நகைச்சுவைப் பதிவுகள் அதிகம் பார்வையிடப் படுகின்றன. தம் பதிவுகள் எல்லோராலும்
படிக்கப்பட வேண்டும் என்றுதான் யாவரும் விரும்புவர். என்றாலும் நகைச்சுவை
எல்லோருக்கும் வருவதல்லவே. நமக்கு சிரிப்பை வரவழைக்கும் எந்தவொரு விஷயமும்
அடுத்தவருக்கும் அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இன்றைய உலகம்
அப்படி. முன்பெல்லாம் மரத்தடிகள் மற்றும் திண்ணைகள்தாம் உரத்து சிரிக்க வைக்கும்
இடமாக இருந்து வந்தன. இன்றோ தட்டினால் திறக்குது நகைச்சுவைக்கென்றே
தனி உலகம்,தனி CD,வீடியோ மற்றும் பதிவுகள்.
நகைச்சுவைப் பதிவுகளில் Copy/paste,Forwarded,SMS ஜோக்குகள்தாம் அதிகம் எனினும்
குசும்பன் போன்ற ஒரு சிலரின் 'கலாய்த்தல்'கள் மற்றும் குசும்புகள் ரசிக்க வைப்பவை.
அந்த அளவுக்கெல்லாம் நம்மால் சிரிக்க வைக்க முடியாது. ஏதோ அனுபவங்களைச்
சுவை படச் சொல்ல விழைகிறேன். அது கொஞ்சமா புன்னகைக்கவும் கொஞ்சமா
'புத்தி'க்கவும் வைத்தாலே போதும், புண்ணியமாப் போகும் இந்த பொல்லாப் பதிவுலகத்துல.
எங்க ஸ்கூல் வாத்தியார் சொன்ன 'கப்'பர் சிங் ஜோக்கை முதலில் சொல்கிறேன். அவர்
தமது நண்பர் தர்பார் சிங் வீட்டுக்குப் போயிருந்தப்ப 'நம்பர் டூ' வந்ததால் நண்பர் வீட்டு டாய்லெட்டுக்குள் சென்றார். அங்கே வெஸ்டர்ன் டைப் கக்கூஸை முதன் முதலாய்ப்
பார்த்ததால் எப்படி 'நம்பர் டூ' போவதென்று அறியாமல் முழித்திருக்கிறார். பின்னே
ஏதேதோ யோசனை செய்து விட்டு 'பிளாஸ்டிக் ஜக்கிலே' ஏந்தி ஜன்னலுக்கு வெளியே
எறிவது (!?!) என்று முடிவு பண்ணி... கடைசியில் எறிந்தே விட்டார். பிறகு என்னாச்சு
தெரியுமா ? ..... Jug மட்டும் ஜன்னலுக்கு வெளியே போய் விழுந்தது :-)
'சீச்சி' எறிதலில் தோல்வியுற்ற சிங் வேற வழியின்றி நண்பரை அழைக்குமாறு ஆகி விட்டது.
அவரும் உள்ளே வந்து பார்த்து அசந்து விட்டார். அழைத்தவரோ ஆடிப் போனார். நண்பரும் 'சிங்'கமல்லவா, 'வாரே! வாஹ் ஜி' என்று கர்ஜித்து கை கொடுத்த பின் கேட்டார்,
'எப்படியப்பா 'BAT MAN' போல சுவற்றின் மேலேறி 'Shit' டினாய் ?!
இந்தப் பதிவு மேற்கண்ட சிரிப்பைச் சொல்ல வேண்டியதற்காகவல்ல, இது போன்ற
ஒரு சம்பவம் எனக்கும் ஏற்பட இருந்து தப்பித்ததைச் சொல்வதற்காகத்தான்.
சென்ற மாதம் உம்ராவுக்காக மதீனா சென்றிருந்தேன் அல்லவா, அப்போது ஒரு நண்பரைக்
காண அவர் தங்குமிடம் செல்ல வேண்டி வந்தது. அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது
'இயற்கை அழைப்பின் அறிகுறி' தெரியவர, அங்குள்ள டாய்லட்டிற்குள் நுழைந்தேன்.
