பலூன் மேடைகளில்
குதித்துச் சறுக்கி விளையாடும்
குழந்தைகளைக் கண்டு
மனம் ஏங்கியது
நமக்கும் இது போன்று
கிடைத்திருக்கவில்லையேயென
இதுவெல்லாம் இப்ப
எம்புள்ளைக்கு
எங்கே புரியப் போகிறது
சறுக்கப் பயந்து மேலேயே
நின்று கொண்டிருக்கிறான்
கொடுத்தக் காசும்
நேரமாய்க்
கரைந்து கொண்டிருக்கிறது
'டேய் சறுக்குடா'
=========================================
அடுத்தப் பதிவு சம்பந்தமான ஒரு அறிவிப்பு
-----------------------------------------------
தோழர் பார்வையாளன் 'தர்ஹாவைப் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டத்தை'
எழுதுமாறு என்னிடம் கேட்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல நிறைய பேர் ஆவலுடன்
எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும்
அளவுக்கு நான் ஒரு நல்ல எழுத்தாளனோ அல்லது தட்டச்சனோ கிடையாது.
இதுவோ ஒரு குழப்பமான சப்ஜெக்ட். ஆதாரத்துடன் விளக்கம் கொடுக்கும்
அறிஞர்கள் எழுதினால் தெளிவாக இருக்கும். இருந்தாலும் என் மீது பிரியம்
வைத்து எதிர்பார்ப்பதனால் இன்ஷா அல்லாஹ் அடுத்தப் பதிவாக அதை இட
நினைத்துள்ளேன். அநேகமாக இரண்டு பதிவுகளாக இட விருப்பம்.
முஸ்லிம் அன்பர்கள் தமது கருத்துக்களை அல்லது வாதத்தை
பின்னூட்டினால் 'தீர்ப்பு' சொல்ல வசதியாயிருக்கும் :))
வஸ்ஸலாம்.
14 comments:
எளிமையான.. அருமையான வரிகள் சகோ..
////இதுவெல்லாம் எங்க இப்ப
இவனுக்குப் புரியப் போகிறது////
ஹா ஹா ஹா.. கரெக்டுதான்..
நன்றி அருமை பாபு
அருமையான வரிகள்.... எளிமையான தமிழ்..
கவிதை அருமை..
நன்றி கருன் சார்
அஸ்ஸலாமு அலைக்கும்! தர்ஹாவைப் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்' அருமையான தலைப்பு. பலமுறை பேசப்பட்டதாக இருந்தாலும் விளங்க வைக்கும் கோணம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும். கண்டிப்பாக எழுதுங்க சகோ, ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம்.
வ அலைக்குமுஸ்ஸலாம். ஆர்வத்திற்கு நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும்!
தர்ஹா சம்பந்தமாக பதிவிடுங்கள். நானும் சில விளக்கங்கள் பின்னூட்டத்தில் கொடுக்கிறேன்.
வ அலைக்குமுஸ்ஸலாம் சகோ. முதல் பகுதி இன்ஷா அல்லாஹ்
நாளை வரலாம், தங்களின் பின்னூட்டத்தை அவசியம் எதிர்பார்பேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்!
ஏக்கத்தொடு கவிதை அருமை.
தர்ஹா சம்பந்தமாக பதிவிடுங்கள். எதிர்பார்க்கிறோம்
வ அலைக்குமுஸ்ஸலாம் சகோ.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிஞரே.
முன் ஜாமீன்??!! :-))))
ஹல்லோ நானு நீதிபதி, நீங்க என்னா 'தி', வாதியா பிரதிவாதியா இல்ல
கட்டப் பஞ்சாயத்து 'பசுபதியா' :)
கவிதை நேத்தைக்கு முந்தா நாளு லூலு எக்ஸ்பிரஸ் விளையாட்டுத்
திடலில் உருவானது. நீங்க போனீங்களா குழந்தைகளோட ?
அருமையான வரிகள்....
நன்றி அருமை மருத்தவர் அய்யா
Post a Comment
நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை
எனினும்
" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)