Thursday, October 28, 2010

'மைன்ட் யுவர் பிசினெஸ்'

'எச்சொல் யார்யார் செவி சேர்ப்பினும்
அச்சொல்லில் தேன் சேர்ப்பதறிவு'

புத்திமதி சொல்லப் படும் போது பிடிக்கலன்னா, 'ஓ(ன்) வேலயப் பாத்துக்கிட்டு
போய்யா'ன்னு புரியிற மாதிரி தமிழ்ல சொல்லாம, நாகரிகமா,ஸ்டைலா
வெள்ளக்காரன் மாதிரி நம்ம மக்கள்ஸ் இப்படி சொன்னது ஒரு கா..ல..ம்.

இப்பல்லாம் அட்வைஸ் எங்க கிடைச்சாலும் பிடிக்காட்டிக் கூட காது கொடுத்து
கேட்பது மட்டுமல்ல தன்னுடைய கருத்தையும் அங்கே பதிவிக்க நினைக்கும்
பிளாக்கர் காலம் இது.

சென்ற உம்ராவின் போது எனக்கும் நண்பனுக்குமிடையில் நடைபெற்ற உரையாடல்.
கஃபாவை வலம் வருவதற்காகச் சென்ற நேரமது.கீழே ஆண்களும் பெண்களும் கலந்த
கடுமையான‌ கூட்டமாக இருந்ததால் மாடியில் தவாஃப் செய்ய நேரிட்டது.

மாடியில் தவாஃப் செய்யும்போது அங்கங்கே பெண்கள் பகுதியைக் கடக்க நேரிடும்
போது பெண்களின் பேச்சுக்குரலும், ஓதும் சப்தமும் அதிகமாகக் கேட்டது.
அப்போது நண்பன் கேட்டான்,

'சத்தத்துக்கு என்னா அரபியில‌'

'சவ்த்'னு சொல்வாங்க, எதுக்கு கேக்குற?

இல்ல, இங்க பெண்கள் சத்தம் அதிகமா இருக்கு, சத்தம் போடாதீங்கன்னு
அரபியில‌ சொல்லத்தான். 'south maafee'னு சொல்லவா ?

'south maafee'ன்னா 'சத்தமேயில்லை(இன்னும் நல்லா சத்த‌ம் போடுங்க)ன்னு அர்த்தம்'.

பின்ன எப்படி கேட்கிறது, 'சவ்த் லேஷ்' (ஏன் சத்தம்) என்று கேட்கவா அல்லது
'சவ்த் மா இரீது' (சத்தம் தேவையில்லை) என்று சொல்லலாமா ?

எனக்கும் சரியான சொல்லாடல் தெரியாததால், இங்க பாரு டைரக்டா சொல்றதா
இருந்தா, 'உஸ்குத்' (வாய மூடு)ன்னு சொல்லலாம், ஆனா அடுத்த நிமிஷம்
செருப்போ அல்லது போலிஸோ பறந்து வரும், எதுக்கு வம்ப வெலைக்கு வாங்குறே.

இல்லப்பா, யாராவது சொன்னாத்தானே, அவங்களுக்கும் புரியும்.

இங்க பாரு, இந்த மாதிரி சொல்றதுக்குன்னே 'முதவ்வா'க்களை அரசாங்கம் வச்சிருக்கு.
இது அவங்க வேலை. மாத்திரமல்ல, சட்டம் கொண்டு அல்லது சாட்டை கொண்டு
தகாதவைகளைத் தடுக்கும் பொறுப்பு நம்முடையதல்ல, மாறாக‌ அது இஸ்லாமிய
அரசாங்கத்தின் கடமை. தனி மனிதனுக்கு, அவனுக்குக் கீழுள்ளவர்களைச் சத்தம்
போட்டுத் திருத்த அனுமதி உண்டு. இருந்தாலும் மென்மையான முறையில்
செய்யப்படும் அறிவுரைகள் தாம் நீண்ட நாட்களுக்குப் பலன் தரும். காரணம்
'மென்மையில் பரக்கத்(அபிவிருத்தி) இருக்கிறது'.

