Wednesday, November 10, 2010

'அல்லாஹ்' எனும் ஆயுத எழுத்து, சில‌ Calligraphic சிந்தனைகள்இது 'அல்லாஹ்' என்பதன் அரபி வார்த்தை எழுத்து. வலது பக்கத்திலிருந்து வாசிக்க
வேண்டும். முதல் எழுத்து அ(லிஃப்), இதை எடுத்து விட்டுப் படித்தால் 'லில்லாஹி'
(அல்லாஹ்விற்காக) என்று வாசிக்கப் படும். அலிஃபுக்கு அடுத்துள்ள ல(லாமை)
எடுத்தால் 'லஹூ' என்று வாசிப்பும் 'அவனுக்கே' என்ற அர்த்தமும் அமையும்.
பிறகு அடுத்த எழுத்தான ல(லாமை) எடுத்தால் 'ஹூ' (அவன்) என்றாகும்.

இப்படி ஒவ்வொரு எழுத்தும் 'அவனையே' குறிக்கிறது. இந்தச் சிறப்பு GOD க்கும்
கிடையாது கடவுளுக்கும் கிடையாது. மேலும் 'அல்லாஹ்' என்றால் அல் இலாஹ்
(வணக்கத்திற்குரியவன்) என்று அர்த்தம்.

'அல்லாஹ்' என்ற வார்த்தைக்கு பெண்பாலோ அல்லது பன்மையோ(Plural) கிடையாது.
இன்னொரு விந்தை அல்லாஹ் என்பதன் அரபி எழுத்து நம்ம கையிலேயே இருக்கு
(அப்ப நாம் எல்லாம் முஸ்லிம்கள்தானே)
இந்த எழுத்தைப் பலவிதமாக எழுதினால் எப்படியிருக்கும்.
இப்படி எழுதுவதற்குப் பெயர் காலிக்ராஃபி.

இதை இடதிலிருந்து வாசித்தால் ஆங்கிலம் வலதிலிருந்து வாசித்தால் அரபி எழுத்தும்
தெரிவது போல் வரைந்திருக்கிறார்கள்.

காலிக்ராஃபியில் 'அல்லாஹ்' என்ற எழுத்தைப் பலவிதமாகச் சித்தரிப்பது மட்டுமல்ல
சிதைப்பதும் நடந்து வருகிறது. உருவமில்லா இறைவனுக்கே இதன் மூலம் உருவம்
கொடுக்கப் பட்டுள்ளதைப் பாருங்கள்.இப்படியே போய் ஆயுத எழுத்தாக மாறிப் போன விந்தை.

திரிசூலத்தின் திருமூலம் இதுவாக‌த்தான் இருக்கும் :)

அலிஃபும் ஹாவும் கீழே வாள்/பிடி/வேல் போலவும் மீதி திரிசூலமாகவும்.எழுத்தைப் படுக்க வைத்துப் பார்த்தால் 'ஓம்' வருகிறது.

மேலும் பிஸ்மில்லாஹ்வைச் சுருக்கினாலும் 'ஓம்' வரும்.

மேலும் சில சிந்தனைகள்

ஆதம் நபியின் (இடது)பாதம் இலங்கையில் உள்ள மலையில் இருக்கிறது.
அதன் நீளத்தின் மீது சுமார் ஐந்தடி மனிதன் படுத்துறங்கலாம். நிமிர்ந்து படுத்து ஒரு கையை நீட்டிக் கொள்ளும் அளவு அகலம். இந்த பாதத்தை புத்தரின் பாதமென்று புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் சொல்கிறார்கள். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கௌதம புத்தருக்கு இந்த அளவு பாதம் இருந்திருக்காது. ஆனாலும் 'புத்தர்' என்றால் நபியையோ அல்லது மகானையோ குறிப்பதாக இருந்தால் அது முந்தைய புத்தரான‌ ஆதம் புத்தரின் பாதமே.

இவர்கள் இடது பாதத்தைத்தான் பூமியில் வைத்து இறங்கியிருக்கிறார்கள்.
நாமும் வாகனத்திலிருந்தோ அல்லது உயரத்திலிருந்தோ இறங்கும் போது இடது காலை வைத்து இறங்குவது சுன்னத்து(நபிவழி) என்று அறிவோம். மேலும் கக்கூஸ் செல்லும் போது இடது காலை முதலில் வைத்து உள்ளே செல்ல வேண்டும் என்பதும் அறிவோம்.

