத்தான் said...

ungaludan naanum inaidhu vitten

அரபுத்தமிழன் said...

நன்றி நண்பரே,
கைகள் இணைவதை விட
மனங்கள் ஒன்று படுதலே சாலச் சிறந்தது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.

pichaikaaran said...

அருமையான சிந்தனை

அரபுத்தமிழன் said...

நன்றி தோழா,
தங்களின் கமெண்ட்ஸ்
எப்போதும் எனக்கு ஊக்கம் தருபவை.

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)