Monday, October 25, 2010

தூசி தட்டிச் சில கவிதைகள்

தமிழ்மண வானில் இன்று கவிதா நட்சத்திரத்தன்று கவிதையைப் பத்தி எழுதலன்னா, கவிதையார்வலர்கள் கோவிச்சுக்குவாங்க இல்லையா, அதனால‌ இந்தப் பதிவு.

சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போதுதான் நாம் சாகசங்கள் புரிவதும் நமக்குள் ஒரு
சக்தி இருப்பது தெரிவதும் சாத்தியமாகிறது. இன்று தமிழ் வலைப்பூக்களின்
காரணத்தால் தமிழை மறக்காமல் 'தமிழோடு உறவாடி'ப் பொழுது போக்க முடிகிறது.

ஆனால் அன்று,

'இரவுத் தாரகை நிலாவே நீ
பகலில் வந்தால் என்னவோ
உன்னைக் கண்டால் சூரியனைக் காணோம்
சூரியனைக் கண்டால் உன்னைக் காணோம்
என்ன இருவரும் கண்ணா மூச்சி ஆடுகிறீர்களா' :)

இதுதாங்க நா வாழ்க்கையிலேயே முதன்முதலா எழுதுன கவிதை. ஸ்கூல்ல நடத்துன
கவிதைப் போட்டியில் கலந்து கொள்வதற்காக எழுதுனது. 'இயற்கை எழில்' தலைப்பில்
எழுதிய கவிதையின் தொடக்க வரிகள். அன்று முதல் பரிசும் கெடச்சதனால ஒரு
கவிஞன் உருவானான். :)

அதன் பிறகு சில குழுமங்கள் நடத்திய கவிதைப் போட்டிக்காக சில கவிதைகள்
எழுதி 'கவிஞன்'கிற நெனப்ப தக்க வச்சதுண்டு. அதில் ஒன்று 'தட்ஸ் தமிழில்'
கூட‌ வெளிவந்தது.

கவிதைகளில் 'ஹைக்கூ' வகை ரொம்பப் பிடிக்கும் என்பதால் அது மாதிரி எழுதிப்
பார்த்ததுண்டு. அவைகளில் சில,


வீட்டிற்குள் சண்டை
அங்கும் சாதிப் பிரச்னை
ஆண்சாதிக்கும் பெண்சாதிக்கும்

-‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍--------------------------------

கத்தியின்றி ரத்தமின்றி
உள்குத்தும் உள்காயமும்
தமிழ் வலைப்பதிவர்கள்'

-‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍--------------------------------

வறண்ட பிரதேசத்திலிருந்து
ஒரு வற்றாத ஜீவ நதி
இதயம் பிழிந்த கண்ணீர்


அதையேன் கேட்குறீங்க, 'வெண்பா' கூட முயற்சித்ததுண்டு.

கிட்டப் பார்வைக்கு எந்த லென்ஸ் என்பதைப் பரீட்சையில் ஞாபகம் வைப்பதற்காக
'கிட்டப்பா குழியில் விழுந்தார்' என்று ஸ்கூல்ல‌ சொல்லித் தந்தார்கள். அதையே
'வெண்பா'வாக எழுத நினைத்து,

எட்டப்பர் எழுதிக் குவித்த ஏட்டிலே
கிட்டப்பர் குழிவிழுந்தார் காண்

என்று எழுதியதுண்டு.

'இதெல்லாம் வெண்பா வா ...ன்னு' புலவர்கள் வையக்கூடாது.
ஒரு முயற்சிதான், பிறகு அதைத் தொட(ர)வில்லை. 'ஹைக்கூ' வகை
முயற்சிகள்தாம் இன்றும் தொடர்கிறது.

ஹைக்கூவில் மிக மிகப் பிடித்தது, கவிக்கோ எழுதிய,

கல்லின் மீது பூவை எறிந்து
பூஜை செய்து வந்த மக்கள் அன்று
ஒரு பூவின் மீது கல்லை எறிந்தார்கள்.

தாயிப் நகர சம்பவத்தை ஒரு சில வார்த்தைகளில் என்ன அழகாய்ப்
படம் பிடிக்கிறார் பாருங்கள்.

இடையில் சில வருடங்கள் வெறுமனே ஓடிவிட்டன.
இன்று கவிதை,கட்டுரை மூலம் உங்களுடனே. நாளை எப்படியோ.

இன்னும் எழுதலாம்தான் (கவிதையைச் சொல்லவில்லை, கவிதை பற்றி
எழுதுவதைச் சொன்னேன்).ஆனால் நேரம் கிடைப்பது அரிதாக இருக்கிறது.
இது பற்றி இன்னும் படிக்க நினைப்பவர்கள் இதற்கு முன் நான் எழுதியதையும்
படித்துப் பாருங்கள். இதை விட சுவாரசியமாய் இருக்கும். அது,
'நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை'

14 comments:

Ahamed irshad said...

ஹைக்கூக்க‌ள் அருமை..

அரபுத்தமிழன் said...

அப்ப, ஹைக்கூ எழுதலாங்கிறீங்க

pichaikaaran said...

கவிதை நன்று..

அவ்வபோது குர்ஆன் பற்றியும் எழுதுங்கள்..

அரபுத்தமிழன் said...

நன்றி நண்பரே.
எனக்குப் பிடித்த ஆன்மீகம், கவிதை, நகைச்சுவைப் பதிவுகள் மாறி மாறி வரும்.

pichaikaaran said...

"எனக்குப் பிடித்த ஆன்மீகம், கவிதை, நகைச்சுவைப் பதிவுகள் மாறி மாறி வரும்"

நல்லது.. வரட்டும்..

ஆனால் நான் உங்கள் பதிவில் அதிகம் விரும்பி படிப்பது அனுபவம் சார்ந்த பகிர்தலும், ஆன்மீகமும்தான் ...

அதிரை என்.ஷஃபாத் said...

உங்க அனுபவம் மற்றும் கவிதைகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி..

இதையும் பாருங்க..

அதிரை என்.ஷஃபாத் said...

உங்க அனுபவம் மற்றும் கவிதைகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி..

இதையும் பாருங்க..

www.aaraamnilam.blogspot.com

ஹுஸைனம்மா said...

கவிதையா? :-( இது நம்ம ஏரியா இல்லை!!

அரபுத்தமிழன் said...

//நான் உங்கள் பதிவில் அதிகம் விரும்பி படிப்பது அனுபவம் சார்ந்த பகிர்தலும், ஆன்மீகமும்தான் ...//

நன்றி நண்பரே, முயற்சி செய்கிறேன்.

அரபுத்தமிழன் said...

//கவிதையா? :-( இது நம்ம ஏரியா
இல்லை!! //
அதனாலென்ன, புரியாதது எதுவோ அதுலதான் நாம முன்னுக்கு வர முடியும்.
நானு, உரையாடிக்கொண்டேதான் கவிதை சொல்றேன் அதனால தைரியமா
முழுசும் படிங்க குறளம்மா :)

அரபுத்தமிழன் said...

அருட் புதல்வா, சென்றேன் ஆறாம் நிலம், கண்டேன் அருமை க'விதை'களை.

Riyas said...

கவிதை எல்லாம் நல்லாயிருக்கே தொடர்ந்து எழுதலாமே.. உங்கமுன்னாடி நாங்கலெல்லாம் டம்மி போல தெரியுது..

அரபுத்தமிழன் said...

ஆஹா இப்படி உசுப்பேத்தியே ..... :)

கவிதை ஆர்வம் உண்டுதான், ஆனா மக்கள் தாங்கணுமே :)

cineikons said...

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)