Monday, March 07, 2011

வறுமையின் நிறம் சிவப்பு

அண்டை வீட்டான்
துபாயில் வேலை
குறைந்த சம்பளம் வங்கிக் கடன்
கடன்காரர் தொல்லையென‌
புலம்பி விட்டுச் சென்றதன் பின்
எனது செல்போன் ஒலித்தது

'ஏம்பா பக்கத்து வீட்டுக்காரன்
படிக்காதவன் ...
இங்கே சொத்துக்களாய்
வாங்கிப் போடுகிறான்
நீயோ படிச்ச புள்ள‌
வெவரமில்லாம இருக்கியே'

அடப்பாவி மக்கா,
இக்கரைச் சிவப்புக்கு
அக்கரைப் பச்சைதான் காரணமோ



-----*-----*-----*-----



நூறு திர்ஹத்திற்கு வாங்கிய
சட்டை அணிந்து வந்த அன்று

அதே நிறத்தில் அதே டிசைனில்
ஆஃபீஸ் பாயும் அணிந்திருந்தான்

நெருங்கிப் பார்த்ததில்
தரம் குறைந்திருந்தது தெரிந்தது

விலையை விசாரித்தேன்
பத்து திர்ஹம் என்றான்

அவனது சம்பளத்தை யோசித்தேன்
அதுவும் எனதை விடப் பத்து மடங்கு குறைவு

இப்படித்தான் விரலுக்கேத்த வீக்கமாய்
எல்லோருடைய பொழுதும் கழிகிறதோ



டிஸ்கி :
கவிதை உருவில் என்டர் தட்டி வார்த்தைகளைக் கோர்த்திருக்கிறேன். நறுக்கென்று
எழுதத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் டிங்கரிங் செய்து தந்தால் நலம். :)

இப்படியிருந்தா நல்லாயிருக்கும் இதைத் தவிர்த்தா நல்லாயிருக்கும்னு
புலவர் பெருமக்கள் சொல்லித்தந்தா எவ்ளோ நல்லாயிருக்கும். ஹூம் :(



வஸ்ஸலாம்.

21 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

///இப்படித்தான் விரலுக்கேத்த வீக்கமாய்
எல்லோருடைய பொழுதும் கழிகிறதோ///

எல்லா இடத்திலயும் ஏற்றத் தாழ்வு இருக்குது.

எனது வலைபூவில் இன்று:
இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ

pichaikaaran said...

உங்கள் கவனிப்பு திறன் நன்றாக இருந்தது..
குறிப்பாக இரண்டாவது கவிதை சுப்பர்..

அனால் ஒன்று...

பொருளாதாரம் பேசும் இந்த கவிதையை, கடைசி வரியை மாற்றி இருந்தால் , மனித இயல்பை பேசும் கவிதையாக மாற்றி இருக்க முடியும்... உங்கள் ஆன்மிக சிந்தனைக்கு உகந்ததாகவும் அது இருந்திருக்கும்..
எப்படி?

அவன் சட்டை விலையும் பத்து மடங்கு குறைவு, அவன் சம்பளமும் பத்து மடங்கு குறைவு..
ஆனால் அந்த சட்டை அணிந்த போது அவனுக்கு கிடைத்த மகிழ்ச்சி, திருப்தி, நிறைவும் பத்து மடங்கு குறைவா ? அல்லது அதிகமா ? அல்லது இருவருக்கும் ஒரே அளவு நிறைவு கிடைத்ததா ..
இந்த அடிப்படியில் கடைசி வரி இருந்தால், கவிதைக்கு வேறு அர்த்தம் கிடைத்து இருக்கும்..

எனி வே, இதுவும் நன்றாக இருக்கிறது... வாழ்த்துக்கள்

அரபுத்தமிழன் said...

ஆஹா தலைவரே, அருமையான பின்னூட்டம், இப்படித்தான்
என்னைச் சரி செய்யும் பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.

வெறும் வறுமையை மட்டும் பார்த்து விட்டு ஆன்மீகக்
கண்ணோட்டத்தில் பார்க்கத் தவறி விட்டேன். சுட்டிக்
காட்டியதற்கு நன்றி தோழரே.

