Monday, October 18, 2010

சமாதானம் செய்து வைக்கும் வல்லமை தாராயோ இறைவா

ஒரு மனிதனைக் காப்பாற்றுவது முழு மனித சமுதாயத்தைக் காப்பதற்குச் சமம்.
ஒரு மனிதனைக் கொலை செய்வது முழு மனித சமுதாயத்தையும் கொல்வதற்குச் சமம்.
புத்தியோ சக்தியோ அது இந்த மனித சமுதாயத்திற்காகப் பயன்படவில்லையெனில்
அதனால் என்ன பிரயோஜனம். இறைவன் நமக்குத் தந்த திறமைகளை வைத்து உலக
ஒற்றுமைக்கு ஏதாவது செய்ய வேண்டும் தோழர்களே!.

கொஞ்சம் அன்பும் கொஞ்சம் சமயோசிதமும் கொஞ்சம் நகைச்சுவை உணர்வும்
இருந்தால் போதும் சண்டையை விலக்கி சமரசம் ஏற்படுத்தவோ அல்லது கோபத்தின்
கடுமையைக் குறைக்கவோ முடியும்.

'சண்டையைத் தவிர்த்த நகைச்சுவை உணர்வு' என்ற தலைப்பில் ஜாலியாக எழுத
ஆரம்பித்து இப்போ கொஞ்சம் சீரியஸ்னெஸ்ஸும் கலந்துடுச்சு.

மொதல்ல நகைச்சுவை எப்படி தடுத்த‌தென்று பார்க்கலாம்.

தமிழகத்தின் ஏதோவொரு ஓட்டலில்,வழக்கமாக வரும் வாடிக்கையாளர் அன்று
பசியோடு வந்து,'சர்வர், சூடா ஏதாவது கொண்டு வா' எனக்கேட்க,கேட்டவர் மீது
என்ன கோபமோ, சர்வரும் சூடான நெருப்புக் கங்குகளைத் தட்டில் ஏந்தி வர,
வந்த கோபத்தை அடக்கி, பந்தாவாக பீடியை அதில் பற்ற வைத்து வெளியில் வந்த
கதை எல்லோருக்கும் தெரியுமென்று நினைக்கிறேன். அது போன்று, சண்டை வராமல்
தடுக்க நகைச்சுவை உணர்வு ரொம்ப அவசியம்.

சென்னை பேச்சிலர் குடியிருப்பில், நாங்கள் தங்கியிருந்த காலம். ஒருநாள்,
எங்களிடையே இருவருக்குள் பிரச்னை ஏற்பட்டு ஒருவன் மற்றவனைத் திட்ட,
திட்டப்பட்டவன் (அபூ), திட்டியவனை நோக்கி, 'மவனே! அழகாயிருக்கியேன்னு
சும்மா விடுறேன்னு' சொல்ல, அதற்கு அவன் புன்னகைக்க, முடிவு சுபம்.

இன்னொரு நாள், காலைக்கடனை நிறைவேற்ற, கியூவில் நின்றோம். சுகப் பிரசவம்
முடிந்து வெளியில் அபூ வந்தவுடன், எனக்கு முன் நின்றவன் உள்ளே சென்றவுடனேயே
திரும்பி 'டேய் அபூ, ஒழுங்கா தண்ணி ஊத்துனா என்னடா'ன்னு சத்தம் போட,
அபூ சொன்னான் கூலா, 'ம்ஹூம், என்னை விட்டுப் போன எதப் பத்தியும் நான்
கண்டுக்கிறதே இல்லை'. :), எல்லோரும் சிரித்ததில் நெலமை கூல்.

அபுதாபி பெங்காலி டீக்கடையில், நானும் மற்ற இரு நண்பர்களும் டீ குடித்துக்
கொண்டிருந்தோம். எங்களுக்கு எதிரில் ஒரு பாகிஸ்தானி பட்டானும் அமர்ந்திருந்தார்.
அச்சமயம் நண்பருக்கு போன் வந்தது. பேசிய பிறகு செல்போனை சட்டைப் பாக்கெட்டில்
வைப்பதைப் பார்த்த பட்டான் சொன்னார்,

'உதர் நை ரக்கோ, ஓ தில் கு கராப் கரேகா (அங்க வக்காதே,அது இதயத்தைப் பாதிக்கும்)'