சுவனத்தில் கக்கூஸ் உபாதை கிடையாது, தடுக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டதால் உபாதை எடுத்து இடம் தேடி இறைவனிடம் முறையிட்ட
போது 'சுவனத்தில் அதற்கு இடமில்லை', அதற்கான இடம் உலகம்தான்
என்று ஆதம் அனுப்பப் பட்டபோது 'இந்த உலகத்தைக்
கக்கூஸாகக் கருதி' இடது காலை வைத்தார்களோ தெரியாது.

இந்துக்கள் இந்த பாதத்தை 'சிவனடி பாதம்' என்கிறார்கள். மேலும் சிவனுடைய பிள்ளைகளான முருகனுக்கும் பிள்ளையாருக்கும் ஒரு பழத்தின் மீது சண்டை வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆதம் நபியின் இரு பிள்ளைகளுக்கும் ஒரு பழத்தினால் அல்ல  ஒரு பெண்ணால் சண்டை ஏற்பட்டு ஒருவர் மற்றவரைக் கொலை செய்த சம்பவம் மூலமாக இரண்டு பேரும் (ஆதமும் சிவனும்) ஒன்றா என எண்ணத் தோன்றுகிறது.

மேலும் ஆதமுக்கு அடுத்து வந்த நபிக்குப் பின் வந்த 'நூஹ்' நபி காலத்தில்
மக்கள் வத்து,சுவா,எகூஸ்,யஊக்,நஸ்ர் என்ற பெயர்கள் கொண்ட ஐந்து சிலைகளை வணங்கி வந்ததாக குர்ஆன் கூறுகிறது. இதில் இரண்டாவதான 'சுவா' மருவி 'சிவா'வானதோ என்னவோ. இந்த ஐந்து சிலைகளும் இறந்து போன நல்லோர்களின் ஞாபகார்த்தமாகத் தோன்றியவை.

மேலும் திருவிளையாடலில் வந்த 'பழத்தைத் தந்து நாடகத்தைத் துவக்குகிறீர்' என்ற வசனத்தை நாம் பார்த்து அல்லது கேட்டிருக்கிறோம். நாடகத்தைத் துவக்குகின்றவரான 'நாரதரின்' கலகம் நன்மையில் முடிவதாகச் சொல்லப்படும்.

இந்த நாரதரும் நாம் சொல்லும் 'கிள்ரு' நபியும், கிறித்தவர்கள் சொல்லும்
'பச்சைக் காவலாளியும்' ஒருவரே என இவர் குறிப்பிடுகிறார்.


கிருஷ்ணனின் கதையைப் பார்த்தால் மூஸா நபியின் சம்பவம் போலிருக்கும்.

ஆக இதுவெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் 'ஒரு மூலம் பல்கிப் பெருகி
குட்டி போட்டுக் கதையாகிக் கந்தலாகிப் பின் தைக்கப் பட்டுப் பின் நைந்து நூலாகிக் கடைசியில் இறுதிவரை உறுதியாக இருக்குமாறு இஸ்லாம் நெய்யப்பட்டு நீடூடி வாழ்ந்து வருவது தெரிய வரும்.

இந்த மனித சமுதாயம் குழந்தையா இருக்குறச்சே சின்ன சட்டை, வளர வளர
அதற்கேற்றவாறு அளவில் மாறி, பிறகு இறக்கும் வரை ஒரே அளவு கொண்ட
ஆடையாக‌ இஸ்லாம் தரப்பட்டுள்ளது. இதில் எந்த மாற்றமும் வராது.
இஸ்லாத்திற்கேற்றவாறு நாம்தான் மாற வேண்டும். நான் ரெடி, நீங்க ரெடியா :)


26 comments:

ஹுஸைனம்மா said...

அட ரஹ்மானே, திரிசூலமும், ஓமும் அல்லாவைக் குறிக்குதா!! இந்தியா போய்ட்டு திரும்பி வர்ற ஆசையில்லியா?? இதோ இப்பவே இதை பால் தாக்கரேவுக்கு அனுப்பி வைக்கிறேன்!! :-)))

காலிக்ராஃபி பத்தி எழுதணும்னு நினைச்சிருந்தேன்; ஆனா அவ்வளவா விவரமில்லை. நீங்க நல்லா எழுதிருக்கீங்க.