ஹுஸைனம்மா said...

முதல் கவிதைக்கு இரண்டாவது கவிதை பதிலாக அமைந்தது பொருத்தம்.

//புலவர் பெருமக்கள் சொல்லித்தந்தா //

ஆவி அமுதாகிட்ட சொன்னா, நல்ல நல்ல புலவர்களையெல்லாம் வகுப்பெடுக்க அழைச்சுகிட்டு வருவாங்க!!

அரபுத்தமிழன் said...

:))) ஹுசைனம்மா என்றாலே இந்த லொள்ளும்
தெய்வீகச் சிரிப்பும்தான் ஞாபகத்திற்கு வருது.
//ஆவி அமுதாகிட்ட சொன்னா//
அப்படீன்னா நல்ல புலவர்கள் யாரும் உயிரோடு இல்லைங்கிறீங்களா :)

Ahamed irshad said...

நறுக்கென்று
எழுதத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் டிங்கரிங் செய்து தந்தால் நலம்//

ithey Kavithaithaane :)

அரபுத்தமிழன் said...

என்ன இருந்தாலும் தம்பி, உங்களுடைய
மாட்டுப் பொங்கல் கவிதை போல் வருமா :)

சக்தி கல்வி மையம் said...

முதல் கவிதைக்கு இரண்டாவது கவிதை பதிலாக அமைந்தது பொருத்தம்.

அரபுத்தமிழன் said...

நன்றி கருன் சார்

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அழைக்கும்

இரண்டு கவிதையும் அருமை சகோ.

Riyas said...

ம்ம்ம் நல்லாயிருந்தது..

ஆனால் இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம்..

100 சட்டையெல்லாம் போட்றிங்களா..அப்ப பெரிய இடத்துலதான் வேல போல..

Riyas said...

கமலஹாசன் படத்து பேரப்போட்டு ஏமாத்திட்டியே மக்கா..

நான் ஏதோ சினிமா பதிவுன்னு நினைச்சி உள்ள புகுந்துட்டன்..

எங்க கடப்பக்கம் ஆளக்கானோம்..

அரபுத்தமிழன் said...

நன்றி சகோ ஆயிஷா

அரபுத்தமிழன் said...

நன்றி ரியாஸ், என்னது கடைப் பக்கம் வரலியா, வரத்தான் செய்கிறேன்,
படிக்கத்தான் செய்கிறேன், ஒரு சில காரணங்களால் நிறைய பேருக்குப்
பின்னூட்டுவது கிடையாது.

அரபுத்தமிழன் said...

//ஆனால் இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம்.//
அதான் எப்டீ செதுக்குறதுன்னு சொல்லிக் கொடுக்கலாம்ல :)

இராஜராஜேஸ்வரி said...

விரலுக்கேத்த வீக்கமாய்
எல்லோருடைய பொழுதும் கழிகிறக்
சரியாகக் கணித்திருக்கிறீர்கள்.

அரபுத்தமிழன் said...

சகோ ராஜ ராஜேஸ்வரியை நன்றியுடன் வரவேற்கிறேன்.

வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் said...

கவிதை அருமையாக உள்ளது.
டிங்கரிங் எல்லாம் வேண்டாம். எப்போதும் உங்கள் கவிதையில் உங்கள் முகம் தெரியட்டும்.
வேண்டாம் அடுத்தவர்களின் டிங்கரிங்.
இன்று நல்ல எழுதுபவர்கள் எல்லாம் உங்களைபோல தொடங்கியவர்கள் தான்.
நம்ம குழுமத்திலும் இணைந்துகொள்ளுங்கள்.
subscribe :gulf_tamilnanbarkal-subscribe@yahoogroups.com
visit http://gulftamilnanbarkal.blogspot.com

அரபுத்தமிழன் said...

ஆஹா நன்றி நண்பர்களே,
குழுமத்தில் இணைவதற்கான அழைப்பிற்கும் நன்றி.

Unknown said...

அருமையான கவிதைகள் இரண்டும்.. வாழ்த்துக்கள்..

அரபுத்தமிழன் said...

நன்றி பாபு. (மீண்டு) வந்தாச்சா.

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)