Monday, April 26, 2010

'பதி' தாண்டும் பத்தினி

"நல்ல நல்ல நிலம் பாத்து....
நாமும் விதை விதைக்கணும்.."



சில பல வருடங்களுக்கு முன் பார்த்த

விசுவின் அரட்டை அரங்கத்தில்

ஒரு பேரிளம் பெண்ணுக்குப் பேச

வாய்ப்பு கிடைத்த போது, அவர் தலைப்புக்கு

சம்பந்தமில்லாமல் 'என்னங்க பெருசா பெண்களுக்கு

சுதந்திரம் கெடச்சுடுச்சுன்னு பீத்திக்கிறீங்க.

பட்டத்தைப் பறக்கவிட்டு அதன் நூலைக் கையில்

பிடித்திருப்பது போல புருஷணுங்க கையில்தான்

இன்னும் கன்ரோல் (Control) இருக்கு. ஒருநாள்

நாங்களும் நூலை அறுத்துக் கொண்டு சுதந்திரமாக

வானில் திரியும் காலமும் வரும் ' என்று முழங்கினார்.

என்னத்த சொல்றது.

நூலறுந்த பட்டத்தின் கதி என்னவாகும் என்று

சின்னப் புள்ளங்க கூடச் சொல்லும்.

இது ஏன் பெண்களுக்குப் புரிவதில்லை.

அப்போதெல்லாம் வலைப் பக்கம் இருந்திருந்தால்

ஆசிப் அண்ணாச்ஜீயை உசுப்பேத்தியிருக்கலாம் :)

Saturday, April 03, 2010

அடிக்கடி அல்ல எப்போதாவது

வழிப்போக்கன் என்று பெயர் வைத்தாலும் வைத்தேன்
வலைப்பக்கம் வர வருடங்களாகி விட்டன
மிக நீண்ட இடைவெளிக்குப் பின் ...
தமிழ்மண வாசலில் அரிக்கும் கவிதையோடு
(சோதனை முயற்சி - யாருக்கென்று கேட்கப்படாது ஆமாம் :-)



" கடை திறக்கக் காத்திருக்கும் கண்கள்
தொடைப் புண்கள்
சொறிவதில் மென்மையைக்
கையாளுகிறேன் "




கவிதையை தப்பா புரிஞ்சுக்காதீங்க மக்கா !

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் (விதியில் எழுதப் பட்ட)
பிரச்னைகளை எப்படி எதிர்கொள்கிறோமோ (How we Respond)
அதற்கு ஏற்றார் போலத்தான் விளைவுகளின்
தன்மை அமைகின்றது.