எழுதியுள்ள மற்ற ’சம்பவங்கள்’ வாசிக்க சுவையா இருக்கு!!

எஸ்.கே said...

சுவாரசியம் சுவாரசியம். எல்லாமே ஒண்ணுன்றீங்க! சரிதானே!

அஹமது இர்ஷாத் said...

லாக‌வ‌மாக‌ கையாண்டுள்ள‌ விஷ‌ய‌ங்க‌ள் ரொம்ப‌ வீரிய‌மான‌வை..விவ‌ரித்த‌லில் அழுகு மிள‌ர்கிற‌து உங்க‌ளிட‌ம்..சிற‌ப்பு..

அரபுத்தமிழன் said...

மீ த ஃபர்ஸ்ட் தான் எல்லோருக்கும் தெரியும். வலையுலகில் முதன் முறையாக (ஹுஸைனம்) 'மா' the first :)

தனித்தனியா பதில் சொல்லிக் கொண்டு இருந்தேன் இப்ப எல்லோருக்கும் சேர்த்து நன்றி சொல்ற மாதிரி 'பிரபல பதிவர்' ஆயிடுவேனோன்னு பயமாயிருக்கு ஹுஸைனம்மா :)

அரபுத்தமிழன் said...

இந்த ரெண்டு வாரமா, சரியான பிஸி. அவசர அவசரமா போட்ட பதிவு இது.
இருந்தாலும் நல்லாயிருக்குன்னு சொல்றீங்க. நன்றி பெருமக்களே.

அரபுத்தமிழன் said...

தம்பி இர்ஷாத், இன்றைய உங்கள் பின்னூட்டமே கவிதை அழகு.

Rajakamal said...

மகாபாரதத்தில் வரும் குந்தவை தான் நபி மூஸாவின் தாய், துரியோதனனன் தான் மன்னன் பிர் அவ்ன், மூஸா நபி மேல் போர்தியிருந்த துணிதான் அவர் அடிமை வம்சம் என்பதையும் காட்டிக் கொடுக்கும், கர்ணன் தன் தாயை அவரை போர்த்தியிருந்த துணியின் மூலம் தான் கண்டுக் கொள்வார் - இப்படி கூட்டி கழித்துப் பார்த்தால் எல்லாமே ஒன்னுதான், ஒன்னுதான் எல்லாமே. நல்ல பதிவு.

அரபுத்தமிழன் said...

'நா..ளை.. நமதே..' பாட்டைக் கேட்டவுடனேயே பிரிந்த சகோதரர்கள் சேருவது சினிமாவில் மட்டும் தான் நடக்கும் போல. 'நாமெல்லாம் ஒண்ணுன்னு படம் போட்டுக் காட்டுறேன்'. சகோதரர்கள் உணர்வார்களா ராஜாகமால் அண்ணே.

பீர் | Peer said...

உங்க பெயரைக்கூட ஓம் க்குள் எழுதலாம். சிவன் பெயரையும் அப்படியே.

நீங்க அரபியா தமிழனா? ;)

அன்புடன் மலிக்கா said...

சம்பவங்களை கோர்த்த விதமும் அழகான விளக்கமும் அருமை.

எல்லாம் வல்ல அல்லாஹ்
அனைத்திற்கும் போதுமானவன்..

அரபுத்தமிழன் said...

// நீங்க அரபியா தமிழனா? ;) //

அனைவரையும் இணைக்க நினைக்கும் ஒரு
அரபுக் கரையோரம் தமிழ் பாடும் குருவி

அரபுத்தமிழன் said...

//எல்லாம் வல்ல அல்லாஹ்
அனைத்திற்கும் போதுமானவன் //
ஆமீன் ஆமீன் அன்புடன் மலிக்கா.
துவாவிற்கு நன்றி.

ஜெய்லானி said...

//காலிக்ராஃபியில் 'அல்லாஹ்' என்ற எழுத்தைப் பலவிதமாகச் சித்தரிப்பது மட்டுமல்ல
சிதைப்பதும் நடந்து வருகிறது. உருவமில்லா இறைவனுக்கே இதன் மூலம் உருவம்
கொடுக்கப் பட்டுள்ளதைப் பாருங்கள்.//

:-(

அரபுத்தமிழன் said...