பொதுவாக பட்டானின் பேச்சு கொஞ்சம் அழுத்தமாக இருக்கும். இதைக் கேட்டவுடன்
நண்பரின் முகத்தில் கோபத்தின் ரேகை படர, இதை கவனித்த நான் பட்டானைப் பார்த்துச் சொன்னேன், 'ஆப்கே பாக்கெட்மே ஜோ பைசா ஹே,உஸ்கு பி உதர் நஹீ ரக்னா,கியூன்கே
பைசா பி தில்கு கராப் கர்த்தாஹே'(உம்முடைய பாக்கெட்டிலே பைசா வைக்கப் பட்டிருக்கே,
அதையும் அங்கே வைக்க வேண்டாம், ஏனென்றால் பைசாவும் மனச கெடுக்கும் சமாச்சாரம்)

இதைக்கேட்டு கடையிலிருந்தோர் சிரிக்க, பட்டானும் பைசாவைப் பற்றி ஜாலியாக
விவரிக்க, நண்பர்களாகி வெளியே வந்தோம். ஆதலால் சகோதரர்களே, நகைச்சுவை
அன்பை வளர்க்கட்டும். சத்தமாகப் பிரியும் காற்றும் கூட‌ சகல‌ இறுக்கத்தையும் கலகலக்க வைக்கும்தான் ஆனால் அது அன்பை வளர்க்காது :-)))

அடுத்து, சமயோசிதம் எப்படி சண்டையைத் தவிர்த்தது என அடுத்த பதிவில் பார்ப்போம்.

8 comments:

எஸ்.கே said...

சூப்பர்! நகைச்சுவை! சமாதானம் தேவைதான்! தொடரட்டும்!

அரபுத்தமிழன் said...

படித்து விட்டு 'எஸ் கே'ப்பாகாமல், முதல் போணியை ஆரம்பித்து வைத்த புண்ணியவான். நீவிர் வாழி :)

ஹுஸைனம்மா said...

நகைச்சுவையைச் சொல்லி, அப்படியே ‘இதயத்தைக் கெடுக்கும் பணத்தையும், மொபைலையும் என்னிடம் கொடுத்துடுங்க’ன்னு நைஸா வாங்கிட்டு வர்ற அளவு சாமர்த்தியமும் வேணும்!!

:-))))

அரபுத்தமிழன் said...

அடடா இது தெரியாமப் போச்சே :)
இப்படி மூளை வேலை செய்கிறதே,
நீங்க 'சாத்தான்' குளமா' :))

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அரபு... இதுக்கு ஏங்க 'சுகப்பிரசவம்' என்ற பெயரை தந்தீர்கள்...?
//காலைக்கடனை நிறைவேற்ற, கியூவில் நின்றோம். சுகப்பிரசவம்
முடிந்து வெளியில் அபூ வந்தவுடன்//---நான் கேள்விப்படும் இடங்களிலெல்லாம் சிசேரியன் மூலமாகவே குழந்தை பிறப்பது வாடிக்கையாகிவிட்ட இந்நாளில்...

ஒருவேளை... ஒருவேளை... பணவெறி தலைவிரித்தாடும் மருத்துவமனைகளினால் எதிர்காலத்தில் இயற்கையாக நடக்கவேண்டிய 'அதற்கும்' ஏதாவது "குடல் சுத்திக்கிடக்குன்னு" கதைகட்டி டெய்லி டெய்லி சிசேரியன் பண்ணினா நெலமை என்னாத்துக்கு ஆகுமோ...? நினைக்கவே பயமா இருக்கே...!

'அதுக்கு' இனிமே 'அந்த' பெயரை வைக்காதீங்க... குலை நடுங்குது.

அரபுத்தமிழன் said...

//'சுகப்பிரசவம்'//

அரிதாகி விட்ட ஒன்றை ஞாபகப் படுத்த வேண்டுமல்லவா அதற்குத்தான் :)

Ahamed irshad said...

சூப்ப‌ர் ப‌திவு..அதுவும் அந்த‌ காலைக்க‌ட‌ன் விவ‌கார‌ம் ப‌லே ப‌லே.அச‌த்த‌ல்.

அரபுத்தமிழன் said...

//சூப்ப‌ர் ப‌திவு// நன்றி இர்ஷாத்.
காலைக்கடன் 'வராக் கடனாகி' விட்டால் வம்புதான் போங்க :)

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)