உன் பேச்சு எடுபட வேண்டுமென்றால், 'இறைவனின் இல்லத்தில் சத்தமிடாமல்
இருப்பவருக்கு அல்லாஹ் கிருபை செய்வானாக' என்கிற தொனியில்
உன் உபதேசம் இருக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் தனி மனிதனிலிருந்து அரசாங்கம் வரைக்கும் ஒவ்வொருவரும்
எப்படி நடக்க வேண்டும் என்று காட்டித் தந்திருக்கிறார்கள்.
ஒரு சம்பவம் சொல்கிறேன் கேள்.

ஒரு முறை நபியின் மீது கடும் வெறுப்பு கொண்ட நிராகரிப்பாளர் ஒருவர், நபியை
ஒரு முறை பார்த்து விடும் எண்ணத்தில் மதீனா நோக்கி வந்தார்.வரும் வழியில்,
இருவர் சத்தமாக உரையாடுவதைக் கண்டு என்னவென்று அறிய எட்டிப் பார்த்தார்.
ஒருவர் ஏதோ விற்றுக் கொண்டிருக்க இன்னொருவர் வாங்குவதற்காகப் பேரம்
பேசிக் கொண்டிருந்தார்.

இவர் எட்டிப் பார்க்கும் நேரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, 'இந்தாளைக்
கண்டிப்பவர் யாருமில்லையா' என வாங்குபவர் போவோர் வருவோரிடம் முறையிட,
நபியைக் காண வந்தவர், 'அநியாயம் செய்யும் இந்த விற்பனையாளன்தான் நபியாக
இருக்கும்' என்று கணித்து அவரோடு சண்டையிட நினைக்கும் சமயத்தில், மிக
அழகான ஒருவர் அவ்விருவரை நோக்கி நெருங்குவதைக் கவனித்தார்.

அவரைப் பார்த்த மாத்திரத்தில் 'யாரசூலுல்லாஹ், இந்த ஆள் அநியாய விலை
சொல்கிறான்' என்று புகார் செய்ய, வியாபாரியை நபியென்று தவறாக எண்ணியவர்,
இப்போது நபி என்ன செய்யப் போகிறார் என்றரிய அருகில் வந்து கவனிக்கலானார்.
நபி சொன்னார்கள்,

'நல்ல பண்போடு வியாபாரம் செய்பவர் சுவர்க்கத்தில் என்னோடு இருப்பார்.'

'நல்ல பண்போடு பொருளை வாங்குபவ‌ர் சுவர்க்கத்தில் என்னோடு இருப்பார்.'

'விற்பவரும் திருப்தி அடைந்து வாங்குபவரும் திருப்தி அடையும்
வியாபாரம்தான் மிகச் சிறந்த (பரக்கத்துகள் பொருந்திய) வியாபாரம்
'.

வந்தவர் அசந்து விட்டார். இவ்வளவு சிம்பிளா,மென்மையாய்,அன்பாய்
எவ்வளவு பெறுமதியான விஷயத்தைச் சொல்லி விட்டார். யாரையும் கண்டிக்க
வில்லை, ஆனால் இருவரையும் ஒற்றுமைப் படுத்தி விட்டது அல்லாமல் மனித
சமுதாயத்திற்கே 'நல்ல வியாபார உத்தி'யைக் கற்றுத் தந்து விட்டாரே,
இவரல்லவா மனிதர் என்றவாறு நபியின் கை பற்றி மன்னிப்புக் கேட்டு
இஸ்லாத்தைத் தழுவினார் (ஹயாத்துஸ்ஸஹாபா).

(ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)

31 comments:

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

அழகான, எளிமையான நடையில் சொல்ல வந்த விஷயத்தை சூப்பரா சொல்லிட்டீங்க. சிம்பிளாக அதே நேரத்தில் சொல்ல வந்த விஷயத்தை சரியான கண்ணோட்டத்தில் சொன்னதற்கும், பகிர்வுக்கும் நன்றி

அரபுத்தமிழன் said...

அருமை அபூ நிஹான், வருகைக்கும் கருத்திற்கும் சூப்பர் நன்றி.
பதிவைச் சரியாகப் புரிந்து வாழ்த்தியமைக்கும் கோடி நன்றிகள்.

Unknown said...

இதுபோல கட்டுரைகளை எழுதவும் அருமையான கருத்து மற்றும் சம்பவம்

அப்துல் நசீர்

அரபுத்தமிழன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நசீர்,

//இதுபோல கட்டுரைகளை எழுதவும் //

இன்ஷா அல்லாஹ்.

pichaikaaran said...

இதை இதைதான் உங்களிடம் எதிர்பார்த்தேன்,.... எதிர்பார்க்கிறேன்..

இது போல நல்ல விஷ்யங்களை தொடர்ந்து எழுதுங்கள்...

அரபுத்தமிழன் said...

இனியவை நாடும் பார்வை நாயகரே! நன்றிகள் உமக்கு.
இன்ஷா அல்லாஹ் இது போன்று அதிகம் எழுத‌
இறைவன் அருள் பாலிக்கட்டும்.

புல்லாங்குழல் said...

அருமையான நல்ல இடுகை.இதைப் போன்று அதிகமதிகம் எழுத வாழ்த்துக்கள்.

அரபுத்தமிழன் said...

நன்றி நூருல் அமீன்,
இது போன்று அதிகம் எழுத அல்லாஹ்
நாட வேண்டும், ஆமீன்.

pichaikaaran said...

நீங்கள் எனக்கு அறிமுகப்படுத்திய, பிரபஞ்சச குடில் என்ற வலைப்பூவில்பகுத்தறிவு பற்றிய பதிவு மிக அருமை... பகிர்வுக்கு நன்றி.. இது போன்ற நல்ல விஷ்ய்களை இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள இறைவன் எனக்கு அருள் பாலிக்கட்டும்

அரபுத்தமிழன் said...

கண்டிப்பாகத் தெரியும் உங்களுக்கும் பிடிக்குமென.

//இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள இறைவன் எனக்கு அருள் பாலிக்கட்டும்//

ஆமீன்.

Ahamed irshad said...

அருமையான‌ க‌ட்டுரை..

அரபுத்தமிழன் said...

நன்றி இர்ஷாத்.
(ஆமா, முழுசும் படிச்சுட்டுத்தானே பின்னூட்றீங்க :)

Ahamed irshad said...

என‌க்கு நிறை,குறை பிரித்தெடுத்து பின்னூட்ட‌மிட‌ நேர‌ம் ந‌ஹி.. அதுக்காக‌ ப‌டிக்க‌லை அப்ப‌டீன்னெல்லாம் சொல்ல‌ப்புடாது (யாருமே என்ன‌ ந‌ம்ப‌மாட்டேங்கிறாங்க‌ளே -அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்-)

pichaikaaran said...

உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது , இவற்றுக்கு பதில் அளிக்கவும் ..

1. தர்க்கா வழிபாடு செய்யும் நல்ல முஸ்லிம்களை நான் அறிவேன்..
நானும் சென்று இருக்கிறேன்.. அங்கு தரப்படும் பிரசாதத்தை ( இதற்கு இணையான வார்த்தை என்ன ? ) சாப்பிட்டு இருக்கிறேன்.
இந்த வழிபாட்டால் பயன் உண்டு என்பது என் அனுபவம்,, இஸ்லாமிய நண்பர்களின் அனுபவம்..
இந்த தர்கா வழிபாடு தவறு என்று சிலர் சொல்வது பற்றி உங்கள் கருத்து ?