:‍-(
இப்படி என்றால்
1)சமுதாயம் இப்படி போச்சென்னு நெனச்சு வருத்தமா
2)(சமீபத்தில் பட்டிமன்றம் பார்த்த பாதிப்பினால்) உருவம் இருக்கிறது என்று சொல்ல வருகிறீர்களா
3)நான் தவறாக எழுதியுள்ளேனா,
ஒரு வளைவுக்குள் இத்தனை அர்த்தமா
சகோதரா, ஒண்ணும் புரியலையேப்பா :)

பார்வையாளன் said...

நல்ல தகவல்...

கருத்து யார் வேண்டுமென்றாலும் சொல்லலாம்.. ஆனால் தகவல் தருவது எல்லாராலும் முடியாது.. அதற்கு உழைப்பும், திறனும் தேவை.. உங்ககளிடம இரண்டுமிருக்கிறது...
மிகவும் ரசித்து படித்தேன்..
ஆனால் ஒரு குறை..

ஆதம் நபியின் இரு பிள்ளைகளுக்கும் ஒரு
பழத்தினால் அல்ல இரண்டு பழங்களினால் :)

இந்த வரி எனக்கு பிடிக்கவில்லை..
ஒரு உயர்ந்த விஷயத்தை பற்றி பேசும்போது,இது போன்ற அசட்டு வரிகள் தேவையா..
இந்த வரிகளை வேறொரு கட்டுரை யில் பயன் படுத்தி இருந்தால் , ரசிக்கும்படி இருந்து இருக்கும்...!

அரபுத்தமிழன் said...

//ஒரு உயர்ந்த விஷயத்தை பற்றி பேசும்போது,இது போன்ற அசட்டு வரிகள் தேவையா.//
அன்பு நண்பரே, தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பார்கள், அதுபோல ஆரக்கிள் பழக்கமிது, இரண்டு டேபிள்களை ஜாயின் செய்யும் போது லின்க் வேண்டுமல்லவா, அது போலப் பெண்ணைத்தான் பழமாக உருவகப் படுத்தியிரார்கள் என்பதைச் சொல்வதற்கு அங்கு பழத்தை வைத்து ஜாயின் செய்திருக்கிறேன்.
மேலும் இது ஆராய்ச்சிக் கட்டுரையல்ல, போகிற போக்கில் சொல்லப்பட்ட ஒரு சிந்தனை, அது என்னவோ எனக்கு நகைச்சுவையாகவே சொல்லிப் பழகி விட்டது.
எனினும் இப்பின்னூட்டத்தின் மூலம் தங்களின் கருத்தின் மீது மட்டுமல்ல தங்களின் மீதும் ஒரு மதிப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது இப்படி ஒரு கொட்டும் தேவைதான். கருத்துக்கு நன்றி சகோதரரே.

ஆமினா said...

ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்த நல்ல அருமையான பதிவு!

எல்லாவற்றையும் அழகாக தொகுத்த விதம் அருமை!

வியந்து ரசித்தேன்! வாழ்த்துக்கள்

அரபுத்தமிழன் said...

கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றியோ நன்றி சகோதரி

mohamed said...

அருமையான கட்டுரைதான் வரலாற்றையும் கதையையும் ஒன்றாஹா கலக்கவேண்டாம் இது அன்பான வேண்டுகோள்

அன்புடன்
அப்துல் நசீர்

காயலாங்கடை காதர் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இதயம் கனிந்த ஈத் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

கார்பன் கூட்டாளி said...

ஹா ஹா நல்ல சிந்தனை.

அஹமது இர்ஷாத் said...

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_16.html

அரபுத்தமிழன் said...

அடடா தம்பி அஹமது இர்ஷாத்,
லீவு நாள்ல கண்டுக்காம விட்டுட்டேனே, ஆப்பீஸ் தொறந்த பொறவுதான் இதப் பாத்தேன். ரொம்ப Thanks and Sorry for late response.

அரபுத்தமிழன் said...

காதர் பாய்,
JazaakALLAHu khairan and wish you the same

அரபுத்தமிழன் said...

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி அருமை கார்பன் கூட்டாளி

அரபுத்தமிழன் said...

நன்றி நசீர் பாய்,
கதை,கிளைக்கதை,குட்டிக்கதை,கதைக்குள் கதை ..
வரலாறு,கிளை ஆறு வருமாறு புத்தகங்களுக்கு ஓக்கே.
பதிவுகளில் இவை கலக்கக் கூடாதா, தெரிந்தவர்கள்
அறிவுரை பகரவும்.

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)