டாய்லட் நம்மூர் டைப்புதான் என்றாலும் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. அதாவது தண்ணீர் தெரியக்கூடிய வட்டப்பகுதி பிளாஸ்டிக்கால் மூடப்பட்டிருந்தது. ஆஹா ஒன் வே டிராபிக்
மூடப்பட்டுக் கிடக்கே, ஏதும் மராமத்துப் பணி நடைபெறுதோவென நினைத்து நாமளும்
ஒன்வே மட்டும் திறந்து விட்டுத் திரும்பியாச்சு. அவரிடமும் அது பற்றிக் கேட்க வில்லை.
மற்றொரு நாள் இன்னொரு நண்பரின் வீட்டுக்குச் சென்றால், அங்கேயும் அதே நிலை.
ஒரு வேளை பிளாஸ்டிக் கப்பை வெளியே எடுத்து வைத்து விட்டு, உட்காறனுமோ ?
'அடடா! இப்ப என்ன செய்யுறது ? நம்ம கப்பர்சிங்கின் நிலமை நமக்கும் வந்திடக்
கூடாதேங்கற கவலை வந்ததால், வெளியே வந்து நண்பரிடம் ரூட்டு கேட்க, அவரும்,
ஏதோவொரு பைக் விளம்பரத்துல வருமே அது மாதிரி 'நோ ப்ராப்ளம், Do it as usual
வழக்கம் போல போங்கன்னு சொல்ல , உள்ளே சென்று தயங்கித் தயங்கி பரிசோதித்துப்
பார்த்தால், 'வாவ், போவதே தெரியவில்லை, லஞ்சம் பெறுபவரின் கை போல ஆங்கே
கொஞ்சமும் மிஞ்சவில்லை போங்க. நண்பரிடம் விசாரித்ததில் பிளாஸ்டிக் கப்பின் மேல் மூடிக்கடியில் spring இருக்கிறதாம். என்னா டெக்னிக்கு :-)
இது போல் வேறு எங்கும் பார்த்ததில்லை, நம்மூர்களிலும் இது போன்று இருந்தால்
நல்லாயிருக்குமே என்ற எண்ணம் வந்தது, கூடவே பயமும். ஏன் தெரியுமா, வேறென்ன,
எல்லோர் வீட்டிலிருந்தும் டி.வி. விளம்பர சத்தம் இப்படியல்லவா கேட்கும்,
"பொத் பொத்தென்று விழுந்ததெல்லாம் மாயமாய்ப் போனதே"
"மத்த மத்த கம்பெனிகள் மயங்கி மயங்கி நின்றனவே" :-)
டிஸ்கி :
படிச்சுட்டு 'மொத்து மொத்து'ன்னு மொத்த நெனக்கிறவங்க மைனஸ் ஓட்டையும்,
ஓட்டைக் 'குத்து குத்து'ன்னு குத்த நெனக்கிறவங்க ப்ளஸ் ஓட்டையும், ஏதாவது பேச நெனக்கிறவங்க பின்னூட்டமும் போடுங்க. அப்பத்தான் நான் எழுதுறது எப்படீன்னு தெரியும்.
(இ.அ. அடுத்த வார பதிவில் சந்திப்போம்)
8 comments:
நல்லாயிருக்குங்க..
நன்றிங்க
நல்லா சிரிக்க வெச்சிட்டீங்க..
அப்படியா! ரொம்ப சந்தோஷம் தம்பி
நாமளும் கஷ்டப்பட்டு, திரும்பித் திரும்பிப் பார்த்து இவ்ளோ எழுதுறோம், படிக்கிற மக்கள்ஸ் ஒரு வரி கமெண்ட் போட என்னா யோசனை. :-)
இந்த கப் மேட்டர் வந்த புதுசுல நிறையப்பேர் அப்படிதான் பயந்தார்கள்....!! அதுக்கு ஒரு சுலப வழி இருக்கே.. நேரடியாக ஃபிளாஷ் அடிச்சால் ( தண்ணீர்) அது சரியா வேலை செய்யுதா இல்லையான்னு தெரிஞ்சுடும்...!!
அதை படம் போட்டிருந்தால் எல்லாருக்கும் ஈஸியா புரிஞ்சிருக்கும் :-))
அருமை
//இந்த கப் மேட்டர்// அதானே பாத்தேன், 'கப்பு' மேட்டர்னு மொதல்ல படிச்சுட்டேன் :). அர்ஜென்டில்லாததால் அப்ப அதெல்லாம் தோணலை.
நன்றி ஜெய்லானி
நன்றி சிநேகிதி
Post a Comment
நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை
எனினும்
" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)