2. குர் ஆனை படித்தால் , சரியான விளகத்தோடு படித்தால், பிரமிப்பு ஏற்படுகிரது.. ஆனால் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் கூட பைபிள் பற்றி தெரிந்து வைத்து இருப்பதை போல, குர் ஆன், மாற்று மதத்தினரிடம் பிரபலமாகவில்லை..இதை பற்றி உங்கள் கருத்து என்ன ?

அரபுத்தமிழன் said...

ஆர்வத்திற்கு நன்றி நண்பரே.
சில கேள்விகளுக்கு ஒரு சில வரியில் பதில் சொல்வது சிரமம். பதிலைப் பதிவாகத் தர முயற்சிக்கிறேன். இன்னும் கேள்விகள் இருந்தால் தெரியப்படுத்தவும். இறைவன் நம் எல்லோருக்கும் நேர்வழி தர போதுமானவன்.

அரபுத்தமிழன் said...

ஆர்வத்திற்கு நன்றி நண்பரே.
சில கேள்விகளுக்கு ஒரு சில வரியில் பதில் சொல்வது சிரமம். பதிலைப் பதிவாகத் தர முயற்சிக்கிறேன். இன்னும் கேள்விகள் இருந்தால் தெரியப்படுத்தவும். இறைவன் நம் எல்லோருக்கும் நேர்வழி தர போதுமானவன்.

pichaikaaran said...

" இன்னும் கேள்விகள் இருந்தால் தெரியப்படுத்தவும் "

நன்றி....
இன்னும் பல கேள்விகள் உள்ளன.. குதர்க்க கேள்விகள் அல்ல.. விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலினால் வரும் கேள்வி..

ஸுபி முறையில் இறைவனை தேடுவதை இஸ்லாம் அனுமதிக்கிறதா? குணங்குடி மஸ்தான் அவர்களின் பாடல்களை ஒரு பாடம் போல படித்து வருகிறேன்.. அவர் இறைவனை ஒரு நாயகியாக உருவகித்து பாடுகிறார்..
இந்து மதத்தில் இப்படி காதல் பாவத்தில் பக்தி உண்டு.. இந்த பாணியை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

அடுத்த கேள்வி.. நபிகள் நாயகம் அவர்கள் அன்பை போதித்தவர்.. பாலைவன நாட்டில் இறைச்சி உணவைத்தான் சாப்பிட்டாக வேண்டும் என்ற எதார்த்தத்தை மனதில் கொண்டு, உயிரை கொன்று சாப்பிடலாம் .ஆனால் அதிக உயிர்களை கொள்ள கூடாது என விரும்பினார்..
அதனால்தான், பத்து ஆடுகளை கொல்வதை விட , ஒரு ஒட்டகத்தை கொன்று சாபிடுவது நல்லது என வரையறுத்தார்..
ஆனால் , ஒட்டகம் கிடைக்காத தமிழ் நாட்டில் , அதை வரவழைத்து சாபிடுவது என்பது அவர் நோக்கத்தை புரிந்து கொண்டு செயலாற்றுவதை போல தெரியவில்லையே..

ஒரு வேளை , ஒட்டகத்திற்கு , நான் புரிந்து கொண்டதை தவிர்த்து வேறு முக்கியத்துவம் இருந்தால், சொல்லவும்...

அரபுத்தமிழன் said...

//ஸுபி முறையில் இறைவனை தேடுவதை இஸ்லாம் அனுமதிக்கிறதா//
இதற்கு என்னை விட 'பிரபஞ்சக்குடில்'வாசி (http://pirapanjakkudil.blogspot.com/)
மிகச் சிறந்த முறையில் பதில் தர இயலும்.
(பிரச்னை என்னவென்றால் நம்முடைய பின்னூட்டத்தைப் பார்க்க முடியாத அளவுக்கு பிசியாக இருக்கிறாரோ என்னவோ)

ஒட்டகம் சம்பந்தமாகவும் என்னால் திருப்தியான பதிலைத் தர முடியுமா என்று தெரிய வில்லை. 'பிரபஞ்சக்குடில்'வாசி மற்றும் ஜாகிர் நாயக் போன்ற அறிஞர்களிடமே
இதைக் கேட்டுப் பார்ப்போம்.

இறைவா எங்களுக்கு இதன் விளக்கத்தைத் தருவாயாக, ஆமீன்.

pichaikaaran said...

அவரது பதிவு ஒன்றில் “அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளபடி அவன் இத்தனைக் காலமாகப் பாதுகாத்து வரும் பிரவ்னின் உடலைக் கண்டுபிடித்துவிட்டோம்' என்று ஒரு வரியை படித்தேன்...

குர் ஆனில் இந்த இடம் எங்கு வருகிறது ? இதன் விளக்கம் என்ன பின்னூட்டத்தில் கேட்டு இருந்தேன்,, அவர் இன்னும் பதில் அளிக்கவில்லை..அது பழைய பதிவு என்பதால் , பின்னூட்டத்தை பார்த்து இருக்க மாட்டார் என நினைக்கிறேன்..

இதற்கும் நீங்களே விளக்கம் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

எனது இஸ்லாமிய நண்பர்களுக்கு இது போன்ற கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை...
விஷயம் தெரிந்த பெரியவர்களுடன் எனக்கு பழக்கம் இல்லை...
எனவே நீங்களே தகுந்த நூல்களை ஆராய்ந்தோ, அறிஞர்களிடம் கேட்டோ , பதில் அளித்தால் அனைவருக்குமே பயன்படும்...
இஸ்லாமிய அறிஞர்களின் நூல்களை படித்து பதிலை தேடுவது எனக்கு சிரமமான வேலை.இஸ்லாமிய கலைச்சொற்கள் எனக்கு புரியவில்லை..

எனவே நீங்கள் என்னை போன்றோருக்கும் புரியுமாறு, தனி பதிவு இடுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

அரபுத்தமிழன் said...

அன்பு நண்பரே, லட்சக்கணக்கானோரை மூழ்கடித்த பின் அனைவரையும் பாதுகாப்பதாகச் சொல்லாமல் ஃபிர்அவ்னைப் பாதுகாப்பதாக குர் ஆனில்
வருகிறது. காரணமும் சொல்லப்பட்டுள்ளது, 'உலக அழிவு' வரை வரும்
மனித சமுதாயத்திற்கு அத்தாட்சியாக. முஸ்லிம்களும் 'கடலுக்குள் ஏதோ
ஒரு இடத்தில் இருக்கும்' என்று அதிகம் அதைப் பற்றி பெரிது படுத்தாமல்
இருந்தோம். காரணம் 'நம்புபவர்களுக்கு அத்தாட்சி அவசியமில்லை'.

இரண்டாம் ரமேஸஸின் சடலமாக இருக்கும் எனக் கருதப்படும்
சடலம் கிடைத்த‌போதுதான் 'இது ஃபிர் அவ்னின் சடலம்தான்' என்று
முஸ்லிம்கள் வெளி உலகுக்கு அறிவித்தார்கள். இதில் தங்களின் சந்தேகம் என்னவென்று சரியாக என்னால் புரிந்து கொள்ள முடிய‌வில்லை

அரபுத்தமிழன் said...

அலுவலக வேலையுடன் அவ்வப்போது இங்கு வருவதால் கேள்வியை சரியாகப்
புரிந்து கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும்,அதன் சுட்டி இப்போது தருகிறேன்.

அரபுத்தமிழன் said...

இறைவன் கூறினான்; "உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது; எனவே நீங்கள் உறுதியாக இருங்கள். அறியாதவர்களாக இருக்கிறார்களே அவர்களின் வழியை நீங்கள் இருவரும் (ஒருபோதுமு;) பின் பற்றாதீர்கள்" என்று. (89) மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்; இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்" என்று கூறினான்.(90) "இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய். (91)
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்" (என்று அவனிடம் கூறப்பட்டது). (92) நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததியனரை, தகுந்த இருப்பிடத்தில் இருத்தி, நல்ல உணவுகளையும் கொடுத்து வந்தோம்; எனினும் உண்மையான ஞானம் அவர்களிடம் வரும் வரையில் அவர்கள் மாறுபாடு செய்யவில்லை நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எத பற்றி மாறுபாடு செய்து கொண்டிருந்தார்களோ அ(து விஷயத்)தில் இறுதி நாளில் அவர்களிடையே தீர்ப்பளிப்பான்.(93) (நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொளிவீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக் நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம். (94) அன்றியும் அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பிப்போர்களில் ஒருவராக நீரும் ஆகிவிட வேண்டாம்; அவ்வாறாயின் நஷ்டமடைவோரில் நீரும் ஒருவராவீர். (95)நிச்சயமாக எவர்கள் மீது (பாவிகள் என்று) உம் இறைவனுடைய வாக்கு மெய்யாகிவிட்டதோ, அவர்கள் ஈமான் கொள்ளவே மாட்டார்கள். (96)நோவினை தரும் வேதனையை அவர்கள் காணும் வரையில் அவர்களிடம் எல்லா அத்தாட்சிளும் வந்தாலும் (அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.). (97)
-- Al Quraan 10 (Yunus)

அரபுத்தமிழன் said...

'குர்ஆனை ஏன் முஸ்லிம்கள் பரவலாக்கவில்லை' என்ற தங்களின் முந்தைய கேள்விக்குப் பதிலும் ஃபிர்அவ்னின் விஷயத்தில் ஓரளவு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். அதாவது 'முஸ்லிம்களின் சோம்பேறித்தனம் அல்லது தேவைப் பட்டால் சொல்வது, இரண்டாவது இடையில் உலக ஆட்சி கிடைத்து அதில் மூழ்கி பொறுப்பை மறந்தது அடுத்து ஒற்றுமையின்மை. இவையெல்லாவற்றையும் மீறி எதிரிகளின் சூழ்ச்சி. இஸ்லாத்தில் உள்ள நல்ல விஷயங்களை அமுக்கி, அவதூறுகளை மட்டும் பரப்பும் உத்தி ... etc etc

pichaikaaran said...

your first answere is very informative.. even many muslims may not know it.. please publish this kind of important informations as seperate post under separate headings so that it will reach many..

your second answere is good but not perfect..

"இவையெல்லாவற்றையும் மீறி எதிரிகளின் சூழ்ச்சி"

Christianity also has many enemies.. despite this fact , bible is popular even among non chritians...

thnak u for answering...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அழகிய பதிவு. அருமையான வார்த்தைகள். தொடருங்கள் உங்கள் பணியை இதே பாணியில். வாழ்த்துக்கள்.

அதிரை என்.ஷஃபாத் said...

நல்ல கட்டுரை.. பிடித்திருந்தது


www.vaasikkalaam.blogspot.com

எம் அப்துல் காதர் said...

அழகிய நடையில் எளிமையான வார்த்தை பிரயோகம். வாழ்த்துகள்

அன்புடன் மலிக்கா said...

அருமையான நல்ல பதிவு.
சொல்ல வந்த விஷயத்தைசரியான கண்ணோட்டத்தில் சொல்லிட்டீங்க..

இன்னும் அதிகமதிகம் எழுத வாழ்த்துக்கள்..

அரபுத்தமிழன் said...

முஹம்மது ஷிக்,திரை ஷஃபாத்,ப்துல் காதர்,ன்புடன் மலிக்கா
னைவரின் ன்புக்கும் யிரம் நன்றிகள்.

Admin said...

நன்றாக இருந்தது... அருமை

அரபுத்தமிழன் said...

நன்றி சர்ஹூன்.
இன்னும் சொல்லுங்க :)

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)